01 மார்ச் 2012

மக்களை பொது அறிவு புலிகளாக மாற்ற துடிக்கும் சூர்யாவும் ,கொள்ளை அடிக்கும் விஜய் டிவி யும் ...


இந்த சூர்யா இருக்காரே விஜய் டிவி ல நீங்களும் வெல்லலாம் ஒரு கோடின்னு ஒரு நிகழ்ச்சி நடத்துரார்ப்பா .....

எவ்வளவு அறிவுபூர்வமான கேள்விகள் எல்லாம் அதிலே கேட்கிறார்கள் தெரியுமா?

உலக வரலாறுகளையும்,பொது அறிவு புத்தகங்களையும் கரைத்து குடித்தவர்கள் கூட திணறி போவார்கள் திணறி....அப்படி என்னதான் கேட்டார்னு பாருங்க...


இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

கேள்வி 2:

ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?

ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை


இது மட்டுமா ?
................................... சொதப்புவது எப்படி? இந்த படத்தின் பெயரை முழுமை படுத்த வேண்டுமாம்....இதற்கும் நான்கு ஆப்சன்கள் உண்டு....அதிலே படத்தின் பெயரும் வந்து விடுகிறது.....

என்னமோ ஏதோ அப்பிடின்னு ஒரு பாடல்...அந்த பாடல் சில வினாடிகள் ஓடுகிறது ..அந்த பாடல் இடம் பெற்ற படம் என்னவென்று சொல்ல வேண்டுமாம்....அட இதற்கும் நான்கு ஆப்சன்கல்ப்பா.......!

எம்மா பெரிய பொது அறிவு கேள்விகள்.....!

நம் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதில் இவர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை....


இவ்வளவு ஈசியாக கேட்டு பணத்தை வாரி வாரி வழங்குராங்கப்பா......எம்மா பெரிய பரந்த மனசு....


ஆனால் இதற்கு தேர்வாக எஸ் எம் எஸ் இல் பதில் அனுப்பினால் ஐந்து ரூபாய்தான் வெட்டும்....இதெல்லாம் ஒரு பெரியா காசா?

ஆனால் சுமார் ஒரு பத்து லட்சம் பேர் அனுப்பினால்?ஒரு இருபது லட்சம் பேர் அனுப்பினால்?

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.

இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...

இப்ப புரிகிறதா? இந்த மாதிரி மொக்கை கேள்விகளை கேட்டால்தான் மொபைல் போன் வைத்து இருக்கும் அனைவரும் கேள்வி ரொம்ப எளிதாக இருக்கே என எஸ் எம் எஸ் களை தட்டி விட்டு கொண்டே இருப்பார்கள்....இவர்களுக்கு காசு கொட்டி கொண்டே இருக்கும்...


அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் ஒருவர் ரொம்ப வசதியான குடும்பம் போல....ஆறு லட்சம் வரை வென்றுவிட்டார்....அடுத்த கேள்விக்கு பதில் தெரியவில்லை...அனால் அதை பற்றி கவலைபடாமல்!சாபு ,பு ,த்ரீ போட்டு பார்த்து பதில் சொல்லலாமா என கேட்கிறார்...(இதில் கவலை பட என்ன இருக்கிறது என கேட்குறீர்களா?)இருக்கு..சும்மா கிடைத்தாலும் அவருக்கு வேணும்னா இது சாதாரண பணமாக தெரியலாம்....ஆனால் இவ்வளவு பணம் எவ்வளவு பேருக்கு ரொம்ப பெரிது தெரியுமா?


பல லட்சம் மக்கள் அனுப்பும் எஸ் எம் எஸ் களின் மூலமும்,விளம்பரங்களின் மூலமும் பல கோடிகளை அள்ளி சில லட்சங்களை பரிசாக கொடுக்கும் மகா நெஞ்சம் கொண்டவர்களே....கொஞ்சம் பணத்திற்கு கஷ்ட படும் நபர்களாவது தேர்ந்து எடுத்து வாய்ப்பு கொடுங்கள் ...தமிழர்களின் காசு அதற்காகவது பயன்படட்டும்....

இதற்கு போட்டியாக கேடி பிரதர்ஸின் சன் டிவி யும் இதே மாதிரி நிகழ்ச்சி நடத்த
போகிறதாம்....அவங்க எல்லாம் அப்பவே அப்படி!இப்ப கேக்கவா வேண்டும்!மக்களுக்கு பொது அறிவை வளர்ப்பதிலும்,மக்களை லட்சாதிபதி ஆக்குவதிலும் இந்த தொலைகாட்சிகளுக்கும், நடிகர்களுக்கும்தான் எவ்வளவு அக்கறை!

நமது காசை கொள்ளை அடிக்கும் இது போன்ற நிகழ்சிகளை பார்ப்பதை நிறுத்தாவிட்டால்கூட அட்லீஸ்ட் எஸ் எம் எஸ் அனுப்புவதயாவது நிறுத்துங்கள் மக்களே....நிகழ்ச்சி தானாக நின்றுவிடும்!

19 கருத்துகள்:

 1. சலாம் சகோ!

  மக்களை சோம்பேறிகளாக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை அரசு தடை செய்தாலன்றி விமோசனம் இல்லை.

  பதிலளிநீக்கு
 2. இது ஒரு வகையான லாட்டரி வியாபாரம் தான்

  லாட்டரிக்கு தடை போட்ட அரசாங்கம் இதை கவனிக்குமா?? முடியாது ஏன்னா? இதை நடத்துபவர்கள் கார்ப்ரட்டே நிறுவனங்கள்

  பதிலளிநீக்கு
 3. நேற்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நான்கு சிலந்திகளுக்கு மொத்தம் எத்தனை கால்கள் இருக்கும்
  A.8 B.16 C.24 D.32.

  B.16 கால்கள் சரியான விடை என சொல்லப்பட்டது. நான்கு சிலந்திகளுக்கு எத்தனை கால்கள் இருக்கும்?

  D.32 என்பதுதானே சரியான விடை B.16 எப்படி சரியாக இருக்க முடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட கன்றாவியே....கேள்விகள்தான் கேனத்தனம் என்றால் பதில்களும் அப்படிதானா?

   நீக்கு
  2. நான்கு ஜோடி சிலந்திகள் என்று கேக்கபட்டது ஒரு சிலந்திக்கு 8/2 =4 ஜோடி அப்படியானால் 4 நான்கு ஜோடி சிலந்திகளுக்கு 4*4=16

   நீக்கு
 4. சாட்டையடி பதிவு சகோ.ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாத்தத்தான் செய்வார்கள். அப்படியே பதிவின் இறுதியில் மக்களை இதை போன்ற கேம் ஷோக்களை புறக்கணியுங்கள், உங்கள் அறிவை வளர்த்து கொள்ள பொது அறிவு புத்தகம், நல்ல நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஈடுபடுங்கள் என்று சொல்லி இருக்கலாம்.

  ஒரே வழி, நாம் அனைவரும் sms அனுப்பாமல் இருந்தால் அவர்களது கெதி.

  ஆம் நாம் அனைவரும் நம் குடும்பத்தவர்கள், நமக்கு தெரிந்தவர்கள், நமது ஊர்வாசிகள் போன்றவர்களிடம் எடுத்து செல்வோம். வருமானம் குறைந்தால் ஆட்டோமேட்டிக்காக வழிக்கு வந்து விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ....நீங்கள் சொல்வதை பதிவில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்...

   நீக்கு
 5. இது ஒன்றும் புதிது கிடையாது சகோ

  உங்களின் தந்தையின் பெயரேன்ன
  1.கந்தசாமி
  2.குமரசாமி
  3.மாடசாமி
  மூன்று சாய்ஸ் உங்க அம்மாவிடம் வேண்டுமென்றால் போன் பண்ணி கேட்டுக் கொள்ளலாம் என்று விவேக் ஒரு காமெடி பண்ணுவார் அது போலத்தான் இது

  பதிலளிநீக்கு
 6. ada paravaayillaiye!

  evvalavu kevalamaana nikazhchi!
  naan paarthathillai neengal
  exhuthiyathil arinthu konden!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் திரு ஹாஜா மைதீன் நல்ல விழிப்புணர்வுள்ள கட்டுரை மக்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையோடு நன்றி
  சுரேந்திரன்

  பதிலளிநீக்கு
 8. இன்னும் எப்படியெல்லாம் ஏமாற்ற போறார்களோ இந்த திருடர்கள்.

  பதிலளிநீக்கு
 9. நெத்தி அடி பதிவு. இதுவரை நான் ஒரு முறை கூட (இந்தியாவில் இருந்தபோது) இம்மாதிரி போட்டிகளுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியதில்லை. இன்னும் சொல்லப் போனால் பணக்காரர்களை விட சாதாரண மக்கள் தான் இம்மாதிரி விளம்பர/மோசடி நிகழ்சிகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அரசு இம்மாதிரியான நிகழ்சிகளுக்கும் எஸ் எம் எஸ் வருமானத்திற்கும் நிறைய வரி விதிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....