29 மார்ச் 2012

ஜெ -சசி சந்திப்பு.... மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்வதாக ஜெ அறிவிப்பு...

சசிகலா போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தார் ..மீண்டும் போயஸ் கார்டனிலே குடியேறினார்...அதுபற்றி ஜெயலலிதா வெளியுட்டுள்ள அறிக்கை....

எனது உடன்பிறவா சகோதரி சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்....

அதில் எனக்கு அவர் எந்த காலத்திலும் துரோகம் நினைத்தது இல்லை என்றும், எனக்கு எதிரிகள் அவருக்கும் எதிரிகள்தான் என்றும் கூறியுள்ளார்...இதை படிக்கும்போது என் மனசு கலங்குகிறது....

மேலும் அவரின் உறவினர்களும்,நண்பர்களும் சசிகலாவின் பெயரை பயன்படுத்தி போட்ட ஆட்டங்களும் ,செய்த தவறுகளும் ,எனக்கே எதிராக சதி செய்ததும் சசிகலாவுக்கு தெரியாது எனவும், இப்போதுதான் அது பற்றிய விபரங்கள் தெரிந்ததாகவும் மிகவும் வருத்ததுடனும் வேதனையுடனும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்...அதை படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைத்தது...

எனக்கும் கட்சிக்கும் கனவிலும் துரோகம் நினைக்காத சசிகலாவை இனியும் என்னிடம் இருந்தது விலக்கி வைத்தால் அந்த புரட்சி தலைவரின் ஆன்மா என்னை மன்னிக்காது....எனக்காகவும் கட்சிக்காகவும் மட்டுமே வாழும் சசியை இனியும் தூரத்தில் வைத்தால் கோடான கோடி கட்சி தொண்டர்களின் மன குமுறல்களுக்கு ,உணர்வுகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்....

புரட்சி தலைவியாகிய எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லையே என கவலைப்படும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து .சசியை மீண்டும் சேர்க்க வேண்டும் என தினமும் தலைமை கழகத்துக்கு தந்தி அடிக்கும் கட்சி தொண்டர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து எனது உடன் பிறவா சகோதரியான சசிகலாவை இனி என் உடன் பிறந்த சகோதரியாக தத்து எடுத்து கொள்வதாக முடிவி செய்துள்ளேன்...இனி அவர் என்னுடனே இருப்பார் எனவும் மன மகிழ்ச்சியுடனும் தெரிவித்து கொள்கிறேன்...நன்றி.... வணக்கம்....

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ....


என்ன மக்களே....அறிக்கையை படித்துவிட்டீர்களா ?இது எனது கற்பனையா இல்லை நடக்கபோவதா என உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்....

13 கருத்துகள்:

 1. கண்டிப்பாக நடக்கும் அதில் என்ன சந்தேகம்? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

  பதிலளிநீக்கு
 2. இந்த பாசமலர் பார்ட்2 காரணமாக ஆட்சியில் எந்த வில்லங்கமும், களங்கமும் வராமல் இருக்க வேண்டும் என்பது எமது விருப்பம்.

  பதிலளிநீக்கு
 3. இது உண்மையான அறிக்கையா இல்லை டுபாக்கூர் அறிக்கையா என்று சந்தேகமா இருக்கு :)

  பதிலளிநீக்கு
 4. ஆஹா...தீர்க்கதரிசனமான வார்த்தைகள்! நடக்கும்.

  ஹாட் நியூஸா வெளியிட்டு கலக்குறிங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி ஹி.....இதை சொல்வதற்கு தீர்க்கதரிசனம் எல்லாம் தேவையே இல்லை...இது அனைவரும் அறிந்ததே...நன்றி...

   நீக்கு
 5. இன்றைய கற்பனை நாளைய உண்மை!!!?

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....