10 மார்ச் 2012

ராஜபக்சே என்ன உங்களுக்கு மாமனா மச்சானா ?பதில் கூறுங்கள் மனசாட்சி இல்லாத ஆட்சியாளர்களே...


ஈழ போரின் இறுதியில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து இலங்கை போட்ட வெறி ஆட்டத்துக்கு இந்தியா துணை போனது வெட்ட வெளிச்சமான விஷயம்...அதில் சிலரின் சுயநலம்தான் இந்தியா துணை போனதற்கு காரணம் என்பதும் ஊர் அறிந்ததே....ஆனால் ஏதும் அறியா அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்...?செத்த பின்பும் அவர்களுக்கு நீதி மறுக்கபடுவதற்கு இந்தியா காரணமாக உள்ளது வேதனை அளிக்கும் மனிதாபிமானமற்ற அக்கிரம செயல்...

போரில் அப்பாவிமக்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட தருணங்களில் உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் போட்ட கலைஞர் இப்போது"இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது, என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சி களை ஒருமுறை பார்த்துவிட்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என அறிக்கை விடுகிறார்...என்ன ஒரு அக்கறை !

அப்போது மத்திய அரசில் இருந்து விலக வக்கில்லாத கலைஞர் இப்போது நீலிகண்ணீர் வடிக்கிறார்...

ஆனால் இந்திய அரசோ செய்த பாவத்துக்கு சிறிதும் அஞ்சாமல் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் ஊமையன் வேஷம் போட்டு வருகிறது...ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்டது மாதிரி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்ததே ஒரு ஆச்சர்யமான விஷயம்..!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் இலங்கைக்கு நெருக்கடி முற்றியுள்ளது. ஆனால் இந்தியாவின் தயவு இருப்பதால் ஒன்றும் ஆபத்தில்லை என நடமாடும் ஹிட்லர் ராஜபக்சே ஹாயாக இருக்கிறான்...

இந்தியாவை ஆள்வோருக்கு ராஜபக்சே என்ன மச்சானா மாமனா ?போரில் கொள்ளப்பட்டது சீக்கியர்களாக இருந்திருந்தால் மன்மோகன் கொஞ்சம் துடித்து இருப்பார்...இத்தாலி காரனாக இருந்தால் சோனியா துடித்து இருப்பார்....ஆனால் கொல்லப்பட்டது ஏன் என்று கேட்க நாதி இல்லாத அப்பாவி தமிழ் மக்கள் அல்லவா?தமிழகத்தை ஆண்ட தமிழின தலைவர் என கூறி கொண்டவருக்கே துடிக்காத போது இவர்களை சொல்லி குற்றமில்லை...

தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லாத 22 நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தமிழர்களின் தேசமான இந்தியா மவுனம் சாதிப்பது எவ்வளவு மானம் ரோசமற்ற வெட்ககேடான விஷயம்..!

17 கருத்துகள்:

 1. தமிழர்களுக்கு இந்தியாவிலேயே மதிப்பில்லை எனும்போது என்ன செய்வது?

  பதிலளிநீக்கு
 2. உலகிலேயே அதிக மனித உரிமை மீறல் நடத்தியது அமெரிக்க ராணுவம் தான் (வியட்நாம் /இராக் /ஆப்கன் /) இவர்கள் மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவது இலங்கை சீனா பக்கம் சாய்வதால் உண்டான கடுப்பு தான் காரணம் .நிற்க பொது மக்களை மிரட்டி தங்களுக்கு கேடயமாக முள்ளி வாய்க்கால் வரை கூட்டி சென்று மக்களை பலி கொடுத்த புலிகளை எந்த கோர்ட்டில் நிறுத்துவது ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமெரிக்காவை பற்றிதான் ஆடு நனையுதே என ஓநாய் கவலைபடுவதாக கூறியுள்ளேன்....நான் சொல்வது விடுதலைபுலிகளுடன் தொடர்பில்லாத அப்பாவி பொதுமக்களை கொன்ற ராஜபக்சே பற்றித்தான்...

   நீக்கு
  2. அமெரிக்காவின் மனிதஉரிமை மீறல்கள், விடுதலைப் புலிகளின் மனிதஉரிமை மீறல்களை எவரும் மறுக்கவில்லை. அதேநேரத்தில், அடுத்தவர் மீதான குற்றச்சாட்டுகள் மூலம் இலங்கை இராணுவத்தின் குற்றங்களை நியாயப்படுத்த முடியாது.

   ஒரு மனிதஉரிமை மீறலைக் காரணம் காட்டி இன்னொரு மனிதஉரிமை மீறலை மறைக்க முடியாது, மறைக்கவும் கூடாது. எனவே, இலங்கை தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

   http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

   நீக்கு
  3. இந்த கருத்தில் நானும் உடன்படுகிறேன்

   நீக்கு
 3. என்ன செய்ய? நடுவண் அரசு என்னபண்ணுதுன்னு பார்ப்போம்.

  யோவ் படம் சூப்பரப்பு

  பதிலளிநீக்கு
 4. உங்களை பொறுத்தவரை அமெரிக்கா நல்ல காரியங்கள் செய்கிறது, அப்படிபட்ட மனிதஉரிமை பாதுகாவலனை ஓநாய் என்று நீங்கள் குறிப்பிடலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் கொடுமை என்னவென்றால் போர் குற்றத்தில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா இரண்டாம் இடம் வகிக்கும் இலங்கையை விசாரிக்க சொல்வதுதான்...

   நீக்கு
 5. திரு ஹாஜா மைதீன், ஒரு விடயத்தை கவனியுங்கள். உலக சமாதானத்துக்கு முன்நின்று உழைக்கும் அமெரிக்கா இலங்கையிலும் சமாதானத்தை கொண்டுவர முன்நிற்கிறது இப்படியே எல்லோராலும் சொல்லபடுகிறது. இதை ஆதரித்து நீங்களும் இந்த பதிவு எழுதினீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு சரியாக விளங்கவில்லை சகோ...

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம்!இந்தப் பதிவுக்கு/பகிர்வுக்கு பலரும் பல கோணங்களில் கருத்துரைக்கிறீர்கள்.நல்லது!இந்தியா சுதந்திரம் அடைந்து,ஆறு மாதங்கள் கழித்தே இலங்கை சுதந்திரம் பெற்றது.(இலங்கையே சுதந்திரம் பெற்றது,ஆண்ட தமிழ் இனம் அல்ல!)அன்று முதல் இன்றுவரை கொஞ்சம்,கொஞ்சமாக வாய்மொழி வாக்குறுதிகள் காற்றாய்ப் பறந்து கொண்டே இருந்தன.இருக்கின்றன.இருக்கும்.பல்வேறு சந்தர்ப்பங்களில்,பல்வேறு ஆணைக்குழுக்கள் தமிழர் பிரச்சினை தீர்ப்பதற்கென்று கூடின.பல்வேறு ஒப்பந்தங்கள் கைச் சாத்தாகின,ஒன்றுமே நடைபெறவில்லை,1948-முதல்.சுதந்திரம் வேண்டி பல்வேறு குழுக்கள்(ஆயுத)போராடின.நிலையாக நின்றவர்கள் வி.புலிகள் மட்டுமே!இலங்கையில் இனங்களிடையே பிளவுகள் உண்டு என்று உலகறியச் செய்தவர்கள் வி.புலிகளே.இப்போது தான் (அது பிராந்திய நலனாகவும் இருக்கலாம்)உலகப் போலீஸ்காரன் அமேரிக்கா வெளிப்படையாக இலங்கைப் பிரச்சினையில் மூக்கை நுழைத்திருக்கிறது.அதாவது அறுபத்தியிரண்டு ஆண்டுகளாக ஒரு இனத்தை நசுக்குவதை ஆதியோடந்தமாக அறிந்தே இந்த நகர்வை அமேரிக்கா மேற்கொள்கிறது.ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளையோ,கட்சிகளுடன் மேற்கொள்ளும் உடன்பாடுகளையோ பெரும்பான்மை சிங்கள அரசு கிடப்பில் போட்டு வருவதை அறிந்தே இப்போது உலகப் பொது அரங்காம் ஐ.நா மனித உரிமை சபை முன்னிலையில் இதனை முன்னிலைப்படுத்தியுள்ளது.தங்கள் பொட்டுக்கேடு ஐ.நா வரை சென்று உலகே விவாதிக்கும் அளவுக்கு வலிமை பெற்று விட்டதே என்பதே இப்போது சிங்கள அரசின் வயிற்றில்(மகிந்த)புளி கரைக்கும் நிகழ்வாகி விட்டது.இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கிறதோ,இல்லையோ ஈழத்தமிழர் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறோம்!ஏனெனில் தீர்மானம்,தோற்றாலும்,வெற்றி பெற்றாலும் இத்துடன் முடிந்து விடாது,தொடரும்!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ....ராஜபக்சே தண்டிக்க படவேண்டிய ஒரு போர் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை...

   நீக்கு
  2. நன்றி சகோ....ராஜபக்சே தண்டிக்க படவேண்டிய ஒரு போர் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை...

   நீக்கு
 7. 1948-முதல்.சுதந்திரம் வேண்டி பல்வேறு குழுக்கள்(ஆயுத) போராடின.நிலையாக நின்றவர்கள் வி.புலிகள் மட்டுமே! இலங்கையில் இனங்களிடையே பிளவுகள் உண்டு என்று உலகறியச் செய்தவர்கள்

  telegraph.co.uk news
  From 1983 Prabhakaran led a violent war against the Sinhalese-dominated government of Sri Lanka for a separate state for ethnic Tamils, who make up about 13 per cent of the population. During that time he established a mini-state covering the northern and eastern third of the country, with its own navy and air force, and parallel institutions of civil administration, police force, banks and tax collection.
  Velupillai Prabhakaran in 2006
  A fan of Clint Eastwood films, Prabhakaran was credited with inventing the suicide vest; his "Black Tiger" suicide units – almost half of them women – killed thousands of people and assassinated two world leaders, the Indian Prime Minister Rajiv Gandhi in 1991 and Sri Lankan President Ranasunghe Premadasa in 1993.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே,புரிந்தமைக்கு?!லண்டன் டெலிகிராப் குறித்த கட்டுரைக்கும் நன்றி!சாத்வீக வழியில் முப்பது ஆண்டுகள் போராடிக் களைத்த பின்பே,அதாவது ஆண்டாண்டு காலமாக இனக்கலவரங்கள் மூலம் தமிழர் உயிர்கள் காவு கொள்ளப்படுவதும்,அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதும் பொறுக்க முடியாது போன போது,ஆயுதங்களால் அடக்கப்பட்டபோது எங்களுக்கான தெரிவும் ஆயுதமானது.மற்றும்படி ஆயுதங்களை நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதில்லை,நண்பரே!மேலும்,ராஜீவ் கொலையில் விடுபடாத முடிச்சுக்கள் இன்னமும் பல இருக்கின்றன.ஒருதலைப் பட்சமான தீர்ப்பு,விசாரணை என்று இன்றும் விமரசனங்கள் இருக்கின்றன.ராஜீவ் கொலையை நான் நியாயப்படுத்தவில்லை!என்மனைவியின் பிறந்த நாளன்று அவர் கொல்லப்பட்டதால் அன்றிலிருந்து அந்நாளை துக்கதினமாகவே நாம் கடைப்பிடிக்கிறோம்!பிரேமதாச இந்திய அமைதி காக்கும் படையுடன் புலிகளை மோத வைத்தவர்!இலங்கைப் பேரினவாதிகள்(சிங்கள)குறித்து எழுத இந்த இடம் போதாது,விட்டுவிடலாம்!இலங்கையில் சிறுபான்மை இனம் ஒடுக்கப்படும் இனமாகவே தொடர்வதில் உங்களுக்கு எந்த ஆட்சேபமும் இருக்கப்போவதில்லை என்று புரிகிறது!விட்டுவிடலாம்,நண்பரே!!!!!!!

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....