17 மார்ச் 2012

எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி...

கருணாநிதி ராஜினாமா ...

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து கருணாநிதி தனது எம் எல் ஏ பதவியை ராஜினமா செய்தார்...அவருடன் பேராசிரியர் அன்பழகனும் தனது பதவியை ராஜினமா செய்தார்....

மக்களே நீங்கள் யாரும் அதிர்ச்சி அடைந்து இருக்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்...மேற்கொண்டு படியுங்கள்.....

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர் குட்டிமணி உள்பட 37 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது. சிங்களர்கள் மீது விடுதலைப்புலிகள் போர் தொடுத்தனர். அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கொன்று குவித்தனர்.

இந்த பிரச்சினைகளில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து கருணாநிதி (அண்ணாநகர்), அன்பழகன் (புரசைவாக்கம்) ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ஆகஸ்டு 10_ந்தேதி ராஜினாமா செய்தார்கள். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுபற்றி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:_

இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ் இனப்படுகொலை குறித்து இதுவரையில் இந்திய பேரரசின் தலைமை அமைச்சரோ அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மை உள்ள நாடாளுமன்றமோ ஒரு கண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.

இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிம்மதியான வாழ்வு அளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டு இந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல் எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்று அதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அந்த முறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்குப்பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.

ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்பு சபையை வலியுறுத்தி உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தவறிவிட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது தமிழர் தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டதோடு தமிழ் அகதிகள் லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கு செல்ல முடியாமல் திரும்பக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டும் அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவின் சகோதரர் இந்தியாவுக்கு வருகை தந்து இந்திய அரசிடம் இலங்கையின் நிலைமைகளை விளக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்களை வரவழைத்து நிலவரங்களை கேட்டு உண்மை நிலைமைகளை அறிய இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததும், அதனை தமிழக அரசு இந்திய அரசுக்கு வலியுறுத்தாதது பெரும் குறையாகும்.

இலங்கை பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடிய கண்டனத்தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வைகோ இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்து கொள்ளாமல் இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது வருத்தத்திற்குரியது.

நண்பர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசு இடையிலேயே தடுத்துவிடும் என்று இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சொல்லும் அளவிற்கு இங்குள்ள இந்திய அரசு காவல் துறையும், மாநில அரசு காவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிக்காட்டியிருப்பது பெரும் வேதனைக்குரியது."

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

நன்றி : தினத்தந்தியின் வரலாற்று சுவடுகள்

இது நடந்தது 1983 ஆம் ஆண்டு....அன்றாவது தனது பதவியை ராஜினமா செய்தார்..அதை இன்று வரை சொல்லியும் காட்டிவருகிறார்.....ஒருவேளை பின்னாடி சொல்லி காட்ட உதவும் என்பதற்காக கூட அவர் ராஜினமா செய்து இருப்பாரோ!

ஆனால் இன்று?

தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது மத்தியில் தனது மந்திரிகளை பதவியில் தொடர செய்தார்...இப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் அப்போதும் தனது கட்சியின் மந்திரிகளை மத்திய மந்திரிசபையில் தொடரவே செய்வார்....!

எங்கே போனது பழைய கருணாநிதியின் ...............................? அந்த இடத்தில என்ன எழுதினால் சரியாக இருக்கும்?

9 கருத்துகள்:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோ,

  என்னத்த சொல்றது. இன்னும் இவங்கள எல்லாம் நம்புற ஆளுங்க நமக்குள் இருந்தா அவங்க நினைத்து தான் பரிதாபமா இருக்கு.

  வஸ்ஸலாம்...

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. நீங்க போட்டுள்ள படம் - அதுக்குத்தான் கருத்து இட்டுள்ளேன்.

  வடிவேலு பாணியில் வாசிக்கவும்
  அது நல்ல வாயீ - இது நாற வாயீ

  பதிலளிநீக்கு
 4. எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

  எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

  ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

  பிஞ்சுகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

  இதில் மிக வேதனைக்குறிய விடையம்

  இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

  சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


  சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.
  .
  .

  பதிலளிநீக்கு
 5. அட பதிவுக்கும் அதே வடிவேலு பாணி தான்
  அது அப்போ இது இப்போ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி ஹி....மொத்தத்தில் கருணாநிதியை காமெடியன் என்கிறீர்கள்...

   நீக்கு
 6. பழைய கருணாநிதி...புதிய கருணாநிதி என்று எப்போதும் கிடையாது. கருணாநிதி என்பது ஒருவர் மட்டுமே. அது இப்போது இருக்கும் கருணாநிதிதான். அவர் எப்போதும் ஒரே மாதிரிதான். தனக்கு, தன் குடும்பத்திற்கு ஏதாவது ஆதாயம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்வார். இந்திரா காலிலும் விழுவார், சோனியா காலிலும் விழுவார்..நாளை பிரியங்கா காலிலும் விழுவார். மோடி பிரதமரானால் அவர் காலிலும் விழுவார்.இன்னும் ஏன்...நீங்கள் பிரதமரானால் உங்கள் காலிலும் விழ அவர் ரெடி.....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....