24 மார்ச் 2012

இஸ்லாத்தை பற்றி கண்டதையும் எழுதுவதற்கு பெயர்தான் புரட்சியா?


ஒரு விசயத்தை பற்றி எழுதுவதாக இருந்தால் ஓரளவு அதை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்....அதை விட்டுவிட்டு அவர் சொன்னார், அப்படி சொல்லப்படுகிறது என எழுதுவது கழுதையை பார்த்து குதிரைன்னு சொல்வதுபோல கிறுக்குத்தனமான ஒன்று....

உதராணத்துக்கு வெங்காயத்தை பற்றி எழுதுவதாக இருந்தால் வெங்காயத்தின் நிறம் சிகப்பு என சொல்வார்கள், அதை உரித்தால் ஒன்றுமே இருக்காது என சொல்வார்கள் என எழுதுவது ஒரு புத்திசாலித்தனமா ?அல்லது வெங்காயத்தின் சிறப்புகள்,அதன் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்துகொண்டு எழுதுவது புத்திசாலித்தனமா?


ஒரு வெங்காயத்தை பற்றி எழுதுவதற்கே இவ்வளவு விஷயம் தெரிந்து இருக்க வேண்டி இருந்தால் உலகத்தில் பல நூறு கோடி பேர் பின்பற்றும் மதமான இஸ்லாத்தை பற்றி எழுத ஓரளவாவது தெரிந்து இருக்க வேண்டாமா?

இஸ்லாமியர்கள் மக்காவில் உள்ள கருப்பு கல்லை வணங்குகிறார்கள் என்று எழுதுவது நான் மேலே சொன்ன வெங்காயத்தை பற்றி எழுதுவது மாதிரி ...வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என சொல்வது போல முட்டாள்தனமாக எழுதி வருகிறார்கள் பதிவுலகில்...

அந்த கருப்பு கல்லை யாரும் வணங்குவதில்லை...இதை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள அய்யா வாஞ்சூர் அவர்கள் எழுதிய பதிவை பாருங்கள் ....
{முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா? )http://vanjoor-vanjoor.blogspot.com/2012/03/blog-post_23.html

இஸ்லாமியர்கள் ஏக இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு எதையும்,யாரையும் வணங்கமாட்டர்கள்....அப்படி வணங்கினால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல....இதுதான் நிதர்சனம்....

இஸ்லாத்தை பற்றி ஏதாவது ஏடா கூடமாக,அவதூறாக எழுதினால் அதற்கு மறுப்பு சொல்லி பின்னூட்டங்கள் கூடும் ,ஹிட்ஸ் கூடும் என எண்ணி எழுதி வருகின்றனர் சிலர்...பார்வை இல்லாதவனுக்கு பங்களா எப்படி தெரியாதோ அதுபோலதான் இதுமாதிரி அவதூறாக,திரித்து எழுதுபவர்களுக்கும் இஸ்லாத்தின் உயர்ந்த கோட்பாடுகள் தெரியாது...

அவ்வாறு எழுதுவதை புரட்சி என்று வேறு எண்ணிக்கொண்டு இருக்குறார்கள்...
உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாத வெங்காயத்துக்கு பெயர் புரட்சியாம்....!புண்ணாக்காம்...!!


.நண்பர்களே உங்களுக்கு இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்கள் இருந்தால் அதை நாகரிகமாக விமர்சனம் பண்ணி கேளுங்கள்...பதில் சொல்ல பதிவுலகில் பல நண்பர்கள் இருக்கிறார்கள்...ஆரோக்யமாக விவாதிக்கலாம்...விவாதங்களும் விமர்சனங்களும் ஆரோக்யமான முறையில் அமைந்தால் அனைவருக்கும் நல்லதே ..!

7 கருத்துகள்:

 1. இஸ்லாத்திற்கு களங்கம் கற்பிக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடங்கி இன்றுவரை தொடர்கிறது.

  இது ஒரு தூண்டுகோலாக இஸ்லாம் வளர்வதற்கும் இஸ்லாமியர்கள் புத்துணர்வுடன் இருப்பதற்கும் உதவுகிறது.

  புரட்சிமணி பதிப்பித்த‌ திரிப்பான, அவதூறான, தவறான, காழ்ப்புணர்வான‌ “இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா? “ என்ற பதிவே

  என் “முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா? “

  பதிவுக்கு உரமாகிவிட்டது.

  எனது பதிவின் வாயிலாக‌ உண்மைகள் மூலம் புரட்சிமணியின் திரிப்புகளை உடைத்தெறிய வாய்ப்புக்கு புரட்சிமணி வழிவகுத்தத‌ற்கு மகிழ்ச்சியே.

  .

  பதிலளிநீக்கு
 2. இஸ்லாத்தில் கல்லும் செம்பும் கட‌வுளில்லை.

  கல்லும் செம்பும் கடவுளா? PART 1

  கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறிவாகுமேடி குதம்பாய் புல்லறிவாகுமேடி - குதம்பைச் சித்தர்

  ஓசையற்ற கல்லை நீர் உடைத்தது உருக்கள் செய்கிறீர்
  பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
  வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
  ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே - சிவவாக்கியர்

  அண்டாண்டங் கடந்து நின்ற சோதி தானும்
  அவனிதன்னில் உடைந்த கல்லில் அமருமோ? - அகஸ்தியர் ஞானம்

  நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
  சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
  இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
  வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே! - சிவவாக்கியர்

  உளி இட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
  புளிஇட்ட செம்பும் பொருளாவ தெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்

  கொல்லனும் குசவனும் கல் தச்சனும் கன்னானும்
  கொட்டிய சம்மட்டியாலே தட்டிய உருவங்களை வல்வினை அகற்றுமென்று சொல்லி உங்கள் வாயிலே
  மண்களை வாரிப் போட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளாதீர்! - வேதாந்த சாத்திரம்

  எத்தனைதான் கல்லுகளை பூசித்தாலும்
  ஈனர்களே உங்களுக்கு மோட்சமுண்டோ
  பித்தர்களே கல்லுகளை விலைக்கு வாங்கி
  பிரானென்றே சிலையினிலே முட்டுகின்றீர் - சங்கராச்சாரி

  சற்குருவை அறியாமல் உலகிலேதான்
  சண்டாளர் கல்லுகளைத் தெய்வ மென்று
  பொய்க் குருக்கள் சொன்ன புத்தி தன்னைக் கேட்டு
  பூசை செய்து கல்லுகளைப் போற்றி செய்வார் - ஞானோபதேசம்

  நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
  சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா
  நட்ட கல்லும் பேசுமோ..... ....... - சிவவாக்கியர்

  மாறுபட்ட மணி குலுக்கி மலர் இறைத்து வீணிலே
  ஊறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே - சிவவாக்கியர்

  சாவதானத் தத்துவச் சடங்கு செய்யு மூடர்காள்
  தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் சொல்வேன் - சிவவாக்கியர்

  செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமுஞ்
  செமனையுந் துருவையுந் தெய்வமென்று கூறுறீர் – சிவவாக்கியர்

  வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
  மண்ணை இலிங்கமாக வைத்துப் பூசிப்போரும்
  சுட்ட உருமரச் சிலைகள் பூசிப் போரும்
  துய்ய செப்பு கல்லுருவைப் பூசிப்போரும்
  திட்டமுடன் எட்டெழுத்துப் பொருளென்போரும்
  சிறந்த எழுத்தஞ்சுமே பொருளென்போரும்
  விட்ட இடம் தன்னை அறியார் இவரெல்லரும்
  விட்ணு வென்றும் சிவனென்றும் விளம்புவாரே
  - சங்கராச்சாரி உடலறி விளக்கம்

  கும்பிடு கோவில் குளம் மடம் சேத்திரம்
  கோபுரம் தேர் திருவாசல்
  கோலமாய் முகிழ்த்து சிலை சித்திர படஞ்செய்
  கொத்துவேலைகளுக்குப் பார்த்தால்,
  சம்பரமாய் ஆண் பெண் குறிகளைக்

  காட்டு
  சாயலு மோகலீலைகளின்
  சாத்திர மன்மதன் நூல்கொக்குவத்தினிற்
  சாற்றுகின் றதனினு மென்மடங்காய்
  விம்பவா சனஞ்சிங்காரித்து ரதத்தின்மீது
  சாமிகள் வைத்து யதனில்
  தாசிவேசிகளையேற்றி ராசதெரு வீதியில்
  தட்சணம் புரியும் செயலால்
  கெம்பித ரெனும்பிற வஞ்சரே மதிகள்
  கெட்ட அந்தகர்களே இதெல்லாம்
  கியானமோ அல்லதக் கியானமோ உங்கள்
  கிறுக்கைவிட் டிதற்குரை பகருவீர்.
  - சங்கராச்சாரி உடலறி விளக்கம்

  கல்லினுஞ் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே - பட்டினத்தார்

  உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப்
  புளியிட்ட செப்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே - பட்டினத்தார்

  ஒருவன் ஓர் இரும்புகொண்டு உருத்தரித்து வைத்ததில் பெரிய பாவை பேசுமோ அறிவிலாத பேதைகாள் - சிவவாக்கியர்

  பண்ணி வைத்த தேவரைப் பரப்பி வைத்திருந்து நீர்
  எண்ணி எண்ணி யென்னநின்றுரைக்கிறீர்கள் பேதைகாள் - சிவவாக்கியர்

  CONTINUES …..

  பதிலளிநீக்கு
 3. இஸ்லாத்தில் கல்லும் செம்பும் கட‌வுளில்லை.

  கல்லும் செம்பும் கடவுளா? PART 2.

  அண்டர்கோன் இருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகள்
  கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே - சிவவாக்கியர்

  கல்லிலேயுஞ் செம்பிலேயும் என் கருத்தை வைத்துப் போற்றாமல்
  சொல்லிறந்த பாழ் வெளியில் தூங்குவது மெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்

  செம்பினால் மரத்தால் மண்ணால் சிலையினால் செங்கல் தன்னால்
  பைம் பொன்னால் மெழுகால் நீற்றால் படிக்கத்தால் உருப்படுத்தி
  நம்பியே தெய்வமென்று நாடோறும் தொழுவோரெல்லாம்
  உம்பர்கோன் பதி இழந்து உழலுவார் நரகில்தானே - பேரின்பமணி மாலை

  கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி
  கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்கும் குதிரை, யானை
  குருடுகளே மாடுகளையும், அதன் சாணியையும் பெண்
  குறியையும், தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் - மெய்ஞ்ஞான விளக்கம்

  கழுதை மாடாடு பன்றிக் கடூரமாம் பாம்பு பல்லி
  பழுதுள்ள மிருகம் தன்னை பாரா பரமதுவே என்று
  முழுதுமே மதிகளற்ற மூடராய் மனிதர் கூடித்
  தொழுதிடுந் தெய்வமென்று சொல்லுவதெந்த நீதம்
  - திருமூலர் திருவிருத்தம்

  வில்வம், துளசி, கொன்றை, கொல்லும் அலரி, ஆத்தி,
  வேம்பு, அரசு, பள்ளி, ஓம் பால்சனை, அருகம், புல், ஓதி, தருப்பை, மாவும் நல்குங் கதியென்றெண்ணி
  பொருளைக் காணாமற் போனீர் இருளின் மக்களே - மெய்ஞ்ஞானம்

  SOURCE: ---------------- ஈ.வெ.ரா.மணியம்மையார் - விடுதலை - 18.2.1950

  பதிலளிநீக்கு
 4. ஸலாம் சகோ.ஹாஜா...
  சென்ற வருடம்,
  உஜில்லா தேவி என்ற ஒருவர்
  முஸ்லிம்கள் காஃபாவை நோக்கி சஜ்தா செய்து கொண்டு இருக்கும் போட்டோவில்... மகாமே இபாராஹீம்க்கு முன்னர் உள்ளவர்களை மட்டும் தன் மட்டமான போட்டோ ஷாப் ஒன்றில் அழித்து... அதற்கு பின்னர் உள்ளவர்கள் மகாமே இப்ராஹிமுக்கு சஜ்தா செய்வதுபோல போட்டோவை போட்டோ ஷாப்பில் மாற்றி... படங்காட்டி.. மக்காவில் லிங்கத்தை வணங்குவதாக பதிவு எழுதினார். அதாவது, அந்த மகாமே இப்ராஹீம், ஒரு உருளை வடிவ தங்க நிற கண்ணாடி கூண்டு. அதை தங்க நிற லிங்கம் என்று திரிக்க முனைந்து விட்டார். இஷ்டத்துக்கு கதை விட்டார்.

  அப்புறம் அந்த பதிவின் பின்னூட்டத்தில் அவர் எந்த போட்டோவை மாற்றினாரோ... அதே போட்டோவை லிங்க் போட்டு இது நியாமா என்று கேட்டால் பார்ட்டி சவுண்டே குடுக்கலே.

  இதெல்லாம் சும்மா.. ஹிட்ஸ் வெறி. நாம் எழுதினதை நாலுபேரு படிக்க வேண்டும் என்று நினைத்து எந்த தரத்துக்கும் கீழே இறங்குவது அவ்வப்போது ஒரு சிலரால் அசிங்கமாக அரங்கேறுகிறது.

  ஒருநாள் இவர்களுக்கும் உண்மை விளங்க துவா செய்வோம் சகோ.
  தங்கள் ஆதங்கம் சரியே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மச்சான்,

   ஹ..ஹ..ஹா.... முஸ்லிம்கள் கல்லை வணங்குகிறார்களா????? ஹ...ஹா ...ஹா... நல்ல காமெடி பண்றாங்கல்ல பதிவுலகில்????

   எனக்கு பின்னூட்ட பெட்டி வரல... அதனாலதான் சகோ ஆசிக் கோட பின்னூட்டத்தில் எனதை சேர்த்துவிட்டேன்.

   நீக்கு
  2. வாங்க மச்சான்..என்ன ஆளே காணோம்...

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....