27 மார்ச் 2012

இலவசம்...உங்கள் வசம்...மற்றவை ஜெ வசம்...பட்ஜெட்...பற..பற...


தமிழக அரசின் பட்ஜெட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பென்சில் முதல் செருப்பு வரை அனைத்தும் இலவசம் என அறிவித்துள்ளார்கள்......அப்படியே பத்தாவது வரை அனைவரும் இலவச பாஸ் என சொன்னால் இதைவிட நல்லா இருக்கும்....

இப்போதே இலவசமாக கொடுத்து மாணவர்களை அரசியல்வாதிகள் பழக்கப்படுத்துகிறார்களோ என என்ன தோன்றினாலும் ஏழை மாணவர்களுக்கு நிச்சயம் இது நல்ல செய்திதான்....பாராட்டலாம்...

சென்ற வருடம் தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணங்களை அரசு முறைப்படுத்தியது....ஆனால் இன்று வரை தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையை நிறுத்திய பாடில்லை.... மக்களும்,பெற்றோர்களும் போராடி அலுத்து அந்த விசயத்தை மறந்தே போய்விட்டார்கள்...அரசும் நல்லது என நினைத்து அதை அப்படியே விட்டுவிட்டது.

பேசாமல் தனியார் பள்ளிகளை அரசு தடை பண்ணினால் என்ன?தமிழகம் முழுக்க அரசு பள்ளிகளில் கல்வியை இலவசமாக கொடுத்தால் என்ன? கேட்கவே எவ்வளவு இனிமையாக இருக்கு..!

மற்றபடி குடிமகன்கள் எப்பாடு பட்டாலும் குடித்தே தீர்வார்கள் என்று எண்ணி சரக்கு விலையை ஏற்றியுள்ளார்கள்....
மருந்து பொருட்கள், கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றுக்கான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.இன்சுலின்,ஹெல்மெட் போன்றவற்றின் விலை குறையும்....

இந்த பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன....இலவச திட்டங்கள் மற்றும் மானியத்துக்கு மட்டும், 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.வேலை வாய்ப்புகள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை....நாங்கள்தான் எல்லாமே தருகிறோமே அப்புறம் எதற்கு வேலை என நினைத்து இருப்பார்கள்...இலவசம் என்னும் போதையை ஏற்றியே மக்களை தள்ளாட வைப்பதில் நானும் கெட்டிக்காரிதான் என உரக்க கருணாநிதிக்கு கேட்கும் வகையில் சொல்லி இருக்கிறார் ஜெ...

இலவசம் உங்கள் வசம்...வேற எதையும் என்னிடம் கேட்க கூடாது என சொல்லாமல் சொல்கிறார் ஜெ...புதிய வழிகாட்டி மதிப்பீடுகள், ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. அதே தேதியில் இருந்து, முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.இது அரசுக்கு லாபம் தருமா இல்லை வழக்கம்போல் நில ப்ரோக்கர்களுக்கு லாபம் கொடுக்குமா என தெரியவில்லை....

வழக்கம்போல எதிர்கட்சிகள் இந்த பட்ஜெட்டை எதற்கும் உதவாத பட்ஜெட் என்றும்,ஆளும் கட்சி இது சிறந்த பட்ஜெட் என்றும் புளித்து போன பல்லவியை பாடி வருகின்றன....

அட நீங்க என்ன வேணும்னாலும் பேசி தொலைங்கப்பா ..கரண்ட் பிரச்சினைக்கு ஒரு முக்கால் புள்ளியாவது வைங்கப்பா....மக்களுக்கு அது போதும்....

12 கருத்துகள்:

 1. //வழக்கம்போல எதிர்கட்சிகள் இந்த பட்ஜெட்டை எதற்கும் உதவாத பட்ஜெட் என்றும்,ஆளும் கட்சி இது சிறந்த பட்ஜெட் //

  அம்மம்மா.......இல்ல இல்ல ஆமாம்மா

  பதிலளிநீக்கு
 2. முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

  Visit Here For More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/03/profit-sharing.html

  பதிலளிநீக்கு
 3. முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

  Visit Here For More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/03/profit-sharing.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ஏங்க நீங்க வேற?நான்லாம் வரலைங்க....இனிமே கூப்பிடாதிங்க....

   நீக்கு
 4. //இலவசம்...உங்கள் வசம்...மற்றவை ஜெ வசம்...பட்ஜெட்...பற..பற...///

  கவிதே கவிதே தலைப்பே அருமை சகோ

  பதிலளிநீக்கு
 5. பட்ஜெட்டை அலசியிருக்கும் வருங்கால நிதியமைச்சர் தம்பி ஹாஜா வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்ப நீங்க ஆரம்பிக்க போற கட்சில என்னைய சேர்த்துகொள்ளுங்கள் தலைவரே....

   நீக்கு
 6. உங்கள் ஆதங்கம்தான் என்னுடையதும் கூட. அன்னன்னிக்கு நாட்ல நடக்குற விஷயத்தை அழகா பதிவாக்கிடும் உங்கள் திறமைக்கு ஒரு சல்யூட். நாளாக நாளாக மெருகேறுகிறது. நடை. வாழ்த்துக்கள்.

  //பேசாமல் தனியார் பள்ளிகளை அரசு தடை பண்ணினால் என்ன?தமிழகம் முழுக்க அரசு பள்ளிகளில் கல்வியை இலவசமாக கொடுத்தால் என்ன?//

  - அருமையான யோசனை. அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி....வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும்....

   நீக்கு
 7. சரியாக மதிப்பீடு செய்திருக்கிறீர்கள் காஜா..

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....