19 மார்ச் 2012

படிப்புக்கு நோ ..டாஸ்மாக்குக்கு எஸ்....சீரழியும் சிறுவர்கள்..சிந்திக்குமா அரசு?


ஒரு பத்திரிக்கை செய்தியை படித்தேன்.....படிக்கவே மனசு கஷ்டமாக இருந்தது....

மதுவை ஒழிக்க வேண்டிய அரசே மது விற்பது கொடுமை என்றால் அந்த மதுக்கடைகளில் தமிழ்நாட்டின் வருங்கால சந்ததிகளான சிறுவர்கள் வேலை செய்வது அதை விட கொடுமை....


சென்னையில், 600க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன. இதில், 14 முதல் 16 வயதுக்குட்பட்டோர், வாடிக்கையாளர்களுக்கு மது வாங்கி கொடுத்தல், தொடு உணவு பரிமாறுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலும், 8ம் வகுப்பை தாண்டாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களாகவே இவர்கள் உள்ளனர்.


சென்னை குடி மையங்கள் ஆய்வு நடத்தியவரின் பார்வையில்...

* 6,00க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன.
* ஒரு மையத்தில் இரு சிறுவர்களாவது ஊத்திக் கொடுக்கின்றனர்.
* கல்வியறிவு பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
* வீட்டை விட்டு வெளியேறி வழி தெரியாமல் தஞ்சம் அடைவோரும் உண்டு.
* குடும்ப வறுமையால் பணியாற்றும் சிறுவர்களும் உண்டு.
* பெற்றோரே குழந்தைகளை அடகு வைத்துள்ளதும் உண்டு.
* பெற்றோர் பிரிந்ததால் ஆதரவற்ற சிறுவர்களும் உள்ளனர்.
* பொய் சொல்லி விட்டு வேலை செய்யும் சிறுவர்கள் அதிகம்.

இது சென்னையில் மட்டுமே ...அப்ப தமிழகம் முழுக்க இம்மாதிரி சீரழியும் சிறுவர்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரங்களோ..?

நாளடைவில் இந்த சிறுவர்கள் அனைவரும் நாட்டின் சிறந்த "குடி"மகன்களாக வருவதற்கே வாய்ப்புகள் அதிகம்....


இதற்கு என்ன முடிவு?இது யாருடைய தவறு?

இதற்கு யார் காரணம்..? மதுவை விற்கும் அரசாங்கமே முழுமுதல் காரணம்....

படிக்க வைக்க வேண்டிய அரசே குடிக்கவும், குடிக்க ஊற்றி குடுக்கவும் வைக்கிறதே ?! இதுவும் தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திராவிட கட்சிகளின் சாதனைதனோ?!

இனி சிறுவர்கள் யாரும் வேலை செய்தால் அந்த பாரின் உரிமை ரத்து செய்யப்படும் என அரசாங்கம் உத்தரவு போடும் வரை இந்த அவலங்கள் தொடரவே செய்யும்....!

8 கருத்துகள்:

 1. மிகவும் கெர்டுமையான விஷயம்தான்...


  குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து விட்டதாய் மார்தட்டும் அரசு இதுபோன்று மதுகடைகளை கண்டுக்கொள்ளாதது வேதனைதான்...

  தற்போதைய நிலவரப்படி 15லிருந்து 18-க்கு உட்பட்ட நிறைய மாணவர்கள் இந்த போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள்...

  இதை தடுக்க அரசும் சமூகமும் கண்டிப்பாக எதாவது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்...

  பதிலளிநீக்கு
 2. இதை யாரும் கண்டு கொள்ளாததுதான் பிரச்சினையே

  பதிலளிநீக்கு
 3. ஸலாம் சகோ.ஹாஜா,

  ஒரு காலத்தில் பூரண மதுவிலக்கு என்று சொல்லி ஓட்டு கேட்டார்கள்..! இன்று நிலைமை தலை கீழே... "அந்த கட்சி ஆட்சிக்கு வந்தா டாஸ்மாக் காலி" அப்படீன்னு பொய் பிரச்சாரம் பண்ணி மக்களை நம்ப வைத்து விட்டால்... எவ்வித இலவச வாக்குறுதியும் தராமலேயே எதிர்க்கட்சியை டெபாசிட் இழக்க வைக்க முடியும்..! அப்படியான நிலை இப்போது..! மொத்த மாநிலமே போதையில் தள்ளாடுவது போன்ற நிலை அருவருப்பாக இருக்கிறது..!

  நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம் சகோ..! அட்லீஸ்ட் 'குடிப்பதை எதிர்ப்போர் சிலர் இருந்தார்கள்' என்றாவது பிற்கால வரலாறு சொல்லட்டுமே..! நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. நன்றி சகோ.ஹாஜா..!

  பதிலளிநீக்கு
 4. கொடுமையான விஷயம். தீர்வுதான் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுவர்களை வேலைக்கு வைத்திருக்கும் பார்களின் உரிமையை ரத்து செய்தால் இந்த அவலம் நீங்க வைப்பு இருக்கிறது...நன்றி

   நீக்கு
 5. சகோதரர் ஹாஜா உங்கள் தளத்தில் பாலோவராக இருந்தும் உங்கள் பதிவுகள் எனக்கு வருவதில்லை ஏன்?

  பதிலளிநீக்கு
 6. ஒருவேளை பாலோவர் லிஸ்டிலிருந்து என்னை தூக்கி வீட்டிர்களோ?

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....