30 மார்ச் 2012

இருளர் இன பெண்கள் கற்பழிக்கபடவில்லை...அநியாத்துக்கு ஆதரவாக ஜெ..


சில மாதங்களுக்கு முன்பு இருளர் இன பெண்கள் நான்கு பேரை காவல் துறையினர் கற்பழிப்பு துறையினராக மாறி சீரழித்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது (பேசப்பட்டது மட்டும்தான் !) நினைவு இருக்கலாம்...

பிறகு பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகு சம்பந்தப்பட்ட காவல்துரைனர் மீது வழக்கு பதிவு செய்யப்படது...ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை...அந்த அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்...ஆனால் கைது செய்யப்படவில்லை....இது எவ்வளவு பெரிய அநீதி?இது தொடர்பான வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது...

நேற்று இது பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் அந்த பெண்கள் கற்பழிக்கபடவில்லை என போலிசுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார்...

அதற்கு காரணமாக பரிசோதனை செய்த மருத்துவர், பாலியல் பலாத்காரம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்....

அதிகாரத்தை பயன்படுத்தி காவல் துறையினர் இது மாதிரி அறிக்கை வாங்குவது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா?அறிக்கையில் அறிகுறிகள் இல்லை என்றால் அந்த பெண்கள் கற்பழிக்கபடவில்லை என அர்த்தமா?

மானத்தை விட்டுவிட்டு,பயத்தை விட்டுவிட்டு அந்த பெண்கள் தாங்கள் கற்பழிக்கப்பட்டதாக புகார் அளிப்பார்களா என்ன?அதுவும் காவல் துறையினர் மீதே...!

அந்த சம்பவமே நடக்கவில்லை என்றால் தமிழக அரசு அப்பெண்களுக்கு தலா 5 இலட்சம் நிதி வழங்க வேண்டியதன் அவசியம் என்ன?

காவல்துறை முதல்வரின் கட்டுபாட்டில் வருவதால் தனக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என எண்ணிக்கொண்டு போலிசுக்கு சப்போர்ட்டாக பேசி இருக்கிறார் ஜெ...ஆனால் அதுவே அவருக்கு கெட்ட பெயர்தான்....

முதல்வர் ஒரு பெண்ணாக இருந்தது கொண்டு கற்பழிக்கப்பட்ட அப்பாவி பெண்களுக்கு எதிராக பேசி இருப்பது எவ்வளவு முரண்பாடான விஷயம்...!?

இதில் எங்கே அப்பெண்களுக்கு நீதி கிடைக்க போகிறது?இனியும் இது மாதிரி காவல்துறையினர் அத்துமீறி நடந்தால் யாரும் புகார் கொடுக்க கூட வரமாட்டார்கள் ..அதைத்தான் முதல்வரும் விரும்புகிறார் போலும்...

புகார் கூறப்பட்ட காவல்துறையினர் அதை மறுத்து நீதி மன்றத்தில் வாதாடலாம்...ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய முதல்வரே புகாரை மறுத்து நடந்த அநியாத்துக்கு ஆதரவு அளிக்கலாமா?

5 கருத்துகள்:

 1. இன்னும் என்னென்ன கொடுமைகளை பார்க்க கேக்க வேண்டியிருக்கிறதோ?

  பதிலளிநீக்கு
 2. அவசியம் கேட்க வேண்டியது.


  இந்து கடவுள்கள், இராமர் பாலம் பற்றி சீமானின் பேச்சை //////// இங்கு//////// சொடுக்கி கேட்கவும்
  .
  .

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....