09 மார்ச் 2012

நான்கு பேரை சிறைக்கு அனுப்பிய தனுஷ் ,அம்பானியும் வெறும் ஆண்டியும் (நொறுக்கு தீனி)


கொலைவெறி பட்டை கொலைவெறியோடு பாடி மக்களை தொந்தரவு செய்த நாலுபேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ்....

சைதாப்பேட்டையில் குடிபோதையில் ரயிலில் ஏறிய நான்கு வாலிபர்கள் 'ஒய் திஸ் கொலவெறி டி..' பாடலை பாடி பெண்களை கேலி செய்துள்ளனர். அதில் ஒருவன் லுங்கி அணிந்துகொண்டு தனுஷைப் போல நடனமாடி வேறு பயணிகளை தொந்தரவு செய்துள்ளான்...

சினிமாவினால் இந்த சமூகம் எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்....வெளியில் பாடிய நபர்களை கைது செய்தாச்சு...திரையில் பாடியவர்களை ?!.....

இன்னும் என்னென்ன கருமாதிகள் நடக்க போகிறதோ அந்த பாட்டினால்...

மொதல்ல அந்த பாட்ட ban பண்ணுங்கப்பா....

...................................... ......................................................... ...........................................

அரசியலில் ஈடுபடும் மகளிர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 105 வது இடம் தான் கிடைத்திருக்கிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருக்கிறது...பெண் உரிமைகள் மறுக்க படுகின்றன என குற்றம் சாட்டப்படும் முஸ்லிம் நாடுகள் இவைகள் என்பது குறிப்பிடத்தக்கது....இன்னும் பல முஸ்லிம் நாடுகளும் இந்த எண்ணிக்கையில் வருகின்றன்....

பெண் உரிமை பற்றி மகளிர் தினத்தில் மட்டும் குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே...நீங்கள் எல்லாம் எப்போது பெண்களுக்கான முப்பத்திமூன்று சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றி ......!!....பெண்கள் பதவிக்கு வருவது....!


.......................................... ............................................ ..........................................


இந்திய பணக்காரத் தொழிலதிபர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,230 கோடி டாலர் (1 லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) ஆக உள்ளது

ஏறத்தாழ உலகின் ஏழை மக்களில் மூன்றில் ஒருவர் வசிக்கும் இதே இந்தியாவில்தான் ,தினமும் 23 கோடி பேர் பட்டினியால் வாடும் இதே இந்தியாவில்தான் இந்த அம்பானியும் வசிக்கிறார்....என்ன ஒரு முரண்பாடு...!

இதில் தவறு எங்கே இருக்கிறது? ஆட்சியாளர்களிடமா? இல்லை ஒட்டு போடும் மக்களிடமா?அல்லது பகிர்ந்து அளிக்கும் மனமில்லாத செல்வந்தர்களிடமா ?

.................................. .............................................. ..............................................

6 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....