
செவிலியர்கள் பணி என்பது ஏறக்குறைய மருத்துவர்களுக்கு இணையான ஆனால் அதற்கு கீழே அடுத்த நிலையில் உள்ள உன்னதமான பணி....
யார் ,எவர் என்று தெரியாத நோயாளிகளிடம் அன்பு காட்டி,மிகவும் நோயுற்று படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளிகளை டிரெஸ்ஸிங் செய்வதிலிருந்து அவர்களின் பணி மகத்தானது....ஒரு சில நர்சுகள் அதில் விதிவிலக்காக இருக்கலாம்...ஆனால் பெரும்பாலோர் சேவை மனப்பான்மையிலே செயல்படுகின்றனர்....
முன்பின் தெரியாதவர்களை தங்கள் தாய்,தந்தையாக, சகோதர சகோதரிகளாக ,பாட்டியாக எண்ணி சேவை பண்ணும் மனப்பான்மையில் செவிலியர்கள் மருத்துவர்களை பின்னுக்கு தள்ளி விடுகின்றனர் .....
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை என்பதன் மூலம் அடிக்கப்படும் கொள்ளைகளினால் நானும் பாதிக்கப்பட்டவன்.....ஆனால் அங்கு உள்ள செவிலியர்களின் பணியால் அவர்கள் மேல் எனக்கு மதிப்பு கூடியது....அவர்களின் பணிக்காக நாம் ஏதாவது அன்பளிப்பு கொடுத்தால்கூட மறுத்துவிடுவார்கள்..
ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம்?கண்டிப்பாக மிக சொற்பமே....
அரசு மருத்துவமனைகளில் எப்படி என்று எனக்கு சரியாக தெரியவில்லை.....ஆனால் நோயாளிகளிடம் கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களுக்கு அதில் கிள்ளி கூட கொடுப்பதில்லை....
பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களை ஒரு கொத்தடிமையை போலவே நடத்தி வருகின்றன....குறைவான சம்பளம், சரியான சாப்பாடு கொடுப்பது இல்லை....விடுமுறை இல்லை...எதாவது கேட்டால் அவர்களை பணி நீக்கம் செய்வதாக மிரட்டுவது என அடக்கி வைத்துள்ளனர் ...இடையில் பணி நீக்கம் செய்யப்பட்டால் அவர்களுக்கு வேறு மருத்துவமனைகளில் வேலை கிடைப்பது சிரமம்....மேலும் அவர்களுக்கு
experience certificate கொடுக்கமாட்டார்கள்...
தனியார் மருத்துவமனைகளிலே சென்னையில் உள்ள அப்பல்லோ மிகவும் புகழ் பெற்றது....சிகிச்சையில் மட்டுமல்ல....தனியார் மருத்துவமனைகளில் அப்பல்லோ மருத்துவமனைதான் செவிலியர்களுக்கு மிகவும் குறைவாக சம்பளமே வழங்குகிறது. தேர்வு வைத்து ஆள் சேர்க்கும் நிர்வாகம் செவிலியர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.3,500 நிர்ணயிக்கிறது. அப்பல்லோ மருத்துவமனை என்ற பெயருக்காகவே இந்த குறைந்த ஊதியத்துக்கு செவிலியர்கள் வேலை செய்கின்றனர்.
நேற்று அவர்கள் வெளி மாநிலங்களில் செவிலியர்ககளுக்கு வழங்கப்படுவதுபோல், மாத ஊதியமாக ரூ.14 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை வழங்கவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி உள்ளனர்....அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என தெரியவில்லை....
தமிழக அரசாவது தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஒரு நல்ல அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும்.....
செய்வார்களா?
| Tweet |