31 ஆகஸ்ட் 2012

காஷ்மீரில் சிறுவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் காவல்துறையும்,ராணுவமும்


காஷ்மீரில்  நடக்கும் பிரச்சினைகளை  வெறும் பார்வையாளனாக  கடந்து  செல்வோர்தான்  நம்மில் பெரும்பாலோர்.....

காஷ்மீர்  பிரச்சினை எப்போதும் இந்தியா பாகிஸ்தான்  பிரச்சினையாக மட்டுமே ஊடகங்களால்  எழுதப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது....அங்கு மக்கள் படும் துன்பங்களை  யாரும் கண்டு கொள்வதில்லை....
பொதுமக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக  சித்தரிக்கும்  போலீஸ்  அவர்களை தீவிரவாதிகளாக  உருவாக்கியே தீர்வதில் முழு மனதுடன் செயல்பட்டு வருகிறது  ....

காஸ்மீர் மக்கள் ஒரு பக்கம் தீவிரவாதிகளாலும்  ஒரு பக்கம் இந்திய ராணுவம் மற்றும்  போலிசாலும்  பெரும் துயரத்துக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி  வருகின்றனர்....

அங்கு பெண்களக்கு பாதுகாப்பு இல்லை....சிறுவர்களுக்கு  பாதுகாப்பு இல்லை....
இந்த சிறுவனை  பாருங்கள்....பைசான் பசிர் சோபி  என்ற  இந்த 12 வயது சிறுவனை கைது செய்துள்ளது போலீஸ்....
இவன் மீது தீ வைப்பு, கொலை முயற்சி,மற்றும் நாட்டிற்கு எதிராக  போர்  தொடுத்தல்  போன்ற பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

இவனுடன் மேலும் நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது  ஜாமீனில்  வெளியே விடப்பட்டுள்ளனர்....
கொஞ்சம்கூட மனசாட்சி இல்லையா  இவர்களுக்கு ?

இந்த சிறுவனா  நாட்டிற்கு எதிராக போர்  தொடுக்க போகிறான்?

விளையாட்டு துப்பாக்கி வைத்து விளையாடும் வயதுள்ள இவனா  துப்பாக்கி தூக்கி  கொலை செய்ய போகிறான்...?
நெருப்பை கண்டு பயப்படும் வயதுள்ள இவனா தீவைத்து  கொளுத்த  போகிறான்?

ஜெயிலுக்கு சென்று  வந்த அவனின் மனநிலை எப்படி இருக்கும்? செய்யாத தவறுக்கு கைது செய்யப்பட்டுள்ள அவனுக்கு நாளடைவில் இதை செய்தால் என்ன என்ற மனநிலை  உருவாவதற்கு யார் காரணம்?

 அப்பாவி மக்களை மூளை சலவை செய்ய வலைவீசி காத்திருக்கும் தீவிரவாதிகளின்  கண்களில்  இந்த சிறுவர்கள் சிக்குவதற்கு யார் காரணம்?

போலீசா?ராணுவமா?அரசாங்கமா?இல்லை ஏதுமறியாத  இந்த சிறுவர்களா?


12 கருத்துகள்:

  1. ஸலாம் சகோ.ஹாஜா,
    குஜராத்தில் பாஜக முன்னாள் மந்திரி இந்நாள் எம் எல் ஏ வை , பாபு பஜ்ரங்கி யை மற்றும் பல ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளை குற்றவாளிகள் என்ற கோர்ட் அறிவித்ததாலும், தங்களது எதிரி ஹேமந்த் கர்கரேயை கொன்ற கூலி பயங்கரவாதி கசாப்புக்கு தூக்கு உறுதி என்ற தீர்ப்பும் ஹிந்துத்துவாக்களை கடும் கோபம் கொள்ள வைக்கிறது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையை காஷ்மீர், பங்களூரு என்று ஆங்காங்கே பயங்கரவாத நடவடிக்கைகளை ஆட்சியில் இருப்போர் ஆரம்பித்து விட்டார்கள்..! பதவியில் உள்ள பயங்கரவாதிகள் ஒழிக..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸ்ஸலாம் சகோ....

      உண்மையை சொல்ல போனால் பதவியில் இருப்பவர்கள்தான் பயங்கரவாதிகள்...

      நீக்கு
  2. Friday, November 28, 2008

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

    சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

    80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில்.

    அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784.

    மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன.

    பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

    எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

    நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

    பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம்.

    யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860).

    விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர்.

    ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான்.

    ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு.

    காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

    இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை.

    மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

    ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

    காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல.

    மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது.

    இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும்.

    பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் சின்ஹாவின் சதித்திட்டம் அது.

    ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது,

    யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும்,

    ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.



    Continued …….

    FULL ARTICLE SOURCE: http://amarxwritings.blogspot.sg/2008/11/blog-post_28.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி..உங்களின் வருகைக்கும் ..உண்மையை விளக்கமாக சொன்னதற்கும்...

      நீக்கு
  3. கொடுமை....

    சிறுவர்களை வயதுக்கு ஏற்றவாறு பார்க்க வேண்டும்....
    வீண் சந்தேகம் அவர்களை அப்படியே ஆக்கிவிடும்...

    பதிலளிநீக்கு
  4. காஷ்மீர் பிரச்சினை - Posted by அ.மார்க்ஸ் (a.marx) Part 2 FRIDAY, NOVEMBER 28, 2008

    ``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

    ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது.

    பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை.

    ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன?

    முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

    பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம்.

    கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்.

    ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும்.

    காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார்.

    1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள்.

    இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

    காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள்.


    உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

    குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை.

    இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல.

    அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர்.

    இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

    ``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

    இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே.

    சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம்.

    அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

    சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது.

    அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது.

    இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர்.

    இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

    பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார்.

    இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே.
    இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன்.

    ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை.

    ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல.

    இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.

    இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன.

    அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார்.

    பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

    Continued …….

    FULL ARTICLE SOURCE: http://amarxwritings.blogspot.sg/2008/11/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  5. காஷ்மீர் பிரச்சினை - Posted by அ.மார்க்ஸ் (a.marx) Part 3 FRIDAY, NOVEMBER 28, 2008

    ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம்.

    இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல

    பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும்,

    சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?

    ஏதோ பாகிஸ்தானில் பாலும் தேனும் ஓடுவதாகவும், ஜனநாயகம் செழித்திருப்பதாகவும் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம்.

    அமெரிக்க விசுவாசத்திலாகட்டும், சொந்த மக்களை ஒடுக்குவதிலாகட்டும் இந்திய அரசுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பாகிஸ்தான்.

    காஷ்மீர் பிரச்சினையை,
    1. பாகிஸ்தானின் தூண்டுதல்,
    2. `ஜிஹாதி' பயங்கரவாதம்,
    3. தேசப் பிரிவினையின் எச்ச சொச்சம் ஆகியவற்றின் விளைவு என்பதாக மட்டுமே முன்னிறுத்தி காஷ்மீர மக்களின் சுய நிர்ணய உரிமை, சுதந்திர வேட்கை என்கிற அம்சத்தை மூடி மறைப்பது இந்திய ராஜ தந்திரத்தின் சதித் திட்டங்களில் ஒன்று.

    ஒன்றைச் சொல்லியாக வேண்டும். உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும், காஷ்மீரி மக்களின் போராட்டத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு.

    காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் போராடிக் கொண்டுள்ளனர்.

    காஷ்மீரி மக்களின் விருப்பைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்கிற வாக்குறுதியை இந்திய அரசு ஐ.நா. அவையின் முன் அளித்தது.

    இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காகவும், அரசியல் துரோகங்களை எதிர்த்துமே காஷ்மீரிகள் இன்று போராடிக் கொண்டுள்ளனர்.

    இன்று காஷ்மீர மக்கள் அமைதி வழியை நோக்கித் திரும்பியுள்ளனர். ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைந்துள்ளனர்.

    இந்தியாவிலிருந்து காஷ்மீரத்திற்குச் சுதந்திரம் என்பதன் இன்னொரு பக்கம் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கும் சுதந்திரம் என்பதே.

    காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் போதே இந்திய மண்ணில் பயங்கரவாதம் முடிவுக்கு வரத் தொடங்கும்.

    தினந்தோறும் இந்த அம்சத்தில் செலவிடப்படும் ரூ.500 கோடியையும் இந்திய மக்களின் நலனுக்குச் செலவிட இயலும்.

    Posted by அ.மார்க்ஸ் (a.marx) P FRIDAY, NOVEMBER 28, 2008


    FULL ARTICLE SOURCE: http://amarxwritings.blogspot.sg/2008/11/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  6. .
    .

    இங்கே சொடுக்குக‌ 1. INDIAN TERRORISM IN KASHMIR VIDEO

    இங்கே சொடுக்குக‌ 2.Kashmir children attacked by Indian soliders VIDEO

    இங்கே சொடுக்குக‌ 3. Kashmiri Heart Touching Video-Reality in Kashmir VIDEO

    இங்கே சொடுக்குக‌ 4. காஷ்மீர்: சவக்குழியின் சாட்சியங்கள் READ

    ,

    பதிலளிநீக்கு
  7. இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிக்கை!

    தமிழகத்தில் ஏராளமான இசுலாமியர்கள் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிவருகின்றனர்.

    தமிழக அரசு 1987 ஆம் ஆண்டு முதல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, பத்தாண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது.

    கடந்த 2008, ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 1405 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஆனால், அவர்களில் இசுலாமியர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

    அப்போது விடுதலையானவர்கள் என்னென்ன சட்டப்பிரிவுகளில் சிறைப்படுத்தப்பட்டிருந்தனரோ, அதே சட்டப்பிரிவுகளின் படியே இசுலாமியர்களும் சிறையிலுள்ளனர்.

    நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சென்று கணக்கெடுத்துப் பார்த்தால், பொய் வழக்குகளிலும்; சந்தேக வழக்குகளிலும் அதிகம் சிறைபடுத்தப்பட்டவர்களாக வாடிக்கொண்டிருப்பவர்கள், தலித்துகளும் இசுலாமியர்களும்தான் என்கிற உண்மை வெளிப்படும்.

    இசுலாமியர்களின் சமூக பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்த சச்சார் குழுவின் அறிக்கை இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

    பல்வேறு வழக்குகளில் தண்டனைப் பெற்ற இசுலாமியர்களுக்கு, சட்டப்படி வழங்கப்பட வேண்டிய உரிமைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

    மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சாதாரண சலுகைகள் கூட, அவர்கள் இசுலாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கப்படுகின்றன.


    இசுலாமியர்களைப் போலவே நளினி உள்ளிட்ட அரசியல் கைதிகளும் இந்த அவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    எனவே, தமிழக அரசு இந்த ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில், பத்தாண்டுகளைக் கடந்து சிறையில் வாடும் இசுலாமியர்கள் உள்ளிட்ட அரசியல் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 01-09-2012 சனி அன்று மாலை, சென்னை அரசுப் பொது மருத்துவமனை எதிரிலுள்ள மெமோரியல் ஹால் அருகே, இந்திய தேசிய லீக் நடத்தும் அறப்போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.

    ஒடுக்கப்பட்ட நம் சொந்தங்களின் விடுதலைக்காக குரல் எழுப்ப, ஜனநாயக சக்திகள் அனைவரும் திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    இவண்

    திருமாவளவன்


    http://www.thiruma.in/2012/08/release-muslims-in-jails.html

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....