13 பிப்ரவரி 2013

வினோதினியின் இந்த பேச்சை கேட்ட பின்புமா அந்த சட்டங்கள் வேண்டாம்?!....

பாதிக்க பட்டவர்களுக்குதான்யா வலி தெரியும்....இறக்கும் முன் அந்த சகோதரி பேசிய வார்த்தைகளை  .....அந்த சகோதரியின் பேச்சை கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் ..அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என



இன்று நம்மிடம் இல்லாத ஆசிட் வீச்சால் உயிர் இழந்த என் சகோதரி வினோதினிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்....

வேறு என்ன செய்ய முடியும்?இது போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வேண்டும் என என் பிளாக்கில் கிறுக்கத்தான் முடியும்...!

அட இப்பவும் இந்த சட்டமெல்லாம் காட்டுமிராண்டி சட்டம் என காட்டுமிராண்டிகளை காப்பாற்றும் ஒரு கூட்டத்தின்  ஆதரவை எதிர்கொண்டுதான்  இதை நானும் பதிவு செய்ய முடியும்..


என் மகள் பட்ட அவஸ்தையை போல அந்த பாவியும் அவஸ்தை பட வேண்டும் என சொல்லும் அந்த பாசமிக்க தந்தைஇடம் போய்  இந்த சட்டமெல்லாம் காட்டுமிராண்டி சட்டம் என சொல்ல யாருக்கு தைரியம் இருக்கு ?

 நோ நோ அப்படி எல்லாம் செய்ய கூடாது ...அந்த குற்றவாளிக்கு இந்த  தண்டனையை கொடுத்தால் போன உயிர் திரும்ப வந்துவிடுமா என மகளை பறிகொடுத்து கதறும் அந்த தந்தையிடம் கூற யாருக்கு தைரியம் இருக்கு?

அந்த கொடியவனுக்கு  நீங்கள் சொல்வதுபோல தண்டனை கொடுத்தால் மட்டும் இனி இதுபோன்று ஆசிட் வீச்சுக்கள் குறைந்து விடுமா என இறந்துபோன அந்த அப்பாவி பெண்ணின் பெற்றோர்களிடம் வாதம் செய்ய யாருக்கு தைரியம் இருக்கு?

அய்யா மனித உரிமை ஆர்வ(கோளாறுகளே )ளர்களே !

இப்போது என்ன சொல்கிறீர்கள்?

தினம் தினம் இதுபோல பெண்கள் பாலியல் தொந்தரவுகளால்  பாதிக்கப்பட்டு இறந்தாலும் சட்டம் மட்டும் லேசாகவே வேண்டும்..!என்ன ஒரு தர்ம பார்வை!

பாதிக்கப்பட்டது நாமாக இல்லாத வரை இந்த தர்ம பார்வை தான் பெரும்பாலானாவர்களுக்கு நியாயமாக தெரியும்...

எனக்கு கிடைக்காவிடில் உனக்கு ஆசிட் தான், ஆனால் எனக்கோ சில வருட சிறை தண்டனைகள் ...அதுவும் வழக்கு ஜெயித்தால் தான்...என கொக்கரித்து அராஜகம் பண்ணும்  மிருகங்களுக்கு வாழும் உரிமையை கொடுப்பதுதான் மனித உரிமையா?

அந்த சகோதரியின் தந்தை  கதறுவதுபோல  அந்த அயோக்கியனுக்கு ஆசிட் ஊற்ற வேண்டும்...அட் லீஸ்ட்  மரண தண்டனையாவது  கிடைக்க வேண்டும் சீக்கிரமே ...

 அட...!மைனஸ் ஒட்டு போட்டு அந்த காட்டுமிராண்டிக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  நண்பர்கள் யாரென்று  தெரிந்து கொள்ள ஆசை...அட சொல்லிட்டு போடுங்கப்பா...


14 கருத்துகள்:

  1. சகோ ஹாஜா!. இந்தப்பெண்ணிற்கு ஆசிட் ஊற்றிய கயவனுக்கு மட்டும் இந்த தண்டனையா? அல்லது மார்க்கத்தை காப்பாற்ற, பார்தா போட்டு முகத்தை மூடாது விட்ட முஸ்லீம் பெண்களின் மீது ஆசிட் ஊற்றிய மார்க்க போராளிகளுக்கும் இதே தண்டனை வழங்க வேண்டுமா? ஷரியா சட்டத்தைப் பார்த்து கொஞ்சம் சொல்லமுடியுமா?

    பதிலளிநீக்கு
  2. என் கேள்விக்கு உங்கள் பதில் என்ன சகோ...இந்த பெண்ணிற்கு நேர்ந்த அவலத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..அதை முதலில் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ ஹாஜா!. என்னைப் பொறுத்தவரை குற்றங்களின் தன்மையைப் பொறுத்து மரண தண்டனை நியாயமே!. பலர் வறுமையில் வாடக்காரணமான பொரும் ஊழல் செய்பவர்களுக்கும் (ஸ்பெக்ட்ரம் போன்றோ, நிலக்கரி ஊழல் போன்றோ) அல்லது பலர் மரணமடையக் காரணமாக இருப்பவர்களுக்கும், (பல வெடிகுண்டு வெடிப்புகளை சொல்லலாம்.)மரணதண்டனை வழங்குவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். இதே போல் உள்ள மனதை பாதிக்கும் நிகழ்ச்சிகளை செய்பவர்களுக்கும் அதிக பட்ச தண்டனை கிடைக்க வேண்டும்...அதுவும் விரைந்து கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நன்றி!

      நீக்கு
  3. #அல்லது மார்க்கத்தை காப்பாற்ற, பார்தா போட்டு முகத்தை மூடாது விட்ட முஸ்லீம் பெண்களின் மீது ஆசிட் ஊற்றிய மார்க்க போராளிகளுக்கும் இதே தண்டனை வழங்க வேண்டுமா? ஷரியா சட்டத்தைப் பார்த்து கொஞ்சம் சொல்லமுடியுமா?#

    முதலில் முகத்தை மூட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்பதைவிட முகத்தை மூட சொல்லவே இல்லை இஸ்லாம்...இரண்டாவது அப்படி முகத்தை மூடாமல் இருந்த பெண்களின் மேல் எவன் ஆசிட் ஊற்றினாலும் அவனுக்கும் கடும் தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ அல்தக்கியாவில் அள்ளுறீங்களே! பிரதர் ஹாஜா! முகத்தை இஸ்லாம் மூடவே சொல்லவில்லையென்றால் சமீப காலத்தில் பொதுவாக அனைத்து இளம் பெண்களும் (கல்யாணமான பெண்கள் உட்பட) முகத்தை மூடுவதன் காரணம் என்னவோ? இஸ்லாத்தில் சமீபத்தில் புதிதாக ஏதாவது சட்டம் வந்துள்ளதா? :)பதிவிற்கு சம்பந்தமில்லாமல் போனதற்கு மன்னிக்கவும். நன்றி!

      நீக்கு
    2. தங்களது அங்கங்கள் தெரியாமல் உடை அணிய வேண்டும் என்பதுதான் இஸ்லாமிய சட்டம்...முகம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதல்ல...தெளிவாக முகம் தவிர்த்து என்றுதான் கூறப்பட்டு இருக்கும்...

      நீக்கு
    3. முஸ்லிமாக்களது ஈமானை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பர்தா இல்லாமல் வரும் முஸ்லிமாக்களின் முகத்தில் ஆஸிட் ஊற்றி அவர்களது ஈமானை காப்பாற்றி வருகிறார்கள் மார்க்க போராளிச்சகோதரர்கள்.
      அந்த படங்களைப்பார்க்க......http://pagadi.wordpress.com/2011/10/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

      நீக்கு
    4. சகோ ஹாஜா பாய் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே!.
      //சமீப காலத்தில் பொதுவாக அனைத்து இளம் பெண்களும் (கல்யாணமான பெண்கள் உட்பட) முகத்தை மூடுவதன் காரணம் என்னவோ? இஸ்லாத்தில் சமீபத்தில் புதிதாக ஏதாவது சட்டம் வந்துள்ளதா? :)////தங்களது அங்கங்கள் தெரியாமல் உடை அணிய வேண்டும் என்பதுதான் இஸ்லாமிய சட்டம்...முகம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதல்ல...தெளிவாக முகம் தவிர்த்து என்றுதான் கூறப்பட்டு இருக்கும்...// ஆக புதிதாக ஏதாவது சட்டம் வந்துள்ளதா? :)

      நீக்கு
  4. India vill Maranaa tnandanai yandru summa than iruku Arab nadu pol sattam kadumai yaga vendum appathan paliyal kutram irugathu....mapill

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு மச்சான்...

    மரணதண்டனை வேண்டாம் என்று பேசும் யாரும் தன் மனைவிக்கோ, அப்பாவிற்க்கோ, பிள்ளைகளுக்கோ ஆசிட் ஊத்தினால் இப்படி பேச மாட்டார்கள்... எவனுக்கோ தானே வலி?? இவங்களுக்கா???

    பதிலளிநீக்கு
  6. சகோ ....ஹாஜா மைதீன் ....அஸ்ஸலாம் அலைக்கும் ,
    கண்ணுக்கு கண் ...பல்லுக்கு பல், மூக்குக்கு ...மூக்கு
    யாருக்கு வேண்டுமையா இந்த காட்டுமிராண்டி சட்டம் ..??!!
    கைநாட்டு காட்டுமிராண்டிகளுக்குத் தான் தேவை ....
    நாம் மெத்த படித்த நவீன நாகரீகவாசிகள் , நமக்கு இந்த ஷரியா
    சட்டங்கள் தேவையில்லை என்று சொல்லுபவர்கள் ,அவர்கள் அறிந்தோ அறியாமலோ
    கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய ஷரியா பக்கம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள் .
    இன்று இல்லாவிட்டாலும் நாளை , இந்தியா இஸ்லாமிய சட்டங்களை
    சுவிகரித்துக் கொள்ளும் ......ஐயமில்லை

    @ சகோ நல்ல தந்தி
    உங்கள் உண்மையான பெயரிலேயே வரலாமே ..!! ஏன் இப்படி ..??
    "சிந்திக்கமாட்டீர்களா" ஐயா வண்டி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ நாசர் பெயரில் என்ன இருக்கிறது. கருத்து தானே முக்கியம்!. :)
      முகம்மது நபி(சல்) அவர்களின் பெயரே உண்மையான பெயர் இல்லை என்கிறார்களே உண்மையா?

      நீக்கு
  7. ஒரு அநீதிக்கு நல்ல தீர்வு சொன்னா, நீ ரொம்ப யோக்கியமான்னு எதிர் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா விஷயம் திசைமாறிப் போய் பிரச்சினை தான் முடியாமல் போகும். அந்த தீர்வு தான் நியாயம்னு எல்லோருக்கும் தெரியும்.... ஆனால், இது குர் ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டது என தெரியவந்தால், சொல்லப்பட்ட நியாயம் அநியாயமா மாறிடும் இவங்களுக்கு.அய்யய்யோ.... ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் எனக்கே/என் உடமைகளுக்கே இந்த நிலைமை வந்துடுச்சேன்னு புலம்பும் நாள் இவர்களுக்கு வந்தால் ஒழிய நாம் சொல்லும் எந்த நல்ல தீர்வும் இங்கிருப்பவர்களின் மண்டையில் என்ன, காதில் கூட ஏறாது.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....