24 ஆகஸ்ட் 2012

சென்னை பதிவர் சந்திப்பில் கருணாநிதி!


நடக்கவிருக்கும் சென்னை பதிவர் சந்திப்பில் கலைஞர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்....

இருங்க நண்பர்களே....அப்படி அவர் கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றினால் எப்படி இருக்கும்....அவரின் கற்பனை பேச்சுக்கு போனசாக எனது கற்பனை கமெண்டும் உண்டு....!


எனதருமை உடன்பிறப்புகளே (இது என்ன கட்சி மாநாடா!).....வலையுலகில் புலி போல் பாயும் புலிகளே....நான் விடுதலைபுலிகளை சொல்லவில்லை.(இவருக்கு நாக்கில்தான் சனி போல)...இந்த எழுத்தினால் நான் பெற்ற புகழ் இந்த வையகம் அறிந்ததே ....அதை போல எழுத்தில் என் பாணியை பின் பற்றி நீங்களும் புகழ் பெற வேண்டும்...(பதிவர்களில் பாதி பேரு காதில் பஞ்சு வைத்து கொள்ள துவங்குகின்றனர்)

இப்போது ஜெயலலிதா அவரை விமர்சிக்கும் அனைவரின் மீதும் வழக்குகள் போட்டுள்ளார்...இம்மாதிரி வழக்குகள் நாளை பதிவர்களான உங்கள் மீதும் பாயலாம்...எனவே பதிவர்கள் அனைவரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்து எழுத்து பணியோடு மக்கள் பணியும் சேர்ந்து ஆற்ற அழைக்கிறேன்...(இப்போது முழு பதிவர்களும் காதில் பஞ்சோடு)


நீங்கள் எல்லாம் பதிவுலகில் ஒற்றுமையாக ஒருங்கிணைத்து செயல்படவேண்டும் (தலைவரே முதலில் உங்க வாரிசுகளை ஒற்றுமையா செயல்பட சொல்லுங்க )......சமுகத்தில் நடக்கும் தவறுகளை சுட்டி காட்ட வேண்டும்...(நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்க செய்வோம் தலைவரே ).....எதிர்வரும் காலங்களில் திமுக ஆட்சி அமைகின்ற நேரத்தில் எனக்கு பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாராட்டு விழா எதுவும் நடத்த வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்....(உங்க அகராதியில் வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தமாமே !)


இப்போது இணையதளங்களில் என்னைய மட்டும்தான் அதிகமாக கஞ்சி காய்ச்சி வருகின்றனர் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குராருய்யா.)..அதனால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை...ஏனென்றால் காய்த்த மரம்தான் கல்லடிபடும்...(யாரும் உங்களை கல்லால அடிக்கலையே ...சொல்லால தானே அடிக்கிறார்கள் !)


நீங்களெல்லாம் ஈழத்துக்காக போராடும் என் போர்குணத்தை பற்றி அறிவீர்கள்....அதுபோல போர்குணம் உங்களுக்கும் இருக்க வேண்டும்(அச்சச்சோ ..வேணாம் அய்யா வேணாம் உங்க போர்குணம்..)ஈழம் வேண்டும் என்று நான் சொல்லவில்லை...அதே சமயம் ஈழம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை!மொத்தத்தில் நான் சொல்வது யாருக்கும் சரியாக புரிவதில்லை...(முதலில் உங்களுக்காவது புரியுதா தலைவரே !)

இறுதியாக ஒன்று இந்த பதிவர் மாநாடு ஜெயலலிதாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று தெரிவித்துக்கொண்டு எனது உரையை முடித்துகொள்கிறேன்...(தலைவர் உரையை முடிக்கும் முன்பே மைக் அனைக்கப்படுகிறது..பதிவர்கள் காதிலிருந்து பஞ்சை தூக்கி எறிகிறார்கள்)
13 கருத்துகள்:

 1. //எனவே பதிவர்கள் அனைவரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்து எழுத்து பணியோடு மக்கள் பணியும் சேர்ந்து ஆற்ற அழைக்கிறேன்..//

  ஹா.ஹா. ஹாஜா அடி தூள். நல்லவேளை காமடி பீஸ் அரசியல்வாதிகள் தலைமையில் கவியரங்கம் வைக்கவில்லை.ப்ளேடு போட்டே கொன்றிருப்பர்!!

  பதிலளிநீக்கு
 2. அந்த தவில்காரர்(கள்) காதில் விழுந்தால் சரி.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. அவரு பேச்செல்லாம் நாம் கேட்டு கொண்டு இருக்க முடியுமா என்ன?நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்...

   நீக்கு
 4. இவரு ஆட்சியில இருக்கும் போது ஒரு போராட்டமும் நடத்த மாட்டாரு, ஆட்சி போனதும், இலங்கைத் தமிழன், ஹிந்தி எதிர்ப்பு அது இதுன்னு ஏமாத்திகிட்டு இருப்பாரு. எதைச் செஞ்சாலும் இவரோட சொந்தகளுக்கும், கட்சியில் உள்ள கைத்தடிகளுக்கும் மட்டும் தான் பலன் இருக்கும். மற்றவர்கள் அதோ கதிதான்.


  ஹிக்ஸ் போஸான்: கடவுளுக்கும் கடவுள் துகளுக்கும் என்ன சம்பந்தம்?
  http://jayadevdas.blogspot.in/2012/08/blog-post_1900.html

  பதிலளிநீக்கு
 5. Wow. Super boss. Naanum payandhutten. Katpanaiya?
  Appadiye namma thalaththukkum konjam vaangalen?
  http://newsigaram.blogspot.com

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....