05 மே 2011

பயோடேட்டா: அழகிரி


பெயர்: அழகிரி


அடைமொழி: அஞ்சா நெஞ்சன் ( அப்படின்னா ஸ்டாலின் அஞ்சும் நெஞ்சனான்னு யாரும் கேட்ககூடாது...)


பதவி: மத்திய அமைச்சர் என்று நினைவு!


கருணாநிதி: திமுக வை குடும்ப சொத்து ஆக்கிய குடும்ப தலைவர்....


ஸ்டாலின்: தம்பியே ஆனாலும் முதல்வர் நாற்காலியை விட்டு தள்ளி நிற்க வேண்டியவர்...


கனிமொழி: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் கட்சிக்கு சனி பிடிக்க வைத்து கடுப்பேற்றியவர்....


ஜெயலலிதா: ஜெயமாக கூடாதவர்....


சகாயம்: நெஞ்சில் நெருப்பை வார்த்தவர்....


தா .கிருட்டிணன்: நடுரோட்டில் தன்னை தானே வெட்டிக்கொண்டு செத்தவர்.....


நாடாளுமன்றம்: போக கூடாத இடம்...


மதுரை: எப்போதும் இருக்க வேண்டிய இடம்...


ஆங்கிலம்:"PASS" என்று மட்டும் சொல்ல பயன்படும் மொழி...


சாதனை: ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றியது....


வேதனை: முக்கி முக்கி பார்த்தாலும் கட்சியில் ஸ்டாலினுக்கு மேல் முக்கிய பதவி கிடைக்காதது....


சோதனை: திமுக தோற்றால் வரப்போவது....


எதிர்கால திட்டம்: திமுக வின் தலைவர் பட்டம்.....