14 மே 2011

அமோக வெற்றி அடைந்த அதிமுகவும், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்த திமுகவும்....


சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.....திமுக இருபத்தி மூன்று இடங்களை மட்டுமே வென்று படு தோல்வி அடைந்தது...

இதன்மூலம் அதிமுகவுக்கு அடுத்த படியாக அதிக இடங்களை வென்ற தே மு தி திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்துள்ளது...கருணாநிதியை மக்கள் எதிர்க்கட்சி தலைவராக கூட அங்கீகரிக்காமல் அந்த இடத்தை விஜயகாந்துக்கு அளித்துள்ளனர்.....

திமுகவின் குடும்ப ஆதிக்கம், ஸ்பெக்ட்ரம், பவர் கட் போன்றவற்றின் மூலம் தன்னை தானே தோற்கடித்து ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தி உள்ளார் கருணாநிதி.....

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவை காப்பாற்ற முயற்சிக்காமல் கட்சியை விட்டு தூக்கி இருந்தால் ,கடைசி மூன்று மாத காலத்தில் தனது பேரன்களை சினிமா துறையில் இருந்து விலகி இருக்க செய்து இருந்தால், தேர்தலுக்கு ஆறு மாத காலத்துக்கு முன்பாவது மின்சார பற்றாக்குறையை ஏதாவது செய்து சரி செய்ய முயன்று இருந்தால் ( முடியாத விசயம்தான்...),காங்கிரஸ் கட்சியையும், பாமகவையும் அடித்து விரட்டி இருந்தால் நிச்சயம் கருணாநிதி எதிர் கட்சி தலைவராவது ஆகி இருக்கலாம்....

கனிமொழிக்காக ,ராசாவுக்காக ,தனது குடும்பத்தினருக்காக தமிழக மக்களுக்கு செய்த சில நல்ல திட்டங்களின் மகசூலை அறுவடை செய்யாமல் கட்சியை கருகி போக செய்துள்ளார் கருணாநிதி.....

மக்கள் நல்ல முடிவையும்,தனக்கு ஓய்வையும் அளித்து இருப்பதாக சொல்லி இருக்கும் கருணாநிதி அதற்க்கான காரணங்களை என்று களை எடுக்க போகிறார்?

பல நல்ல திட்டங்களை செய்தும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் அதல பாதாளத்துக்கு போனதற்கான காரணங்களை என்று கருணாநிதி களை எடுக்க போகிறார்?

அவருக்கே வெளிச்சம்...

வெற்றி அடைந்த அதிமுக நல்லாட்சி தரவேண்டும்....ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் பல...