29 ஏப்ரல் 2011

பிரச்சார கோமாளி ....


நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில்( தேர்தலே முடிந்த போன விசயம்தான்) தி மு க வின் ஸ்டார் பேச்சாளர் படங்களில் அடிவாங்கியே சிரிக்க வைக்கும் வடிவேலுதான் ....

பிரச்சார கூட்டங்களில்அதிகமாக கூட்டம் கூடியதும் இந்த சிரிப்பு நடிகருக்குத்தான்.....

பெரும்பாலான மக்கள் அவர் பேசியதை ரசித்தனர்...ஆனால் எனக்கு அவர் பேசியது பிடிக்கவில்லை.....அந்த சமயங்களில் நான் எழுதாததால் இப்போது காலம் கடந்து வடிவேலுவின் பிரச்சாரத்தை பற்றி எழுதுகிறேன்.....

வடிவேலு தனது பிரச்சாரத்தில் மக்களுக்கு என்ன நல்ல திட்டங்களை பற்றி சொன்னார்?

விஜயகாந்துடன் உள்ள தனது சொந்த பகையை மட்டும் காரணமாக கொண்டு அவர் பிரச்சாரம் செய்தார்....விஜயகாந்தை நாகரிகம் இல்லாமல்அவன் இவன் என்று திட்டி தீர்த்தார்....

விஜயகாந்த் மட்டும்தான் குடிக்கிறாரா?நீங்கள் பச்சத்தண்ணியை தவிர வேற எதையும் குடிக்க மாட்டிர்களா வடிவேலு?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் யாருமே குடிகாரர்கள் இல்லை என்று உங்களால் கூற முடியுமா?

விஜயகாந்துக்கும் உனக்கும் பிரச்சினைனா கோர்ட்டுக்கு போ....அதை விட்டு விட்டு மக்கள்தான் உங்களுக்கு கிடைத்தார்களா?

வடிவேலு இருபது நிமிடம் பேசினால் அதில் பதினெட்டு நிமிடம் விஜயகாந்தை திட்டித்தான் பேசினார்...ஜெயலலிதாவை பற்றி ஏதாவது பேசினாரா?திமுக ஆட்சிக்கு வந்தால் செய்யபோகும் திட்டங்கள் பற்றி பேசினாரா?

நீயெல்லாம் பிரசாரம் பண்ணி நாங்கள் கேட்கவேண்டிய நிலைமை....என்ன கொடுமை இது.....

விஜயகாந்த் குடிக்கிறதுதான் உங்கள் பிரச்சினை என்றால் தமிழ் நாட்டில் யாரையும் குடிக்க விடாமல் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டியதுதானே...?

வடிவேலுவை சொல்லி குற்றமில்லை.....அண்ணா , நாவலர், சம்பத் ,கலைஞர் போன்ற பேச்சாளர்களை வைத்து வளர்ந்த தி மு க இன்று வடிவேலுவின் பேச்சை நம்பி பிரச்சாரம் செய்கிறது.....

வடிவேலுவை திட்டுவதால் நான் விஜயகாந்தின் போக்கை ஏற்று கொள்கிறேன் என்று அர்த்தமில்லை.....

விஜயகாந்தை மட்டுமே குடிகாரன் என்று சொல்வதைத்தான் நான் ஏற்றுக்கொள்ளவில்லை....அவருடன் சண்டை என்பதற்காக வடிவேலு எனக்கு பிடிக்காத விஜயகாந்த் யாருக்குமே பிடிக்க கூடாது என்ற சுயநல பிரச்சாரம் செய்ததுதான் எனக்கு பிடிக்கவில்லை....

இதை படிப்பவர்கள் வடிவேலுவின் இந்த சுயநல பிரச்சாரம் சரியா தவறா என தங்கள் கருத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் ....

12 கருத்துகள்:

 1. சரியாக கேட்டீர்கள்

  எதுலும் இணைக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 2. வடிவேலுக்கு கேப்டன் மீது இருந்த பழைய பகைமற்றும் காழ்ப்புணர்ச்சியை போக்கிக் கொள்ளவே அவருக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்...

  இனி என்னவாகும் என்று காலமே பதில் சொல்லும்....
  ஆட்சியை பொருத்தே இதற்காக முடிவு இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 3. அமாம் இது நிஜமாகவே சுயநல பிரச்சாரம் தான் ..

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. //நீயெல்லாம் பிரசாரம் பண்ணி நாங்கள் கேட்கவேண்டிய நிலைமை....என்ன கொடுமை இது.....

  //
  சிங்கமுத்து - மயில்சாமி - வையாபுரி - செந்தில் - விந்திய - ராதாரவி - ???????????? இவங்க பிரசாரத்தை எல்லாம் கேட்கவேண்டிய நிலையா ??

  பதிலளிநீக்கு
 6. வெறும் குடிகாரர் என்று மட்டுமே சொல்ல வில்லையே.. விருதச்சலதுகு என்ன செஞ்ச நு கேட்டாரு .. அம்மா பொம்மைய கொளுத்தி செருப்பால அடிச்சிட்டு கூட்டனிய நு கேட்டாரு .. குடும்ப அரசியல் நு சொல்ற ஆனா நீ மனைவி மச்சினன் மாமியார வெச்சு தானே கட்சி நடத்துற நு கேட்டாரு.. பொதுமக்களுக்காக கட்டுற பலத்துக்கு கொஞ்சம் இடம் தர முடியல உன்னால, நீ எப்படி முதல்வர வருவா நு கேட்டாரு.. இப்படி நறுக்கு நல்ல தானே கேட்டாரு.. ! வெறும் குடிகாரன் நு சொன்னதை மட்டும் என் எடுத்து வெச்சு பேசணும்..??
  அதுவும் இல்லாம, அவர் சரக்கடிச்சிட்டு போதைல பேசுறது சேலம் மாநாட்டுல தெள்ளத்தெளிவா தெரிஞ்சுதே ...

  உங்க வீட்ல ஒருத்தன் கல்ல விட்டு எரிஞ்சு கலாட்ட பண்ணிட்டு , அப்புறம் உங்க தெரிவுலையே கவுன்சிலற்கு நின்னா, நீங்க அவரை எதிர்த்து பேசுவீங்களா? மாடீன்களா ? அட்லீஸ்ட் உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட பொய் ப்ளிஸ் ஒட்டு போடதீங்கனு சொல்லுவீங்களா? மாடீன்களா?

  பதிலளிநீக்கு
 7. ஹெட்லைன் டுடே - எக்சிட் போல் கணிப்பு படி தி மு க முந்துகிறது - முந்தைய கணிப்பில் ஜெ தான் முதல்வர் என்று அடித்து சொன்ன இந்திய டுடே இப்போது ஜெ முதல்வராவது சந்தேகமே என தெரிவித்துள்ளது.. தி மு க தனியாக 90 வரையும் , அதன் கூட்டணியோ சேர்ந்து 130௦ வரையும் பெரும் என்று தெரிகிறது.. தி மு க வின் பிரசாரம் மிக அதிகமான வாக்களர்களை தி மு க பக்கம் இழுத்துள்ளது

  தலித் வாக்குகளில் பெரும் பகுதி தி மு க விற்கு சென்றுள்ளது.. கிராமப்புறங்களில் தி மு க அதிக வாக்குகளை பெற்றுள்ளது .
  அ தி மு க வை விட கிராமப்புறத்தில் 5% அதிகம் தி மு க விற்கு
  முதல் முறை வாக்காளர்கள் வாக்கு தி மு க வே அதிகம் பெற்றுள்ளது

  தேர்தலுக்கு முன் தி மு க விற்கு 44% பேர் ஆதரவு சொன்னார்கள்.. இப்போது 50% க்கு மேல் தி மு க விற்கு வாக்களித்திருப்பதாக தெரிகிறது

  அம்மா கொடநாட்டில் இருக்க வேண்டும் என்பது விதி போல

  பதிலளிநீக்கு
 8. //வடிவேலு தனது பிரச்சாரத்தில் மக்களுக்கு என்ன நல்ல திட்டங்களை பற்றி சொன்னார்?//


  சாராயத்தை பற்றிதான் பேசினார்....

  பதிலளிநீக்கு
 9. ஹாய் நண்பா! பாத்து ரொம்ப நாளாச்சுல்ல! :-)

  பதிலளிநீக்கு
 10. #ஜீ... சொன்னது…
  ஹாய் நண்பா! பாத்து ரொம்ப நாளாச்சுல்ல! :-)#

  ஆமாம் நண்பரே.....திரும்பவும் வந்தாச்சு.....நீங்கள் நலம் என்றே நம்புகிறேன்....

  பதிலளிநீக்கு
 11. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே...

  பதிலளிநீக்கு
 12. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு ராஜேஷ் ....

  நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்....ஆனால் அவரின் பிரச்சாரம் விஜயகாந்தின் மேல் உள்ள வெறுப்பினால் மட்டுமே தவிர மக்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....