
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல நம் நாட்டில் இருந்து கொண்டு எதற்கெடுத்தாலும் வெளிநாட்டை உதாரணம் சொல்வது அல்வா சாப்பிடுவது மாதிரிதான் எல்லாருக்கும்.....
அதில் பெரும்பாலும் ஊழலில் கொழிக்கும் அரசியல்வாதிகளும், லஞ்சத்தில் செழிக்கும் காவல்துறையும் மீதான விமர்சனங்கள்தான் அடிக்கடி சொல்லப்படும் உதாரணங்கள்....அரசியல்வாதிகளை விடுங்கள்..அதில் நம்மவர்களை அடித்து கொள்ள ஆளில்லை மற்ற நாடுகளிடம்...ஆனால் காவல்துறை?
மலேசியாவை பற்றி பொதுவாக அது ஒரு சுற்றுலா நாடு ,தமிழ் படங்களின் கனவு டூயட் பாடல்கள் நடக்கும் நாடு என்பது நாம் அறிந்த ஒன்று...
ஆனால் மலேசியாவில் கொள்ளையும்,கொலையும் சர்வ சாதாரணமாக நடக்கும் விசயங்கள் என்பது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்? மலேசியா போலிசும் தொட்டதற்கெல்லாம் லஞ்சம் வாங்குபவர்கள்தான்....
மலேசியாவில் Money changer எனப்படும் பணம் மாற்றம் வர்த்தக தொழில் நம் தமிழ் மக்கள் செய்யும் அதிகமாக செய்யும் தொழில் ஆகும்...ஆனால் இந்த தொழிலுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை..இந்த தொழில் செய்பவர்களின் உயிருக்கும் உத்ரவாதம் இல்லை...
இந்த தொழில் நடக்கும் கடைகளில் சர்வ சாதாரணமாக கொள்ளையர்கள் புகுந்து பணத்தை அள்ளி செல்வதை ஒரு தொழிலாக வைத்துள்ளனர்...இது நடப்பது பெரும்பாலும் பட்ட பகலில்தான்...கடையில் இருக்கும் நபர்கள் வங்கிகளுக்கு பணத்தை கொண்டு செல்லும்போது துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்த பணத்தை அலேக்காக அள்ளி சென்று விடுவார்கள்....
கொள்ளையர்களிடம் பணம் வைத்திருப்பவர்களோ, கடையில் இருப்பவர்களோ பணத்தை கொடுக்காமல் முரண்டு பிடித்தால் அவர்களை சுட்டு கொன்று விட்டு பணத்தை கொண்டு சென்று விடுவார்கள்...சமிபத்தில் கூட என் நண்பனிடம் கொள்ளைஅடித்து சென்று விட்டார்கள்....என் நண்பன் எதுவும் முரண்டு பிடிக்காமல் பணத்தை கொடுத்ததால் தப்பித்தான்....
இதை போலீசில் சொன்னால் என்ன என்று ஒரு கேள்வி வருமே?ஹி ஹி...நாம் சொல்வதற்கு முன்னாலே கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பாதி போலிசுக்கு சென்று விடும்...அப்புறம் என்னத்த புகார் சொல்வது?இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து யாருக்கும் பணம் திரும்ப கிடைத்தது இல்லை....யாரும் கைது செய்யப்பட்டதும் இல்லை....
இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? இந்த கொலை ,கொள்ளைகளில் ஈடுபடுவது மலேசிய தமிழர்கள்தான்..!மலேசிய தமிழர்களில் பெரும்பாலோர் நல்ல வேலையில் இருப்பவர்கள்....நல்லவர்கள்...ஆனால் ஒரு சில ரவுடி கும்பல்கள்தான் கொள்ளை அடிப்பவர்கள் .............. அதாவது மலேசிய தமிழர்கள் அனைவரும் கொள்ளையர்கள் அல்ல...ஆனால் இதுபோன்று தமிழ்நாட்டு தமிழர்களிடம் கொலை ,கொள்ளையில் ஈடுபடுவோர் அனைவரும் மலேசிய தமிழர்களே....!
நம் நாட்டிலாவது நாட்கள் ஆனாலும் கொள்ளையர்களையும் ,கொலையாளிகளையும் போலீஸ் கைது செய்து விடும்..அல்லது என்கவுன்டர்
செய்துவிடும்!ஆனால் மலேசியாவில் அதற்கு எல்லாம் வழியே இல்லை..
ஏதாவது இது மாதிரி கொள்ளை சம்பவங்கள் நடந்து விட்டால் நம்ம நாட்ல இதுமாதிரி நடந்தாலும் போலீஸ் குற்றவாளிகளை பிடித்துவிடும்டா மச்சான் என்று பேசுவது இங்கு உள்ள தமிழர்களுக்கு வாடிக்கை ஆகி விட்டது...
இப்போது சொல்லுங்கள் என்னதான் லஞ்சம் லாவண்யத்தில் ஈடுபட்டாலும் தமிழக போலீஸ் ஒசத்தியா இல்லையா?
Tweet |