30 செப்டம்பர் 2012

ஜெயக்குமாருக்கு ஆப்பு வைத்த 6 காரணங்கள் !யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடியா  ஏதாவது செய்வதுதான் ஜெயலலிதாவின்  ஸ்டைல்....

அந்த வகையில் இப்ப ஜெயகுமார் ராஜினாமா...இது ஒரு புது ஸ்டைல்.....வழக்கமா பதவியை  விட்டுதான் தூக்குவார்...இப்ப ராஜினாமா...ஏன்னா சபாநாக்கரை பதவி நீக்கம்  செய்வது அவ்வளவு நல்லா இருக்காது அல்லவா?

ஒருவேளை ஜெயகுமார்  மந்திரி ஆக்க படுவதற்காக  ராஜினாமா  செய்து இருக்கலாம் என  எண்ணங்கள்  தோன்றினாலும் வேறு சில காரணங்களையும்  பத்திரிக்கைகள்  யூகத்தின் அடிப்படையில் எழுதி வருகின்றன....அவையாவது...


காரணம் 1- பிறந்த நாளில் 'எமகண்டம்':
கடந்த செப்டம்பர் 18ம் தேதியன்று சபாநாயகர் ஜெயக்குமாரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையை மிரட்டின. அதிமுகவைப் பொறுத்தவரையில் பிரமுகர்களாக இருந்தாலும் கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகிவிட நேரிடும் என்பதால் தடபுடலுக்கு எம்.ஜி.ஆர். காலம் முதலே தடை இருந்து வருகிறது. ஆனால் இம்முறை ஜெயக்குமார் மட்டும் அதிரடி ஆட்டம் காட்டியிருக்கிறார். இந்த அதிரடி ஆட்டத்தை ஜெயக்குமார் தரப்பு உற்சாகமாக கொண்டாடினாலும் இங்குதான் அவருக்கு எமகண்டனம் தொடங்கியதாம்
காரணம் 2- அடுத்த சி.எம். சவடால்:
ஜெயக்குமாரின் கண்ணசைவுடன் களைகட்டிய இந்த பிறந்த நாளுக்கு சிறப்புக் காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. ஜெயக்குமாருக்கு தற்போதைய கிரக நிலைப்படி முதல்வராகும் வாய்ப்பு என்று ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிட உன்னிகிருஷ்ண பணிக்கரே சொல்லிவிட்டாராம். இதனால் கனவுலகில் மிதக்கத் தொடங்கினார் ஜெயககுமார் என்கின்றனர். அவரே இப்படி மிதக்கும்போது அடிப்பொடிகள் சும்மா இருப்பார்களா .... செம ஆட்டம் காட்டியிருக்கின்றனர்.
காரணம் 3- மேயர் சைதை துரைசாமியுடன் மோதல்:
இது ஜெயக்குமாரின் விலகலுக்கான காரணமாக சொல்லப்பட்டாலும் வேறு சில தகவல்களும் உண்டு. எம்.ஜி.ஆர். காலத்து பிரமுகர் சைதை துரைசாமி தற்போது சென்னை மாநகர மேயராக இருக்கிறார். அவருக்கும் ஜெயக்குமாருக்கும் நீண்டகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஸ்டாலினுக்கு ஆதரவான நிலை:
சட்டப்பேரவைத் தேர்தலின் போதுதான் ஜெயக்குமாருக்கும் சைதை துரைசாமிக்கும் இடையே மோதல் தொடங்கியிருக்கிறது. அதாவது சைதை துரைசாமி வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயமாக அவர் அமைச்சராகிவிடுவார் என்றும் மீண்டும் சென்னை அதிமுக அவர் கட்டுப்பாட்டின் கீழ் போய்விடும் என்றும் ஜெயக்குமார் தரப்பு கருதியது. இதனால் மு.க.ஸ்டாலினை எப்படியாவது வெற்றி பெற வைப்பது என்று சில ரகசிய உள்ளடி வேலைகளில் ஜெயக்குமார் தரப்பு ஈடுபட அது கார்டனுக்கும் கசிந்து போய் இருக்கிறது.
அப்போதே சைதை துரைசாமியை கூப்பிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, இதில் தோற்றாலும் கவலைப்படாதீர்கள்.. நீங்கள்தான் மேயர் வேட்பாளர் என்று உறுதி கொடுத்திருக்கிறார். இங்கு தொடங்கிய முட்டல் மோதல் பகிரங்கமாக கடந்த சிலவாரங்களாக வெடித்திருக்கிறது. செப்டம்பர் 18ம் தேதியன்று ஜெயக்குமார் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து சொல்ல மேயர் சைதை துரைசாமி நேரில் சென்றிருக்கிறார். ஆனால் ஜெயக்குமாரோ நீண்ட நேரம் துரைசாமியை காத்திருக்க வைத்ததுடன் நேரில் சந்திக்கவும் இல்லையாம். கடைசியில் பொக்கேவை கொடுத்துவிட்டு போயிருக்கிறார். அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இதே நிலைமைதான்!
காரணம் 4- சென்னை மாநகராட்சியில் தகராறு:
இத்துடன் ஜெயக்குமார்- துரைசாமி மோதல் முடிந்து போய்விடவில்லை. சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அண்ணா வளைவு அகற்றம் தொடர்பாக அதிமுக கவுன்சிலர் சந்தானம், மேயர் துரைசாமிக்கு எதிராக கேள்வி கேட்டிருக்கிறார். இது மற்ற அதிமுக உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. துரைசாமியை எதிர்த்து கேள்வி கேட்ட சந்தானம் ஜெயககுமார் ஆதரவாளர் என்றும் ஜெயக்குமாரின் தூண்டுதலிலேயே அவர் பேசினார் என்றும் கூறப்படுகிறது.
5 ) மதுசூதனின் பங்கு- ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்:
சைதை துரைசாமி விவகாரம் மற்றும் ஜெயக்குமாரின் பிறந்த நாள் களேபரங்களை கலந்து கட்டி மொத்தமாக அதிமுக அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன்தான் (ஜெயக்குமாரின் பரம எதிரி) விரிவாக ஜெயலலிதாவுக்கு கடிதமாகக் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்தே முதல் கட்டமாக வட சென்னை மாவட்ட தெற்கு செயலாளர் புரசை கிருஷ்ணன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இவர்தான் ஏகப்பட்ட போஸ்டர்களை ஜெயக்குமாரை வாழ்த்தி அடித்தவர். இவருக்குப் பதிலாக பாலகங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. புரசை கிருஷ்ணனைத் தொடர்ந்து மேலும் 12 அதிமுகவினரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. 
ஆதரவாளர்கள் பலரையும் அதிமுக மேலிடம் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியதால் ஜெயக்குமார் அதிருப்தியடைந்தாராம்.. தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகஜெயக்குமார்ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது. (ஆனால் இந்த காரணத்தை ஜெயக்குமாரே ஒப்பு கொள்ள மாட்டார்....ஏன்னா அதிமுகவில் யாரும் எதிர்ப்பை எல்லாம் காட்ட முடியாது என பச்சகுழந்தைக்கு கூட தெரியும் )

6) இதை எல்லாம் விட எனக்கு ஒரு காரணம் தோன்றுகிறது...சமிபத்தில் நடந்த விழாவில் ஜெயலலிதா முன்னாடியே 
வைரமுத்துவின் அருகில் ஜெயக்குமார் உட்கார்ந்து இருந்தார் .....அது கூட ஜெ  வின் கோப பார்வைக்கு  காரணமாகஇருக்கலாம்.(ஹி ஹி )...ஏன்னா வைரமுத்து கலைஞர்  ஆதரவாளர்....
எது எப்படியோ  ...... மொத்தத்தில் பல அமைச்சர்கள் பயத்தோடு  பல்லை கூடவிளக்காமல் திரிவார்கள் என்பது நிச்சயம்.... 

11 கருத்துகள்:

 1. அமைச்சர்களை நீக்குவதுபோல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சபாநாயகரை பதவி நீக்கமெல்லாம் செய்ய முடியாது. சட்டசபையில் சபா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துதான் நீக்கமுடியும். அதுதான் சட்டம்.

  பதிலளிநீக்கு
 2. அம்மாக்கு இது ஒரு வேலையா போச்சு.....முதல் அமைச்சரை அம்மா எப்போ மாத்த போகுது ?!

  பதிலளிநீக்கு
 3. இப்படி இருந்தாலும் காரணம் காரியம் இல்லாமல் ஜெயலலிதா செயல்படமாட்டார்... இப்படி அதிரடியாக மந்திரிகளை மாற்றும் துணிச்சல் தமிழகத்தில் அவருக்கு மட்டுமே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. ////வைரமுத்துவின் அருகில் ஜெயக்குமார் உட்கார்ந்து இருந்தார் .....அது கூட ஜெ வின் கோப பார்வைக்கு காரணமாகஇருக்கலாம்.(ஹி ஹி )...ஏன்னா வைரமுத்து கலைஞர் ஆதரவாளர்....////

  இதுல கலைஞர் யாருங்கண்ணா?

  சமீபத்தில் செத்துப் போன லூஸ் மோகன் அண்ணனா?

  லூஸ் மோகன் ஒரு பெரிய கலைஞருதானுங்க....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா....இந்த செய்தியை நான் இப்பதான் கேள்விப்படுகிறேன்...

   நீக்கு
  2. டேய் ராவண என்ன உலக மகா நடிப்புட சாமி

   நீக்கு
 5. இதே மேட்டர வேற எதுலயோ படிச்ச நினைவு.... இது காப்பி பேஸ்ட் தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலக மகா கண்டுபிடிப்பிங்கோ....நான்தான் சொல்லிட்டனே பத்திரிக்கைகள் எழுதி வரும் செய்திகள் என்று...அப்புறம் என்ன நீங்க சொல்றது?நான் எழுதியதை சரியாக படிக்கவும்...

   #வேறு சில காரணங்களையும் பத்திரிக்கைகள் யூகத்தின் அடிப்படையில் எழுதி வருகின்றன....அவையாவது...#

   நீக்கு
 6. அம்மாவிற்கு இது அல்வா சாப்பிடுவது போலே...

  /// அதிமுகவில் யாரும் எதிர்ப்பை எல்லாம் காட்ட முடியாது என பச்சகுழந்தைக்கு கூட தெரியும்... /// - உண்மை...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....