21 செப்டம்பர் 2012

சூடு போட்ட மம்தாவும் வைகோவும், சொரணை இல்லாத கருணாநிதியும் மற்றவர்களும் .....


  அட்ட கத்தியில் அரசியல் செய்யும் வாய் சொல் வீரரான கருணாநிதிக்கு   மம்தாவும்,வைகோவும்  இதுதான் வீரம் என  சொல்லி அடித்துள்ளனர்..


மம்தா பானர்ஜி ...........இந்தியாவின் பெண் முதல்வர்களுள்   ஒருவர்...மத்தியில் உள்ள அரசில் அங்கம் வகித்தாலும் அவ்வப்போது  சண்டை கோழியாக வளம் வந்தவர் ....குடியரசு தலைவர் தேர்தலில்  ஆளும் கூட்டணிக்கு எதிராக இருந்தவர்...அவரின்  கொள்கைகளும், செயல்பாடுகளும்  விமர்சனத்துக்கு  உரியதாக இருந்தாலும் கூட்டணியில் இருந்துகொண்டே கருணாநிதி போல   கும்மியடிக்காமல் குண்டுகளை  தூக்கி போடுபவர்...

சும்மா சும்மா  அரசுக்கு அளித்து வரும் ஆதரவை  விளக்கி கொள்வதாக  கூறி  மிரட்டுவதுபோல  இல்லாமல் டீசல் விலை உயர்வு,சிலிண்டருக்கு  விதித்த கட்டுபாடுகள் போன்றவற்றை எதிர்த்து  மத்திய  அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உண்மையாகவே  விளக்கி கொண்டவர்...மத்தியில் 1 கேபினட் உள்பட 6 மந்திரிகளை அதிரடியாக இன்று

பதவி விலக வைத்தவர்....சும்மா பேச்சோடு நிற்காமல்  சோனியாவுக்கு சூடு போட்டவர்...


இவரல்லவா ரோசக்காரி...!

நம்ம தமிழ்நாட்டிலும் ஒருவர் இருக்கிறார்....ஈழத்தில் தமிழர்கள் கொத்து  கொத்தாக  சாகும்போதும் கூட மத்திய  அரசுக்கு எதிராக  மூச்சு கூட விடாதவர்..சும்மா சும்மா  சின்ன குழந்தைகளை  பூச்சாண்டி காட்டி மிரட்டுவதுபோல  கூட அன்றைய மத்திய  அரசை மிரட்டாதவர்...

உண்ணாவிரதம்  என்ற பெயரில் காலை  உணவுக்கும்,மதிய உணவுக்கும்  இடைப்பட்ட நேரத்தில் ரெஸ்ட்  எடுத்தவர்....

தமிழ்  இனம் ஈழத்தில் அழிந்தபோது மத்திய  அரசிலிருந்து விலகாத பதவி ஆசை கொண்ட  கருணாநிதி எங்கே? மக்களுக்காக பதவியை உதறி தள்ளிய மம்தா எங்கே?

தலைவர்கள் அமைவது கூட  இறைவன் கொடுக்கும் வரம்தானோ!

............................ ..................................... ............................................

தமிழ் ஈழம்தான் கனவு,லட்சியம்  என உதார் விடுவது ,கொடுங்கோலன் கொலைகாரன் என ராஜபக்சேவை வசைபாடுவது என ஒயிட் காலர் அல்லது எல்லோ  துண்டு அரசியல் பண்ணாமல்  தான் ஒரு வீரன் என்பதை நிருபித்துள்ளார்  வைகோ....


  மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருகை தந்த ராஜபக்சேவை எதிர்த்து அங்கு நாற்பது மணி நேரத்திற்கும் மேலாக வைகோ போராடி கைதாகி இருக்கிறார்....இங்கு உட்காந்து கொண்டு  ராஜபக்சே  வருகைக்கு அறிக்கைகள் மூலம் எதிர்ப்புகள்  தெரிவித்து கொண்டு இருக்கும் கருணாநிதி,விளையாட வந்தவர்களையும்,சுற்றுலா வந்தவர்களையும்   விரட்டி அடிக்கும் ஜெயலலிதா,சீமான்  போன்றவர்கள் இனி வைகோவை  அண்ணாந்துதான்  பார்க்க வேண்டும்...


இங்கே ராஜபக்சேவை  கன்னா  பின்னாவென  திட்டிவிட்டு பின்பு எம்பிக்கள்  குழு என்ற போர்வையில் இலங்கை சென்று  அதே ராஜபக்சேவுடன்  கைகுலுக்கி விட்டு திரும்பிய கனிமொழி,திருமா வளவன்  போன்றவர்கள் நிச்சயம்   சவுக்கால் அடித்தது போல உணர்ந்து இருப்பார்கள்....

 தமிழகத்தில் உள்ள  அட்ட கத்தி  அரசியல்வாதிகளுக்கு இடையே வைகோ ஒரு உண்மையான  போர்வாள் என்று சொன்னால் அது மிகையல்ல....18 கருத்துகள்:

 1. மம்தாவின் அரசியல் கொள்கைகள் தொடர்பாக எனக்கு தெளிவான விளக்கம் இல்லை. ஆனால் அவரது துணிச்சலான நடவடிக்கை பாரட்டதக்கது. தேர்தலில் seat ஒதுக்கல் தொடர்பாக நம்ம மஞ்சள் துண்டு மிரட்டல் விட்டு பார்த்தது ஆனால் தமது பாச்சா பலிக்கவில்லை என்றது பம்மியது இப்போது நினைவுக்கு வந்தது. தமிழ் நாட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் (கூடன் குளம், பெரியாறு, காவிரி) வைகோ தான் போராடுகிறார். ஆனால் தேர்தலில் ஒரு seat கிடைக்காது. இது தமிழர்களின் அதீத சிந்தனை திறனை வெளிகாட்டி நிற்கின்றது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்....மற்ற அரசியல்வாதிகளைவிட வைகோ எவ்வளவோ மேல்....அனால் இவரால் மேலே வர முடியாதது நிச்சயம் நமக்குதான் இழப்பு...

   நீக்கு
 2. வைகோ போன்ற நல்ல தலைவர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்... போலிகளை, சுயநலவாதிகளை விரட்டவேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக சொன்னீர்கள்....ஆனால் நமக்கு கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் விடத்தான் மனதிள்ளயே...என்னத்த சொல்ல...

   நீக்கு
 3. நிச்சயமாக தமிழ் நாட்டின் இன்றைய நிலையில் ஒரு சிறந்த தமிழ் பற்றுள்ள அரசியல்வாதி வை கோ மட்டும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
  மஞ்சள் துண்டு முதல் அமைச்சராக இருந்தபோது தமிழ் நாட்டின் உரிமைகள் கேட்டு வாங்க பிரதமர்க்கு கடிதம் எழுதுவார்,மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவிக்கு நேரில் செல்வார்.
  அடுத்த தேர்தலிலாவது தமிழக மக்கள் வை கோ அவர்களை ஆதரிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைகோ ஒரு சிறந்த பாராளுமன்றவாதியாக அறியப்பட்டவர்...அவரின் கைகளுக்கு தமிழகம் சென்றால் கருணாநிதி,ஜெயலலிதாவை விட சிறப்பாகவே செயல்படுவார்..

   நீக்கு
 4. நல்லது...

  தமிழக அரசியலில் போர்வாள்களைவிட அட்டகத்திகளுக்கே முன்னுரிமை...

  பதிலளிநீக்கு
 5. வைகோவை ஒழிப்பதில் ஜெ,கருணா இருவரும் ஒரே வேகம்/விவேகம் உடையவர்கள், தமிழக மக்கள் வைகோவை இன்னும் சீண்டாமல் இருப்பது தமிழகத்தின் இழப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைகோ வளர்ந்தால் ஆபத்து என அந்த இரண்டு பேருக்குமே தெரிந்த விஷயம்....நன்றி

   நீக்கு
 6. நமது பதிவுகள் பிரபலமடைய நமது பதிவுகளுக்கு வாசகர்கள் Vote போட்டு விட்டு அதை Comment மூலம் தெரிவித்தால், நாமும் அவர்களுடைய தளத்துக்கு சென்று நமது Vote ஐயும் பதிவு செய்ய வேண்டும். Deal ஆ No Deal ஆ ..........
  This is My Site நானும் இந்த பதிவுக்கு Vote போட்டு விட்டேன்.

  பதிலளிநீக்கு
 7. padhivu nandru vaiko thamizhagaththin mudhalamaichchaaraaga vendum adhuve ennudaiya viruppamum
  surendran

  பதிலளிநீக்கு
 8. சரியான கடிவாளம் போட்ட குதிரை போன்ற ஒரு பதிவை பதிந்த உங்களை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை ஈழத்து ராணி ராஜபக்ஷே வருகை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத ஒருவர் அவர் ஆதரித்த பாரதீய ஜனதா கட்சி தான் அவரை வரவேற்று மரியாதையை செய்தது அனால் கலிங்கத்து பரணி படிய சைகோ அவர்கள் அவரும் "என் மரியாதைக்குரிய கட்சி bjp என்றும் அது அறிவித்த ஜனாதிபதி தேர்தலில் சங்மாவுக்கு தான் அதரவு என்று கூறி" ஆதரவு கொடுத்தார் அப்புறம் மத்திய பிரதேசத்தில் போய் போராட்டம் நடத்தும் போது பாரதீய ஜனதாவையும் சுஷ்மா சுவராஜ் கண்டபடி திட்டி பேட்டி கொடுத்தார் அதை பார்க்காமல் பதிவு எழுதுவது நல்லதல்ல.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....