15 செப்டம்பர் 2012

மத சண்டைகளை உருவாக்கும் ஐடியா மணி.....என்ன முடிவெடுக்க போகிறது தமிழ்மணம்?


நண்பர் ஐடியா  மணிக்கு என்னதான் பிரச்சினை?ஆரோக்யமாக  இருக்கும் பதிவுலகத்தை ஐடியா மணி     சண்டை களமாக  மாற்றி வருகிறார்....

முஸ்லிம்களா ?முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனா  ?முஸ்லிம்களே அவருக்கு பிடிக்காதா?நோ பிராப்ளம்...இல்லை குரானை  வெறுக்கிறாரா?வெறுக்கட்டும்...ஆனால் விமர்சிப்பதில் ஒரு கண்ணியம் வேண்டும்,நாகரிகம் வேண்டும் .....ஆனால் ஐடியா மணி பயன்படுத்தும் வார்த்தைகள்  எந்த சர்ச்சைகளுக்கும்  சிக்கி கொள்ளாமல்  ஐடியா மணி பக்கமோ,சுவன பிரியன்  பக்கமோ  சாய்ந்து இருக்காமல்  பொதுவாக பதிவெழுதும் என்னை போன்ற முஸ்லிம்  பதிவர்களின் மனதை  காயப்படுத்தி வருகிறது ...

தினம் தினம் இஸ்லாத்தை பற்றி   குறை கூறி அவதூறான வார்த்தைகளால்  பதிவிடுவதன் அவசியம் ஏன்?

அவருக்கும் சுவன பிரியனுக்கும்   பிரச்சினை என்றால்  அவர் எதற்காகக்  குரானையும்  இஸ்லாத்தையும் இழுக்க வேண்டும்?


குர்ஆன்   புனிதநூலாக  இருந்தால் அவருக்கு என்ன  இல்லாவிட்டால்  அவருக்கு என்ன?குரான் இஸ்லாமியர்களுக்குத்தான்  புனித நூல்...நான் அல்லவா  அது புனித நூலா  புதிரா என கவலைப்பட வேண்டும்?என் வீடு எப்படி இருந்தால் அவருக்கு என்ன?அவரவர் வீடு அவரவருக்கு...அவரவர்  மதம் அவரவருக்கு...

குர் ஆனில்   சொல்லப்பட்ட  விசயங்களை  பின்பற்றும்  இஸ்லாமியர்களுக்கு  அல்லவா  அது தவறா   இல்லை சரியா என  சந்தேகம் இருக்க வேண்டும்?பின்பற்றாத ஐடியா மணிக்கு என்ன கவலை?

இஸ்லாத்தை பற்றிய உங்களின் சந்தேகங்களை  நாகரிகமான  வார்த்தைகளை  பயன்படுத்தி கேளுங்கள்....பதில் தர  சக  இஸ்லாமிய பதிவர்கள்  தயாராக  இருக்கிறார்கள்....சக நாத்திக பதிவர்கள்  அவர்களின் விமர்சனங்களை  கண்ணியமான  முறையில்தான்  விவாதமாக  எழுதி வருகிறார்கள்....ஆனால் இவர் ?விவாதமாக  எழுதாமல்  விவகாரமாகவே எழுதி வருகிறார்...

இஸ்லாமை பற்றியும்  குர்ஆனை  பற்றியும்   தேவை இல்லாமல் கண்டபடி எழுதி  மத பயங்கரவாதத்தை   ஐடியா மணி  பதிவுலகில்  தூண்டி விட்டு கொண்டு இருக்கிறார்

ஐடியா மணி  அதிகமாக எழுதாத  இந்த மூன்று மாத காலங்களில் பதிவுலகில் எந்த சண்டை சச்சரவுகளும் இல்லை....இவர்தான் அடுத்தவர்களின் மத சம்பந்தப்பட்ட விசயங்களை  விரோதத்தை  வளர்க்கும் வார்த்தைகளால் எழுதி மத சண்டைகள்  ஏற்பட  காரணமாகி  கொண்டு இருக்கிறார்...

உங்களுக்கு முஸ்லிம்களை பிடிக்காதா?குர்ஆனை  பிடிக்காதா?அது பற்றி எனக்கோ சக முஸ்லிம் பதிவர்களுக்கோ  எந்த பிரச்சினையும் இல்லை...ஆனால் பிடிக்காத  ஒன்றை பற்றி தினம் தினம் எழுத வேண்டிய அவசியம் என்ன?

இதுவரை சக இஸ்லாமிய பதிவர்கள் மற்ற  மத கடவுள்களை  பற்றி எந்த பதிவிலும்  நீங்கள் எங்கள்  இறைவனை பற்றி ,குரானை  பற்றி எழுதி இருப்பதை போல நிச்சயம் எழுதி இருக்க மாட்டார்கள் ...ஏனென்றால் மற்ற  மத கடவுள்களை  திட்டாதீர்  என குர் ஆன்  கூறி இருக்கிறது...

பதிவுலகில்  மத சண்டைகள்  தேவை இல்லாதது....அதை உருவாக்கும் ஐடியா மணியின் பதிவுகள்  அதை விட தேவை இல்லாதது....மத சண்டைகளை ,வீண்  கலவரங்களை, குழப்பங்களை  உருவாக்கும் பதிவுகளை  தமிழ்மணம் திரட்டியில்  இணைத்து கொள்ள அனுமதிப்பது  தேவையோ தேவை இல்லாதது....

தமிழ்மணம்  இதுபோன்ற மத விரோதங்களை ,மத சண்டைகளை  உருவாக்கும் பதிவுகளை  தங்கள்  திரட்டியில்  இணைத்து கொள்ளாமல் இருப்பது  பற்றி விரைவில் முடிவெடுப்பது  எல்லாருக்கும்  நல்லது...

உடனே ஐடியா மணி  என்னை திட்டியோ  விமர்சித்தோ பதிவெழுத தயாராகி இருப்பார் ..அது மேலும் மேலும் பதிவுலகில் விரோதங்களை  வளர்க்கவே உதவுமே தவிர  வேறு ஒன்றுக்கும் உதவாது....நான்  இது போன்ற மத சண்டைகள் பதிவுலகில் முடிவுக்கு வரணும் என்ற நோக்கில்  இந்த பதிவை எழுதி இருக்கிறேன்...ஆனால் முடிவு ஐடியா மணி  மற்றும் தமிழ்மணம்  கைகளில் ...


44 கருத்துகள்:

 1. பதிவுலகில் மத சண்டையை தூண்டுவது கண்டிக்க தக்கது. இப்படி பட்டவர்களை பதிவர்கள் புறக்கனிக்க வேண்டும். அவர்கள் அவர்களின் மதம் உயவானது என எழுதினால் நீ உனது மதம் உயர்வனது என எழுது. அதில் தவறு இல்லை. சம்பந்த பட்டவர்கள் சிந்திப்பார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ.நன்பேண்டா... ///////அவர்கள் அவர்களின் மதம் உயவானது என எழுதினால் நீ உனது மதம் உயர்வனது என எழுது. அதில் தவறு இல்லை./////////----------மிகச்சிறந்த கருத்து..! அப்படியே வழிமொழிகிறேன்...!

   இதை புரிந்து கொண்டால் அனைவருக்கும் ஜெயம்..! இந்த பதிவில் குறிப்பிடப்பட்ட நபர் போல இன்னும் இரண்டு மூன்று நபர்கள் மட்டுமே உள்ளனர்..! பதிவுலகில் மத சண்டையை தூண்டுவதுதான் அவர்களின் ஒரே வேலை..! அவர்கள் இதனை அவசியம் சிந்திக்க வேண்டும்..!

   நீக்கு
  2. சரியாக சொல்லி உள்ளீர்கள் ... நன்றி

   நீக்கு
  3. //பதிவுலகில் மத சண்டையை தூண்டுவது கண்டிக்க தக்கது. ///

   செம சகோ....

   நீக்கு
 2. இஸ்லாமியர்களால் பவுடர்மணி / ஐடியாமணி / மாத்தியோசி மணிக்கு என்ன பாதிப்பு?

  பவுடர்மணி / ஐடியாமணி / மாத்தியோசி மணியின் உயிரை காப்பாற்றியவர்களே இஸ்லாமியர்களால் தானே !!!

  “அறிமுகம் - நண்பர்களே!

  இன்று எனக்கு ஒரு முக்கியமான நாள்!

  உயிர்காக்கப்பட்ட நாள்!

  காப்பாற்றியவர்கள் நான்கு இஸ்லாமியர்கள்!

  அவர்களுக்காக இந்தப் பதிவை அர்ப்பணிக்கிறேன்!

  இஸ்லாமியர்களில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம்! இறைபக்தி, மதக் கட்டுப்பாடு, நேரம் தவறாத தொழுகை!! எப்படி, இப்படியெல்லாம் கட்டுப்பாடாக, ஒரே கோட்பாட்டோடு இருக்கிறார்கள்? என்று நான் எப்போதுமே ஆச்சரியப்படுவேன்!

  அவர்களின் இறைவிசுவாசம் - அல்லாஹ் மீது கொண்ட பக்தி, எப்பவுமே ஆச்சரியமானதுதான்! ”


  என்று தொடங்கும் ஐடியாமணி / பவுடர்மணி / மாத்தியோசி மணி பதிவையும் பதிவின் கருத்து பெட்டியில் சக ஈழ பதிவர்கள் இஸ்லாமியர்களை புக‌ழ்வதையும்

  இங்கு சொடுக்கி >>> இஸ்லாமியர்கள் நிஜமாகவே பயங்கரவாதிகளா??? <<< ப‌டித்து பாருங்க‌ள்.

  பதிவின் கருத்துக்களில் சில‌:
  K.s.s.Rajh said... 30
  மிகவும் நல்ல ஒரு பதிவு மச்சான் சார்..எனக்கும் நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கின்றார்கள்..அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்குது.உண்மையில் நட்புடன் பழகுவதற்கு அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்

  Vinodhini said... 46
  எனக்கும் நிறைய இஸ்லாமிய தோழர்கள் தோழிகள் இருக்கிறார்கள், அன்பாய் & பண்பாய் பழகுவதில் அவர்களை அடித்துக்கொள்ள யாருமே இல்லை என்று கூறலாம்.

  Yoga.s.FR said... 47
  இஸ்லாமியர்களின் உதவும் பண்பை யாழில் நான் அனுபவித்திருக்கிறேன்.இங்கே,பிரான்சில் இந்திய காரைக்கால் பெற்ற புதல்வர்கள் எமது விடுதலைப் போருக்கு தெரிவிக்கும் ஆதரவையும் பார்க்கிறேன்!நன்றி நண்பர்களே!

  Powder Star - Dr. ஐடியாமணி said... 88
  @நிரூபன்

  இஸ்லாமிய சகோதர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் விரிசல் ஏற்படுவதற்கு எங்களின் அரசியல்வாதிகளும், பிரித்தாளும் தன்மை கொண்ட தமிழ்ப் பெரியவர்களும், ஒரு சில இஸ்லாமிய பெரியார்களும் தான் ஈழத்தில் காரணமாக இருந்தார்கள்.

  ஆனால் இன்றும் யாழ்ப்பாணத்தில் புட்டும் தேங்காய்ப் பூவும் போன்று இஸ்லாமிய சகோதர்கள் ஒன்றித்து வாழ்ந்து வருகின்றார்கள்.

  தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்து அரசியல் நடத்திய காலம் போயாச்சு! இரு இன மக்களும் ஈழத்தில் ஒற்றுமையாக வாழத்தொடங்கி பல வருஷங்கள் ஆச்சு! ஆனால், உண்மை இவ்வளவு நாளும் வெளித்தெரியாமல் இருந்தது!


  Powder Star - Dr. ஐடியாமணி said... 90
  @செங்கோவி

  இஸ்லாமியர்களிடம் உள்ள, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தீவிர இறைபக்தியும், சகோதரத்துவமும் தான்..

  எனது நெருங்கிய நண்பரும் இஸ்லாமியரே. சொந்தத் தொழில் செய்து முன்னேறுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்../////////

  நிச்சயமாக! செய்யும் தொழிலே தெய்வம் என்பதை நிஜமாகவே நம்புபவர்கள் அவர்கள்! எந்தத் தொழிலையும், நேர்மையாக, உண்மையாக செய்வார்கள்!

  அதனால் தான் வர்த்தகத்தில் சிறந்து விளங்கி, உலகத்தின் கண்களுக்கே, உறுத்தலாக இருக்கிறார்கள்! உலகம் முஸ்லிம்களை ஒடுக்க நினைப்பது, அவர்களின் பொருளாதார வளர்ச்சியினால் வந்த பொறாமைதான்!

  Powder Star - Dr. ஐடியாமணி said... 91
  @செங்கோவி

  துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமியர்களின் குரலாக ‘அடிப்படைவாதிகளின்’ செயல்களும், பேச்சுக்கலூம் காட்டப்பட்டன. அது இஸ்லாமியர்களுக்கு சமூகரீதியில் மிகுந்த பாதிப்பை உண்டாக்கியது.

  ஆனாலும் பெருவாரியான இஸ்லாமிய மக்கள், தொடர்ந்து நல்லுறவைப் பேணியதன்மூலம் தங்களைப் பற்றிய அவதூறுகளை புறந்தள்ளினார்கள்.

  இஸ்லாமியர்களுடன் பழகியோரின் சிந்தனை உங்கள் பதிவைப் போன்றே இருக்கும். அதுவே உண்மை./////////

  உண்மைதான் அண்ணான்! நானும் அவர்களோடு பழகாதவரை, அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையே கொண்டிருந்தேன்! ஏனெனில் நான் வாழ்ந்த சூழலில் எனக்கு சொல்லப்பட்டவை எல்லாமே - முஸ்லிம்களுடன் பழக கூடாது என்பதே!

  பின்னர், சுயமாக சிந்திக்கத் தொடங்கியவுடன், எனது கருத்துக்களை மாற்றிக்கொண்டேன்!

  ஐடியாமணி / பவுடர்மணி / என்ற பெயர்களில் உலவிய மாத்தியோசி மணி யின் பதிவை முழுமையாக இங்கு சொடுக்கி படிக்க >>>> இஸ்லாமியர்கள் நிஜமாகவே பயங்கரவாதிகளா??? <<< படித்து பாருங்கள்.

  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியும் பேசுகிறார்..அப்படியும் பேசுகிறார்....என்னத்த சொல்ல....

   நீக்கு
 3. ஸலாம் சகோ.ஹாஜா,

  //இதுவரை சக இஸ்லாமிய பதிவர்கள் மற்ற மத கடவுள்களை பற்றி எந்த பதிவிலும் நீங்கள் எங்கள் இறைவனை பற்றி ,குரானை பற்றி எழுதி இருப்பதை போல நிச்சயம் எழுதி இருக்க மாட்டார்கள் ...ஏனென்றால் மற்ற மத கடவுள்களை திட்டாதீர் என குர் ஆன் கூறி இருக்கிறது...//-----வழிமொழிகிறேன்.

  பிற மதங்களை- பிற மத கடவுள்களை- இட்டுக்கட்டி -அவதூறு சொல்லி- அசிங்கமாக திட்டி- ஆபாச படம் போட்டு எழுதி ஹிட்சும் ஆதரவு கமன்ட்சும் ஓட்டும் வாங்கி இவர்களைப்போல கல்லா கட்டியதாக... ஒ.............ரே ஒ............ரு முஸ்லிம் பதிவரையாவது காட்ட முடியுமா இவர்களால்..? இஸ்லாமோஃபோபியாகாரர்களான இவர்களுக்குத்தான் இஸ்லாமிய எதிர்வாதத்தைத்தை விட்டால் எழுத வேறு போக்கிடமே இல்லையே..! எழுத வேறு என்ன தெரியும் இவர்களுக்கு என்று யாருக்கு தெரியும்..? அந்தோ பரிதாபம்.... இந்த பரிதாபப்பிறவிகள்..!

  பதிலளிநீக்கு
 4. சுவனப்பிரியன் & கோ, செய்வது அப்பட்டமான மதப் பிரச்சாரம். அதுவும் அடுத்த சமயத்தவரை இழிவுபடுத்தி செய்யப்படும் மதப் பிரச்சாரம். நார்மலா, யாரும் அதுக்கெல்லாம் பதில் தர மாட்டாங்க...எதுக்கு பாவம்னு....ஆனால், ஐடியா மணி, அதற்கு பதில் தருகிறார். அவ்வளவு தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த மதத்தினரை நிச்சயம் இழிவு படுத்தி யாரும் எந்த பதிவும் போட்டு இருக்க மாட்டார்கள்....நண்பர் ஐடியா மணியை தவிர...

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. சுவனப்பிரியன் & கோ, செய்வது அப்பட்டமான மதப் பிரச்சாரம். அதுவும் அடுத்த சமயத்தவரை இழிவுபடுத்தி செய்யப்படும் மதப் பிரச்சாரம்///

   லிங்க் கொடுங்க பார்போம். (சரி இந்த கோ-ல வேற யார் யார் இருக்கா?)

   நீக்கு
  4. பதிவுலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம் சுவனப்பிரியன் & கோ. நான் சொல்லி அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய கமெண்ட்டுகள், அவர் மாற்று சமயத்தினரிடம் அணுகும் முறை, பிராமணைனைத் திட்டினேன் ஆனால் இந்துவை ஒண்ணும் சொல்லல..கல்லை கும்பிடும் மூடர்களே...ஆனால் இந்துவை ஒண்ணும் சொல்லல.....மூடநம்பிக்கையை சொன்னேன் ஆனால் இந்துவை ஒண்ணும் சொல்லல, என சொல்லும் இவரின் போலி முகங்கள் என இவை அனைத்தும் அவர் மேலும், அவர் சுற்றம் மேலும் ஒரு விதமான பார்வையை பார்க்க வைக்கின்றன என்பது உண்மை. இது இல்லவே இல்லை என்பதை உங்கள் டீமில் இல்லாத ஒருவர் வந்து மறுக்கட்டும். மேட்டர் இப்படி இருப்பதனால், அப்படிப்பட்டவர்களுக்கு தகுந்த வகையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு தோன்றுவது இயல்பு. அதனால தான் ஐடியா மணி போடும் அது போன்ற பதிவுகளுக்கு பெரும்பாலும் எதிர்ப்புகளே கிடையாது. இதனை எடுத்துக் கொள்வதும், வேட்டியை வரிந்து கட்டி சண்டைக்கு வருவதும் உங்கள் இஷ்டம்.

   சுவனப்பிரியன் பதிவுலகில் தன்னுடைய கருத்துக்களை சொல்ல ஆரம்பித்ததில் இருந்து தான் இந்த மாதிரியான பிரிவினை. முன்பெல்லாம், திக வினரோடு, கம்யூனிஸ்ட்கலோடு, பெரியாரிஸ்ட்களோடு, நாத்திகர்களோடு தான் விவாதங்கள் நடக்குமே தவிர, இப்படி இரு சமயத்தினர் பதிவுலகில் அடித்து கொள்வது மிகக் குறைவு. ஏன் இவருக்கு முன்னாடி, வேறு இஸ்லாமிய பதிவர்களே இல்லையா? குரானைப் பற்றி எழுதவில்லையா? ஹதீதுகளைப் பற்றி எழுதவில்லையா? அப்போதெல்லாம் இல்லாத ஒரு வேற்றுமை இப்போ எப்படி? ஐடியா மணியாலயா....? இல்லை...என் கடவுள் நல்லவர், சிறப்பானவர் என்று சொல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் சாப்பிடுற பிரியாணி தான் சூப்பர், நீ சாப்பிடுற தயிர் சாதம் கேவலமானது என்ற தோணியில் சொல்றது தான் இது எல்லாத்துக்கும் மூலமே !


   சகிப்புத் தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு ஹாஜா சார் !

   நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 5. சகோ அதிரடி ஹாஜா அவர்களே
  உங்களுக்கும் கோபம் வந்துருச்சா???? உண்மையில் மணி செய்வது சேவை

  நடுநிலையாக சும்மா அரட்டை மொக்கை என இயங்கும் இஸ்லாமிய பதிவர்கள் இதுபோன்ற பதிவுகளை படித்துவிட்டு இஸ்லாத்தை அறிய நினைக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ....

   யாருக்குத்தான் கோபம் வராது ?ஹி ஹி..ஹியுமர் சென்ஸ் உங்களுக்கு அதிகம் போல....நன்றி

   நீக்கு
  2. யாருக்குத்தான் கோபம் வராது?/// ஆமா சகோ அப்படி கோபம் கொண்ட பல புதிய சகோதரர்களை அவர்களின் மொழியில் சொல்வதாக இருந்தால் மதவாதிகளின் பக்கம் உந்திதள்ளுகிறார் நமக்கே ஆச்சரியமாக இருக்கு எத்தனையோ புதிய இஸ்லாமிய பதிவர்கள் இணையத்தில் இருப்பது நமக்கே தெரிவதில்லை அவர்களையேல்லாம் இவர்களின் கூறுகெட்ட கோபமூட்டும் பதிவுகளால் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள்

   நீக்கு
  3. ஆமா.. அப்பப்ப புதுபதிவர்கள் வேற உருவாகுறாங்க :-) :-) :-)

   போன முறை சிராஜ்... இந்த முறை சகோ நாகூர் மீரான் அவ்வ்வ்வ்!

   நீக்கு
 6. மச்சான்..

  // அவருக்கும் சுவன பிரியனுக்கும் பிரச்சினை என்றால் அவர் எதற்காகக் குரானையும் இஸ்லாத்தையும் இழுக்க வேண்டும்? //

  சண்டை அவர்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் இல்லை.. உண்மையில் இஸ்லாத்தின் மேல் எல்லாம் அவர்களுக்கு கோபம் இல்லை....தனிமனித பிரச்சனைக்குள் இஸ்லாத்தை நுழைக்கிறார்கள்... அவ்வளவு தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனிமனித பிரச்சினைகளுக்கு மதத்தை வடிகாலாக்கி குளிர் காய நினைப்பது எவ்வளவு பெரிய அபத்தம்

   நீக்கு
 7. // ஆனால் ஐடியா மணி பயன்படுத்தும் வார்த்தைகள் எந்த சர்ச்சைகளுக்கும் சிக்கி கொள்ளாமல் ஐடியா மணி பக்கமோ,சுவன பிரியன் பக்கமோ சாய்ந்து இருக்காமல் பொதுவாக பதிவெழுதும் என்னை போன்ற முஸ்லிம் பதிவர்களின் மனதை காயப்படுத்தி வருகிறது ... //

  இதில் மன வருத்தப்பட எதுவும் இல்லை... இது போன்ற விஷய்ங்கள் நடைபெறாமலே இருக்க வாய்ப்பு இல்லை.. ஐடியா மணி இல்லாவிட்டால் வேறொருவர் வருவார்... சோ, கவலைய விடுங்க மச்சான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவலை அல்ல....வருத்தம்..அந்த வருத்தம் ஆதங்கமாகி இந்த பதிவு...மொத்தம் சண்டை சச்சரவு பதிவுலகில் தீரவே தீராது என்கிறீர்கள்!

   நீக்கு
 8. சுவன பிரியன் செய்வது மத பிரசாரமாகவே இருக்கட்டும் அதை ஏற்ப்பதும் ஏற்காததும் வாசிப்பதும் வாசிக்காமல் விடுவதும் உங்கள் விருப்பம் தானே யாரும் கட்டாய படுத்தவில்லையே.நீங்களும் பிரச்சாரம் செய்யுங்கள் யார் தடுக்கிறார்கள்.சகோ சுவனப்ரியன் எந்த மதத்தையும் தாழ்த்தி எழுதியதாக யாராலும் சொல்ல முடியாது.இது வலை தளத்தின் வாசிப்பாளர்கள் அனைவரும் அறிந்ததே.

  பதிலளிநீக்கு
 9. தான் சார்ந்த மதத்திற்கு ஆதரவாக பதிவு எழுதலாம் என்று இருக்கும் போது அனைவரும் எழுதலாம்...ஆனால் அடுத்த மதத்தை தாக்கி எழுத கூடாது என்று தமிழ் மணம் தடை போட்டால் இஸ்லாமிய பதிவர்கள் அப்பவும் பதிவு இடுவார்கள்... ஏன் என்றால் நாங்கள் தான் அடுத்த மதங்களை தாக்கி எழுதுவது இல்லையே...(பே ..ப்பூ ..பிம்பிளிகி பிலாப்பி ) ஆனால் சில ஈழ பதிவர்களுக்கும் இன்ன பிற பதிவர்களுக்கும் தான் பிரச்சனையே ...அவர்களுக்கு வேலை இருக்காதே என்ன பண்ணுவார்கள்....தினமலர்க்கு வேலைக்கு அப்ளை பண்ண வேண்டியதான்....தினமலர் எதிர்பாக்கிற தகுதி இவர்களிடத்தில் அதிகமாவே இருக்கு...மேனேஜராவே ஆக்கிருவான் ....

  நன்றியுடன்
  நாகூர் மீரான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. #ஆனால் அடுத்த மதத்தை தாக்கி எழுத கூடாது என்று தமிழ் மணம் தடை போட்டால் இஸ்லாமிய பதிவர்கள் அப்பவும் பதிவு இடுவார்கள்... ஏன் என்றால் நாங்கள் தான் அடுத்த மதங்களை தாக்கி எழுதுவது இல்லையே...(பே ..ப்பூ ..பிம்பிளிகி பிலாப்பி )#


   நெத்தியடி சகோ....நன்றி

   நீக்கு
 10. //.மத சண்டைகளை ,வீண் கலவரங்களை, குழப்பங்களை உருவாக்கும் பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இணைத்து கொள்ள அனுமதிப்பது தேவையோ தேவை இல்லாதது....
  //

  முன்பு இப்படிதான் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு அதன் படி பல பதிவுகள் நீக்கப்பட்டன... தமிழ்மணம் மீண்டும் கண்டுக்கொள்ளாமல் விடவும் இவர்கள் மேலும் ஆரம்பிச்சுட்டாங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்குத்தான் இந்த பதிவு சிஸ்டர்...தமிழ்மணம் பரிசீலித்தால் நல்லது

   நீக்கு
 11. இதுக்கு நான் என்னத்த சொல்ல...

  அவர்களுக்கே தெரிய வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்...உங்களை போன்ற பொதுவானவர்கள் பதில் சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்...

   நீக்கு
 12. //சுவன பிரியன் செய்வது மத பிரசாரமாகவே இருக்கட்டும் அதை ஏற்ப்பதும் ஏற்காததும் வாசிப்பதும் வாசிக்காமல் விடுவதும் உங்கள் விருப்பம் தானே யாரும் கட்டாய படுத்தவில்லையே.நீங்களும் பிரச்சாரம் செய்யுங்கள் யார் தடுக்கிறார்கள்.சகோ சுவனப்ரியன் எந்த மதத்தையும் தாழ்த்தி எழுதியதாக யாராலும் சொல்ல முடியாது.இது வலை தளத்தின் வாசிப்பாளர்கள் அனைவரும் அறிந்ததே.//

  நான் சொல்வதை விட சகோ பராரியே எனது எண்ணத்தை வெளிப்படுத்தி விட்டார்.

  இவர்களை அலட்சியப்படுத்தி விட்டு நமது வேலைகளை நாம் வழமைபோல் பார்த்து வருவோம்.

  பதிலளிநீக்கு
 13. //பிராமணைனைத் திட்டினேன் ஆனால் இந்துவை ஒண்ணும் சொல்லல..கல்லை கும்பிடும் மூடர்களே...ஆனால் இந்துவை ஒண்ணும் சொல்லல.....மூடநம்பிக்கையை சொன்னேன் ஆனால் இந்துவை ஒண்ணும் சொல்லல, என சொல்லும் இவரின் போலி முகங்கள் என இவை அனைத்தும் அவர் மேலும், அவர் சுற்றம் மேலும் ஒரு விதமான பார்வையை பார்க்க வைக்கின்றன//

  நண்பர் கபிலன் நீங்க தளம் மாறி வந்துடீங்கன்னு நினைக்கிறேன்...விடுதலை, பெரியார் தளம் ,சகோ.ஓசூர் ராஜன் அவர்களிடம் சொல்ல வேண்டியதை இங்கு வந்து கூறி விட்டீர்கள்...பரவா இல்லை இஸ்லாமியர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள்... வாழ்த்துக்கள் ..

  நன்றியுடன்
  நாகூர் மீரான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நாகூர் மீரான்5:56 pm, செப்டம்பர் 15, 2012
   நண்பர் கபிலன் நீங்க தளம் மாறி வந்துடீங்கன்னு நினைக்கிறேன்...விடுதலை, பெரியார் தளம் ,சகோ.ஓசூர் ராஜன் அவர்களிடம் சொல்ல வேண்டியதை இங்கு வந்து கூறி விட்டீர்கள்...பரவா இல்லை இஸ்லாமியர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள்... வாழ்த்துக்கள் ..

   நன்றியுடன்
   நாகூர் மீரான் //

   நாகூர் மீரான்

   கபிலனுக்கு

   “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”,

   என சிறப்புகள் பெற்ற‌ பிராமிணர் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரையும் சேர்த்திருக்க வேண்டும் .

   தளம்: http://thathachariyar.blogspot.com

   .

   நீக்கு
  2. " தளம் மாறி வந்துடீங்கன்னு நினைக்கிறேன்...விடுதலை, பெரியார் தளம் ,சகோ.ஓசூர் ராஜன் அவர்களிடம் சொல்ல வேண்டியதை ..."
   அது என்ன ஓசூர் ராஜனை சீரியசான பதிவர்களோட சேர்த்துட்டீங்க....அவர் மிகச் சிறந்த கதை ஆசிரியர். அவருடைய சொந்த சிந்தனைகளை நகைச்சுவையாக்கி, அவைகளை வரலாறு என்று பெயரில் எழுதுபவர். அவரை எல்லாம் இவங்க கூட போய் கம்பேர் பண்ணிகிட்டு...

   நீக்கு
 14. மதாபிமான - மததுவேச பதிவுகள் அனைத்தையும் தமிழ்மணம் நீக்க வேண்டும் ... !!!

  கொஞ்ச நாளாக தமிழ்மண பதிவுகளையே படிக்க முடியவில்லை. ... ! ஒரே குழாயடி குடுமி பிடி சண்டையாகவே இருக்கின்றது .... ! இதில் பெருசு சிறுசு என்று எல்லோரும் ஒரே மாதிரி நடந்துக்கொள்வது வேதனை தருகின்றது ..

  இரண்டு பக்கத்திடமும் சொல்லிவிட்டேன் ... கேட்பாரில்லை ..

  பதிலளிநீக்கு
 15. நன்பேண்டா...!

  பதிவுலகில் மத
  சண்டையை தூண்டுவது கண்டிக்க தக்கது.
  இப்படி பட்டவர்களை பதிவர்கள்
  புறக்கனிக்க வேண்டும். அவர்கள்
  அவர்களின் மதம் உயவானது என
  எழுதினால் நீ உனது மதம் உயர்வனது என
  எழுது. அதில் தவறு இல்லை. சம்பந்த
  பட்டவர்கள் சிந்திப்பார்களா?
  அருமையான கருத்து சகோ நண்பேன்டா அவர்களே
  பதிவுலகில் முஸ்லீம்கள் இஸ்லாத்தைப்பற்றி உயர்வாக எழுதுகிறோம் அதுபோல் அவரர் மதங்களிலும் கொள்கைகளிலும் உயர்ந்த கருத்துக்கள் இருந்தால் தாராளமாக எழுதலாமே
  அதேல்லாம் முடியாது நாங்கள் இஸ்லாத்தை விமர்சித்துத்தான் எழுதுவோம் என்றால் அழகிய முறையில் ஆதரங்களின் அடிப்படையில் நாகரீகமாக உங்களின் விமர்சனத்தை முன்வையுங்கள் முஸ்லீம்கள் அதை கண்டிப்பாக வரவேற்க்கவே செய்துவார்கள் எனவே மதவெறி என்பது அடுத்த மதத்தைக்குத்துவதுதான் தன்னுடைய மதத்தை நேசிப்பது மதவெறியல்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. #எனவே மதவெறி என்பது அடுத்த மதத்தைக்குத்துவதுதான் தன்னுடைய மதத்தை நேசிப்பது மதவெறியல்ல#


   மிக அருமையான விளக்கம் சகோ....

   நீக்கு
 16. * வாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்கள்!
  * தமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு!
  * தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!
  * தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
  * இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!
  * தமிழ் மணம் (நாத்தம்) ஒரு அறிமுகம்!

  தமிழ் மணம் குறித்த உங்களது விமர்சனங்களும், விளக்கங்களும் இங்கே வரவேற்க்கப்படுகிறது. தமிழ் மணம் என்கிற மதவாதத்தை, பதிவர்களுக்குள் சண்டையை ஏற்ப்படுத்தும், விட்டு ஒழித்து டாப் , இன்லி, தமிழ்வெளி, வலைச்சரம், தேன்கூடு, உழவன் போன்ற திரட்டிகளை ஆதரியுங்கள். தமிழ் மணம் என்கிற மாயை மக்கள் மத்தியில் இருந்து ஒழிப்போம். குடமி சண்டை கேவலத்தை வேரறுப்போம். படைப்பாளிகளை மதிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மற்றைய இணையதளங்களுக்கு நமது பதிவுகளை வழங்குவோம். தமிழ் மணத்தை முற்றிலும் புறக்கணிப்போம்.

  மேலதிகமான தகவல்களுக்கு - please go to visit

  http://www.tamilnaththam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. எனது பதிவை தமிழ்மணம் நீக்கிவிட்டதாக மெயில் வந்துள்ளது....ஹா ஹா ஹா.... காமெடியாக இருக்கு போங்க...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....