02 ஜூன் 2011

சீமான் காதலித்து ஏமாற்றினாரா?


நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார்.

சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் விஜயலட்சுமி நேற்று மாலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்திற்கு தென் சென்னை இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக பிரபலமானவர்களை பற்றி இதுமாதிரி புகார்கள் வருவது சகஜம்தான்....ஆனால் புகார் அளித்தவரும் ஓரளவு அறியப்பட்ட நடிகை ஆவார்...இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என இனிதான் பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதும்....சீமான் இன்னும் இதுபற்றி வாய் திறக்கவில்லை....

ஆனால் சீமானின் புகழை கெடுக்கும் வகையில் செயல்பட்ட நடிகை விஜயலட்சுமி மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர இரு‌ப்பதாக ‌அவரது வழ‌க்க‌றிஞ‌ர் ச‌ந்‌திரசேக‌ர‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்...சீமான் திமுகவை எதிர்த்தவர்....அதிமுக ஆட்சி அமைய விரும்பியவர்........ ஒருவேளை இது வேண்டுமென்றே சொல்லப்படும் குற்றச்சாட்டாக இருந்தால் சீமான் கடுமையாக எதிர்த்த திமுக ஆட்சியில் அல்லவா இது நடந்திருக்க வேண்டும்?

பார்ப்போம் சீமான் மீதான இவ்வழக்கு சீறி பாய போகிறதா? அல்லது புஸ்வானமாக போகிறதா என்று....

ஆனால் மீடியாக்களுக்கு இனி நல்ல தீனிதான்...பதிவுலகுக்கும்தான்....

20 கருத்துகள்:

  1. இது என்ன புது பிரச்சனை

    பதிலளிநீக்கு
  2. தமிழ் மனம் ஓட்டு பட்டை காணோம்..

    பதிலளிநீக்கு
  3. தமிழ் மனம் ஓட்டு போட்டாச்சு..

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா3:03 PM, ஜூன் 02, 2011

    ////சீமான் திமுகவை எதிர்த்தவர்....அதிமுக ஆட்சி அமைய விரும்பியவர்........ ஒருவேளை இது வேண்டுமென்றே சொல்லப்படும் குற்றச்சாட்டாக இருந்தால் சீமான் கடுமையாக எதிர்த்த திமுக ஆட்சியில் அல்லவா இது நடந்திருக்க வேண்டும்?/// வைக்கோவை கழட்டி விட்டது போல சீமானையும் கலட்டிவிடுவது அதிமுக வின் நோக்கமாக இருக்கலாம் (அதாவது கறிவேப்பில்லை போல) இருந்தாலும் முடிவை பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  5. நக்கீரன் கோபாலுக்கு புதிய தொடர் எழுத வாய்ப்பு கூடுத்துட்டான்களா ஹையோ ஹையோ

    பதிலளிநீக்கு
  6. புதுசு புதுசா பிரச்சனைகள் வருதே...

    சீமான் கோவக்காரராச்சே.. அவருக்கு எப்படி காதல்...

    பதிலளிநீக்கு
  7. பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சம் இல்லை திரைஉலகில்...

    பதிலளிநீக்கு
  8. மீடியாக்களுக்கு நல்ல தீனிதான்.

    பதிலளிநீக்கு
  9. கப்பலேற்றும் தமிழன்?

    பதிலளிநீக்கு
  10. இனி ஒருமாசத்துக்கு இதுவே போதும், கிழிச்சு தொங்க விட்டுடுவாங்க :-)

    பதிலளிநீக்கு
  11. #ரியாஸ் அஹமது சொன்னது…
    நக்கீரன் கோபாலுக்கு புதிய தொடர் எழுத வாய்ப்பு கூடுத்துட்டான்களா ஹையோ ஹையோ#


    ஹா ஹா....அடுத்த வாரமே ஆரம்பித்து விடுவார்களோ?

    பதிலளிநீக்கு
  12. #பாட்டு ரசிகன் சொன்னது…
    புதுசு புதுசா பிரச்சனைகள் வருதே...

    சீமான் கோவக்காரராச்சே.. அவருக்கு எப்படி காதல்...#

    இதுதான் கல்லுக்குள் ஈரம் என்பதோ?

    பதிலளிநீக்கு
  13. ஏலே சொல்றது உண்மையாலே??என்ன நடக்க போகுதோ!!

    பதிலளிநீக்கு
  14. #மைந்தன் சிவா சொன்னது…
    ஏலே சொல்றது உண்மையாலே??என்ன நடக்க போகுதோ!!#


    வாங்க நண்பா....உண்மையோ பொய்யோ இனி இரண்டு நாட்களுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது...ஹி ஹி....

    பதிலளிநீக்கு
  15. //சீமான் கோவக்காரராச்சே.. அவருக்கு எப்படி காதல்...//

    சூட்டை தணிக்கனும்ல

    பதிலளிநீக்கு
  16. தேர்தல் முடிந்த கையோடு, இப்போது சீமான் மேட்டர் சூடாகியிருக்கு.

    உண்மையோ, பொய்யோ, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. ஆமாம் இவ்வளவு நாள் சீமான் போராட்டம்,சிறை சென்ற போது கூட இந்த விஜயலட்சுமி எதிலுமே தென்பட்டதாக தெரியவில்லை.
    சீமான் இயக்கிய வாழ்க்கை திரைப்படம் 2008ல் வெளியானது.அதில் இப்பெண் சிறு வேடத்தில் நடித்து உள்ளார்.சீமான் மீது 4 பக்க புகார் கொடுத்ததாக செய்திகள் கூறுவது உண்மையா?அத்னை ஊடகங்களில் வெளியிடுவாரா?


    குமாரி விஜயலட்சுமியின் வாழ்க்கை குறிப்பு விக்கி பீடியாவில் இருந்து
    http://en.wikipedia.org/wiki/Vijayalakshmi_(Kannada_actress)

    பதிலளிநீக்கு
  18. மாப்ள இந்தம்மா ஏற்கனவே ஒருத்தர் பேர்ல புகார் கொடுதவங்கோ......
    இப்போ பேரு மட்டும் மாறி இருக்கு ஹிஹி!

    பதிலளிநீக்கு
  19. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பர்களே..

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....