10 ஜூன் 2011

பதிவர்களை வம்புக்கு இழுத்த சுஹாசினி....
இணையதள எழுத்தாளர்களை கேட்பாரில்லை ,சொல்வாரில்லை, கட்டுப்பாடு இல்லை, ஒரு கணினி கிடைத்து விட்டால் தங்களை மேதாவிகளாக ,விமர்சகர்களாக நினைத்துகொண்டு எல்லாரையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கின்றனர்...மொத்தத்தில் இணையத்தளம் வக்கிரத்தின் வடிகாலாக மாறிவிட்டது....

என்னைய திட்டாதிங்க நண்பர்களே....இது நான் எழுதியது அல்ல....

திரை உலக மகா அறிவாளியும், தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகையாக தன்னை நினைத்து கொண்டு மற்றவர்களை மட்டம் தட்டும் சுகாசினிதான் இவ்வாறு நம்மீது ( ஹி ஹி ..நானும் எழுத்தாளர்னு சொல்லிகிட்டாச்சு....) பாய்ந்து இருக்கிறார்....அவருக்கு முதலில் எனது கடும் கண்டனங்கள்.....

இவருக்கும் பதிவர்களுக்கும் என்ன பகை?ஆயிரகணக்கான பதிவுகள் குவியும் இடத்தில் சில பதிவுகள் ஆபாச பதிவுகளாக ,அருவெறுப்பு கலந்த எழுத்துக்களாக இருக்கலாம்...அதற்காக பதிவிடும் எல்லா எழுத்தாளர்களையும் குறை சொல்வதா?

பதிவுலகில் இல்லாத விசயங்களே இல்லை...அறிவியலிலிருந்து ஆன்மிகம் வரை, கதைகளிலிருந்து கவிதைகள் வரை, பொழுது போக்கிலிருந்து புது கண்டுபிடிப்புகள் வரை எழுத்துக்களாக மலை போல குவிந்து இருக்கும் இடத்தில் நீங்கள் குப்பையை தேடினால் அது உங்கள் தவறே....

கணினியில் எழுதினால் அவர்கள் மேதாவிகள் ...எழுதாத நீங்கள் எல்லாம் முட்டாள்கள் என்று எண்ணுவது உங்களின் தவறுதானே தவிர எங்களின் தவறு அல்ல..


நீங்கள் மட்டும் ஒரு டிவி சேனல் கிடைத்துவிட்டால் எல்லா படங்களையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கலாமா?உங்களின் விமர்சனங்களை விட எங்கள் பதிவுலகின் விமர்சகர்கள் நூறு படி மேலேதான்.....அண்ணன் சி பி செந்தில்குமாரின் விமர்சனம் ஒரு உதாரணம்..

இன்றைய சினிமாவில் தொடையும்,தொப்புளையும் காட்டாத சினிமா ஏதாவது உண்டா?அப்ப எல்லா சினிமாவையும் தடை செய்யலாமே?

நீங்கள் கூட லோ ஹிப் சேலையில் தானே வலம் வருகுறீர்கள்? உங்கள் பார்வையில் அது தப்பில்லை...அதுபோல எல்லாவற்றையும் சரியாக பாருங்கள்...பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்ததுதான் சரியும் தவறும்....

இங்கு மாங்கு மாங்குன்னு நாங்க எழுதுறது உங்களை திருப்திபடுத்த அல்ல...எங்களின் திருப்திக்காக ....

உங்கள் கூற்றுப்படி நாங்கள் மேதாவிகளாகவே இருந்துவிட்டு போகிறோம்....மேதாவிகளை கண்டால்தான் அறிவீனர்களுக்கு ஆகாதே....

32 கருத்துகள்:

 1. ஏதோ அவர்களுக்கு தெரிந்தது..
  சொல்லிவிட்டார்கள் விடுங்க இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு

  பதிலளிநீக்கு
 2. ஒருவேளை ராவணன் விமர்சனங்களைப் பாத்து செம காண்டாயிட்டாங்களோ? :-)

  பதிலளிநீக்கு
 3. //சில பதிவுகள் ஆபாச பதிவுகளாக ,அருவெறுப்பு கலந்த எழுத்துக்களாக இருக்கலாம்...அதற்காக பதிவிடும் எல்லா எழுத்தாளர்களையும் குறை சொல்வதா?//

  இந்த சினிமாக்காரர்களின் வேலையே அந்த சில பதிவுகளை படிப்பதுதான் அதான் இவர் இப்படி உளறி இருக்கிறார்

  பதிலளிநீக்கு
 4. ஏதோ இருக்கிறது அதுதான் பயப்படுகிறார்.

  பதிலளிநீக்கு
 5. ஆமா அவங்க மட்டும் அடுத்தவங்கள குறை சொல்லுவாங்களாம் நாம எழுத கூடாதா?

  பதிலளிநீக்கு
 6. இவ எப்பவுமே இப்படித்தான் நண்பா ,,,,மெத்த படிச்சவ ...பேசும் பொது ஒரு பணிவு வேணாம் ச்சை ச்சை

  பதிலளிநீக்கு
 7. // உங்களின் விமர்சனங்களை விட எங்கள் பதிவுலகின் விமர்சகர்கள் நூறு படி மேலேதான்.....அண்ணன் சி பி செந்தில்குமாரின் விமர்சனம் ஒரு உதாரணம்.. //

  அண்ணன் சிபி.செந்தில்குமார் வாழ்க...

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா2:36 PM, ஜூன் 10, 2011

  ///பதிவுலகில் இல்லாத விசயங்களே இல்லை...அறிவியலிலிருந்து ஆன்மிகம் வரை, கதைகளிலிருந்து கவிதைகள் வரை, பொழுது போக்கிலிருந்து புது கண்டுபிடிப்புகள் வரை எழுத்துக்களாக மலை போல குவிந்து இருக்கும் இடத்தில் நீங்கள் குப்பையை தேடினால் அது உங்கள் தவறே..../// நீங்கள் சொல்வத் உண்மையே ...

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா2:38 PM, ஜூன் 10, 2011

  ஜீ... சொன்னது…

  ஒருவேளை ராவணன் விமர்சனங்களைப் பாத்து செம காண்டாயிட்டாங்களோ? :-)
  // ஹிஹிஹி எனக்கும் இதே சந்தேகம் தான் ;-)

  பதிலளிநீக்கு
 10. well said.

  She should read good blogs ( like mine) you see:-))))

  Sorry no Tamil font.

  பதிலளிநீக்கு
 11. சகோ, சரியான பதிலடி.
  தவறான விடயங்களை மட்டும் உற்று நோக்குவோருக்க்கு எல்லாமே தவறாகத் தான் தெரியுமாம். அதனைப் போலட் தான் சுஹாசினியின் இக் கருத்தும்.
  பதிவுலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றினை விடுத்து, ஒட்டு மொத்தப் பதிவுலகமும் வக்கிரத்தின் வடிகால் எனும் இவரது கருத்து கண்டிக்கப்படத்தக்கது.

  பதிலளிநீக்கு
 12. /ஆயிரகணக்கான பதிவுகள் குவியும் இடத்தில் சில பதிவுகள் ஆபாச பதிவுகளாக ,அருவெறுப்பு கலந்த எழுத்துக்களாக இருக்கலாம்...அதற்காக பதிவிடும் எல்லா எழுத்தாளர்களையும் குறை சொல்வதா?//

  மிக சரியாக சொன்னிர்கள். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. போட்டுத்தாக்கியிருக்கிறீங்கள்.....
  நீங்க சொன்னது உண்மைதான்...
  அதெப்படி சொல்ல முடியும்.....
  விடாதேங்க....
  தாக்குங்க தாக்குங்க...
  நானும் கூடவாறன்,,,,,,,

  !!!அப்பிடியே நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்

  பதிலளிநீக்கு
 14. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
  ஏதோ அவர்களுக்கு தெரிந்தது..
  சொல்லிவிட்டார்கள் விடுங்க இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு#


  இருந்தாலும் நம்ம எதிர்ப்பை பதிவு செய்யணும்ல....அதான்..

  பதிலளிநீக்கு
 15. #ஜீ... சொன்னது…
  ஒருவேளை ராவணன் விமர்சனங்களைப் பாத்து செம காண்டாயிட்டாங்களோ? :-)#


  ஹி ஹி வாய்ப்புகள் இருக்கு

  பதிலளிநீக்கு
 16. #THOPPITHOPPI சொன்னது…இந்த சினிமாக்காரர்களின் வேலையே அந்த சில பதிவுகளை படிப்பதுதான் அதான் இவர் இப்படி உளறி இருக்கிறார்#


  சரியாக சொன்னீர்கள்..நன்றி ..

  பதிலளிநீக்கு
 17. #இரவு வானம் சொன்னது…
  ஆமா அவங்க மட்டும் அடுத்தவங்கள குறை சொல்லுவாங்களாம் நாம எழுத கூடாதா?#

  அதானே?

  பதிலளிநீக்கு
 18. #ரியாஸ் அஹமது சொன்னது…
  இவ எப்பவுமே இப்படித்தான் நண்பா ,,,,மெத்த படிச்சவ ...பேசும் பொது ஒரு பணிவு வேணாம் ச்சை ச்சை#


  ஹி ஹி ...அதிகபிரசிங்கி...இதானே அர்த்தம்...

  பதிலளிநீக்கு
 19. #நிரூபன் சொன்னது…
  சகோ, சரியான பதிலடி.
  தவறான விடயங்களை மட்டும் உற்று நோக்குவோருக்க்கு எல்லாமே தவறாகத் தான் தெரியுமாம். அதனைப் போலட் தான் சுஹாசினியின் இக் கருத்தும்.
  பதிவுலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றினை விடுத்து, ஒட்டு மொத்தப் பதிவுலகமும் வக்கிரத்தின் வடிகால் எனும் இவரது கருத்து கண்டிக்கப்படத்தக்கது.#


  நன்றி சகோ....

  பதிலளிநீக்கு
 20. #Philosophy Prabhakaran சொன்னது…
  // உங்களின் விமர்சனங்களை விட எங்கள் பதிவுலகின் விமர்சகர்கள் நூறு படி மேலேதான்.....அண்ணன் சி பி செந்தில்குமாரின் விமர்சனம் ஒரு உதாரணம்.. //

  அண்ணன் சிபி.செந்தில்குமார் வாழ்க...#


  வாங்க நண்பா.....ரொம்ப நாளாச்சே வந்துபோயி....நன்றி...

  பதிலளிநீக்கு
 21. பெயரில்லா9:46 PM, ஜூன் 10, 2011

  அப்படிப் போடு அரிவாளா ? சினிமா என்றப் போர்வையில் அவர்கள் செய்யாததையா நாம் செய்துவிட்டோம் .... ? கேட்டால் நல்ல சினிமாவைப் பாருங்க என்று தானே சொல்வார்கள் .... அதே போல நல்ல எழுத்துக்களை இணையத்தில் படிக்கலாமே !!!

  பதிலளிநீக்கு
 22. சுகசினியா யாரு அது இவங்களுகெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து எழுதிக்கிட்டு

  பதிலளிநீக்கு
 23. நீங்கள் மட்டும் ஒரு டிவி சேனல் கிடைத்துவிட்டால் எல்லா படங்களையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கலாமா?

  இந்த பதிலடி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  பதிலளிநீக்கு
 24. மாப்ள தலயில இருந்தா தானே மூளைன்னு சொல்லுவாங்க...உடம்பு முழுசும் இருந்தா கொழுப்புன்னு சொல்லுவாங்க....இந்தம்மாவுக்கு ரெண்டாவது அதிகம் ஹிஹி!

  பதிலளிநீக்கு
 25. புத்திசாலி தனத்தலே ஒரு வகை உண்டு
  பன்னாட புத்தி அப்படின்னு சொல்வாங்க
  அது கெட்டதெல்லாம் பிடிச்சிகிட்டு நல்லதை
  விட்டுவிடும்
  அப்டி நினைச்சி விடுங்க தம்பீ

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 26. ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

  பதிலளிநீக்கு
 27. எங்க பாஸ் போயிட்டீங்க???ஒரு மாதமா ஆள காணேல??

  பதிலளிநீக்கு
 28. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோதரர் ஹாஜா மைதீன்,

  தங்கள் எனக்கு ஒரு மெயில் அனுப்ப முடியுமா (aashiq.ahamed.14@gmail.com)

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  பதிலளிநீக்கு
 29. விடுங்கள் சார் கூறிவிட்டுத்தான் போகட்டுமே/

  பதிலளிநீக்கு
 30. இந்த மாதிரியான அசிங்கத்தையெல்லாம் கண்டுக்காம விட்டுடுங்க சகோ, இல்லன இதவச்சு எதாவது விளம்பரம் பண்ணி இன்னும் நாலுகாசு பாக்க வழி தேடுவாங்க. பல நல்ல கலைங்கர்களுக்கு மத்தியில் இது போல் சில தேராத பீசுகள் இருக்கத்தான் செய்யும்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....