09 ஜூன் 2011

சபாஸ் ஜெ...தமிழ் சினிமாவில் சுஸ்மா சுவராஜ்...(கதம்பம்)ராஜபக்சேவை போர்குற்றவாளி என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெ க்கு பாராட்டுக்கள்....

இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லைதான்...ஆனால் இந்த ஒரு தீர்மானத்தை கூட தமிழர்களுக்காக கருணாநிதி சட்டசபையில் நிறைவேற்றவில்லை....
அந்த வகையில் ஜெ செய்தது பாராட்டத்தக்கதே....

கனிமொழிக்கு நேற்று ஜாமீன் கிடைக்கததால் திமுக உயர்நிலை குழு கூட்டத்தை அவசரமாக கூட இருக்கிறது.....கனிமொழிக்காக இக்குழு கூடுவது இது இரண்டாவது முறை....அண்ணா ஆரம்பித்த கட்சி ....ஹ்ம்ம்....என்ன பண்ணுவது...இப்போது அண்ணா உயிர் பெற்று வந்தால் முதல் வேலையாக திமுகவை கலைத்து விட்டுதான் மறு வேலை பார்ப்பார்....

உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ராம்தேவ் அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டி கொண்டு இருக்கிறார்....போலிசிடமிருந்து தப்பிபதற்காக சல்வார் கமீஸில் ஒளிந்த அவர் அதே வேடத்தில் பேட்டி கொடுத்தது பம்பர் காமெடி.....ராம்தேவ் பல்லாயிரம் கோடிகளை குவித்து இருக்கிறார் என இவர் மீது குற்றம் சொல்லும் மத்திய அரசு ஆரம்பத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?
அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது ஏன்?

இப்போது என்னடான்னா ராம்தேவ் புரட்சி படையை உருவாக்க போகிறேன் என்று தெலுங்கு பட வசனங்களை பேசி மத்திய அரசுக்கு வெறியூட்டி வருகிறார்....இதுதான் கிறுக்கு பய ஊரில் கேனப்பய நாட்டாமை பண்ணுவது என்ற பழமொழிக்கு அர்த்தமோ?

தேச பக்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சுஸ்மா சுவராஜ் பட்டையை கிளப்பி உள்ளார்..தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் தவறு இல்லையாம்....கொஞ்சம் உசாரா இருங்க மேடம்...இல்லாவிடில் தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போடுவதற்கு தூக்கி கொண்டு வந்துவிடுவார்கள்.....ஏன்னா இப்ப இங்கே ஆன்ட்டிகளின் நடனம்தானே லேட்டஸ்ட் டிரன்ட் ....

சிபிஐ விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் சிக்கியுள்ள செய்திகள் வெளிவரத் துவங்கியதிலிருந்து சன் டிவியின் பங்குகள் மதிப்பு சடசடவென சரிய ஆரம்பித்துள்ளதாம்...
ஆனால் தயாநிதி மாறன் விவகாரத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என சன் டிவி அறிவித்துள்ளது.....அப்பறம் என்ன எழவுக்கு பங்குகள் சரிந்தது என கே டி பிரதர்களுக்கே வெளிச்சம்...

13 கருத்துகள்:

 1. ஒரு பதிவில் இத்தனை செய்திகளா.
  அசத்தல்..

  பதிலளிநீக்கு
 2. முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

  பேசாம திமுகாவ கமுக (கருணாநிதி முன்னேற்ற கழகம்) னு மாத்திடலாம்.

  ராம்தேவ் மேட்டர் - No comments

  சுஸ்மா சிவராஜ் - கவனம் தேவை

  தயாநிதி மாறன் - விட்டா தயாநிதி யாருன்னே கலாநிதிக்கு தெரியாதுன்னு சொல்வாரு போல

  பதிலளிநீக்கு
 3. .இதுதான் கிறுக்கு பய ஊரில் கேனப்பய நாட்டாமை பண்ணுவது என்ற பழமொழிக்கு அர்த்தமோ?

  well said ...good post

  பதிலளிநீக்கு
 4. ஜெயா செய்தது பாராட்டத்தக்கது...

  சாமியார் என்றாலே போலி தான் போல ...

  பதிலளிநீக்கு
 5. கேடி பிரதர்ஸ் இது சூப்பரா இருக்கே

  பதிலளிநீக்கு
 6. வர வர எனக்கு அரசியல் பதிவுகளும் , மத பதிவுகள் போன்றே தோன்றுகிறது., எங்கே கேள்விகேட்டாலும் ஆரம்பித்த இடத்திற்கே வருவதை சொல்கிறேன்.

  அவரவர்கள் செய்ய வேண்டிய கடமைக்கே பாராட்ட வேண்டியுள்ளது

  பதிலளிநீக்கு
 7. அரசியல் காமெடிகளையும், சர்வாஸ் கமீஸ் சித்து விளையாட்டினையும் நாங்களும் சிரித்து மகிழ வேண்டும் என்பதற்கா தொகுத்துத் தந்துள்ளீர்கள். அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 8. அருமையான கருத்துக்கள். தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....