ஆயிரக்கணக்கானோருடன் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிரான தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை யோகி பாபா ராம்தேவ் இன்று காலை தொடங்கினார்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். ஊழலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ராம்தேவ் அறிவித்தார்.
இதை ஆரம்பத்தில் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் ராம்தேவின் போராட்ட அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆதரவும் பெருகியது.
இதையடுத்து இன்றுகாலை திட்டமிட்டபடி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் ராம்தேவ். இதற்காக நேற்றே ஆயிரக்கணக்கானோர் ராம் லீலா மைதானத்தில் குவிந்து விட்டனர்.
அவருடன் பெண் சாமியார் ரிதம்பரா, சீக்கிய, ஜைன மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்பு, யோகாசனம் மற்றும் பஜன் ஆகியவற்றை நிகழ்த்தினார் ராம்தேவ். பின்னர் கூட்டத்தினரிடையே அவர் பேசுகையில், நம்மால் முடியாதது ஏதும் இல்லை. எல்லாமே சாத்தியமானதுதான். நாம் தோல்வி அடையப் போவதில்லை. இந்த நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். நாட்டை ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து மீட்க வேண்டும். ஏழைகளிடமிருந்து பசியையும், பட்டினியையும், பஞ்சத்தையும் விரட்ட வேண்டும் என்பதே நமது நோக்கம்.
இங்கு கூடியிருக்கும் யாரும் காசு கொடுத்து கூட்டி வரப்பட்டவர்கள் இல்லை. அனைவரும் தாங்களாகவே வந்துள்ளனர். நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்கள்தான் இங்கு கூடியுள்ளனர். இந்த போராட்டம் வெல்லும் என்றார்.
மேலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்க வரலாம், ஆனால் மேடையில் வந்து அமரவோ, அதன்மூலம் எனக்கு அரசியல் சாயம் பூசவோ முயலக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் மிகவும் வரவேற்கபடவேண்டிய ஒன்று...ஆனால் இது வெறும் பரபரப்புக்காகவும், விளம்பரத்துக்காகவும் ஆகிவிடக்கூடாது....இதுமாதிரி நம் தமிழ்நாட்டில் இருந்து யாரும் புறப்படாதது வேதனை அளிக்கிறது...
எதிர்கட்சியான பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்த வேறு வழிகள் ,வாய்ப்புகள் இல்லாத நிலையில் இம்மாதிரி போராட்டங்கள் லக்கி ஜாக்பாட்....அவர்கள் இதை தங்கள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவார்களே தவிர தீர்வுக்கு ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதே உண்மை....
அன்னா ஹசாரேவின் போராட்டத்தோடு இதை ஒப்பிட முடியாது....அவர் கோடி கோடியாக சொத்துக்கள் இல்லாதவர்....சமுக சேவைகளில் ஈடுபட்டவர்...ஆனால் பாபாவுக்கு சொத்துக்கள் அதிகம்...கோடிகள் ஏராளம்...
இருந்தாலும் வீதிக்கு போராட வந்தது பாராட்டத்தக்கதே....
ஊழலே போ போ என சொல்லும் பாபாவுக்கு ஆதரவு அளித்து நமது பங்கினை சிறிதளவாவது வெளிப்படுத்துவோம்...
Tweet |
இந்தியா முழுவதும் ஆரவு பெருகிக்கொண்டிருக்கிறது
பதிலளிநீக்குபார்ப்போம் முடிவு என்னாகிறது என்று
கண்டிப்பாக அரசு இறங்கிவரவேண்டும்.
நன்மையில் முடிந்தால் சரி
பதிலளிநீக்கு//அவருடன் பெண் சாமியார் ரிதம்பரா, சீக்கிய, ஜைன மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.//
பதிலளிநீக்குஅப்பிடியா???ஏலே நானும் போகாப்போறேன்லே!!
சரிய்யா நடத்து....பாப்போம்!
பதிலளிநீக்குநடக்கட்டும் நடக்கட்டும் .............
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.. உண்மையாக இருந்தால்..
பதிலளிநீக்குநன்மையான போராட்டம்தான் ஹாஜா......
பதிலளிநீக்குநல்லது நடக்கும் என நம்புவோம்...
ஸலாம் சகோ.ஹாஜா..!
பதிலளிநீக்கு///எதிர்கட்சியான பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்த வேறு வழிகள் ,வாய்ப்புகள் இல்லாத நிலையில் இம்மாதிரி போராட்டங்கள் லக்கி ஜாக்பாட்....அவர்கள் இதை தங்கள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவார்களே தவிர தீர்வுக்கு ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதே உண்மை....
அன்னா ஹசாரேவின் போராட்டத்தோடு இதை ஒப்பிட முடியாது....அவர் கோடி கோடியாக சொத்துக்கள் இல்லாதவர்....சமுக சேவைகளில் ஈடுபட்டவர்...ஆனால் பாபாவுக்கு சொத்துக்கள் அதிகம்...கோடிகள் ஏராளம்...
இருந்தாலும் வீதிக்கு போராட வந்தது பாராட்டத்தக்கதே....///
வழிமொழிகிறேன்..!
#மைந்தன் சிவா சொன்னது…
பதிலளிநீக்கு//அவருடன் பெண் சாமியார் ரிதம்பரா, சீக்கிய, ஜைன மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.//
அப்பிடியா???ஏலே நானும் போகாப்போறேன்லே!!#
உண்ணாவிரதம் இருக்கத்தானே.....ஹி ஹி...
#MANO நாஞ்சில் மனோ சொன்னது…
பதிலளிநீக்குநன்மையான போராட்டம்தான் ஹாஜா......
நல்லது நடக்கும் என நம்புவோம்...#
நம்பிடுவோம்...
மக்கள் ஆதரவுடன் மக்கள் நலன் கருதி தனி மனிதனால் தொடங்கப்படும் இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தொலைவிருந்து வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குமத்திய அரசு அவரைக் கண்டு கொள்ளாத நிலமை தான் வேதனையளிக்கிறது சகோ.
நன்றி நண்பர்களே....
பதிலளிநீக்கு