03 ஜூன் 2011

கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து....கேபிள் டிவி அரசுடமை...அதிரவைக்கும் ஆளுநர் உரை....



தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 14வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை அவை கூடியதும் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தனது உரையை தொடங்கினார்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்....


11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.(அப்ப கல்லூரி மாணவர்களுக்கு?)

- கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதில் புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.( அதற்கு ஜெயா காப்பீட்டு திட்டம் என பெயர் வைக்காமல் இருந்தால் சரி...)

- விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டு சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும்.


- எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரப் போவதில்லை.

- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.( அப்ப ஆடு மாடுலாம் எப்ப?)

- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

- சமச்சீர் கல்வித் திட்டம் செம்மையாக்கப்படும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கான பரிந்துரையை அளிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

- சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மைப் பணி.( என்கவுன்டர் லிஸ்ட் ரெடி பண்ணிவிட்டார்களோ ?)

- மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 1000லிருந்து ரூ. 2000 வழங்க உத்தரவு.

- மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 6ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


- மரபு சாரா எரிசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய தனிக் கொள்கை வகுக்கப்படும்.

- 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு தார்ச்சாலகள் அமைக்கபபடும்.

- பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமையாக்கப்படும்...( சன்னுக்கு டின்னு கட்டியாச்சா?)

- சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்.


- தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்படும்.( அப்துல் கலாம் ஐடியாவா?)

- தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்படும்.

- நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.(இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வலியுறுத்தி கொண்டே இருப்பார்கள்?)


புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதுவரை நடந்த கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும்.( ஒரிஜினல் அம்மா ஸ்டைலை காட்டிவிட்டாரே ஜெ)

- சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.
தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படியாக இது 300 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.

- மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.( முதலில் சென்னையில் முடிங்கப்பா...)

ஓகே ஓகே....தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவு செயல்படுத்தி விடுவார் ஜெயலலிதா என மக்களை நம்ப வைக்கும் விதத்தில் ஆளுநர் உரை அமைந்துள்ளது...பார்ப்போம்

9 கருத்துகள்:

  1. பெயரில்லா11:09 AM, ஜூன் 03, 2011

    எல்லாமே அருமையான திட்டங்கள்....கலக்குறாங்க முதல்வர்

    பதிலளிநீக்கு
  2. அதிரடி அறிவிப்புகள்...

    தொடர்ந்து கவனிப்போம்..

    பதிலளிநீக்கு
  3. மாப்ள அதிரடியோட தலையிடி வராம இருந்தா சரி ஹிஹி!

    பதிலளிநீக்கு
  4. //சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மைப் பணி.( என்கவுன்டர் லிஸ்ட் ரெடி பண்ணிவிட்டார்களோ ?)



    பாரட்டுக்கள்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
    Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
    http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

    பதிலளிநீக்கு
  5. சண்'னுக்கும், கேடி பிரதர்சுக்கும் ஆப்பு மேல ஆப்பு திமுக'காரனே வச்சிருவான்...

    பதிலளிநீக்கு
  6. /// சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்./////
    நிலம் ,நீர் ,காற்று என்ற மாற்று வழிகள் மூலம் மறுபரிசீலனை செய்யப்ப்படும்ன்னு அறவிப்பு வருமோ

    பதிலளிநீக்கு
  7. தொடர்ந்து பார்க்கத்தானே போகிறோம்.. எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை.. பொறுத்திருந்து பார்ப்போம்..

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....