22 அக்டோபர் 2010

வேலாயுதம் படத்தின் கதை...

தொடர்ச்சியாக தோல்வி படங்களை குடுக்கும் விஜய்க்கு வேலாயுதம் படம் மிக மிக முக்கியமான படம்.....
விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வேலாயுதம் படத்தின் கதை இதோ....
சென்னையில் வேல் ,அரிவாள் ,போன்ற ஆயுதங்களை நல்ல விசயங்களுக்காக மட்டுமே செய்து கொடுக்கும் தொழில் செய்பவர் விஜய்....அவரிடம் வில்லன் கோஷ்டி கலவரத்திற்காக மிகப்பெரிய அளவில் இந்த ஆயுதங்களை செய்து கேட்கிறது.....விஜய் முடியாது என்கிறார்.....கோபத்தில் அவரின் குடும்பத்தை போட்டு தள்ளுகிறான் வில்லன்....அது வரை வேல்,அரிவாள் போன்ற ஆயுதங்களை செய்து கொடுத்த விஜய் வில்லன் கோஷ்டிகளை பழிவாங்க கையில் தூக்குகிறார்.....இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.....இதில் நான்கு குத்து பாட்டு ,ஐந்து சண்டை, ஐம்பது பஞ்ச் டயலாக் போன்றவை ரசிகர்களுக்கு விருந்து படைப்பவை....
இது எப்படி உனக்கு தெரியும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.....அட போங்க சார் இதே தானே விஜய் எல்லா படத்திலும் மாத்தி மாத்தி செய்கிறார்....ஒரு மாற்றத்திற்காக ஹீரோயினை மாத்திட்டரே அது போதாதா?

4 கருத்துகள்:

  1. இதுவே நல்ல கதையா இருக்கு. எதுக்கும் காப்பி ரைட் வாங்கி வைத்துக்கொள் ஹாஜா. இல்லாவிட்டால் இந்த கதையையும் பேரரசு படமெடுக்கும் சாத்தியம் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. ஹி ஹி ... சுறா படத்தோட கதைய விட நீங்க சொல்லிருக்கிற கத நல்லாத்தான் இருக்கு ... பாத்து டாக்டர் இந்த கதைய உங்களுக்கு தெரியாம சுட்டிர போறாரு

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....