26 அக்டோபர் 2010

எந்திரன் : சில கேள்விகள்....

பொதுவாக படங்களில் லாஜிக் பாக்ககூடாதுதான் ...
அதுவும் ரஜினி படங்களில் லாஜிக் என்ற சொல்லை சொல்லவே கூடாது.....

ஆனாலும் எந்திரன் படத்தில் எனக்கு சில லாஜிக் கேள்விகள்....யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்......

ரஜினி தான் உருவாக்கிய ரோபோவை பார்ட் பார்ட்டாக உடைத்து ஏதோ அழுகிப்போன காய்கறிகளை போடுவது போல குப்பைதொட்டியில் போடுகிறார்.....
ஒரு சயின்டிஸ்ட் இப்படியா உடைத்து குப்பையில் போடுவார்?

அப்பிடி குப்பைதொட்டியில் போடப்பட்ட ரோபோ அதுவும் பார்ட் பார்ட்டாக உடைத்து பிரித்து போடப்பட்ட ரோபோ எப்படி முழுசாக வில்லன் காரில் ஏறி உட்காரும்?

அதுவும் படத்தின் இறுதி கட்சிகள் அளவுக்கு மீறிய கிராபிக்ஸால் கடுபேற்றுகிறது......சூப்பர் பவர் படைத்த வில்லன் ரோபோ ஹீரோ ரஜினியை கொள்ள அவ்ளோ மெனக்கெடுகிறது.....

இதைப்பற்றி எந்த பத்திரிக்கையாவது இப்படத்தை பற்றிய விமர்சனத்தில் குறிப்பிடும் என எதிர்பார்த்தேன்.....

ஆனால் குமுதமோ சூப்பர் என்று முத்திரை குத்தி தனது ஜால்ராவை வெளிக்காட்டியது......

விகடன் மட்டும் ஓரளவு நடுநிலமையாக விமர்சனம் பண்ணியதுஆனால் அதுவும் எனக்கு தோன்றிய இந்த சந்தேகங்களை குறிப்பிடவில்லை......

4 கருத்துகள்:

 1. அப்படி பார்த்தால் ஒரு ரோபோ க்கு உணர்சிகள் கொண்டுவந்து காதலிக்க முடியும்னு கான்செப்ட் ஏ ஊத்தல் லாஜிக் தானே...ஷங்கர்,ரஜினி படத்தில் இதெல்லாம் கண்டுக்க படாது...பதிலும் கிடைக்காது...)))) ஏன்னா அவங்களுக்கே தெரியாது..)))

  பதிலளிநீக்கு
 2. Similarly, Karunaas and Santhaanam challenging the Robo (which they were also part of its creation) to Drink and eat Chicken, knowing very well that the Robo do not eat and it's energy is only Electricity. This is told by their Boss Rajini already.

  Sure Shankar must have thought all the Audience are fools.

  பதிலளிநீக்கு
 3. //ரஜினி தான் உருவாக்கிய ரோபோவை பார்ட் பார்ட்டாக உடைத்து..//

  உணர்வு வேலை செய்யும் சில நேரங்களில் புத்தி வேலை செய்யாது.


  //அப்பிடி குப்பைதொட்டியில் போடப்பட்ட ரோபோ அதுவும் பார்ட் பார்ட்டாக உடைத்து பிரித்து போடப்பட்ட ரோபோ எப்படி முழுசாக வில்லன் காரில் ஏறி உட்காரும்?...//

  மின்னலின் போது (குப்பை போடப்படும் இடத்தில்) குறிப்பிட்ட அளவு மின்சாரம் எந்திரனுக்குள் ஏற்றப்பட்டிருக்கலாம். மின்னல் தொடர்பான காட்சி ஏற்கனவே படத்தில் காட்டப்பட்டிருந்தது.
  Neural Schema உள்ள பகுதியை அழிக்கச் சொல்லி வசிகரன் தனது உதவியாளர்களிடம் ஏற்கனவே சொல்லியும் அதை அவர்கள் செய்யாமல் இருக்கலாம். அந்த நேரத்தில் வசிகரன் பதட்டமாக இருந்த காரணத்தினால் சில வேளையில் இதனை கவனிக்காமல் விட்டிருக்கலாம்.
  சில காட்சிகள் ரசிகர்களின் ஊகங்களுக்காக விடப்படுவது திரைப்படங்களில் வழக்கம்தானே...?

  சில காட்சிகளில் விறுவிறுப்பு, சுவாரஸ்யம் குறைவாயிருக்கலாம். அது படத்தின் வெற்றியைப் பாதிக்கிற விடயங்கள். (ஆனால், படம் அனேக இடங்களில் சாதனை வெற்றியைப் பெற்றிருப்பதாக பொதுவான தகவல்கள் தெரிவிக்கின்றன.)

  பதிலளிநீக்கு
 4. உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே......

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....