
கேள்வி: வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என ஜெயலலிதா கூறியுள்ளாரே?
கலைஞர்: அப்டியா சொன்னார்? அவர் முதலில் தனது கட்சியை விட்டு வெளியேறும் நபர்களை பிடிக்கட்டும் அப்புறம் ஆட்சியை பிடிக்கலாம்.....
கேள்வி:அழகிரி, ஸ்டாலின் இருவரில் உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும்?
கலைஞர்: இந்த கேள்வி இரண்டு கண்களில் எதை பிடிக்கும் என கேட்பது போல் இருக்கிறது..
கேள்வி:
உங்கள் ஆட்சியின் சாதனைகள் என்ன?
உங்கள் ஆட்சியின் சாதனைகள் என்ன?
கலைஞர்: ஒன்றா இரண்டா? சொல்வதற்கு ....இலவசமாய் எல்லாமே குடுத்து மக்களை சோம்பேறி ஆக்கிவிட்டோமே அது ஒன்று போதாதா?
இலங்கை தமிழர்களின் நிலை தற்போது எப்படி இருக்கிறது?
கலைஞர்: அப்பிடியேதான் இருக்கிறது.....( பின் சுதாரித்துகொண்டு) இலங்கை தமிழர்களின் நலனுக்காக இப்போதுதான் நமது பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பினேன்.....அவர் அதை எப்போது படிக்கிறாரோ அப்போதுதான் அது பற்றி கூறமுடியும்.....
வரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்குமா?
கலைஞர்: வரும் தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும்.....எனது இறுதி மூச்சு நிக்கும் வரை நான் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் ....தொண்டர்கள் நினைக்கிறார்கள்.....ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை....மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் நான் பதவியில் இருக்க தயார்......
அழகிரி ,ஸ்டாலின்,கனிமொழி ஆகிய மூவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறதே?
கலைஞர்: அப்பிடியெல்லாம் ஒன்றும் இல்லை.....வரும் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தவுடன் தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சி கருதி நான்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு நான் ,அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அம்மாநிலங்களின் முதல்வர்களாக பதவி ஏற்போம் என கட்சியின் செயற்குழு மற்றும் பொதுகுழு கூடி முடிவெடுத்துள்ளது.....
இதை கேட்டு பேட்டி எடுப்பவர் மயக்கம் போட்டதால் கலைஞரின் பேட்டி தற்காலிகமாக முடிவுற்றது......
Tweet |
கலைஞர்: அப்டியா சொன்னார்? அவர் முதலில் தனது கட்சியை விட்டு வெளியேறும் நபர்களை பிடிக்கட்டும் அப்புறம் ஆட்சியை பிடிக்கலாம்.....//
பதிலளிநீக்குgood
இதையும் படிக்கவும்
பதிலளிநீக்குகலைஞரிடம் ஒரு பேட்டி பாகம்-1
@கலைஞரிடம் ஒரு பேட்டி பாகம்-2
thanks for ur comments anne.......
பதிலளிநீக்கு