07 ஜூன் 2011

கே டி பிரதர்ஸின் மோடி வித்தைகள்....


கருணாநிதி குடும்பத்தில் அடுத்ததாக திஹார் சிறைக்கு சுற்றுலா செல்ல கே டி பிரதர்ஸின் சார்பாக தயாநிதிமாறன் போவதற்கு வாய்ப்பு அதிகரித்து உள்ளது...

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்குமாறு அதன் உரிமையாளரான சிவசங்கரனை மிரட்டினார் என்பதுதான் தயாநிதிமாறன் மீதான குற்றசாட்டு..

சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார், மிரட்டினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை முதலீடு செய்தது ஆனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனம்.

இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை டெஹல்கா இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதைத்தான் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவசங்கரனிடம் நேற்று சிபிஐ நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அப்போது என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் அளித்தார் சிவசங்கரன்.

சிவசங்கரன் கூறுகையில், தயாநிதி மாறன் எனக்குக் கொடுத்த நெருக்கடியால், என்னை கழுத்தை நெரிப்பது போல உணர்ந்தேன். தயாநிதி மாறனின் செல்வாக்கு காரணமாக எனது விண்ணப்பங்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் நான் ஆனந்தகிருஷ்ணனிடம் ஏர்செல்லை விற்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

சிவசங்கரனின் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியமாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த விவகாரம் குறித்து தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது சிபிஐ. பிரதமர் ஒப்புதல் கிடைத்தவுடன் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது சினிமாவில் வில்லன்கள் செய்வதுபோல இருக்கிறதுதானே?....என்ன ஒரு ஜெகஜ்ஜாலத்தனம்...?இதுமட்டுமல்லாமல் தனது வீட்டில் உள்ள (சென்னையில்) பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பை சன் டிவி க்கு திருட்டுத்தனமாக பயன்படுத்தினார் என்றும் ஒரு பூதம் கிளம்பி உள்ளது...

பதவியும்,பணமும் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இப்போது திஹார்தான் வாடகை இல்லாத இருப்பிடம் என்பதை நீதித்துறை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க வேண்டும்...

14 கருத்துகள்:

  1. இன்னும்42 பேர் பாக்கி இருக்காங்க அவங்களுக்கு திகாரில் இடம் இருக்குமா /

    பதிலளிநீக்கு
  2. //சுற்றுலா செல்ல//

    நிறைய சிரித்தேன் ...

    பதிலளிநீக்கு
  3. அடுத்து யார்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

    பிரபல பதிவரின் அராஜகம்
    http://speedsays.blogspot.com/2011/06/blog-post_07.html

    லேப்டாப் மனோவின் New Keyboard
    http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html

    பதிலளிநீக்கு
  4. சுற்றுலா சிறப்பாக பாதுக்காப்பாக(?) அமைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. எங்கே செல்லும் இந்த பாதை......

    பதிலளிநீக்கு
  6. கிணற்றை ஆழமாகத் தோண்டத் தோண்ட நீர் பெருக்கெடுத்து வருவது போன்று,
    இந்த ஸ்பெக்ரம் விவகாரமும் நீண்டு கொண்டு போகிறதே...

    அப்போ, கனிமொழிக்கு அடுத்ததாக ராசாவை மீட் பண்ண தயாநிதியார் ரெடியாகிறார் போல இருக்கே;-)))

    பதிலளிநீக்கு
  7. //இதையெல்லாம் பார்க்கும்போது சினிமாவில் வில்லன்கள் செய்வதுபோல இருக்கிறதுதானே?....என்ன ஒரு ஜெகஜ்ஜாலத்தனம்...///
    ஹிஹி புரிஞ்சுதா இப்ப???mmm

    பதிலளிநீக்கு
  8. அப்படிப்போடு போடு போடு அசத்தி போடு கேசால ஹிஹி!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....