31 அக்டோபர் 2010

என்ன கொடுமை சார்?

வேண்டும் மரணதண்டனை : விஜய்

நேற்று கோவையில் இரு குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொலைகாரர்கள் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது......

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விஜய் , குழந்தைகளை கடத்தி கொலை செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ....அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தண்டனையை
உடனே நிறைவேற்றிடும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என
கூறியுள்ளார்.....விஜயின் இந்த கருத்து வரவேற்கதர்க்கதே......
இந்நிலையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டால் என்றும் இது சம்பந்தமாக மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டான்
என்றும் போலீஸ் அறிவித்துள்ளது......

இது மாதிரி நாய்களை போலீஸ் பிடித்தவுடன் நாயை கொள்வது மாதிரி சுட்டு கொள்ள வேண்டும்.....அப்போதுதான் இது மாதிரி சம்பவங்கள் முடிவுக்கு வரும்.....

30 அக்டோபர் 2010

எந்திரன் கதை என்னுடையது.....ஹாஜா

இந்த படத்தின் கதை பத்து வருடங்களுக்கு முன்பு நான் ஒரு வாரப்பத்திரிகையில் எழுதியது.....

படத்தில் வரும் பல காட்சிகள் என்னுடுய கதையில் வருபவை....அதை என்னிடம் காப்புரிமை பெறாமல் படமாக எடுத்துள்ளனர்....இதை நான் சும்மா விட மாட்டேன்....சம்பந்த பட்டவர்கள் மீது வழக்கு தொடர்வேன்...

ஹிஹிஹி.....சும்மா ஒரு பப்ளிசிடிதாங்க......இதானே இப்ப ட்ரென்ட்...

இன்றைக்கு கூட ஆர்னிகா நாசர் என்பவர் படத்தின் கதை தன்னுடையது என புகார் அளித்துள்ளார்.....மூன்று நாளைக்கு முன்பு ஒருவர் படத்தின் கதை தன்னுடையது என புகார் அளித்தார்.....

உண்மையிலே எந்திரன் படத்தின் கதை யாருடயதுங்கோ????

இன்னும் எத்துனை பேர் கிளம்பி வரபோகிரார்களோ?

ஊழல் பெருச்சாளி சவான்.....

கார்கில் போரில் நாட்டுக்காக போராடி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு கட்டப்பட்ட வீடுகளை தனது உறவினர்களுக்காக லபக்கியது அம்பலமானதால் மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் இன்று ராஜினாமா....

ஒதுக்கபட்ட நூற்றி இரண்டு வீடுகளில் முப்பத்தி ஏழு வீடுகள் மட்டுமே உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டன.....மீதி வீடுகளை தனது மாமியார்,உறவினர்கள்,மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு ஏதோ தன் அப்பன் வீட்டு சொத்துக்களை குடுப்பது போல வாரி வழங்கி உள்ளார் இந்த ஊழல் பெருச்சாளி......

ஏன்யா உங்களுக்கெல்லாம் மன சாட்சியே இல்லையா??

நாட்டுக்காக உயிரிழந்த அந்த வீரர்களின் தியாகத்துக்கு கிடைத்த வீடுகளிலா கைவைப்பது? உங்களுக்கெல்லாம் வீடு வாசல் இல்லையா? இல்ல பிச்சக்காரன் மாதுரி ரோட்லையா படுத்துகிடந்திங்க?

மக்களின் பணத்தை கொள்ளை அடிச்சது பத்தாதுன்னு இப்ப இறந்த வீரர்களுக்கு
வழங்கப்பட்ட வீட்டயுமா கொள்ளை அடிப்பது?

உன்னை மாதுரி ஊழல் பெருச்சாளிகளை நடூ ரோட்டில் நிப்பாட்டி அடித்தால்தான் திருத்துவீங்க......

29 அக்டோபர் 2010

கருணாநிதியா? கடித நிதியா???????


கத்தார் நாட்டு கடல் எல்லையில் நுழைந்த நாற்பத்தி மூன்று தமிழக மீனவர்களை அந்நாட்டு போலீஸ் இன்று கைது செய்தது......உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கலைஞர் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்
அய்யா கலைஞர் அவர்களே....

இதற்கும் கடிதம்தான் எழுதணுமா? நீங்கள் வேற எந்த முறையிலுமே பிரதமரையோ மத்திய அமைச்சரையோ தொடர்பு கொள்ள முடியாதா?நீங்கள் போன் என்ற ஒன்றை பயன்படுத்தவே மாட்டிர்களா?

இலங்கை தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டபோதும் கடிதம் , அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க கோரியும் கடிதம்....அப்பப்பா ....உங்களை மாதுரி யாராலும் ஏன் காதலர்களாலும் கூட கடிதம் எலுத முடியாது
ஆமாம்....உங்களுக்கு இலங்கை தமிழர்கள் நலன் போன்ற விசயங்களுகாக நேரில் போக நேரம் கெடைக்குமா என்ன? மகனுக்கும் ,பேரனுக்கும் மந்திரி பதவி வாங்க வேண்டுமானால் போகலாம்.....இதுக்குலாம் போக முடியுமா????
அட நேரில் கூட போக வேண்டாம்.......நீங்கள் கடிதம் அனுப்புவதை மட்டும் நிறுத்தினால் போதும்.....பேசாமல் அதிக கடிதங்கள் அனுப்பியதற்காக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றால்தான் நீங்கள் நிறுத்துவீர்களா??????

28 அக்டோபர் 2010

இறந்தும் சாதனை......

ஜாக்சன் இறந்து ஓராண்டுக்கு மேல் ஆனாலும் அவரின் தாக்கம் இன்னும் குறையவில்லை.....என்றுமே அவர் முதலிடம்தான்......

இறந்தாலும் அவரின் ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.....

இறந்து போன பிரபலங்கள் ஈட்டிய வருமானத்தில் ஆயிரத்து இறநூறு கோடிக்கு இவரின் ஆல்பங்கள்,வீடியோ,பயன்படித்திய பொருட்கள் ஏலத்தில் போயிருக்கின்றன......

உலக அளவில் இதன் மூலம் இறந்தும் லாபம் ஈட்டியதில் முதலிடத்தில் ஜாக்சன் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை அறிவித்துள்ளது.......அவரின் மரணம் இன்றும் மர்மமாக உள்ள நிலையில் அவரின் தாக்கம் இன்னும் மக்களிடத்தில் இருந்து அகலவில்லை.....

இந்த தொகைக்கு வேற எந்த நபரின் பொருட்களும் ஏலம் போனது இல்லையாம்......

இன்னும் அவரின் பாப் இசை ஆல்பங்கல்தான் முன்னணியில் உள்ளன......அவரின் ஆல்பங்கள் செய்த வசூல் சாதனை இனி யாராலும் முறியடிக்க முடியாது .....

ஜெயிப்பாரா ஜெயலலிதா?


குழுங்கியது கோவை, திணறியது திருச்சி,முடங்கியது மதுரை .....என அதிமுகவினர் தங்களுக்கு கூடிய கூட்டத்தை பெருமையாக சொல்கின்றனர்.....

ஜெயலலிதாவுக்கு கூடிய இந்த கூட்டத்தால் அடுத்தது அதிமுக ஆட்சிதான் என்ற ஒரு மாயை தற்போது ஏற்பட்டுதுள்ளது......

ஆனால் கூடிய கூட்டத்தால் மட்டுமே ஜெயலலிதா ஆட்சியை பிடித்துவிடுவாரா?

முதலில் கோவையில் கூடிய கூட்டமே ஓரளவு உண்மையான கூட்டம்.....மற்றதெல்லாம் எப்படி கூடியது என சிறு குழந்தைக்கு கூட தெரியும்.....எல்லா கட்சிகளுமே குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்துதான் கூட்டத்தை கூட்டுகின்றன......

அந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் கேள்வி......
ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்தை பெரும்பாலானோர் விரும்புகின்றனர் என்பதே உண்மை நிலவரம்.....அதற்கு விலைவாசி உயர்வு, மின்வெட்டு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மற்றும் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் போன்றவையே முக்கிய காரணங்களாகும் .....

இது மட்டுமே ஜெயலலிதாவை ஜெயிக்க வைக்க உதவாது......
அவர் போடும் கூட்டணி கணக்கு சரியாய் அமைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும்......

தற்போதைய நிலையில் காங்கிரஸ் அல்லது விஜயகாந்த் யாரோடு சேருகிறார்களோ அந்த அணியே வெற்றி பெரும்.....விஜயகாந்த் திமுகவைத்தான் விமர்சித்து கட்சி நடத்துகிறார்......எனவே அவர் கண்டிப்பாக அக்கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டார்.....அவர் அதிமுகவுடன் சேரவே வாய்ப்புகள் அதிகம்.....

காங்கிரஸ் திமுக அணியில் இருந்தாலும் அவர்களுக்குள் உறவு சுமுகமாக இல்லை....

அதேநேரம் சோனியாவை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி...

ஆனாலும்



அரசியலில்தான் எதுவும் நடக்குமே......

27 அக்டோபர் 2010

மனதை உலுக்கிய நோய்....


உலகத்தில் எவ்வளவோ நோய்கள் இருக்கின்றன.... நமக்கோ அல்லது நமது உறவினர்களுக்கு அந்நோய்கள் ஏற்பட்டால்தான் அது நம்மை உலுக்கும்.....

சமிபத்தில் மஸ்குலர் டிஷ்ட்ரோபி என்னும் நோயினால் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகளைப்பற்றி விகடனில் படித்தேன்......மனதை உலுக்கி விட்டது.....

நம் ஒவ்வொருவரின் உடலில் இருக்கும் செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும்.....ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் செல்கள் அழியும்...புதிய செல்கள் உருவாகாது....உடம்பில் உள்ள தசைகள் மெல்ல மெல்ல தனது செயல்பாட்டை நிறுத்தி இறுதியில் மரணம் ஏற்படும்....இந்த தசை சிதைவுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை.....

தனது கண் முன்னாலே தசைகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கபடும் மரணத்தை விட கொடுமையான சித்ரவதைகளை இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கிறார்கள்.......
இந்நோய் ஜீன்களில் ஏற்படும் மாற்றத்தின் பாதிப்பால் ஏற்படும்....அதற்க்கு சுற்று புற சீர்கேடும் ஒரு காரணமாம்......

இந்நோயினால் பாதிக்கப்பட்ட அந்த சகோதரிகள் சோர்ந்து விடாமல் அஞ்சல் வழியில் பட்ட படிப்பை முடித்துள்ளனர்......மேலும் சுற்று புற சீர்கேடு பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்....அவர்களுக்கு நடக்க முடியாது....அடுத்தவர்கள் உதவி இல்லாமல் போன் கூட பேசமுடியாது.....ஏறக்குறைய எல்லா தசைகளும் அவர்களுக்கு செயல் இழந்துவிட்டன.....அவர்கள் மரணத்தை கண்டு அஞ்சவில்லை.....அது எப்படி வரும் என்று எதிர்பாத்து காத்து இருக்கிறார்கள்......

26 அக்டோபர் 2010

எந்திரன் : சில கேள்விகள்....

பொதுவாக படங்களில் லாஜிக் பாக்ககூடாதுதான் ...
அதுவும் ரஜினி படங்களில் லாஜிக் என்ற சொல்லை சொல்லவே கூடாது.....

ஆனாலும் எந்திரன் படத்தில் எனக்கு சில லாஜிக் கேள்விகள்....யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்......

ரஜினி தான் உருவாக்கிய ரோபோவை பார்ட் பார்ட்டாக உடைத்து ஏதோ அழுகிப்போன காய்கறிகளை போடுவது போல குப்பைதொட்டியில் போடுகிறார்.....
ஒரு சயின்டிஸ்ட் இப்படியா உடைத்து குப்பையில் போடுவார்?

அப்பிடி குப்பைதொட்டியில் போடப்பட்ட ரோபோ அதுவும் பார்ட் பார்ட்டாக உடைத்து பிரித்து போடப்பட்ட ரோபோ எப்படி முழுசாக வில்லன் காரில் ஏறி உட்காரும்?

அதுவும் படத்தின் இறுதி கட்சிகள் அளவுக்கு மீறிய கிராபிக்ஸால் கடுபேற்றுகிறது......சூப்பர் பவர் படைத்த வில்லன் ரோபோ ஹீரோ ரஜினியை கொள்ள அவ்ளோ மெனக்கெடுகிறது.....

இதைப்பற்றி எந்த பத்திரிக்கையாவது இப்படத்தை பற்றிய விமர்சனத்தில் குறிப்பிடும் என எதிர்பார்த்தேன்.....

ஆனால் குமுதமோ சூப்பர் என்று முத்திரை குத்தி தனது ஜால்ராவை வெளிக்காட்டியது......

விகடன் மட்டும் ஓரளவு நடுநிலமையாக விமர்சனம் பண்ணியதுஆனால் அதுவும் எனக்கு தோன்றிய இந்த சந்தேகங்களை குறிப்பிடவில்லை......

25 அக்டோபர் 2010

சீண்டி பார்க்கும் சீனா


அருணாச்சல பிரதேசத்தை தன் நாட்டின் ஒரு பகுதியாக தனது வரைபடத்தில் சேர்த்துள்ளது சீனா..

நமது பிரதமர் சில மாதங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்திற்கு சென்ற போது கண்டனம் தெரிவித்தது சீனா.அப்போதே நமது மத்திய அரசு தனது எதிர்ப்பை சரியாக தெரிவித்து இருந்தால் இப்ப இந்த அளவுக்கு வந்திருக்காது....

ஆசிய கண்டத்தில் தன்னை வல்லரசாக காட்டிக்கொள்ளவே சீனா அடிக்கடி நம்மை சீண்டி பாக்கிறது..

நமது வீட்டை ஒருத்தன் பங்கு கேட்டால் நமக்கு எவ்ளோ கோபம் வரும்?

இப்ப நம்ம நாட்டேயே பங்கு போடா பாக்குரானே....

இம்முறை இந்தியா இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்....


இந்தியாவுக்கான தூதரை திரும்ப பெற வேண்டும்.....


நம் நாட்டிலுள்ள சீனாவின் தூதரகத்தை மூட வேண்டும்.....


சீனாவிற்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.....


செய்யுமா நம் மத்திய அரசு?


நீ சொல்லி என்ன நடக்க போகுதுன்னு கேக்குறிங்களா?


அது உண்மைதான்....நம்ம சொல்லி ஒன்னும் நடக்காது.....ஆனால் என்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்ய வேண்டுமென நினைத்தேன்....ஏதோ நம்மால் முடிஞ்சது...



24 அக்டோபர் 2010

தமிழகம் பிரிக்கப்படும்: கலைஞர்....


கேள்வி: வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என ஜெயலலிதா கூறியுள்ளாரே?


கலைஞர்: அப்டியா சொன்னார்? அவர் முதலில் தனது கட்சியை விட்டு வெளியேறும் நபர்களை பிடிக்கட்டும் அப்புறம் ஆட்சியை பிடிக்கலாம்.....

கேள்வி:அழகிரி, ஸ்டாலின் இருவரில் உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும்?


கலைஞர்: இந்த கேள்வி இரண்டு கண்களில் எதை பிடிக்கும் என கேட்பது போல் இருக்கிறது..
கேள்வி:

உங்கள் ஆட்சியின் சாதனைகள் என்ன?

கலைஞர்: ஒன்றா இரண்டா? சொல்வதற்கு ....இலவசமாய் எல்லாமே குடுத்து மக்களை சோம்பேறி ஆக்கிவிட்டோமே அது ஒன்று போதாதா?

இலங்கை தமிழர்களின் நிலை தற்போது எப்படி இருக்கிறது?

கலைஞர்: அப்பிடியேதான் இருக்கிறது.....( பின் சுதாரித்துகொண்டு) இலங்கை தமிழர்களின் நலனுக்காக இப்போதுதான் நமது பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பினேன்.....அவர் அதை எப்போது படிக்கிறாரோ அப்போதுதான் அது பற்றி கூறமுடியும்.....

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்குமா?

கலைஞர்: வரும் தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும்.....எனது இறுதி மூச்சு நிக்கும் வரை நான் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் ....தொண்டர்கள் நினைக்கிறார்கள்.....ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை....மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் நான் பதவியில் இருக்க தயார்......

அழகிரி ,ஸ்டாலின்,கனிமொழி ஆகிய மூவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறதே?

கலைஞர்: அப்பிடியெல்லாம் ஒன்றும் இல்லை.....வரும் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தவுடன் தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சி கருதி நான்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு நான் ,அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அம்மாநிலங்களின் முதல்வர்களாக பதவி ஏற்போம் என கட்சியின் செயற்குழு மற்றும் பொதுகுழு கூடி முடிவெடுத்துள்ளது.....
இதை கேட்டு பேட்டி எடுப்பவர் மயக்கம் போட்டதால் கலைஞரின் பேட்டி தற்காலிகமாக முடிவுற்றது......

எப்போ தீரும் சன் டிவியின் தொல்லை???????



எப்ப தீரும் உங்க தொல்லை....தாங்க முடியலப்பா.....



சாதாரண அட்டு படத்தை கூட நீங்க வாங்கினால் விளம்பரம் பண்ணியே அந்த படத்தை தியேட்டரில் பாக்காட்டி கூட திருட்டு விசிடி யில் பாக்க வைத்து விடுவீர்கள்.....



நீங்கள் எந்திரன் படத்தை தயாரிக்கும்போதே இந்த படத்துக்கு எப்படி எப்படிலாம் விளம்பரம் பண்ணி சாகடிக்க போறாங்காலோன்னு எல்லாரும் பயந்தோம்.......



இப்போது அந்த விளம்பர தொல்லைகளை அனுபவித்து தொலைக்கிறோம்.....



எந்திரன் படம்தான் ஓரளவு நல்லா இருக்கே.....பின்ன எதற்கு நொடிக்கு நொடி அதை விளம்பரம் பண்ணி பண்ணி டிவி பாக்குற எங்கள ஓட ஓட விரட்டுரிங்க......ட்ரைலரைகூட சன் டிவி யில் எந்திரன் படத்தின் ட்ரைலர் என அட்டகாசம் செய்தீர்கள்.......இப்போது உலக தொலைகாட்சிகளில் முதல்முறையாக எந்திரன் படத்தின் பாடல்கள் ஒலிபரப்பு என அதற்கும் விளம்பரம் பண்ணி அநியாயம் பண்ணுரிங்கலேப்பா.....உங்க ஆட்டத்துக்கு எப்போதுதான் முற்றுபுள்ளியோ........

ஒரு படத்தின் பாடல்களை ஒளிபரப்பகூட இவ்ளோ அலம்பல் தேவையா?





23 அக்டோபர் 2010

விஜயகாந்துடன் கூட்டணி: ராமதாஸ் அறிவிப்பு....

வரும் சட்டமன்ற தேர்தலில் யாரோடு யார் கூட்டணி என்பதே இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது...
இந்நிலையில் இன்று மாலை விஜயகாந்தை ராமதாஸ் திடிரென சந்தித்தார் ..பின்னர் நிருபர்களிடம் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்ததாக அறிவித்தார்.....
அன்புமணிக்கு சீட் தருவதாக சொல்லி கருணாநிதி ஏமாற்றி விட்டார்...
ஆனால் தம்பி விஜயகாந்த் தன புதிய படமான விருதகிரியில் அன்புமணிக்கு ராஜ்ய சபா எம் பி ரோல் தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து இந்த முக்கியமான முடிவை எடுத்ததாக கூறினார்.....மேலும் காடுவெட்டி குருவிற்கும் வில்லன் ரோல் போனசாக தரப்படும் என விஜயகாந்த் பெருந்தன்மையோடு கூறியதாக ராமதாஸ் மகிழ்ச்சியோடு கூறினார்.....
இந்நிலையில்சற்று முன்பு சரத்குமார் ராமதாசை சந்தித்து தனது புதிய படத்தில் அன்புமணிக்கு முதலமைச்சர் வேடமே குடுப்பதாக ராமதாசிடம் உறுதி அளித்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது....எனவே ராமதாஸ் சரத்குமாரிடம் கூட்டணி வைப்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...
இப்பிடியெல்லாம் நடந்தாலும் நடக்குமுங்க.....அதான் ஒரு கற்பனை.....ஹி ஹி ...

22 அக்டோபர் 2010

வேலாயுதம் படத்தின் கதை...

தொடர்ச்சியாக தோல்வி படங்களை குடுக்கும் விஜய்க்கு வேலாயுதம் படம் மிக மிக முக்கியமான படம்.....
விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வேலாயுதம் படத்தின் கதை இதோ....
சென்னையில் வேல் ,அரிவாள் ,போன்ற ஆயுதங்களை நல்ல விசயங்களுக்காக மட்டுமே செய்து கொடுக்கும் தொழில் செய்பவர் விஜய்....அவரிடம் வில்லன் கோஷ்டி கலவரத்திற்காக மிகப்பெரிய அளவில் இந்த ஆயுதங்களை செய்து கேட்கிறது.....விஜய் முடியாது என்கிறார்.....கோபத்தில் அவரின் குடும்பத்தை போட்டு தள்ளுகிறான் வில்லன்....அது வரை வேல்,அரிவாள் போன்ற ஆயுதங்களை செய்து கொடுத்த விஜய் வில்லன் கோஷ்டிகளை பழிவாங்க கையில் தூக்குகிறார்.....இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.....இதில் நான்கு குத்து பாட்டு ,ஐந்து சண்டை, ஐம்பது பஞ்ச் டயலாக் போன்றவை ரசிகர்களுக்கு விருந்து படைப்பவை....
இது எப்படி உனக்கு தெரியும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.....அட போங்க சார் இதே தானே விஜய் எல்லா படத்திலும் மாத்தி மாத்தி செய்கிறார்....ஒரு மாற்றத்திற்காக ஹீரோயினை மாத்திட்டரே அது போதாதா?

21 அக்டோபர் 2010

ரஜினின்னா சும்மாவா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்.....அன்றைய முதல்வர் ஜெயலலிதா பதவிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என சொன்னவர்,பின்னர் அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி என புகழ்ந்தார் ..அதெல்லாம் ரஜினியால் மட்டுமே முடியும்....ரஜினினா சும்மாவா என்ன?
இருபது வருடங்களாக நான் அரசியலுக்கு வருவேன், ஆனா எப்ப வருவேன்னு தெரியாது என்று சொல்லி ரசிகர்களை குழப்பி திடிரென அந்த வசனமெல்லாம் இயக்குனர் சொல்லிகுடுத்தது அதற்க்கு நான் என்ன பண்ணுவேன் என்றும் சொல்ல ரஜினியால் மட்டுமே முடியும்....பின்ன ரஜினினா சும்மாவா?
தாத்தா வயதிலும் தனக்கு ஜோடியாக உலக அழகிதான் வேணும் என சொல்ல ரஜினியால் மட்டுமே முடியும்....பின்ன ரஜினினா சும்மாவா ? தனது படத்துக்கு கூட்டம் சேர பால் அபிசேஹம் பண்ண ரசிகன் வேண்டும் ஆனால் தனது மகள் கல்யாணத்திற்கு மட்டும் அதே ரசிகன் வந்தால் மக்களுக்கு தொந்தரவு ,அதனால் வரவேண்டாம் என கூற ரஜினியால் மட்டுமே முடியும்...பின்ன ரஜினினா சும்மாவா?
தனது படம் மும்பையில் ஓட வேண்டும் என்பதற்காக தமிழர்களை மும்பையை விட்டு துரத்த நினைத்த பால்தாக்கரேயை கடவுள் என கூற ரஜினியால் மட்டுமே முடியும்...பின்ன சூப்பர் ஸ்டார் ரஜினினா சும்மாவா?




/