28 அக்டோபர் 2010

ஜெயிப்பாரா ஜெயலலிதா?


குழுங்கியது கோவை, திணறியது திருச்சி,முடங்கியது மதுரை .....என அதிமுகவினர் தங்களுக்கு கூடிய கூட்டத்தை பெருமையாக சொல்கின்றனர்.....

ஜெயலலிதாவுக்கு கூடிய இந்த கூட்டத்தால் அடுத்தது அதிமுக ஆட்சிதான் என்ற ஒரு மாயை தற்போது ஏற்பட்டுதுள்ளது......

ஆனால் கூடிய கூட்டத்தால் மட்டுமே ஜெயலலிதா ஆட்சியை பிடித்துவிடுவாரா?

முதலில் கோவையில் கூடிய கூட்டமே ஓரளவு உண்மையான கூட்டம்.....மற்றதெல்லாம் எப்படி கூடியது என சிறு குழந்தைக்கு கூட தெரியும்.....எல்லா கட்சிகளுமே குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்துதான் கூட்டத்தை கூட்டுகின்றன......

அந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் கேள்வி......
ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்தை பெரும்பாலானோர் விரும்புகின்றனர் என்பதே உண்மை நிலவரம்.....அதற்கு விலைவாசி உயர்வு, மின்வெட்டு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மற்றும் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் போன்றவையே முக்கிய காரணங்களாகும் .....

இது மட்டுமே ஜெயலலிதாவை ஜெயிக்க வைக்க உதவாது......
அவர் போடும் கூட்டணி கணக்கு சரியாய் அமைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும்......

தற்போதைய நிலையில் காங்கிரஸ் அல்லது விஜயகாந்த் யாரோடு சேருகிறார்களோ அந்த அணியே வெற்றி பெரும்.....விஜயகாந்த் திமுகவைத்தான் விமர்சித்து கட்சி நடத்துகிறார்......எனவே அவர் கண்டிப்பாக அக்கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டார்.....அவர் அதிமுகவுடன் சேரவே வாய்ப்புகள் அதிகம்.....

காங்கிரஸ் திமுக அணியில் இருந்தாலும் அவர்களுக்குள் உறவு சுமுகமாக இல்லை....

அதேநேரம் சோனியாவை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி...

ஆனாலும்



அரசியலில்தான் எதுவும் நடக்குமே......

3 கருத்துகள்:

  1. வைகோவை சிறையில் அடைப்பார்,பின்னர் கோடிகள் கொடுத்துக் கடைசி நேரத்தில் கூட்டணி என்பார்.பின்னர் கழுத்திலே கை வைப்பார். சோனியாவைத் திட்டாத வார்த்தைகள் இல்லை. தலைவருக்கேத் துரோகம் செய்த இவர் அவரைக் கணவருக்குத் துரோகம் செய்தவர் என்றார்.வெளி நாட்டுக்காரி என்றார் இந்த உண்மையான மைசூர் பிறப்பு.தமிழனுக்கு பணமும்,பதவியும் கொடுத்தால் எல்லாம் செய்வார்கள் என்பது எலும்புத்துண்டைத் தேடி அலைபவர்களுக்குத்தான் பொருந்தும். தமிழக மக்கள் அறிவாளிகள். அவர்களுக்குப் பொருந்தாது.

    பதிலளிநீக்கு
  2. வைகோவை சிறையில் அடைப்பார்,பின்னர் கோடிகள் கொடுத்துக் கடைசி நேரத்தில் கூட்டணி என்பார்.பின்னர் கழுத்திலே கை வைப்பார். சோனியாவைத் திட்டாத வார்த்தைகள் இல்லை. தலைவருக்கேத் துரோகம் செய்த இவர் அவரைக் கணவருக்குத் துரோகம் செய்தவர் என்றார்.வெளி நாட்டுக்காரி என்றார் இந்த உண்மையான மைசூர் பிறப்பு.தமிழனுக்கு பணமும்,பதவியும் கொடுத்தால் எல்லாம் செய்வார்கள் என்பது எலும்புத்துண்டைத் தேடி அலைபவர்களுக்குத்தான் பொருந்தும். தமிழக மக்கள் அறிவாளிகள். அவர்களுக்குப் பொருந்தாது.////
    இவ்வளவு அருமயான கருத்தை இப்படி அனானியா சொல்லிட்டு போய்ட்டீரே....பெரியை சொல்ல பயமா?

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....