01 ஜூன் 2011

மரியம் பிச்சையை கொச்சை படுத்திய வினவு..


அமைச்சர் மரியம்பிச்சையை பற்றி வினவு எழுதியிருந்த ஒரு பதிவை படித்தேன்....

கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் இறந்தவரை பற்றி எழுதியுள்ளது வினவு....

மரியம் பிச்சை ஒரு ரௌடியாம்....கள்ளசாராயம் காய்ச்சிதான் முன்னுக்கு வந்தாராம்....சப் இன்ஸ்பெக்டர் மனைவியையே கள்ளகாதலியாக வைத்துகொண்டாராம்....

இது மாதிரி விமர்சனங்கள் அரசியல்வாதிகளை பற்றி வருவது இயல்புதான்....அவர் மீதான விமர்சனம் சரியா தவறா என்று பார்ப்பதைவிட இறந்துவிட்ட அதுவும் கோரமான விபத்தில் இறந்து தமிழ்நாடு முழுவதும் அனுதாபத்தை ஏற்படுத்திய ஒருவரை பற்றி இம்மாதிரி தரக்குறைவாக வினவு எழுதலாமா?

இப்போதுள்ள அரசியல்வாதிகளில் தனிப்பட்ட குணாதிசயங்கள் முறையில் பார்த்தால் நல்லவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்....அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு நல்லது செய்தார்களா கெடுதல் செய்தார்களா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர அவரை தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக விமர்சித்தது எந்த விதத்தில் நியாயம்?


திருச்சியில் நேரு குருப்பினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மரியம் பிச்சையின் வெற்றியை தங்கள் வெற்றியாக கருதினார்கள்....திருச்சியில் எந்த இடம் யார் வாங்கினாலும் நேரு குருப்புக்கு கப்பம் கட்ட வேண்டும்....தில்லை நகர் முழுக்க நேரு நகர் ஆகிவிட்டது...நேருவை மிஞ்சி திருச்சியில் யாரும் ஏதும் செய்ய முடியாது...

அப்படிப்பட்ட சர்வபலம் பொருந்திய நேருவை வீழ்த்தி மரியம் பிச்சை அமைச்சரும் ஆகி விட்டதால் இனி அம்மாதிரி நிலைமைகள் ஏற்படாது என பொதுமக்கள் சந்தோசமாக இருந்தனர்...இந்நிலையில் திடிரென விபத்தில் இறந்த மரியம் பிச்சையின் இழப்பை திருச்சி மக்களால் ஜீரணிக்க முடியாமல் கடைகளை அடைத்து துக்கம் கடைபிடித்தனர்.....


அதையும் ஆளும்கட்சியினர் மிரட்டித்தான் செய்யவைத்தனர் என வினவு கூறியுள்ளது மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துவதாகும்....

இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்கள்....வினவு எழுதியது சரியா?

32 கருத்துகள்:

 1. உங்களின் பார்வையில் நியாயம் உள்ளது சகோ. ஒருவர் இறந்ததன் பின்னர் குற்றம் சொல்லுவதில் நியாயமில்லை சகோ.

  பதிலளிநீக்கு
 2. இறந்த ஒருவரைப்பற்றி இப்படி சொல்வது தவறுதான்...

  தைரியம் இருந்திருந்திருந்தால் இதை உயிருடன் இருக்கும்போதே சொல்லியிருக்கலாமே...

  பொதுவாக தற்போது எல்லா அரசியல்வாதிகளும் ரவுடிகள்தான் இதை சொல்ல இது நேரம் அல்ல

  பதிலளிநீக்கு
 3. சரியாக சொன்னீர்கள்

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

  நூறு = 100 = சதம் == தமிழுக்கு நன்றி

  http://speedsays.blogspot.com/2011/06/100.html

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா12:47 PM, ஜூன் 01, 2011

  அரசியலில் எவன் தான் ஒழுங்கு .. வினவு மரியம் பிச்சையை மட்டும் எழுதியது கண்டிக்கத்தக்கதே.. அனைவரையும் பற்றி - உயிரோடு இருப்பவரைப் பற்றியும் கூட எழுது வேண்டும் .. அது தான் நியாயம்

  பதிலளிநீக்கு
 5. தேர்தல் சமயத்தில் இப்படி எழுதியிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஒருவர் இல்லாத சமயத்திலே அவரைப்பற்றி பேசுவது தவறு என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் அவர் மறைந்த பிறகு...
  தி இஸ். டு மச்

  பதிலளிநீக்கு
 6. மாப்ள உன் பக்கம் ரைட்டு

  பதிலளிநீக்கு
 7. வினவு எழுதிய செய்திகளில் பிழை இருந்தால் அதை விமர்சனம் செய்யுங்கள்...அதை விடுத்து அவர் செத்துட்டார் அதனால விமர்சனம் செய்யகூடாது என்பது ஏற்க்ககூடியது அல்ல ...செத்துட்டார் என்பதற்காக அவர் செய்ததை அவர் இறந்ததுக்காக மற்றவர் செய்ததை நியாய படுத்தாதீங்க...ஒரு அரசியல் ரவுடி செத்ததுக்கு எதுக்கு பொது மக்களுக்கு தொல்ல கொடுக்குறீங்க என்று தான் வினவு எழுதியுள்ளது .....நீங்கள் இறந்தவர் இஸ்லாமியர் என்பதால் தான் இதை பெரிதக்குகிரீர்கள் என்று எண்ண வேண்டியுள்ளது

  Raja

  பதிலளிநீக்கு
 8. வினவு எழுதிய கருத்துக்கள் உண்மையெனில் ...எழுதியது சரியே...

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா4:21 PM, ஜூன் 01, 2011

  செத்தவரை விமர்சிக்கக் கூடாதா? செத்தவரின் பெயரால் ஊரை சூறையாடலாம் செத்தவரை விமர்சிக்க மட்டும் கூடாது எந்த ஊர் நியாயம் இது? உங்களுக்கு வேண்டுமானால் அது அனுதாபமாக இருக்கலாம் ஆனால் தமிழகம் முழுதும் என்றெல்லாம் அடித்துவிடாதீர்கள். கொச்சையான வேலைகளை பச்சையாக செய்யும் மனிதர்களை எப்படியும் விமர்சிக்க தான் வேண்டும்,அவர் இறந்திருந்தாலும் கூட. அவர் ஒரு திடீர் பணக்கார அரசியல் ரவுடி என்று 91-96 இலேயே அவரை விளாசி இருக்கிறார்கள் அது அந்த பதிவிலேயே இருக்கிறது திரும்பவும் நன்றாகப் படியுங்கள்.
  இக்பால் செல்வன் வினவு உயிரோடு இருப்பவர்கள் யாரையும் பற்றி எழுதவில்லையா?

  பதிலளிநீக்கு
 10. //அதையும் ஆளும்கட்சியினர் மிரட்டித்தான் செய்யவைத்தனர் என வினவு கூறியுள்ளது மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துவதாகும்...//

  இது உண்மையா என்பதை நிரூபியுங்கள் சகோ.பொதும்க்கள் யாரும் தங்களின் ஒரு நாள் வியாபாரத்தை மனமுவந்து விட்டு கொடுக்க மாட்டார்கள். அதுவுமில்லாமல் தமுமுக கொடியை உபயோகித்தார்கள் என்று வேறு கூறுகிறார்கள். இறந்து போனவர் தவறு செய்தர் என்பது ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் அதற்காக பொது மக்களுக்கு தொல்லை தருவதை அனுமதிக்க முடியாது.

  இறந்தது யாராக இருப்பினும் அவரை பற்றி குறை கூறுவது தவறு.

  ஆனால் அவர் அப்படி தவறு செய்திருந்தால் அதை தயவு செய்து ஆதரிக்காதீர்கள்.

  பதிலளிநீக்கு
 11. தவறு செய்தது யாராக இருந்தாலும், அவர் இறந்திருந்தால் கூட விமர்சனம் செய்வதில் தவறில்லை, வினவு எழுதிய விசயங்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் எழுதியதில் தவறேதுமில்லை, அது சரியா தவறா என நீங்கள் எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே

  பதிலளிநீக்கு
 12. மரியம் பிச்சையின் மறைவு மிக கொடூரமானதே...

  அதற்க்கு முதலில் அவரது குடும்பத்திற்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன்....

  அடுத்தது வினவு சொல்வது போல அவருக்கு மரியம் பிச்சையை பற்றி விமர்சிக்க தாராளமாய் எழுத்துரிமை இருக்கின்றது.

  அவர் சொல்வது போல இப்படி பட்ட ரௌடியை, அடுத்தவர் மனைவியோடு கள்ளத்தொடர்பு கொண்டவரை எப்படி திருச்சி மக்கள் தேர்ந்தெடுத்து அமோக வெற்றி பெறச் செய்தார்கள்???

  அப்படி எனில் திமுக வை சார்ந்த நேரு அதை விட மோசமானவராக இருந்திருக்கிறார் என்று வினவு சொல்லாமல் சொல்கின்றார் போலும்.

  எனினும் ஒருவேளை அவர் தவறு செய்தவர் என்றே வைத்து கொள்வோம், அப்படி இருக்கும் போதே, அவர் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் போதே வினவு கண்டன அறிக்கையை இது போலவே கொடுத்திருக்கலாம்.

  கடந்த ஆட்சியில் திமுகவை சேர்ந்த ஒரு வார்டு கவுன்சிலரின் தாத்தா இறந்ததற்கு அந்த பகுதியில் இருக்கும் கடைகளையும், பள்ளியையும் அடைக்க சொன்னார்கள்.

  அப்படி இருக்கும் போது ஒரு மந்திரி இறந்திருக்கின்றார் என்றால் நிச்சயம் அந்த கட்சியினர் கடைகளை அடைக்க சொல்லி இருக்கலாம்.

  வினவு அவர்களுக்கு எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி விமர்சிப்பதற்கு பதிலாக உயிரோடு இருக்கும் போதே சொன்னால் நன்றாக இருக்கும்.

  மேலும், தற்போது வேறு யாரெல்லாம் அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்ற பட்டியலை அவரிடம் இருந்து விரைவில் எதிர்பார்கின்றோம்.

  அது மட்டும் இல்லாமல் ராஜா அவர்களின் கருத்தினில்

  Raja சொன்னது…

  ஒரு அரசியல் ரவுடி செத்ததுக்கு எதுக்கு பொது மக்களுக்கு தொல்ல கொடுக்குறீங்க என்று தான் வினவு எழுதியுள்ளது .....நீங்கள் இறந்தவர் இஸ்லாமியர் என்பதால் தான் இதை பெரிதக்குகிரீர்கள் என்று எண்ண வேண்டியுள்ளது
  Raja

  இந்த வார்த்தை வீணாக மத பிரச்சினையை தூண்டும் விதமாக இருக்கின்றது.

  தயவு செய்து ராஜா அவர்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

  குறைந்தது நமது பிளாக்கர் நண்பர்களாவது ஒற்றுமையாக சாதி, மதம், பாராமல் இருக்க முயற்ச்சிப்போமே....

  நன்றியுடன்,
  சிவா (மின்சாரம்)

  பதிலளிநீக்கு
 13. so உங்க கடுப்பு வினவு த மு மு க பேர உள்ள இழுத்துதான் .....ரொம்ப சந்தோசம்....நான் ஏற்கனவே சொன்னத நிருபிசிடீங்க ......செததவ்ர் அப்படி என்ன திருச்சி மக்களுக்கு செஞ்சிட்டார் அவரு செத்தவுடனே கடைய அடைக்கிறதுக்கு....ஆளும் கட்சிகாரங்க சொல்லாம கண்டிப்பா கடைய மூடிருக்க மட்டங்க....இந்த சின்ன விஷயம் கூடவா உங்களுக்கு புரியல....

  முதல்லையே ஏன் சொல்லாம இப்போ சொல்றாங்க அப்படீன்னு எல்லாம் கேக்குறது ஏற்கனவே வினவு இவரபத்தி எழுதுன மாதிரியும் அப்பவே ஏன் சொல்லல அப்பிடீன்குற மாதிரியும் இருக்கு....

  பதிலளிநீக்கு
 14. வினவு தளத்தில் முஸ்லிம் ரவுடியை பற்றி விமர்சனம் எழுதியதை மட்டும் நீங்கள் கண்டிப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

  வினவு எழுதியது சரியே

  பதிலளிநீக்கு
 15. //மரியம் பிச்சையை கொச்சை படுத்திய வினவு.. //

  இதில் கொச்சைப்படுத்த என்ன இருக்கு? உண்மையைத்தானே எழுதி இருக்கிறார்?
  மரியம் பிச்சை என்ன சுதந்திர போராட்ட தியாகியா?

  பதிலளிநீக்கு
 16. பதிவுலக ரவுடிகள் ஜாக்கிரதை!

  பதிலளிநீக்கு
 17. நண்பர் ராஜா அவர்களுக்கு....
  இதை மத ரீதியாக சித்தரிக்க வேண்டாம் ..அவர் தவறு செய்து இருந்தால் அதை அவர் இருக்கும்போது அல்லவா ஆணித்தரமாக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்?தவிர நான் அவர் தவறு செய்யாதவர் என்று வாதிடவில்லை....அரசியல்வாதிகளில் யார்தான் ஒழுங்கு?ஒருவர் இறந்துபோன பிறகு அவரைப்பற்றி கீழ்த்தரமாக எழுதுவது சரியா என்றுதான் கேட்டுள்ளேன்...

  பதிலளிநீக்கு
 18. நண்பர் தொப்பி தொப்பி அவர்களுக்கு...

  நான் அவர் முஸ்லிம் என்பதால் இதை எழுதவில்லை...மரியம் பிச்சையை ஆதரித்தும் எழுதவில்லை....அவர் தியாகியும் அல்ல...ஆனால் அவர் ஒரு மனிதர் அல்லவா?இறந்து போன பிறகு அவரைப்பற்றி ஏன் தரக்குறைவாக எழுத வேண்டும்...எதிரியே ஆனாலும் அவர் மறைந்து போன பிறகு மன்னிப்பதே தமிழர் பண்பாடு....நான் நேருவை பற்றியும்தான் எழுதி உள்ளேன்...நேருவும் மந்திரி என்ற போர்வையில் ரவுடி தனம் செய்தவர்தானே?

  பதிலளிநீக்கு
 19. சகோ ஹாஜா உங்க கான்செப்டே எனக்கு புரிய மாட்டேன்குது....செத்துபோனா உடனே அவர் என்ன பண்ணி இருந்தாலும் , அவருக்காக மற்றவர்கள் என்ன பண்ணுனாலும் விமர்சனம் செய்யகூடாதா ? இதுல தமிழர் பண்பாடுன்னு வேற புதுசா என்னமோ சொல்றீங்க.....அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? காந்திய பத்தியே அவர் செத்ததுக்கப்புறம் எத்தன விமர்சனம் வந்துருக்கு....

  பதிலளிநீக்கு
 20. விமர்சனம் பண்ணலாம் சகோ...கண்ணியமாக விமர்சனம் பண்ண வேண்டியதுதானே....? வினவு கொடுத்த தலைப்பே ரவுடி மரியம் பிச்சை என்பது...அவர் இப்ப ரௌடியா?

  பதிலளிநீக்கு
 21. அந்த வினவு கும்பலின் தலைவன், மூத்திரச் சந்து மருதய்யன் எப்படிப்பட்டவன் என்று தெரியுமா? அதைப் பற்றி வினவுகும்பலில் யாராவது என்னிடம் விவாதிக்க தயாரா?
  அந்த மருதய்யனுக்கு மட்டுமல்ல, அந்த கும்பலுக்கே அறிவு இல்லை.

  அடுத்த என்கவுண்டரில் போவது அந்த மருதய்யனே!

  பதிலளிநீக்கு
 22. சகோ உண்மையாலுமே எனக்கு சிரிப்பு வந்திடுச்சு உங்க கமென்ட பார்த்து....ரௌடியிசம் பண்ணுனாலும் அமைச்சர ஆயிட்டா அவர மாண்பு மிகுன்னுதன் கூபிடனும்குறீங்க...ராஜா பக்சே வ இப்போ இனபடுகொலயளின்னு சொல்றோம்...அவன் செத்ததுக்கப்புறம் மாண்புமிகு இலங்கை அதிபர் நு சொல்லனும்னு சொல்றீங்க....ரைட்டு

  பதிலளிநீக்கு
 23. அரசியல்வாதிகளில் யார்தான் ரவுடி இல்லை...அப்ப எல்லா அரசியல்வாதிகளின் பெயருக்கு முன்னால் ரவுடி, பொருக்கி, மொள்ளமாரி .என்று போடுவதுதான் சரி என்று நீங்கள் சொல்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 24. மைனஸ் ஒட்டு விழுந்தா பிரபலமாகுரீங்கன்னு அர்த்தம் பாஸ் ஹிஹி

  பதிலளிநீக்கு
 25. இறந்தவரி பத்தி விமர்சனம் பன்னகூடதுன்னு சொன்னீங்க அப்பறம் கண்ணியம விமர்சனம் பண்ணலாமுன்னு சொன்னீங்க...அப்பறம் ரௌடின்னு என் எழுதுனாங்கன்னு சொன்னீங்க....இதுல தமிழர் பண்பாடுன்னு வேற எதோ சொன்னீங்க....

  எனக்கு ஒன்னுமட்டும் புரியவே இல்ல ....நீங்க இந்த அளவுக்கு தூக்கிபிடிக்க மரியம் பிச்சை அப்படி என்ன நல்லது பண்ணுனாரு ....பண்ணினது எல்லாம் ரௌடியிசம்...பின்ன அவுற எப்படி கூபிடுவாங்க்லாம்? இத கேட்டா எல்லாத்தையும் அப்படி கூபிடுவீங்கலான்னு ஒரு கேள்விவேற கேக்குறீங்க....so உங்க பிரச்சன எல்லாருமே பண்றாங்களே ஏன் இவரமட்டும் கொச்சை படுத்துறங்க அப்படிங்கறதுதான்...இதுல செத்துபோயடறு விமர்சனம் பண்ணகூடாது ன்னு ஒரு காரணம்.....

  ரைட்டு நீங்க புடிச்ச முயலுக்கு மூணுகால் தான் ...ஒத்துகிறேன்

  பதிலளிநீக்கு
 26. //ரைட்டு நீங்க புடிச்ச முயலுக்கு மூணுகால் தான் ...ஒத்துகிறேன்//
  :))))

  பதிலளிநீக்கு
 27. நான் புதிதாக இந்த பக்கத்தை படிக்கிறேன். என்னே பண்பாடு நம் தமிழர் பண்பாடு. இறந்தவரை பற்றி பேசாமல் இருப்பது நல்லதே என்று சொல்வது இறந்தவருக்காக அல்ல. அவரது குடும்பத்திற்காக. நம் அப்பவோ அம்மாவோ இறந்து இருந்தால் அவர்களை பிடிக்காத சிலர் ஏன் அவர்களால் பாத்திக்க பட்ட சிலர் நம் பெற்றோரை தவறாக பேசினால் நம்மால் பொறுத்திருக்க முடியுமா. இழந்த சொந்தத்தை நினைத்து அழுவார்கள, இல்லை தூற்றுபவர்களை நினைத்து அழுவார்களா? இப்போது நம் செய்ய வேண்டியது எல்லாம் மவுனம் காப்பதே. இருந்த போது பேசவில்லை என்றாலும் இறந்த பிறகு தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள். நான் இஸ்லாமியன் அல்ல கச்சிக்காரனும் அல்ல. சாதாரண கணிணி பொறியாளர்.

  பதிலளிநீக்கு
 28. சகோ ராஜாவுக்கு ...
  அச்சாணி அவர்களின் கருத்தையே உங்களுக்கு பதிலாக அளிக்கிறேன்...

  பொதுவாக ஒருவருடைய எண்ணமும் கருத்தும் எல்லாராலும் ஏற்றுகொள்ள முடியாது...மாற்று கருத்தும் இருக்கும்...அப்படிதான் வினவு எழுதியதை பற்றி எனக்கு மாற்று கருத்து இருந்தது...அதை பற்றி எனது கருத்தை பதிவு செய்தேன்...அதுபோல நான் எழுதிய பதிவுக்கும் சில நண்பர்கள் மாற்று கருத்தை பதிவு செய்தனர்...சில நண்பர்கள் நான் எழுதியது சரி என்றும் பதிவு செய்துள்ளார்கள்....எனவே இது ஒரு விவாதம்தான்...எனது பார்வையில் நான் எழுதியது சரி...வினவு பார்வையில் அவர்கள் எழுதியது அவர்களுக்கு சரியாக இருக்கலாம்...

  மற்றபடி இப்பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் ,ஓட்டுகள் அளித்த நண்பர்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 29. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பு சகோதரர்கள் அனைவருக்கும்,
  ஒருவர் இறந்து விட்டதாலேயே அவருடைய தவறுகளை பற்றி பேசக்கூடாது என்பது சரியான செயல் இல்லை. மரியம் பிச்சை ரவுடி இல்லை என்று வேண்டுமானால் நீங்கள் மறுக்கலாம். அதற்கான உரிமைகள் உங்களுக்குண்டு. அதேசமயம் அரசியலை தூய்மையாக்க போகிறோம் என்று சொல்லி வந்த தமுமுக செய்த அயோக்கியத்தனத்தை வினவு வெளிப்படுத்தியதால் ஒருவேளை நீங்கள் இந்த கோவம் கொள்கிறீர்களா? காரணம் எதுவென்று எனக்கு விளங்கவில்லை. காரணம் எதுவானாலும் மக்களை அலைக்கழித்த அதிமுக - தமுமுக காலிகள் கண்டனத்திற்குரியவர்கள். இவர்கள் தான் ஐந்து வருடங்களுக்கு நம்மை ஆள போகின்றவர்கள். ஒருவேளை மரியம் பிச்சை , தமுமுக வினர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் நீங்கள் ஆதரித்தால் அது அப்பட்டமான இஸ்லாமிய விரோத நிலையாகும். ஏனெனில் என் மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று சொல்லி நீதியை நிலைநாட்டிய நபிகள் நாயகத்தை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் ஒரு போதும் இனவாதத்திற்கு துணை போக மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 30. உங்க பதிவின் சாரமாக இரண்டு பாயிண்டுகள்.


  ஒன்று, உயிரோடு இருக்கும் போது ஏன் ஒன்னும் சொல்லல என்பது..... பகுதியில் உள்ள ம.க.இ.க வினர் அவருடன் மோதியதை வினவு கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் ஒரு முறை கட்டுரையை முழுவதுமாக படித்தால் நல்லது.


  இரண்டு, இறந்தவரை விமர்சிக்கக் கூடாது என்பது.... பின் லேடனை பயங்கரவாதி என்றும், ஹிட்லர் , முசோலினியை பாசிஸ்டுகள் என்றும் விமர்சிக்கலாமா? புஷ் நாளைக்கு செத்து போனால் ஒரு இலட்சம் இராக்கியர்கள் சாவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை என்றாகிவிடுமா?

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....