14 டிசம்பர் 2012

ராமர் படம் போட்ட சேலையும்,குஷ்புவின் குசும்பும்.....!குஷ்புவுக்கு  ஏதாவது சர்ச்சையில் சிக்கி லைம்லைட்டில்  இருந்து கொண்டே இருக்கணும் போல...


முன்பு கற்பை பற்றி கருத்து  சொல்றேன் பேர்வழி (திருட்டை பற்றி திருடன் கருத்து  சொல்ற மாதிரி!)என  வாயிக்கு வந்ததை சொல்லி வழக்குக்கு மேல் வழக்காக வாங்கி கட்டி கொண்டார்...அதே போல ருத்ராட்ச மாலையில் பெரிய பிளாஸ்டிக் தாலியைக் கோர்த்து அணிந்து வந்து சர்ச்சையைக் கிளப்பினார் 


அவரை போயி கட்சில சேர்த்து பெருமை தேடிகொண்டது அண்ணா ஆரம்பித்த  திமுக...அங்கும் அவர் யார்  கோஷ்டி,கனிமொழிக்கு போட்டி என்றெல்லாம் சர்ச்சைகள் ரெக்கை கட்டி முளைக்க ஆரம்பித்தன...


இப்ப என்னடான்னா ராமர் படம் போட்ட சேலையை கட்டி ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டு அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து  இருக்கிறார்...


ஆடை அணிவது என்பது அவரவரின் சொந்த விருப்பம்தான் என்றாலும் ஒரு நிகழ்ச்சிக்கு வரும் ஒருவர் ஒரு மதத்தினரால்  வணங்கப்படும் கடவுள்களின் படம் போட்ட ஆடையைத்தான்  அணிந்து வர வேண்டுமா?100 பேர் சும்மா இருந்தாலும் நாலு பேர் கடுப்பாகத்தானே செய்வார்கள்?ஏன் அந்த சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டும்?இது குசும்புல செஞ்சதுதானே!


எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களது கடவுள் படம் போட்ட ஆடையை ஒருவர் அணித்து வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்வார்கள்...குஸ்புவுக்கும் ஒரு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருக்கிறது...


ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் என நக்கலாக பேசி  இருக்கிறார் குஷ்பு .....இந்த பேச்சும்  தேவை அற்ற ஒன்றுதான்...ஒரு சர்ச்சையில் சிக்கினால் பேசும்விததில் பேசி அதை  சரி செய்யாமல் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல பேசி இருக்கிறார்..இந்த   பேச்சை கேட்டு இன்னும் நாலு பேர் கடுப்பாவார்கள் ....


இன்று போராட்டம் நடத்துவார்கள்,நாளை வழக்கு போடுவார்கள் ,தனது பெயர் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வந்து கொண்டே இருக்கும் என்ற சீப்பான பப்ளிசிட்டி தேடும் விதத்தை நன்றாகவே கற்று தேர்ந்துவிட்டார் குஷ்பு ....


அரசியலின் அடிச்சுவடியே அதுதானே!
13 கருத்துகள்:

 1. விளம்பரம் இல்லாம அவர்களால் வாழ முடியாது...
  என்ன செய்வது..

  பதிலளிநீக்கு
 2. எல்லாம் ஒரு வெளம்பரம் தான் போலிருக்கு! நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
 3. தனி மனித சுதந்திரம் என்று கூறி மற்றவர்களின் மத நம்பிக்கையில் அநாகரீகமாக மூக்கை நுழைக்கும் குஷ்பு போன்ற விளம்பர பிரியர்களால் சமுதாயத்திற்கு நஷ்டமே தவிர எந்த லாபமும் இல்லை!

  பதிலளிநீக்கு
 4. இப்டி எல்லாம் பார்த்தால், அந்த சேலைய நெய்தவரை தான் தப்பு சொல்ல வேண்டும். மடத்தனமா இருக்கு இல்ல? எனக்கும் அப்டி தான் இருக்கு. அந்தம்மா ஏதோ அணிந்து விட்டு போறாங்க. இதுல என்ன தப்புங்க. நம்மூர்ல ஆயிரம் பிரச்னை, இப்ப இதுவா முக்கியம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி ஹி...உங்களின் சகிப்புத்தன்மையும்,அறிவுக்கூர்மையும் கண்டு வியக்கிறேன்

   நீக்கு
  2. எனக்கு அறிவின்மை இருப்பதை கண்டறிந்த தங்களுக்கு என் அன்பு கனிந்த நன்றிகள். வாழ்க பல்லாண்டு.

   நீக்கு
 5. இம்மாதிரி சேலையை ஏன் நெய்ய வேண்டும் என்பதே இநேரத்தின் கேள்வியாக இருக்கிறது.குஷ்பு அணியவில்லையானாலும் வேறு யாராவது அணிந்திருப்பார்கள்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் அதை அணிந்து கொண்டு பொது இடத்திற்கு ஏன் வருவானேன்?அதுதானே பிரச்சினை...

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....