16 டிசம்பர் 2012

இந்த கவுதம் மேனனுக்கு இதே வேலையா போச்சுப்பா?!....


இந்த கவுதம் மேனனுக்கு இதே வேலையாக போச்சுப்பா !அப்பிடின்னு ஒரு எண்ணம் ,கடுகடுப்பு படத்தின் இறுதி காட்சிகளில் நம் மனதுகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி கொண்டு இருக்கும்..!

இவர்  படத்தில எப்போதுமே காதலர்களை சேர்த்து வைக்கவே மாட்டாரா என்ற ஆதங்கம் படம் பார்த்து கொண்டு இருக்கும்போது நமக்கும் வருகிறது..அப்பதானே படமும் சீக்கிரம் முடியும்!

சில நேரம் இது நம்ம life  ல நடந்தது மாதிரி இருக்கே அப்பிடின்னும் ஒரு எண்ணம் வரும்...

அட இது நம்ம நண்பன் கதை போல இருக்கே அப்படின்னும் ஒரு நினைப்பு வரும்...

இதுதான் நீதானே என் பொன்வசந்தம்....

ஒரு அழகான காதல் கதை...இந்த காதலுக்கு யாருமே எதிரி இல்லை..அந்த காதலர்களே எதிரி...சொல்லப்போனால் காதலனை அளவுக்கு மீறி நேசிக்கும் அவனின் காதலியே எதிரி !ஜீவாவும் சமந்தாவும் பள்ளி பருவத்திலிருந்தே (இதுதான் எனக்கு நெருடல்..இன்னும் எத்தனை  படத்தில் பள்ளி சீருடையோடு மாணவர்கள் காதலிப்பதாக காட்ட போகிறார்கள்?மாணவ பருவ காதல் எல்லாருக்கும் வருவதுதான் என்றாலும் அதை படத்தில் காட்சிகளாக காட்ட  வேண்டாம் என்பது என் கண்டிப்பான  கருத்து !)காதலிக்கிறார்கள்...பிரிகிறார்கள்...

மீண்டும் கல்லூரி பருவத்தில் காதல்..மீண்டும் பிரிவு...திரும்பவும் சந்திப்பு ....மீண்டும் பிரிந்தவர்கள் இணைந்தார்களா என்பதே நீதானே என் பொன்வசந்தம்...

படத்தில் நீளம் கொஞ்சம் மைனஸ்...பல காட்சிகள் கவுதம் மேனனின் முந்தய படங்களையும்,(குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா) இன்னும் சில படங்களையும் நினைவு படுத்துவது குறையே....

இளையராஜாவின் இசை ரொம்ப பிளஸ்..படத்தில் நிறைய பாடல்கள் இருந்தாலும் யாரும் தம் அடிக்க வெளியே போக வில்லை என்பதே அதற்கு சாட்சி

பல வசனங்கள் புரிந்தும் புரியாத மாதிரி இருந்தாலும்(அதிமேதாவி தனமாக  வசனம் எழுதிகிறேன் என்று நினைத்து எழுதி இருப்பார் போல) ரசிக்கும்படியே இருக்கின்றன...ஜீவாவுக்கும்சமந்தாவுக்கும் கெமிஸ்ட்ரி,ஹிஸ்டரி,பயலாஜி  ,என எல்லாமே perfect fit ....ஜீவாவை விட சமந்தாதான் ஸ்கோர் செய்கிறார்..

சமிபத்திய சந்தானத்தின் படங்களை ஒப்பிடும்போது இதில் அவரின் கிச்சுகிச்சு கொஞ்சம் கம்மியே ..ஆனாலும் ஒரு காதல் படத்திற்கு காமெடி ஒன்றும் முக்கியமில்லை என்பதால் அது ஒரு குறையில்லை...

 நீங்கள் ஏற்கனவே காதலித்து இருந்தாலும் ,இப்போது காதலித்து கொண்டு இருந்தாலும் உங்களுக்கு இந்த படம்  பிடிக்கும்...

சில காட்சிகளின் இழுவையை  குறைத்து,கொஞ்சம் படத்தின் நீளத்தை எடிட் பண்ணி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..

சில முத்தக்காட்சிகளை மட்டும் நீக்கி இருந்தால்,தவிர்த்து இருந்தால் நிச்சயம் குடும்பத்துடனே இந்த படத்தை பார்க்கலாம்...

நீதானே என் பொன்வசந்தம்= காதலர்களின் வசந்த காலம்


8 கருத்துகள்:

  1. நெசமாவே படம் புடிச்சிருக்கா?

    பதிலளிநீக்கு
  2. ஹாஜா படத்தை நானும் பார்த்தேன், வழக்கமான கௌதமின் கும்மிதான் இருந்தாலும் விண்ணைத்தாண்டி படத்தை ரஹ்மானின் இசை தூக்கி நிறுத்தியதுபோல் இளையராஜா இசை செய்யவில்லை என்பதே என் கருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான்..ஆனால் நான் அந்த படத்தின் இசையையும் இப்படத்தின் இசையையும் ஒப்பீட்டு பார்க்கவில்லை...இளையராஜாவின் சமிபத்திய படங்களில் இதுதான் எனக்கு பெஸ்ட் என தோன்றுகிறது...

      நீக்கு
  3. ஏற்கனேவே காதலிக்கவும் இல்லை, இப்போவும் காதலிக்கவில்லை.
    ஆனால் காதல் செய்யவில்லை என்பதை என் மனதில் குத்தி காட்டியது இந்த படம். அந்த அருமையான உணர்வை வாழ்க்கையில் மிஸ் பண்ணி விட்டேன்.
    இப்போ காதல் செய்யும் வயதும் அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலுக்கு வயதில்லை சகோ...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

      நீக்கு
  4. இளையராஜாவின் சமிபத்திய படங்களில் இதுதான் எனக்கு பெஸ்ட் என தோன்றுகிறது...
    // உண்மைதான் சகோ! நன்றி!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....