19 டிசம்பர் 2012

அந்த நாய்களை தூக்கில் போட வேண்டாமா?ஒரு பெண்  இரவு 12 மணி அளவில் வெளியே சென்றாலும் அவள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல்  நடமாடுகிறாலோ அன்றுதான் முழு சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம் என யாரோ சொன்னதாக எனக்கு நினைவு!

ஆனால் இந்தியாவின் தலைநகரில் ஓடும்  பேருந்தில் ஒரு பெண்ணை 6 காம கொடூரன்கள் சிதைத்துள்ளனர்...இப்போது அந்த பெண் சீரியசான நிலையில்  மருத்துவ மனையில்!இவ்வளவுக்கும் அப்பெண் ஒரு ஆண் தன்  உறவினருடன் இருக்கும்போதே அந்த நபரை அடித்து கீழே வீசிவிட்டு இந்த கொடுரத்தை அரங்கேற்றி உள்ளனர் அந்த மிருகங்கள்...

டெல்லிக்கு இது ஒன்றும் புதிதல்ல..நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி திகழ்கிறது. கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியளிக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிபரம். பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பலாத்கார குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.ஒரு நாட்டின் தலைநகரத்துக்கு இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்?


இந்த சம்பவத்தை கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள்,ஆர்பாட்டங்கள் நடை  பெற்று வருகின்றன...நாடாளுமன்றத்தில் இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து எம்பிக்களும் வலியுறுத்தி பேசி இருக்கின்றனர்...தினம்தோறும் இது போன்ற பாலியல் பலாத்காரங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..இப்போதுதான் நாடாளுமன்றத்தில்   கடுமையான  தண்டனை பற்றி பேசி இருகிறார்கள்...

கடுமையான தண்டனைதான் கொடுக்க வேண்டும் அந்த கொடூர நாய்களுக்கு...

என்ன தண்டனை கொடுக்கலாம்..

ஒரு 15 வருட சிறை தண்டனை கொடுக்கலாமா?

இல்லை ஆயுள் முழுதும் சிறையில் அடைக்கலாமா ?

அட போங்கய்யா !

ஒரு குற்றத்துக்கு தண்டனை கொடுத்தால் நாளை அந்த குற்றத்தை வேறு யாரும் செய்ய அஞ்ச வேண்டும் ..அதுதான் தண்டனை...

அந்த பெண்ணை சீரழித்த நாய்களும்  தண்டிக்கப்பட வேண்டும்..நாளை வேறு யாரும் இது மாதிரி பலாத்காரம் செய்வதை நினைத்து கூட பார்க்க கூடாது...

அப்படின்னா அந்த மிருகங்களுக்கு மரண தண்டனை கொடுங்கள் ... தூக்கில் போடுங்கள்...உடனே போடுங்கள் ..

அதுதான் மருந்து ...அந்த பெண்ணிற்கும் ...மற்ற பெண்களுக்கும்...


9 கருத்துகள்:

 1. சலாம் சகோ ஹாஜா,

  நிச்சயமாக இந்த காமக் கொடூரர்களுக்கு கண்டிப்பாக மரண தண்டனை தான் கொடுக்க வேண்டும்.அது இஸ்லாம் சொல்வது போல் கல்லெறி தண்டனை கொடுத்தால் ஒரு பய கூட இந்த தவறை மறுபடியும் செய்ய மாட்டான்.

  ஆனால் மனித உரிமை மண்ணாங்கட்டி உரிமை என்று சொல்லிக் கொண்டு இந்தக் கயவர்களுக்கு ஆதரவாக சொம்ப தூக்கிகிட்டு 4 பேர் வந்து போராடுவாயங்க.அப்படி யாரவது வந்தாய்ங்க அவங்கள frist என்கௌண்டர் பண்ணனும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ..

   சரியாக சொன்னீர்கள்...ஆனால் இதற்கு நம் அதிமேதாவிகள் இன்னும் வாய் திறக்க காணோம்

   நீக்கு
 2. இந்த நாய்களை தூக்கில் போட வேண்டாமா?

  முஸ்லிம் பெண்களையும் , தலித் பெண்களையும் கற்பழித்து கொன்ற பாபு பஜ்ரங்கி போன்ற ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் போன்ற வெறி நாய்களுக்கும் மரணத்தண்டனை கிடைக்க வழி வகைகள் செய்ய வேண்டும் .


  ====================================
  டெல்லி பலாத்காரம்... லோக்சபாவில் சுஷ்மா ஆவேசம், கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன்

  டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.

  அவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார்.

  ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுதார்.

  உறுப்பினர்கள் அனைவரும் கடும் ஆவேசத்துடன் பேசினர்.

  பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல.

  இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

  பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது.

  மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது என்றார் சுஷ்மா ஆவேசமாக.

  கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன் ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் பேசுகையில், கண்ணீர் விட்டு அழுதார்.

  அவர் கூறுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது.

  எல்லாம் இருக்கட்டும், இந்த கடும் பாதிப்பை சந்தித்துள்ள குடும்பத்துக்கு இந்த அரசோ அல்லது டெல்லி அரசோ முதலில் ஒரு இரங்கலைத் தெரிவித்ததா, வருத்தம் தெரிவித்ததா.

  இந்த அவமானகரமான செயலுக்காக வருந்துகிறோம் என்று எந்த அரசாவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதா?.

  Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/18/india-delhi-rape-jaya-bachchan-breaks-down-rs-166508.html

  இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் -சுஷ்மா சுவராஜ் !!! - Adirai Iqbal

  பத்திரிகைகளில் ஒரு செய்தி :

  டெல்லி ஓடும் பேருந்தில் இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டு என்று சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார் .

  ராஜ்ய சபாவில் இது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது அமிதாபச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர்விட்டு அழுதார்.

  கண்டிப்பாக இதில் நமக்கு எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.

  ஆனால் அதை சொல்வதற்கு இவருக்கு என்ன அருகதை உள்ளது.

  ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் போன்ற வெறி நாய்களால் முஸ்லிம் பெண்களும் , தலித் பெண்களும் கற்பழிக்கப்ப்படும்போது என்ன செய்துகொண்டிருந்தார்.

  குஜராத்திலே முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொல்லப்படும்போது . நரமாமிச மோடி ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு என்று சொல்லும்போது அதனை ரசித்துக்கொண்டிருந்தார்.

  சாம்னாவில் பாசிஸ்ட் கிரிமினல் பால் தாக்கரே அச்செயல்கள் (கற்பழிப்பு, கொலை) தேசப் பக்தியின் வெளிப்பாடு என எழுதும்போது அதனை மௌனமாக ஆதரித்துக்கொண்டிருந்தார் .

  தெஹல்காவில் ஒவ்வொரு முஸ்லிம்களையும் எவ்வாறு கற்பழித்தோம் எப்படி கொன்றோம் என வெறி நாய்கள் பேட்டி கொடுக்கும்போது

  இந்த ஜெயா பச்சன்களின் கண்ணீர்கள் வற்றி இருந்தனவா?.


  எங்களுக்குத்தான் தெரியும் அதன் வழியும் வேதனையும் .

  நிச்சயமாக அந்த இளம் மருத்துவ மாணவியை சீரழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் .

  அதேபோல் அந்த முஸ்லிம் பெண்களையும் , தலித் பெண்களையும் கற்பழித்து கொன்ற பாபு பஜ்ரங்கி போன்ற ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் போன்ற வெறி நாய்களுக்கும் மரணத்தண்டனை கிடைக்க வழி வகைகள் செய்ய வேண்டும் .


  Posted by Adirai Iqbal in http://samuthayaarangam.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  போட்டு தள்ளனும் பாஸ். ஈவு இரக்கமே இந்த விசயத்தில் கூடாது.

  பதிலளிநீக்கு
 4. மரண தண்டனை எல்லாம் சரிப்படாது , எய்ட்ஸ் ஊசி போட்டு தனிமை சிறையில் அடைத்து விடனும் , அவனின் மீதி உள்ள வாழ்க்கையை அவன் நரக வேதனையுடன் அனுபவிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது புதுசா இருந்தாலும் ஒரு தினுசா இருக்கே ... நல்ல தண்டனை!

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....