20 டிசம்பர் 2012

விட்டா இந்த பிரபுவும்,மாதவனும் தெருச்சண்டை போடுவார்களோ!

கொஞ்சம் விட்டால்  நடிகர் பிரபுவும்,மாதவனும் தெருவில் வந்து அடித்துகொள்வார்கள் போல...!பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை டிவி விளம்பரங்களில் இருவரும் பேசுவதை பார்த்தால்  அப்படித்தான் தோணுது எனக்கு...

முதலில் என்னடான்னா புரட்சி,புரட்சி ன்னு தொண்டை கிழிய கத்திகிட்டு கிடந்தாரு பிரபு...நான்கூட முதலில் "பிரபு புரட்சி தலைவியை எதிர்த்து ஏதோ புரட்சி பண்ண  போறாரோன்னு !"அப்புறம்தான் அது நகை கடை விளம்பரம்னு தெரிஞ்சது...நீங்க இலவசமா மக்களுக்கு நகை கொடுத்தா அது உலகில் வேறு எங்குமே இல்லாத புரட்சின்னு சொல்லிக்கிட்டு  திரியலாம்...அதோட விடுவாருன்னு  பார்த்தா போலீஸ் உடையில் வந்து சிங்கம்னு கர்ஜித்து குழைந்தைகளை எல்லாம் பயம் வேறு காட்டுகிறார்.... உடனே மாதவன் போலீஸ் வேடத்தில்  வந்து அது பொய்,இது பொய், நாங்கதான் நிஜம்னு உதார் விட்டுகிட்டு போனாரு..
விடுவாரா பிரபு?எங்க  ப்ரைஸ் டாக்கை பார்த்து அவங்க காப்பி அடிக்கிறாங்க ..நாங்கதான் உண்மையான விலையில் மக்களுக்கு கொடுக்கிறோம்னு 10,15 பேரை சேர்த்து வச்சுக்கிட்டு கர்ஜிக்கிறார் ...அந்த கூத்தையும் பாருங்கள்
ஏன்யா நீங்க என்னமோ நகையை  மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறது மாதிரி உங்கள் பெருமைகளை பாடிக்கிட்டு  இருக்கிங்க?
 நேரா பேரை சொல்லிக்கிட்டு திட்டாதது மட்டும்தான் பாக்கி..

காசு கொடுத்து வாங்க போறது மக்கள்...ஏற்கனவே தங்கம் விலை நிலாவை போல பிடிக்கமுடியாத உயரத்தில் இருக்கேன்னு புலம்பும் மக்களை மேலும் மேலும் உங்களது விளம்பரங்கள் அதிகமாக குழப்புகிறது...என்னோட உறவினர் எந்த கடையில் நகை வாங்குவது,இதில் எது உண்மை,இந்த prize டாக் அப்படின்னா என்ன?என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்....எல்லாமே பிராடுதான் அப்பிடின்னு சிம்பிளா நான் முடிச்சுகிட்டேன்...

பின்னே என்னங்க இவர்கள்  மக்களை இந்த விளம்பரங்களால் தெளிவாக குழப்புகிறார்கள்..

இந்த போட்டி எழவு  விளம்பரங்களை எல்லாம் விட்டு விட்டு எங்களிடம் இவ்வளவு டிசைன்கள், இவ்வளவு தரத்தில் நகைகள் உத்தரவாதத்துடன்  தருகிறோம்னு கொஞ்சம் டீசண்டா விளம்பரம்  செஞ்சாத்தான்  என்ன?குடியா முழுகி போக போகிறது?

இவர்கள் காசுக்கு நடிக்கிறவர்கள்,அவர்கள் சொல்வதை இவர்கள் செய்கிறார்கள் என்று இதை விட்டு தள்ள முடியாது...நடிகர்கள் சொன்னால் மக்கள் கேட்கிறார்கள் எனும்போது இவர்கள் மக்களை குழப்ப கூடாது..

நீங்கள் நடிகர்கள்...உங்களை வைத்து எடுக்கப்படும்  விளம்பரங்கள் எளிதில் மக்களை சென்றடைகிறது ...நீங்கள் ஒருவருக்கொருவர் இப்படி போட்டி போட்டு மக்களை குழப்புவது உங்களுக்கு அழகா ?

இப்படியா  குழாயடி சண்டை போடுவது...?மாறுங்கள் ..விளம்பரங்களை மாற்றுங்கள்...


8 கருத்துகள்:

 1. உங்களுக்கு நக்கீரன்ன்னு பட்டம் தந்து மகிழ்கிறோம் சகோ ... வாழ்த்துக்கள் நல்ல பதிவு ...நாட்டுல தலைவர்கள் சீப்பான அரசியல் செய்ய போயி விளம்பரமும் கூட சீப்பான வகையில் வருது ,,, விலை மட்டும் தான் தரமா உயர்துகொண்டே இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!

   ஆமாம் சகோ...அதை மட்டும் சரியாக செய்கிறார்கள்!எவனயாச்சும் அந்த கடையைவிட எங்க கடையில் 5000 ரூபாய் கம்மின்னு விளம்பரம் பண்ண சொல்லுங்க பார்ப்போம்!

   நீக்கு
 2. ASSALAMU ALAIKUM,

  BUT ATLEAST THESE JEWELLERS SHOWN TO THE SOCIETY THAT HIDDEN CHARGES IN GOLD BUSINESS,

  EVENTHOUGH THEIR ADVT SEEMS TO BE CHILDISH,

  BUT THE FACTS ARE TRUE.

  பதிலளிநீக்கு
 3. உண்மை .. விளம்பரங்கள் மக்களை குழப்பத்தானே..

  பதிலளிநீக்கு
 4. மிகவும் தேவையான இடுகை தான்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....