24 டிசம்பர் 2012

டெல்லி சம்பவ குற்றவாளிகளை சகோதரனாக என்னும் கமல்:அடேங்கப்பா என்ன ஒரு சகிப்புத்தன்மை!


உங்களிடம் வந்து டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை பற்றி யாரேனும்  கருத்து கேட்டால் 

"சம்பவம் நடைபெற்ற பஸ், என்னுடைய பஸ். நடைபெற்ற இடம், என்னுடைய நாட்டின் தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய சகோதரி.தவறு செய்தவன், என்னுடைய சகோதரன். இதை அறிந்து நான், அவமானப்படுகின்றேன்.

என சொல்வீர்களா?


லூசு தனமா பேச நான் என்ன கிறுக்கனா!என கேட்பீர்கள் அல்லவா?

ஆனால் இந்த மாத்ரி  லூசு தனமாக உளறி  இருக்கிறார் கமல்...

கமல் எப்போதுமே தன்னையும் குழப்பி பிறரையும் குழப்பும் விதமாகவே பேசுபவர்...

அவ்வாறு குழப்பமாக பேசுவதை  தன்னுடைய  மிக சிறந்த  அறிவாளித்தனமாக எண்ணி கொண்டு இருப்பவர்...

அதற்காக இந்த சம்பவத்திற்குமா  இப்படி வேக்காடு  தனமாக பேசுவது?

நீங்கள் அவமான பட அங்கே  நடந்தது சிறு பிள்ளை விளையாட்டு அல்ல...கற்பழிப்பு..

அதற்கு மரண தண்டனை வேண்டாம் என்பது கமலின்  உச்ச கட்ட பெருந்தன்மையான கருத்தாக இருக்கலாம் அதற்காக குற்றவாளிகளை சகோதரன் என்பதா?அவர்கள் மனிதர்களாக இருக்கவே தகுதி அற்றவர்கள்..அவ்வளவு குருரமாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பின்னர் இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார்கள்......நாளை அவர் மகள்களுக்கு  இவ்வாறு நடந்தால் கூட இப்படித்தான்  பேசுவாரா கமல்?

பாதிக்கப்பட்ட பெண்ணை சகோதரியாக  நினைக்கும் கமல் அந்த கொடூர செயலை செய்த அயோக்கியர்களை,மனித தன்மை அற்றவர்களை சகோதரன் என சொல்லி நடந்த சம்பவத்தையே குற்றம்  இல்லை என்பதுபோல பேசி இருக்கிறார்..

நீங்கள் எல்லாம் உங்கள் திருவாயை திறக்க வேண்டாம் கமல் அவர்களே !இந்த மாதிரி வசனங்களை பேசி மக்களை குழப்புவதை சினிமாவோடு நிறுத்தி கொள்ளுங்கள்..நாடே கொந்தளித்த ஒரு விசயத்தை  இவ்வளவு லேசாக நீங்கள் எடுத்துகொள்வது கடுப்பா இருக்கு கமல்...!


11 கருத்துகள்:

  1. திருமணம் தேவையில்லை ஆனால் பெண்கள் வேண்டும் மற்றவர் படத்தில் பார்க்க முத்தம் கொடுத்து பொருள் ஈட்ட வேண்டும் ஏதாவது சொல்ல வேண்டும் படம் ஓடுவதற்காக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமல் எப்போதும் மற்றவர்களைத்தான் குழப்புவார்..இம்மாதிரி விசயங்களில் அவை தெளிவாகவே இருப்பார்...நன்றி

      நீக்கு
  2. நித்தியைபோல [ரஞ்சிதா] கமலும் [கௌதமி] ஒரு காமெடி பீசு ....
    தான் என்ன சொல்லுகிறோம் என்று கமலுக்கே தெரியாது ...
    தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப செய்வார் ..அதி மேதாவி என்கிற நினைப்பு . நாளைக்கே இவருடைய மகள்களுக்கு இவ்வாறு
    நடந்தால் குற்றவாளியை தன சகோதரன் [சித்தப்பா??] என்று சொல்லி மன்னிப்பாரா ..??
    கூத்தாடிகளின் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு .....

    பதிலளிநீக்கு
  3. கமல் சொல்வதில் பெரிதும் தவறிருப்பதாய் எனக்குப் படவில்லை. அந்த 6 கயவர்களைக் கொல்வதால் மட்டும் எல்லாப் பெண்களுக்கும் உடனடியாப் பாதுகாப்புக் கிடைத்துவிடுமா?

    இந்த மாதிரி செயல் செய்யும் படி அந்தக் கயவர்கள் உருவானதற்கு இந்த சமூகமும் நம் "கலாச்சாரம்" -மும் காரணம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இந்தக் கோணங்களிலும் கருத்துப் பரிமாணம் நடந்தால்தான் பெண்களுக்கு முழு பாதுக்காப்புக் கிடைப்பதற்கான விடை கிடைக்கும். அதைதான் கமலுடைய பதில் உணர்துவதாய் எனக்குப் படுகிறது.

    "உன்னுடய அக்கா, தங்கச்சி, மனைவி, தாய்" என்று கேட்பதெல்லாம் வெறும் வீதாண்டா வாதத்தில்தான் முடியுமே தவிர எந்த பிரச்சனைக்கும் முடிவு கிடைப்பதற்கு எந்த உதவியும் செய்யாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. #கமல் சொல்வதில் பெரிதும் தவறிருப்பதாய் எனக்குப் படவில்லை. அந்த 6 கயவர்களைக் கொல்வதால் மட்டும் எல்லாப் பெண்களுக்கும் உடனடியாப் பாதுகாப்புக் கிடைத்துவிடுமா? #

      மருந்து உட்கொண்டால்தானே நோய் குணமாகிறதா இல்லையா என தெரியும்?அதை விட்டுவிட்டு இந்த மருந்து சாப்பிட்டால் இந்த நோய் குணமாகுமா என கேட்டுகொண்டே இருந்தால் நோய்தான் முற்றும்..

      நீக்கு
    2. #இந்த மாதிரி செயல் செய்யும் படி அந்தக் கயவர்கள் உருவானதற்கு இந்த சமூகமும் நம் "கலாச்சாரம்" -மும் காரணம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். #

      இந்த பதில் மேலும் குற்றவாளிகளை ஊக்குவிப்பதாகவே அமையும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை...கலாசாரமும்,சமூகமும் தவறாகவே இருந்தாலும் அந்த தவறை இந்த தவறுக்கு காரணம் சொல்லி குற்றவாளிக்கு விதிவிலக்கு அளிக்க கூடாது

      நீக்கு
    3. #உன்னுடய அக்கா, தங்கச்சி, மனைவி, தாய்" என்று கேட்பதெல்லாம் வெறும் வீதாண்டா வாதத்தில்தான் முடியுமே தவிர எந்த பிரச்சனைக்கும் முடிவு கிடைப்பதற்கு எந்த உதவியும் செய்யாது.#

      வீணான வாதத்திற்கு இந்த பதில் விதாண்டா வாதமாக தெரிந்தால்கூட அது சரியே

      நீக்கு
  4. சலாம் சகோ.

    கற்பழிப்பு குற்றத்திற்கு இஸ்லாம் மரண தண்டனை கொடுக்கிறது..மரண தண்டனையை ஆதரித்தால் இஸ்லாத்தை ஆதரிப்பது போன்றதாகிவிடும் என்பதால் சிலர் மரணதண்டனை கூடாது என்கின்றனர் போலும் ...

    ஒரு வேளை மரணதண்டனை கூடாது என்பது கமலின் சுயநலமாக இருக்கலாம்..ஏன் என்றால் முதலில் கமல் கழுத்துக்குதான் மாட்ட வேண்டி வரும் என்பதால் இருக்குமோ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸ்ஸலாம் சகோ..

      (இஸ்லாம் கூறுவதினால் )மரண தண்டனை வேண்டாம் என சொல்பவர்களுக்கு :நடக்கும் பாதையில் முள் கிடக்கிறது என உங்களுக்கு வேண்டாதவர்கள் சொன்னாலும் மிதிக்காமல் செல்வீர்கள் தானே !அதை போல இதையும் நினைத்து கொள்ளுங்கள்!

      நீக்கு
  5. சலாம் சகோ ஹாஜா
    சகோதரி ஆஷா பர்வீன் அவர்கள் தலத்தில் கமலஹாசனிடம் வாய்த்த கேளிவிகல் சிலவற்றை இந்த பதிவுக்கும் பொருந்தும் என்பதால் அந்த கருத்தை இங்கே பதிகிறேன்

    //கமல் உண்மையில் உங்களின் கருத்துகள் சிரிப்பை வரவழைக்கிறது.....
    என் பஸ் என்று சொன்னதும் ஷாக் ஆகிவிட்டேன்.
    என் சகோதரன்,என் சகோதரி என்று வாய்
    நிறைய சொல்ல ஈஸியாகத்தான் இருக்கும்.
    பாதிக்கப்பட்ட பெண் தங்கள் சகோதரி,
    தவறு செய்த தங்களின் சகோதரருக்கும்
    உங்கள் சொத்தில் பாதி பங்கை எழுதி வைப்பீர்களா...???

    தாங்கள் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களின் சகோதரர்கள்...அவர்களிடம் இனிமேல் சம்பளம் வாங்காதீர்கள்.
    உங்கள் படம் பார்க்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்
    உங்கள் சகோதரர்கள்...அவர்களிடம் டிக்கெட்டுக்கு பணம் கேட்காதீர்கள்..
    தங்கள் படத்தின் உரிமையை கோடிக்கணக்கில் பணம் வாங்காமல் தொல்லைக்காட்சிகளுக்கு
    இலவசமாக கொடுங்கள்...ஏனென்றால் அனைவரும்
    உங்கள் உங்கள் உங்கள் சகோதரர்கள்....//
    http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_24.html

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....