29 டிசம்பர் 2012

இறுதியில் டெல்லி மாணவி வீர மரணம்...ஆழ்ந்த இரங்கல்கள்....வேறு என்ன செய்ய முடியும் ?

அந்த கயவர்களை தண்டிப்பதற்காகவே நான் வாழ விரும்புகிறேன்  என கூறிய அந்த பெண் இறுதியில் வீர மரணம் அடைந்துவிட்டார்..

டெல்லியில் 6 மிருகங்களால் பாலியல் கலவரத்திற்கு ஆளான அந்த பெண்ணின் உடல்நிலை  மோசமாக இருந்ததை  ஒட்டி அவர் சிங்கப்பூர்  கொண்டு கொண்டு செல்லப்பட்டார்...

கடந்த 13 நாட்களாக மரணத்துடன் கடுமையாக போராடி வந்த அந்த மாணவி, இன்று அதிகாலையில் உயிரிழந்தார் ..அவரது மரணம் பற்றி சிங்கப்பூர் மருத்துவமனை 'கடைசி வரை அந்தப் பெண் மிகவும் தைரியத்தோடு உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் அவரது மூளை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புகள் அவரது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில், அமைந்து விட்டது. அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது. எட்டு சிறப்பு மருத்துவர்கள் அந்த மாணவியைக் காப்பாற்ற கடுமையாக போராடினர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கடந்த 2 நாட்களாக அவரது உடல் நிலை மோசமாகி வந்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின ..இறதியில் இன்றுஅதிகாலை அவர்  உயிர் இழந்தார்  என அறிவித்து உள்ளது..


அந்த வீர மங்கைக்கு நம்மால்  இரங்கல் தெரிவிப்பதை விட  வேறு என்ன செய்ய முடியும்?

எப்படியும் தான் உயிர் பிழைத்து  விடுவோம் ,அந்த கயவர்களுக்கு  தண்டனை வாங்கி கொடுப்போம்  என எண்ணிய அவருக்கு நம் சட்டங்களால்  அது முடியாது அசாதாரணமாக  வழக்கு நடந்தாலுமே அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை தர 6   மாதம் ஆகி விடும் என தெரியாமலே  உயிரை இழந்த  
அந்த பெண்ணிற்கு  இரங்கல் தெரிவித்து  ச்சே பாவம் என உச் கொட்டி அனுதாபம் தெரிவிப்பதை விட வேறு என்ன செய்ய முடியும்?

அதிலும் அந்த கயவர்களுக்கு மரண  தண்டனை வேண்டாம்  என  கூறிக்கொண்டு இருக்கும்  நம் சமூகத்தில் அந்த பெண்ணை இழந்த ,இழப்பின் வலியை அனுபவித்து கொண்டு இருக்கும் அவரது குடும்பத்திற்கும் நம்மால் இரங்கலை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

உடனடி தண்டனைகள்  தர முடியாத கையாலாகாத  சட்டங்கள்,வருட கணக்காய் நீளும் வழக்குகள் நடக்கும் நம் தேசத்தில்தன்னை சீரழித்த மிருகங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாமல் இறந்து போன  அந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவிப்பதைவிட வேறு என்ன செய்ய முடியும்?

  ஒரு வேளை அந்தமிருகங்களுக்கு மரண தண்டனையே கிடைத்தாலும்  அதையும்  எதிர்த்து  நேரடியாக  பாதிக்கப்படாமல்  பாதிக்கப்பட்டவர்களின்  உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மரண தண்டனைகளை வேண்டும்,வேண்டாம் என  விவாதமாக  மாற்றும் சமூகத்தில் இருந்து கொண்டு  இரங்கலை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

ஆகவே அந்த வீர மங்கைக்கு   என்  ஆழ்ந்த இரங்கல்  மற்றும் அனுதாபங்கள் ...

4 கருத்துகள்:

  1. Thangal karuththai aamodhippadhaith thavira engalaalum veru enna seiya mudiyum?

    http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. அந்த வீர மங்கைக்கு எனது வீர வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  3. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

    நன்மக்களே!
    வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
    நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
    இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

    பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
    மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
    காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
    இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
    மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
    புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

    மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
    நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
    இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
    வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
    காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
    மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

    -இந்தியன் குரல்

    பதிலளிநீக்கு
  4. வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று தாயையும் கொல்லும் கொடுமை
    வயது வந்த பெண்ணை வம்புக்கு இழுக்கும் மனிதர்
    வயது வந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்வோர்
    வயது வந்தும் பார்த்து ,அறிந்து
    நிலை தடுமாறிய நிலையில்
    'ச்சே பாவம் என உச் கொட்டி' என்பதோடு
    அதனை மறக்கும் நிலை நம் நிலை
    வயதும் வருவதும், வயிறு இருப்பதும் குற்றமா!
    குற்றத் தண்டனையை முறைபடுத்தாதோர் குற்றமா?
    தள்ளிப் போடும் தீர்ப்பு தீர்பாகிவிடுமா?

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....