"முஸ்லிம் சகோதரர்கள் நீக்க சொல்லும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடுகிறேன் "என்று நேற்று அறிவித்த கமல் அதை பிரச்சினை எழுந்த அன்றே செய்து இருந்தால் இவ்வளவு பூதாகரமாக விஸ்வரூப பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருக்காது...
நிச்சயமாக முஸ்லிம் சகோதரர்கள் "விஸ்வரூபம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளைத்தான் எதிர்த்தார்கள், எதிர்க்கிறார்களே தவிர தனிப்பட்ட கமலை அல்ல....
இன்றே கமல் அந்த காட்சிகளை வெட்டிவிட்டு திரையிட சம்மதித்தால் எந்த எதிர்ப்பும் இருக்காது...
இவ்வளவு தூரம் போராடிய பிறகு,படத்துக்கு இவ்வளவு சிக்கல்கள் வந்த பிறகுதானே கமல் இறங்கி வந்து இருக்கிறார்...இதுவும் கமலின் நாடகமே என்று குற்றம் கண்டு பிடிப்பதைவிட "தப்பு செய்தவர் தவறை உணர்ந்து திருத்தி விட்டாரே "என்ற ரீதியில் அணுகுவதுதான் சரியானதாக இருக்கும்.....
அதை விட்டு விட்டு முழு படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இனி எழுந்தால் அது தேவை அற்ற ஒன்று....பிரச்சினைகள் வளர்வதைவிட ஏதாவது ஒரு வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்...
விஸ்வரூப பிரச்சினை இப்போது வேறு வகையில் விஸ்வரூபமெடுத்து சென்று கொண்டு இருக்கிறது...
இப்பது நடப்பதை பார்க்கும்போது ஜெயலலிதாவின் ஈகோவினால் மட்டுமே இந்த பிரச்சினைகள் இவ்வளவு தூரம் இழுத்து கொண்டு வரப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது எனது பார்வையில்...
ஒரு வேளை படத்திற்கு தடை விதித்தவுடன் கமல் ஜெயலலிதாவை சந்தித்து இருந்தால் அப்போதே இதற்கு ஒரு முடிவு எட்டப்பட்டு இருக்கலாம்...அதை தவிர்த்து கமல் நீதி மன்றத்தை நாடியது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
ஏதாவது ஒரு விதத்தில் சுமுக முடிவு ஏற்படுவதற்கு மாறாக மேலும் மேலும் இந்த படத்திற்காக கருத்து மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அது வேறு மாதிரியான பிரசினைகளை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுகிறது....
எனவே கமல் சொன்ன மாதிரி அந்த காட்சிகளை நீக்கிவிட்டால் விஸ்வரூபம் வெளியாக எந்த தடையும் முஸ்லிம் அமைப்புகள் கேட்க வேண்டாம் என்பது என்னைபோன்ற மத நல்லிணக்கத்தை விரும்புவர்களின் எண்ணம்....
நல்லதே நடக்கட்டும்...நன்மையாக இருக்கட்டும்.....

Tweet |