நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியை பார்த்த போது அதிர்ச்சியும்,ஆச்சர்யமும் சேர்ந்தே எழுந்தது...கூடவே கோபிநாத் மீது கோபமா இல்லை எரிச்சலா என தெரியவில்லை ..அதுவும் எழுந்தது...
கிச்சனில் மனைவிக்கு உதவியாக சமையலில ஈடுபடுவீர்களா இல்லையா என்பதுதான் நேற்றைய டாபிக்...
வழக்கம்போல மனைவிக்கு உதவியாக சமையலில் ஈடுபடுவோம் என ஒரு தரப்பும் ஈடுபடமாட்டோம் என ஒரு தரப்பும் பேசினார்கள்...சமையலில் ஈடுபடுவோம் என்பவர்களுக்கு முதலில் என் பாராட்டுக்கள்.....அதே வேளையில் வேலை பளு காரணமாக சமைப்பது எங்கள் வேலை அல்ல என கூறுபவர்களை குற்றவாளிகள் போல சித்தரித்து இந்தநிகழ்ச்சி அமைந்து அல்லது அமைத்ததுதான் எனக்கு எரிச்சலை ஊட்டியது...
அதே நேரத்தில் வேலை பளுவை தவிர்த்து சமையல் கட்டில் நுழைவதே எனக்கு கவுரவ குறைச்சல் என்றும் அது ஒருவித ஈகோ பிரச்சினை என்றும் வாதிட்டவர்களை பார்க்கும்போது இதிலயுமா கவுரவம் பார்ப்பார்கள் என்ற கடுப்புதான் வந்தது ..அதிலும் ஒருவர் என் மனைவி வீட்டில் இல்லாமல் இருந்தால் என் அம்மாவுக்கு முடியாமல் இருந்தாலும் நான் சமையலறைக்குள் சென்று சுடு தண்ணீர் கூட வைக்க மாட்டேன் ,எனக்கு காபி கூட போட்டு கொள்ள மாட்டேன் ,ஹோட்டலில்தான் வாங்கி கொள்வேன் என கூறிய போது எனக்கு தூக்கி வாரி போட்டது...அவருக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாமல் இல்லை ஆனால் வைக்க மாட்டாராம்..அது அவர் வேலை இல்லையாம் ...ஆணாதிக்க மனோபாவத்தின் உச்சம்தானே இது?நிச்சயமாக இந்த எண்ணம் கண்டிக்கத்தக்கது....இதுவரை ஓகே...
ஆனால் நம்ம கோபிநாத் அவரை விட்டுவிட்டார்...கொஞ்சம் ஹார்சாக பேசுபவரை எப்போதும் இப்படிதான் விட்டுவிடுவாரா என எனக்கு தெரியவில்லை....அதே அணியை சேர்ந்த இன்னொருவர் "எங்கள் பாட்டி,அம்மா காலத்தில் செஞ்ச வேலையை விட இப்போதுள்ள பெண்கள் செய்யும் வேலை குறைவுதான் என சொல்லி முடிப்பதற்குள் மேற்கொண்டு அவரை பேச விடாமல் "நீங்கள் பெண்களை சோம்பேறி என பேசுகிறீர்கள் ...இப்போதுள்ள உள்ள பெண்கள் மாதிரி அப்போது உங்கள் பாட்டியோ ,அம்மாவோ படித்தார்களா ?இதற்குமேல் உங்களை நான் இந்த நிகழ்ச்சியில் பேச அனுமதிக்க மேட்டேன் என அவரை மூஞ்சியில் அடிப்பது போல பேசி அமர்த்திவிட்டார்..
இப்போது எனக்குள் எழும் கேள்வி என்னவென்றால் ஒருவரை முழுவதுமாக பேச விட்டால்தானே அவர் என்ன சொல்ல வருகிறார் என புரியும்?அவர் தவறாக பேசினாலும் பேசவிட்டுவிட்டு பிறகு கோபிநாத் தனது கருத்தை தெரிவித்து இருக்கலாமே?
அந்த நபர் "எங்கள் பாட்டி காலத்தில் அம்மியில்தான் எல்லாம் அரைத்தார்கள், இப்பொது மிக்சி,கிரைண்டர் வந்துவிட்டது,என அன்றைய கால பெண்களுக்கும் இன்றைய கால பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ,நவீன வசதிகளை வைத்துதான் அவ்வாறு பேச வந்தார் ..ஆனால் அவரை முழுவதுமாக பேச விடாமல் அதட்டி,மிரட்டி உட்கார வைத்துவிட்டார்...
அதேபோல இன்னொருவர் என் மனைவி சமையல் செய்வதால் நான் 3000 ரூபாய் சம்பளம் கொடுத்து விடவும் தயார் என சொன்னார் .அவர் சொன்னது வேலை பார்ப்பதால் என் மனைவிக்கு கிடைக்கும் உரிமை அந்த பணம் என்ற அர்த்தத்தில்...எந்த அர்த்தத்தில் சொன்னாலும் அது தவறுதான்..அந்த நபரும் அதை தவறு என ஒப்புக்கொண்டுவிட்டார்..ஆனால் அவரை பிடித்து"உங்களுக்கு எதுக்கு கல்யாணம்,?இரண்டு பெண் குழைந்தைகள்?என அவரது பெர்சனல் வாழ்க்கையை பற்றி கேள்வி கேட்டு தனது அதிமேதாவி தனத்தை காட்டி கொண்டு விட்டார் கோபிநாத்...
மனைவிக்கு சமயலறையில் உதவி செய்வது அவரவரின் விருப்பம் சம்பந்தப்பட்டது....உதவினாலும் தப்பில்லை,உதவாவிட்டாலும் அதனால் ஒன்றும் குறையில்லை ....
ஆனால் நீங்கள் இதையே ஒரு விவாத நிகழ்ச்சியாக வைக்கும்போது இருதரப்பையும் பேச விடுவதுதானே சரியாக இருக்கும்?ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து கோபிநாத் சமையலில் ஈடுபடும் ஆண்கள் பக்கமே சாய்ந்து நாங்கள் சமைக்கமாட்டோம் என்பவர்களை ஏதோ குற்றவாளிகள் போல சித்தரித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு,எதிர் தரப்பினர் பேசும்போது இந்த தரப்பினர்களுடன் சேர்ந்து ஆணவ சிரிப்பு ,நக்கல் சிரிப்பு சிரித்து கொண்டே இருந்தார்...
மனைவிக்கு சமையலில் உதவி செய்பவர்கள்தான் உயர்ந்தவர்கள்,நல்லவர்கள் என்பதுபோல சித்தரித்து நீங்கள் நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் ஏன் இன்னொரு தரப்பு?ஒரு தரப்பை வைத்தே அவர்களை பாராட்டி நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாமே?
சமையலறையில் உதவி செய்யாதவன் சிறந்த கணவனாக இருக்க மாட்டான் என்ற தனது கருத்தை இந்த நிகழ்ச்சியின் மூலம் பொது கருத்தாக மாற்ற நினைத்து இருக்கிறார் கோபிநாத்.. இந்த தலைப்பே தேவை அற்ற ஒன்றாக எனக்கு படுகிறது...
அன்பையும்,நேசத்தையும் சமையலறையை வைத்து மட்டுமே முடிவு செய்ய முடியுமா கோபிநாத்?
நீயா நானா நிகழ்ச்சியில் தான் மட்டுமே சரியாக பேசுவதாக நினைத்துகொண்டு தனக்கு எதிரான கருத்தை பேசுபவர்களை பல பேர் முன்னாள் மட்டம் தட்டி தன்னை அதிமேதாவியாக காட்டுவதை எப்போது நிறுத்தி கொள்வார் கோபிநாத்?

Tweet |