28 நவம்பர் 2010

அடிமேல் அடிவாங்கும் விஜய்......

புகழின் உச்சத்தில் இருந்த விஜய்க்கு இப்போது தொடர்ந்து ராகு காலம்தான்......
தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்த விஜய் அடுத்து சித்திக் இயக்கத்தில் காவலன் படத்தில் நடித்து முடித்தார்......அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்தும் இருந்தார்........


ஆனால் பட்ட காலிலே படும் என்பது போல விஜய் நடிக்கும் படத்துக்கு ஒத்துழைப்பு குடுக்க மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் அறிவித்துள்ளனர்.......

சுறா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்தால்தான் விஜயின் படத்துக்கு ஒத்துழைப்பு குடுப்போம் எனவும் கூறியுள்ளனர்......இதனால் விஜய்யின் படத்துக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.....


பாவம் நம்ம டாக்டர் விஜய்..... யானை கீழே படுத்தால் பூனைக்கு கூட கொண்டாட்டம் என்பது போல இருக்கிறது அவர் கதை......முதலில் கோர்ட்டு அவர் நடித்த காவலன் படத்துக்கு இடைக்கால தடை விதித்தது......இப்போது இந்த சோதனை வேறு......இது இருக்கட்டும்.....


நான் கேட்கிறேன்.....நஷ்டம் வந்தால் படத்தில் நடித்த நடிகரிடம் நஷ்ட ஈடு கேட்க வேண்டுமா? இல்லை படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்க வேண்டுமா?

நஷ்டம் வந்தால் நஷ்ட ஈடு கேட்கும் தியேட்டர் அதிபர்கள் லாபம் வந்தால் அதை அப்படத்தின் ஹீரோவிடம் குடுப்பர்களா?

4 கருத்துகள்:

  1. ரஜினி சார் போல வரணும்னு எதிர்பர்க்குற விஜய் அவரைப் போலவே (பாபா படம் ) நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் கேட்பது நியாயமாகத்தான் இருக்கிறது. ஆனால் படத்தின் விலையை உயர்த்த ஹீரோக்கள்தானே காரணம்? குறிப்பிட்ட நடிகரின் பேஸ் வேல்யு வைத்துதான் அதிக விலையில் விற்கபடுகிறது. ஆகவே அவர்களை பொறுத்தவரை நடிகர்கள்தான் நஷ்டத்துக்கு பொறுப்பேற்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அதுவும் சரிதான் பாலா.....உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்வாசி......பாலா....

    பதிலளிநீக்கு
  4. பேசாம விஜய் ரசிகர்கள் நஷ்ட ஈடு கொடுத்து இனிமேல் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....