26 ஜனவரி 2012

பாரத ரத்னா விருதும்,....சச்சின் சர்ச்சைகளும்


பாரத ரத்னா விருது இந்த வருடமும் யாருக்கும் வழங்கப்படவில்லை.....

இந்தியாவின் மிக உயர்ந்த விருது பாரத ரத்னா என்பது அனைவருக்கும் தெரியும்....பாரத ரத்னா என்பதற்கு இந்தியாவின் ரத்தினம் என அர்த்தம்...இவ்விருது பொதுசேவை,அறிவியல், இலக்கியம் ,கலை ஆகிய துறைகளில் சிறந்தவர்களுக்கு வழங்கபடுகிறது....இவ்வருடம் புதிதாக விளையாட்டு துறையும் இதில் சேர்த்து கொள்ளப்பட்டது...

இதுவரை நாற்பத்தி இரண்டு பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்... ராஜாஜி,காமராஜர்,எம் ஜி ஆர் போன்றவர்களும் இதில் அடக்கம்....

இப்போது விசயம் என்னன்னா...

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்காகவே விளையாட்டுத்துறை சேர்த்து கொள்ளப்பட்டதாகவே சர்ச்சை கிளம்பியது....ஆனால் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்படவில்லை...அதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் வாரியம் சச்சினின் பெயரை இவ்விருதுக்கு பரிந்துரைக்கவில்லையாம் ....இனி சச்சினுக்கு ஏன் பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை என ஒரு சர்ச்சை கிளம்பும் ....

சச்சினுக்கு இந்த விருது பொருத்தமானதா என்பதில் என்னைபோல பலருக்கும் குழப்பம் இருக்கலாம்....

என்னதான் சச்சின் சாதனை படைத்தது இருந்தாலும் அதற்கான பலனை பணத்திலும், புகழிலும் சம்பாரித்து விட்டார் ....அவரால் இந்தியாவுக்கு பெருமை...அதேபோல் இந்தியாவின் பெயரில் அவர் விளையாட ஆரம்பித்த பிறகுதான் அவர் உலகிற்கே தெரிய ஆரம்பித்தார்... ஏற்கனவே விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதையும் அவர் பெற்று விட்டார்...

இன்னும் பல சலுகைகளை அவருக்கு மாநில அரசும்,மத்திய அரசும் வழங்கியுள்ளன...இதையும் தாண்டி அவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கினால் அது தவறாக இல்லை என்றாலும் மிகவும் சரியாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே...

சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் எனகூறியவர்கள்அவரைப்போல இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா போன்ற பலரும் ,இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் உலக கோப்பையை வென்ற வீரர்களும்,ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் புகழை ஓங்கி ஒலித்த பி டி உஷா ,சதுரங்கத்தில் சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களை கண்டு கொள்ளாதது ஏன் என புரியவில்லை...

இதை படிக்கும் நண்பர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும்....நண்பர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்....

12 கருத்துகள்:

  1. விளையாட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். அதனால் வாக்கு மட்டுமே

    பதிலளிநீக்கு
  2. //சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் எனகூறியவர்கள்அவரைப்போல இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா போன்ற பலரும் ,இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் உலக கோப்பையை வென்ற வீரர்களும்,ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் புகழை ஓங்கி ஒலித்த பி டி உஷா ,சதுரங்கத்தில் சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களை கண்டு கொள்ளாதது ஏன் என புரியவில்லை//

    நியாமான கேள்வி??? அதானே...

    பதிலளிநீக்கு
  3. ரஹீம் கஸாலி
    விளையாட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். அதனால் வாக்கு மட்டுமே
    *##

    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. மனசாட்சி


    நியாமான கேள்வி??? அதானே...
    ###

    நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  5. குடியரசு தினம் வாழ்த்துக்கள் நண்பா.

    பதிலளிநீக்கு
  6. பாரத ரத்னா விருது இனி காசு கொடுத்துதான் வாங்கணும் போல, நல்ல கேள்வி அனால பதில்தான் இல்லை...!!!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் ஆதங்கம் புரிகிறது! பார்ப்போம் என்ன நடக்கிறது என்று ! நன்றி !

    பதிலளிநீக்கு
  8. ஸலாம் சகோ.ஹாஜா...

    ஒரு விஷயம் நாம் அனைவருமே மறந்து விடுகிறோம் சகோ.
    அதாவது கிரிக்கெட்டும் இந்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரிக்கெட் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத BCCI என்ற ஒரு தனியார் நிர்வாகம் நடத்தும் விளையாட்டு.

    அதை அரசு நிறுவனம் ஆக்கினால்... சரத் பவார் போன்று ஒரு மத்திய மந்திரி இன்னொரு அரசு நிறுவனத்தில் தலைவராக இருக்க முடியாது. BCCI அரசுடைமை ஆனால், கிரிக்கெட் வருவாயை வைத்தே நாம் பட்ஜெட் போடலாம். ரூபாயின் மதிப்பு உயரும். விலைவாசி கடுமையாக குறையும். ஆனால், குறிப்பிட்ட சிலர் கோடீஸ்வரர்களாக ஆக முடியாது.

    அணியில் ஆடுவோரின் சட்டைகளில் எல்லாம் 'இந்தியா' என்ற இடத்தில் BCCI என்றுதான் இருக்க வேண்டும். மிகப்பெரிய ஏமாற்று வேலை இது. மோசமான குற்றம்.

    இந்தியாவுக்காக விளையாடுபவர்கள் கிரிக்கெட் விளையாட முடியாது. அவர்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற விளையாட்டுக்கள் மட்டுமே ஆட முடியும். ஆகவே, இந்தியாவுக்காக ஒரே ஒரு விளையாட்டு கூட ஆடாத சச்சின் பாரத ரத்னா பெற முடியாது என்றே நினைக்கிறேன்.

    இந்த உண்மையை மறைத்து, பழியை BCCI மேல் போட்டு இருப்பது திருடனுக்கு தேள் குட்டியது போல இருக்கட்டும் என்றுதான்..!

    பதிலளிநீக்கு
  9. ///என்னதான் சச்சின் சாதனை படைத்தது இருந்தாலும் அதற்கான பலனை பணத்திலும், புகழிலும் சம்பாரித்து விட்டார் ....///---சூப்பரா சொன்னீங்க சகோ.ஹாஜா.

    அதானே..?
    அவர் என்ன,
    ஐரோப்பாவில் இருந்து வந்து இந்திய ஏழை மக்களுக்கு செவிலிப்பணியாற்றிய எளிமை மிகு மதர் தெரசா போல இலவச சேவையா செய்தார்..?

    அல்லது,
    அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு குடி பெயர்ந்து வந்து ஹிந்தி உருது எல்லாம் கற்று இங்கேயே தங்கி இந்திய விடுதலைக்காக போராடி, தன் பெயரையே 'விடுதலை' என்று மாற்றிக்கொண்டு... இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ஆகி, சுதந்திரமும் பெற்று, கல்வி அமைச்சர் ஆகி, தனக்கு உயிரோடு இருக்கும் போது தரப்பட்ட பாரத ரத்னாவை மந்திரி என்பதால் பெற மறுத்த அபுல் கலாம் ஆசாத்தா..?

    //சச்சினுக்கு இந்த விருது பொருத்தமானதா என்பதில் என்னைபோல பலருக்கும் குழப்பம் இருக்கலாம்....//---எனக்கும்தான்..!

    பதிலளிநீக்கு
  10. சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்கக் கூடாது. சொல்லப்போனால் விளையாட்டில் இருக்கும் யாருக்கும் கொடுக்கக்கூடாது என்பதே என் கருத்து. இது போன்ற உயரிய விருதுகள் சமூகத்திருக்காக பாடுபட்ட,
    ஏழைகளுக்காக பாடு பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே சரி.

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் சொல்வது சரிதான் சகோ ஆசிக்.....
    பிசிசிஐ தனியாக இயங்கும் வரை அரசுக்கு கிரிக்கெட்டால் எந்த லாபமும் இல்லை....

    பதிலளிநீக்கு
  12. சிராஜ் மச்சான் மிக சரியாக சொன்னீர்கள்...நன்றி...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....