30 ஜனவரி 2012

கற்பழிப்பது,கலவி,ஏழ்மை எல்லாம் காமெடியாம்...மக்களை முட்டாள்களாக எண்ணிய ஷங்கர்...


கற்பிப்பது. கற்பழிப்பது இதுக்கு என்ன வித்தியாசம்?

நண்பன் படத்தில் இந்த வார்த்தையை வைத்து காமெடி என்ற பெயரில் கண்றாவி செய்து இருக்கிறார்கள்.....

என்ன ஏது என்று புரியாமல் வெறுமனே மனப்பாடம் மட்டும் செய்து படித்தால் என்னவாகும் என சொல்வதற்காக ஒரு காட்சி...சொல்ல வந்த கருத்துநல்ல கருத்தே...அனால் சொன்ன விதமும் வார்த்தைகளும் கொஞ்சமும் நாகரிகம் அற்றவை... கற்பது,கற்பிப்பது என்று எழுதிய வார்த்தைகளை ஹீரோ கற்பழிப்பதுஎன மாற்றி எழுதி வைப்பார்....அதை அந்த மடையனும் அப்படியே மேடையில் படிப்பானாம்....ஏன் வேறு வார்த்தைகளே இல்லையா...மாற்றி எழுதுவதற்கு...

உதாரணத்துக்கு நீங்கள் குடும்பத்துடன் படம் பார்க்கும்போது அக்காட்சியில் சிரிக்கிறீர்கள்...அப்போது உங்கள் குழந்தை கற்பழிப்பு என்றால் என்ன அர்த்தம்?எதற்கு சிரிக்கிறீர்கள் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?

இந்த வார்த்தையை வைத்து கிண்டலடிப்பது கல்லூரியின் முதல்வரை.....சகிக்கல...

அதேபோல கல்வி என்ற வார்த்தையை கலவி என மாற்றுவாராம் ஹீரோ...அதை அப்படியே படிப்பாராம் அந்த முட்டாள் மாணவன்....என்னங்கடா இது..?இந்த வார்த்தைகளுக்கு கூட வித்தியாசம் தெரியாத மடையன் எப்படி கல்லூரியில் படிப்பான்?அந்த அளவுக்கு தமிழ் தெரியாதா அவனுக்கு?இது ஒரு காமெடியா?காமெடி என்ற பெயரில் காமத்தை பிழிந்து இருக்குறார்கள்....

இந்த வார்த்தையை வைத்து கிண்டலடிப்பது கல்வி அமைச்சரயாம்...


அதே போல எதற்கெடுத்தாலும் போட்டு இருக்கும் பேன்ட்டை கழற்றி விட்டு ஜட்டியோடு கீழே விழுகிறார்கள்.....இதுவும் காமெடியாம்....என்னதான் இந்தியில் இருந்து ரீமேக் பண்ணினாலும் அப்படியேவா எடுப்பது ?


அடுத்து ஏழ்மையில் வாடும் குடும்பத்தை கேலி செய்வதுபோல காட்சிகள்....அதுவும் சக நண்பனின் தங்கையை ,அவனது குடும்பத்தை மற்ற இரு நண்பர்களும் கேலி செய்வது போல பல காட்சிகள்.......எந்த நண்பனாவது அப்படி செய்வானா? சங்கருக்கு ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா?



இந்த காட்சிகள் எல்லாம் வெறும் காமெடிக்காக மட்டுமே என்று ஷங்கர் சொல்லலாம்...ஆனால் இதில் எந்த மாதிரி கிறுக்குத்தனமாக எடுத்தாலும் மக்கள் ரசிப்பார்கள்,சிரிப்பார்கள் என்று மக்களை அடிமுட்டாள்களாக என்னும் அவரது கீழ்த்தரமான எண்ணமே வெளிப்படுகிறது...

இந்த படத்துக்கு இந்த குறைகளை சுட்டி காட்டாமல் நல்ல விதமாக அனைத்து பத்திரிக்கைகளும் விமர்சனம் எழுதியுள்ளன...

அதை சுட்டிகாட்டவே இந்த பதிவு......

17 கருத்துகள்:

  1. இன்னும் இருக்கிறது நண்பரே...

    திருமணத்திற்கு செல்பவர்கள் கையில் மொய் கவரை எடுத்து செல்வது....

    கல்லூரி மாணவர்கள் பிரசவம் பார்ப்பது...

    தற்போதைய கல்வி முறையை கிண்டல் அடிப்பது...

    கல்லூரியில் குடித்து விட்டு தூங்குவது பின் வகுப்பு நடக்கும் போது விழிப்பது...

    வீட்டுவாசலில் அசிங்கம் செய்வது...

    ஆள்மாறட்டம் செய்து படிப்பது...

    என அடுக்கிக்கொண்டே போகலாம்...
    படம் முழுக்க குறைகளே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீதி குறைகளை நீங்களே சொல்லி விட்டீர்கள்...வருகைக்கு நன்றி நண்பா...

      நீக்கு
    2. Good correcta sonninga. enna idhu ivlo asingamana vasanathuku peru comedy a. kandipa idha edhirkanum.

      நீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா2:52 PM, ஜனவரி 30, 2012

    nanban film ellarum than pakranga.......ippo entha oru rasikarum sirikarangale......... neenga poi oru eduthu parunga....appo puriyum entertainment ku than film shoot panranga athuku ipdi ya........cha ithuku oru website vera....adiradi haaja ku vera vela illa pola......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா.....அப்ப உங்களுக்கும் வேற வேலை இல்லாததால்தான் இதை படிக்க வந்தீர்களா?

      நீக்கு
  4. பெயரில்லா2:55 PM, ஜனவரி 30, 2012

    nanba film jolly ah iruku athula serious ah pakringana serious ah tha theriyum joke ah ninaichingana athu joke......... positive ah think pannunga.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி நாம் நினைப்பதால்தான் இப்படி எடுக்குறார்கள்....உங்களுக்கு பிடித்து இருக்கலாம் ..எனக்கு பிடிக்கவில்லை..நன்றி....

      நீக்கு
  5. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை! 'பல மோசமான படங்களை விட இந்த மோசமான படம் பரவாயில்லை' என்று மோசத்தில் எது மோசம் ? என்று ஒப்பிட்டே மோசம் போகிறோம். சுருக்கமாக சொன்னால் குழந்தைகளோடு சென்று பார்க்க வேண்டிய படமல்ல இது! நட்பின் சிறப்பைப் பற்றி அறிய, "அரிய பழைய படங்கள்" எவ்வளவோ உள்ளன! இந்த படத்தில் நல்ல காட்சிகளை (நட்பைப் பற்றி) பார்த்தோமானால் பத்து சதவீதம் தான் தேறும்! தொண்ணூறு சதவீதம் நாமுமே மறந்து விடுவது நல்லது! பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா...

      நீக்கு
  6. சலாம். சிறந்த பதிவு கலக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் மனநிலையில் படத்தில் உள்ள குறைகளை சொன்னவிதம் நன்றாக இருக்கிறது.. அப்படிப் பார்த்தால் இன்று வரும் ஒவ்வொரு படத்திலும் இத்தகைய காட்சிகள் இருக்கவே செய்கிறது. ஒரு ஹீரோ மற்ற பத்து பதினைந்து ஆட்களை ஒரே ஆளாக சமாளித்து சண்டை போடுவார்.. எந்த ஹீரோ ஸ்டண்ட் பண்ணியிருக்கிறார்.. சினிமா என்பது மாயை.. போலித்தோற்றம். சினிமாவில் வருபவை அனைத்தும் நடிப்பு.. 90 சதவீதம் போலியானது.. அதில் இருக்கும் மனிதர்கள், ஒரு சில உயிரினங்கள் தவிர அத்தனையும் பொய்யான தோற்றத்தை உடையவை. இந்த தொழில்நுட்ப உலகத்தில் எதுவும் சாத்தியமாகிறது. இதில் குறை என்று சொல்லவதை விட ஒரு சில நிறைகளை மட்டுமே கூற முடியும். மீதியெல்லாமே குறைகளாகத்தான் இருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்டதுபோலவே நிறையப்படங்களில் இதுபோல் இருக்கிறது. ஒரு படத்தில் கடந்து ஆண்டு ? எனக்கு சரியாக தெரியவில்லை. பேருந்தில் வந்துக்கொண்டிருக்கும்போது அந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. காதலிக்காக பெற்ற தாய், தந்தையரை அடித்து விரட்டுகிறான். இங்கே புனிதமான காதலுக்காக பெற்ற தாய்தந்தையரையே அடித்து விரட்டுகிறான். என்ன ஒரு டைரக்ஷன்.. அந்தப் படத்தை பாராட்டி எழதாதவர்களே இல்லை என்று சொல்லலாம். இதில் எப்படி நாம் உடன்பட முடியும்..! கருவை உருவாக்கி, பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கியவர்களையே காதலுக்காக, காதலிக்காக அவன் பெற்றோரை அடிக்கிறானாம்.. இதைப் புனிதமான காதலுக்காக அவன் செய்வதாக ஒரு தோற்றத்தை அந்த படத்தில் புகுத்தியிருக்கிறார்கள்.. இது போல நிறைய சொல்லலாம்..!!

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. சகோ ஹாஜா மைதீன் அவர்களுக்கு

    //உதாரணத்துக்கு நீங்கள் குடும்பத்துடன் படம் பார்க்கும்போது அக்காட்சியில் சிரிக்கிறீர்கள்...அப்போது உங்கள் குழந்தை கற்பழிப்பு என்றால் என்ன அர்த்தம்?எதற்கு சிரிக்கிறீர்கள் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?//

    நெத்தியடி கேள்வி

    //.என்னங்கடா இது..?இந்த வார்த்தைகளுக்கு கூட வித்தியாசம் தெரியாத மடையன் எப்படி கல்லூரியில் படிப்பான்?//

    கேக்கிறவன் கேனையனாக இருந்தால் எருமமாடு ஏரோப்ளன் ஓட்டும்ங்கிற மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா....இந்த பழமொழி நன்றாக பொருந்தும் ...நன்றி....

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....