03 ஆகஸ்ட் 2012

திமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி..!?!?


திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து யார்? இந்த தலைவர் பதவிக்கான போட்டியில் ஸ்டாலினா,அழகிரியா என்பது மாறி இன்று மூன்றாவதாக கனிமொழியும் ரேசில் ஓடுகிறார் என்றால் அது மிகையல்ல.....

அழகிரிக்கு ஆளும்கட்சியாக இருக்கும்போது இருக்கும் வேகம் எதிர்கட்சியாக இருக்கும்போது இல்லை என அவரே வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்...ஜெ வை எதிர்த்து முன்பு போல அதிகம் பேசுவதில்லை...திமுக நடத்தும் எந்த போராட்டத்திலும் மத்திய அமைச்சர் பதவியை காரணம் காட்டி கலந்து கொள்வதில்லை....நாடாளுமன்றத்துக்கே செல்வதில்லை...சென்றாலும் பேசுவதில்லை....சும்மா கோஷ்டிகள் சேர்த்து கொண்டு கட்சிக்குள் கலகம் செய்வதால் தலைவர் பதவி வந்துவிடும் என்ற தப்புகணக்கை சரியாக போட்டு கோட்டை விட்டு கொண்டு இருக்கிறார்....

அடுத்து ஸ்டாலின்....கிட்டத்தட்ட கட்சிக்குள் கருணாநிதிக்கு அடுத்து இவர்தான் என பெரும்பாலோனர்களின் ஆதரவை பெற்று இருந்தாலும் அது முழுமையடைய இன்னும் அவர் நிறைய திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும் என பேராசிரியர் அன்பழகனே மறைமுகமாக குத்தி காட்டி இருக்கிறார்.......குறிப்பாக தந்தையை போல எழுத்து திறமையும், பேச்சு திறமையும் அவரிடத்தில் இல்லை...கட்சியின் அடிமட்ட தொண்டனை கூட பெயர் சொல்லி அழைக்கும் கருணாநிதியின் அரவணைப்பு தன்மை அவரிடத்தில் குறைவுதான்....

சாதாரண தொண்டனால் இன்னும் ஸ்டாலினை நெருங்க முடியவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் (அண்ணன் கஸாலி போன்றோரின் )கருத்து..இதையெல்லாம் அவர் நிவர்த்தி செய்யவேண்டும்.....


கடைசியாக கனிமொழி....கலைஞரின் மகள் என்பதாலே அரசியலில் நுழைந்தவுடனே எம்பி பதவி, டெல்லி தலைவர்களிடத்தில் பழகும் வாய்ப்பு, பின்பு கட்சிக்குள் தனக்கென ஒரு ஆதரவு வட்டம் என வளர்ந்து வந்தவருக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறை சென்றது மிகப்பெரிய சறுக்கல்....

ஆனாலும் அதில் கனிமொழி மட்டுமே குற்றவாளி அல்ல ,கட்சிக்காகவும் ,குடும்பத்துக்காகவும் குற்றவாளி ஆக்கப்பட்டார் எனவும் ஒரு ஆறுதல் காற்று அவரின் ஆதரவாளர்களினால் வீசப்படுகிறது....சிறையில் இருந்து ஜாமீனில் வந்த அவருக்கு கிடைத்த வரவேற்பு ஒரு உதாரணம்....


கருணாநிதிக்கு உள்ள எழுத்தாற்றலும், பேச்சாற்றலும்,சகோதரர்களைவிட இவருக்கு கொஞ்சம் அதிகம்..அதற்கு நாடாளுமன்றத்தில் அணுஉலை பற்றி இவர் பேசிய பேச்சு ஒரு உதாரணம்....கூடுதலாக அங்கில புலமையும் உண்டு....இதுவே டெல்லி அரசியல்வாதிகளிடம் கனிமொழிக்கு மற்ற இருவரையும் விட ஒரு அறிமுகத்தை கொடுத்து இருக்கிறது...

அழகிரி,ஸ்டாலின் கோஷ்டியில் இல்லாதவர்கள்,அல்லது அந்த இரண்டு கோஷ்டிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது இவரின் பக்கம் சாய்ந்து வருகிறார்கள்...

எல்லாவற்றையும் விட பெண்ணுக்கு பெண்தான் சரியான போட்டி(ஜெயலலிதாவா கனிமொழியா ? நல்லா இருக்குல்ல ) என்ற ஒரு சின்ன லாஜிக்கும் கனிமொழியின் எதிர்காலத்துக்கு பிரகாசமாக இருப்பதாக என் சிறு மூளைக்குள் உதித்ததன் விளைவே இந்த பதிவு....


ஏதோ நம்மால முடிஞ்சது.....ஹி ஹி...

13 கருத்துகள்:

 1. ஆக வடை இல்லையா - கொளுத்தி விட்டுடீங்க

  பதிலளிநீக்கு
 2. சொல்லவே இல்லை...இது கூட நல்லாத் தான் இருக்கு...
  அப்போ ஆ.ராசா தான் பொதுச் செயலாளரா?

  பதிலளிநீக்கு
 3. நல்லது...

  அப்படியே கனிமொழிக்கு ஜோடியா... சசி மாதிரி ஒரு தோழி யாருன்னு சொல்லிடுங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி....அது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா?

   நீக்கு
 4. ஓட்டு போட்டு தேர்நதெடுத்தாலும் வாரிசுகள்தான் மத்தியிலிருந்து மாநிலம் வரை.....ஏறக்குறைய அரபு நாடுகளைப் போலத்தான். வரும் வழி சற்று மாறுகிறது. :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்...வாரிசு அரசியலை தவிர இங்கு வேற வழிஇல்லை...வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. ஆமாம். கட்சி சொத்துக்களைக் காப்பாற்ற கோடிக் கணக்கில் அடித்தவர்கள் தான் தலமையேற்க முடியும்.

  அழகிரியோ வெறும் பேட்டை தாதா. சில லட்சங்கள் மட்டுமே.

  ஸ்டாலின் வெறும் மஸ்டர் ஊழல் மட்டுமே. என்ன, சில கோடிகள்.

  கனிமொழியோ, 1,75,000 கோடிகள். ஏணி வைத்தாலும் எட்டாது.

  என் ஓட்டு, கனிமொழிக்கே.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....