19 அக்டோபர் 2012

சீமான் என்ன பெரிய அப்பாடக்கர் தலைவரா?


 இது  என்னுடைய  300 வது பதிவு...என் பதிவுகளை படித்து ஊக்கம்கொடுத்த  பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகள்...

சீமான்னு ஒருத்தர் என்னமோ உலக தமிழர்களுக்கு எல்லாம் இவர்தான் விடிவெள்ளி போல நினைத்துகொண்டு வாயில் வந்ததை எல்லாம் பேசி கொண்டு திரிகிறார்....2021 ல் அன்பான  சர்வாதிகார ஆட்சியை  தமிழகத்தில் கொடுப்பாராம்...ஐ நா சபையில் அரை மணி நேரம் பேசினால்  தனி ஈழம் வாங்கி விடுவாராம்....ஏன்யா 30 வருட ஆயுத  போராட்டம் செய்யாததை  30
 நிமிடத்தில் செய்யும் அளவுக்கு பெரிய அப்பாடக்கர் தலைவரா நீங்கள்?

பெரியாரை திட்டுகிறார், அண்ணாவை திட்டுகிறார்,கருணாநிதியை திட்டுகிறார்,வை கோ வை திட்டுகிறார்,.....திட்டி கொண்டே போகிறார்......அவர்தான் தமிழகத்தின்  உத்தம  புத்திரன் என நினைப்பு....சீமான் மீதும் ஒரு நடிகை புகார் சொன்னாரே !அது என்ன ஆயிற்று?அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்து அந்த புகாரை ஒன்றும் இல்லாமல் செய்தவர்தான் இந்த சீமான்...

பிரபாகரன் இல்லாத  வெற்றிடத்தை  ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக  பேசி மட்டுமே அடைய நினைக்கிறார்..... இலங்கை மக்கள் இங்கு சுற்றுலா வந்தால் அடித்து விரட்டுவேன்  என்கிறார்...யோவ்  நீ அடித்தால் அங்கே இருக்கும் தமிழனை மீண்டும் சீண்ட மாட்டார்களா  சிங்களவர்கள்?இங்கே இருக்கிற  இலங்கை அகதிகளுக்கு  என்ன செய்து இருக்கிறார் இவர்?


இப்போது  யாரை திட்டலாம் என எண்ணி கொண்டு  இருந்தவருக்கு மாட்டி இருக்கிறார் இளையராஜா ....அவரை பற்றி 
இத்தனை காலமும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தாத இசையமைப்பாளர் இளையராஜா இப்போது தமிழனின் விடுதலை நெருப்பை நீர்த்துப் போகச் செய்ய நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகு நவம்பர் 3 கனடா செல்கிறார்.
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் இப்போது போவது வருத்தம் அளிக்கிறது,"


என பேசி இருக்கிறார்....நான் கேட்கிறேன்  அதே தமிழ்  சொந்தங்கள்  அங்கே  விழுந்தபோது  நீங்கள் நரம்பு புடைக்க பேசி கொண்டு  மட்டுமே இருந்தீர்கள்...நீங்கள் போயி அந்த உதவியை செய்தீர்களா?இல்லை இப்போது பாதிக்க மக்களுக்கு ஏதேனும் உதவி செய்து உள்ளீர்களா?எனக்கு தெரியவில்லை..அப்படியே செய்து இருந்தாலும்  மற்றவர்கள்  செய்யாதது  ஏன் என்று கேட்க உங்களுக்கு  எந்த உரிமையும் இல்லை...

அப்படியானால்  எவனும் எந்த படத்திலும் நடிக்க கூடாது,இயக்க கூடாது சினிமா உலகமே  இயங்க கூடாது உங்கள் கூற்றுப்படி!

இத்தனை கால  ஈழ தமிழர்களின்  விடுதலை நெருப்பை ஒரு இளையராஜா  இசை நிகழ்ச்சி நீர்த்து போக செய்துவிடும் என நினைக்கும் உங்கள் அறிவின்மையை என்னவென்று சொல்வது?

ஈழ தமிழர்களின் விடுதலை நெருப்பை  ஒரு இசை நிகழ்ச்சி நீர்த்துபோக செய்துவிடும் என்று சொல்லி ஈழ தமிழர்களின் போராடும் குணத்தை நீங்கள் கொச்சை  படுத்துகிறீர்கள் ...

இது  மாதிரியான உங்களின் பேச்சுக்கள்  ஈழ தமிழர்களை வைத்து விளம்பரம்  தேடும் மலிவான உங்களின் புத்தியையே  வெளிக்காட்டுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல....20 கருத்துகள்:

 1. Please avoid this bloody man words.
  waste your time and wrote about him.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாரையும் விமர்சிக்கும் அவரை சும்மா போட்டு தாக்க வேண்டாமா சகோ?

   நீக்கு
 2. நல்ல கேள்விகள்... பதில்கள் தான் இல்லை...

  நானாக சொல்லும் கதை-யை எதிர்ப்பார்க்கிறேன்..

  நன்றி.. tm3

  300-க்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது விரைவில் ........ உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்...

   நீக்கு
 3. 300-க்கு வாழ்த்துக்கள். மென்மேலும் பல அதிரடிகளை குவிக்க இன்னொரு வாழ்த்துக்கள். 'ச்சீமான் ஒரு அட்டக்கத்தி. விட்டுத்தள்ளு அவரை.

  பதிலளிநீக்கு
 4. பாவம் அவரு என்னதான் பண்ணுவாரு. தி.மு.க,ஆட்சி இருந்தாலாவது கலைஞரை திட்டலாம். ஆனால் இப்ப இருப்பது ஜெயா ஆட்சி. திட்டலாம்னு நினைச்சு வாய திறந்தால் அப்புறம் களி திங்க வேண்டியதுதான். யாரையாவது திட்டினால்தானே அவர் பேரு பேப்பரில் வரும்.அதான் பார்த்தாரு இளையராஜா, விஜய்னு திட்ட ஆரம்பிச்சுட்டாரு.

  பதிலளிநீக்கு
 5. தமிழ்நாட்டில நூத்துக்கணக்கான பிரச்சினைகள் இருக்கும்போது, விடுதலைப்புலிகளிடம் வாங்கிய பிச்சைக்காக, விடுதலைப்புலிகள் பற்றிமட்டுமே குரைத்துக்கொண்டிருக்கும் இதுபோன்ற தேச துரோகிகளைப்பற்றி எழுதுவதே அனாவாசியம்..இவன் ஒரு காமெடி பீசு..

  பதிலளிநீக்கு
 6. நல்லாக் கேட்டீங்க!
  விரைவில் 1000த்தைத் தொடவாழ்த்துக்கள் ஹாஜா!

  பதிலளிநீக்கு
 7. சலாம் சகோ.ஹாஜா

  //பெரியாரை திட்டுகிறார், //
  பார்ப்பான எதிர்ப்பவர்கள் திராவிட கழகத்தார்,திராவிட கழகத்தாரையே திட்டினால் இவர் யார்??? சீமான் அவர்கள் பார்ப்பானையும் ,லிங்கத்தையும் கிழி கிழின்னு கிழிச்ச்சதை பார்த்திருக்கிறேன்..பார்ப்பானையும் பெரியாரையும் ஒருசேர எதிர்த்தால் இவரது கொள்கைதான் என்ன.???

  நன்றியுடன்
  நாகூர் மீரான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ....

   இவருக்கெல்லாம் கொள்கையும் இல்ல ஒரு புண்ணாக்கும் இல்ல சகோ....

   நீக்கு
  2. if seemaan is not having any policy then what about NAGORE BADUSHAASS?

   நீக்கு
 8. பதிவுகள் அதிரடியாக தொடரட்டும்... வாழ்த்துக்கள் தோழரே!...

  அரசியலில் இன்று இப்படி பேசுவார்கள் நாளை வேறுமாறி பேசுவார்கள், அரசியல் கோமாளிகள் அடிக்கும் கூத்துக்கு அளவே கிடையாது.

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே......

  பதிலளிநீக்கு
 10. யதார்த்த உலகைப் புரிந்து கொண்டு செயல்படுவது சீமானின் வளர்ச்சிக்கு உதவும்; தமிழர்களுக்கும் நன்மை பயக்கும்.

  பதிலளிநீக்கு
 11. எதார்த்த வாழ்வைப் புரிந்து கொள்ளும் மன நிலையில் அவர் உள்ளாரா என்பது சந்தேகமே!

  பதிலளிநீக்கு
 12. ஆயிரம் பதிவுகள் விரைவில் தொட மனமார வாழ்த்துக்கள் மாப்ஸ்....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....