27 அக்டோபர் 2012

இந்த பதிவுக்கும் சின்மயி வழக்கு தொடர்வாரா?!



சின்மயி விவகாரம்தான் இந்த வாரம் ஹாட் டாபிக்....இதில் புகார் கொடுத்தவர்ஒரு பெண் என்பதாலும்,அவர் ஒரு பிரபலமான  பாடகி என்பதாலும் இந்த விவகாரம் முக்கிய இடம் பெறுகிறது.....இந்த விவகாரத்தை வைத்தே எல்லா தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் என்ற பெயரில் தங்கள் நிகழ்ச்சிக்கு தீனி ஆக்கி கொண்டார்கள்....

சின்மயி தைரியமாக செயல்பட்டார் என குஸ்பு,கவுதம் மேனன் போன்ற சினிமா பிரபலங்கள் திருவாய் மலர்ந்துள்ளார்கள்....சின்மயி குற்றம் சொன்னதை மட்டும் பார்க்கும் இவர்கள் சின்மயி செய்த குற்றத்தையும் எண்ணி பார்த்து கருத்து சொல்லி இருக்க வேண்டாமா?

நமது வலை உலகிலும் இந்த வாரம் முழுவதும் ஒரே சின்மயி புராணம்தான்....தெரிந்தோ தெரியாமலோ சின்மயி ரொம்ப பிரபலமாகி விட்டார்...ஆனால் எனக்கு இந்த வழக்கு சம்பந்தமாக சில சந்தேகங்கள் தோன்றுகின்றன....பதில்கள்?!


தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் எத்தனையோ பெண்கள் தங்களை பிறர் தொந்தரவு செய்வதாக அளித்த புகார்கள் தூங்கி கொண்டு இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் மட்டும் போலீஸ்  அவசர கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?அதை மீடியாக்கள் இவ்வளவு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய நோக்கம் என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளியாகவே ஆக்கி ஒரு தலை பட்சமாக காவல் துறையும்,மீடியாக்களும் ஏன் நடந்து கொண்டது?
இந்த விவகாரத்தின் ஆரம்பமாக சின்மயி டுவீட்டிய :மீனவர்களும் மீனை கொள்கிறார்கள்"என்ற அடிப்படையிலான கருத்துக்கள் என்னைப்போல நிச்சயம் அனைத்து  தமிழர்களையும் கோபப்பட செய்யும் ஒரு கருத்துதான்..அதற்கு என்ன சொல்ல போகிறார் சின்மயி?

இந்த விவகாரத்தில் முதலில் சம்பந்தப்பட்டவர்களை  விசாரித்துவிட்டு பின் வழக்கு பதிவு செய்து இருக்கலாம்,மீடியாக்களுக்கு சொல்லி இருக்கலாம்... ஆனால் சின்மயி புகார் கொடுக்க வரும்போதே பேட்டி கொடுப்பதற்காகவே மீடியாக்களை அழைத்து வருகிறார்....பிரபலமாக இருந்தால் அவர் சொல்வது எல்லாம் உண்மை ஆகிவிடுமா?அதற்காக நான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறு செய்யவில்லை என கூறவில்லை...இந்த நாட்டில் காந்தியை சுட்டு கொன்றவனுக்கே  வழக்கு நடத்தி தானே  தீர்ப்பு  அளித்தார்கள்!

முதலில் சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் குற்றம் சாட்டி உள்ளவர்கள் ஏதோ பெண் இனத்துக்கே பெரும் கொடுமைகளை புரிந்தவர்கள் போல சித்தரித்து காட்டப்பட்ட  நிலையில்,இப்போது சின்மயின் மீதான தவறும் வலை உலகில் தோல் உரித்து  காட்டப்பட்டு வருகிறது...அவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கைகள் வலுவடைந்து  வரும் நிலையில் காவல் துறை என்ன செய்ய போகிறது"?

முதலில் கைது  செய்யப்பட்டவர் குற்றவாளி அல்ல ..குற்றம் சாட்டப்பட்டவர்தான்...அவர் தவறு செய்து இருப்பது நிருபனமானால்  நிச்சயம் அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் ....அது போல சின்மயியும்  குற்றம் சாட்டப் பட்டு வரும் நிலையில் அவரும் கைது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படத்தான் வேண்டும்..அதுதான்  நியாயம்...!


37 கருத்துகள்:

  1. சகோதரர் ஹாஜா மைதீன்,

    அஸ்ஸலாமு அலைக்கும். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதை நான் தவிர்த்தே வந்துள்ள நிலையில். உங்களின் இந்த பதிவு என்னை கருத்து சொல்லியிருக்க நிர்பந்தித்து இருக்கின்றது.

    வார்த்தை பயன்பாடுகளில் ராஜன் ஒரு பொறுக்கி என்பதில் எனக்கு எந்த காலத்திலும் மாற்று கருத்து இருந்ததில்லை. கீழ்த்தரமான, வக்கிரமான வார்த்தை பயன்பாட்டுக்கு பதிவுலகில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. அவருடைய இரண்டு வருடங்களுக்கு முந்தைய மத விமர்சன பதிவுகளை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும் (இன்னும் அந்த கேவலங்கள் அங்கே கொட்டியே கிடக்கின்றன). ஊருக்கெல்லாம் (அசிங்கமான முறையில்) உபதேசித்து விட்டு, தன் திருமணத்தை ஆத்திக முறையில் நடத்தியதால் ஏற்பட்ட பிரச்சனையில் பதிவுலகில் அவருடைய செயல்பாடு குறைந்தது. இந்த சின்மயி பிரச்சனையின் போது இந்த கேடுகெட்ட ஜீவன் ட்விட்டரில் மையம் கொண்டு இருப்பது எனக்கு தெரியவந்தது.

    இதுவரை இது போன்ற விசயத்தில் ஒன்றும் செய்யாமல், இப்போது மட்டும் செய்கின்றார்களே என்ற கேள்விக்கு இப்போதாவது செய்தார்களே என்று பாராட்டி இனி அப்படியாக செய்ய வேண்டும் என்பதே நல்ல விவாதமாக இருக்க முடியும். இதுவரை தவறை தண்டிக்கவில்லை, இப்போதும் விட்டுவிடுங்கள் என்பது மிக மோசமான முன்னுதாரனமாகவே இருக்கும்.

    ராஜனின் வக்கிர புத்திக்கு ஆதாரங்கள் பரவிக்கிடக்கின்றன. சிங்களன் ஒருவன் முதல்வரை தரக்குறைவாக விமர்சித்த அதே பாணியில் ராஜனும் நடந்துள்ளார். இப்படியான நிலையில் எப்படி தப்புவார் என்று எண்ணுகின்றீர்கள்?

    சின்மயி கருத்துக்கள் ஏற்கப்பட முடியாதவை. ஆனால் அவருடைய தவறும் ராஜனுடைய தவறும் ஒன்றாகாது. "மீனவர்கள் மீன்களை கொல்கின்றார்கள். அதனால் மீனவர்களை கொல்லலாம்" என்று சின்மயி சொன்னதாக கூறுகின்றார்கள். நானும் அந்த ட்வீட்டை தேடி விட்டேன். கிடைக்கவில்லை. பார்த்தவர்கள் கொடுக்கவும். மற்றப்படி "நாங்கள் மீன்களை கொல்தில்லை" என்ற கருத்துக்கள் அவருடைய பொதுபுத்தியில் நிலைப்பெற்ற அறியாமை கருத்துக்கள். இதனுடன் ராஜனின் நடத்தையை ஒப்பிடுவது தவறு.

    தாங்கள் இந்த பதிவில் சறுக்கி இருப்பதாகவே தோன்றுகின்றது.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸ்ஸலாம் சகோ.....எனக்கு அந்த ராஜனை பற்றியோ,அவருடைய பதிவை பற்றியோ இதுவரை எனக்கு தெரியாது.....நிற்க...நான் அந்த ராஜனை இந்த பதிவில் எங்குமே நல்லவர் என்றோ தவறு செய்யவில்லை என்றோ குறிப்பிடவில்லை....மேலும் சின்மயி ராஜன் மீது மட்டும் புகார் கொடுக்கவில்லை...6 பேர் மீது கொடுத்துள்ளார்..அதனால்தான் நான் ராஜன் பெயரை பயன்படுத்தாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என 6 பேரையும் சேர்த்து எழுதி உள்ளேன்....இந்த பதிவின் நோக்கம் நீங்கள் சொல்லும் அந்த ராஜனுக்கு ஆதரவு அளிப்பது அல்ல....சின்மயி சொல்லும் புகாரை இவ்வளவு தீவிரமாக விசாரிக்கும் அதே போலீஸ் சாதாரண பெண்கள் யார் மீதாவது புகார் கொடுத்தால் அதே தீவிரத்தை காட்டுவார்களா?அவர் பிரபலம் என்பதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்பதே என் கருத்து ...தவிர இரண்டு பேரின் தவறையும் நான் ஒப்பீட்டு சொல்லவில்லை...சின்மயியும் விசாரிக்கப்பட வேண்டியவர் என்ற ரீதீயில்தான் இந்த பதிவை எழுதி இருக்கிறேனே தவிர ராஜன் தண்டிக்கப்பட வேண்டியவர் அல்ல என்ற நோக்கத்தில் அல்ல....


      உங்கள் கருத்தை தெரியப்படுத்தியதற்கும் தங்கள் வருகைக்கும் நன்றி சகோ...

      நீக்கு
    2. @ ஹாஜா மைதீன்,

      //எனக்கு அந்த ராஜனை பற்றியோ,அவருடைய பதிவை பற்றியோ இதுவரை எனக்கு தெரியாது//

      இது தான் சகோ பிரச்சனை. இந்த பதிவை பார்த்தவுடனேயே அதனை நான் புரிந்துக்கொண்டேன். அவரை பற்றி அறிந்திருந்தால் என்னை போலவே நீங்களும் சும்மா இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருப்பீர்கள். எனக்கு இந்த பதிவு பாரபட்சமான ஒன்றாகவே தெரிகின்றது. ஒருவேளை என்னுடைய பார்வை தவறென்றால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

      சின்மயி செய்ததையும், ராஜன் செய்தையும் நீங்கள் ஒரே தட்டில் வைத்து ஒப்பிட்டு என்னிடம் பேச வருவீர்கள் என்றால் இதில் மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை. மேலும், இதுக்குறித்த விசயங்களை பேசும் போது சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து தெளிவான ஆய்வை மேற்கொண்டுவிட்டு பதிவது நம் செயல்பாடுகளுக்கு நல்லது.

      இறைவன் உங்களுக்கும் எனக்கும் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள வேண்டியவனாக...

      உங்கள் சகோதரன்,
      ஆஷிக் அஹமத் அ

      நீக்கு
    3. #சின்மயி செய்ததையும், ராஜன் செய்தையும் நீங்கள் ஒரே தட்டில் வைத்து ஒப்பிட்டு என்னிடம் பேச வருவீர்கள் என்றால் இதில் மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை. #

      சகோ...நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் இவர்கள் இருவரையும் ஒப்பீட்டு பார்க்கவில்லை என்று...சின்மயி செய்த தவறு குளம் போன்றது என்றால் ராஜன் செய்தது கடல் போன்றது...

      #இதுக்குறித்த விசயங்களை பேசும் போது சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து தெளிவான ஆய்வை மேற்கொண்டுவிட்டு பதிவது நம் செயல்பாடுகளுக்கு நல்லது. #

      இது நாம் எழுதிய,எழுதுகிற,இனி எழுத போகின்ற எல்லா பதிவுகளுக்கும் பொருந்தும்...நல்ல கருத்து ...நானும் சின்மயி,ராஜன் இருவர் பற்றி பதிவுலகில் கடந்த மூன்று நாட்களாக வந்த பதிவுகளை படித்து விட்டுத்தான் இந்த பதிவை எழுதி உள்ளேன்..அதில்தான் சின்மயி மீனவர்களை பற்றியும்,இட ஒதீக்கீடு பற்றியும் எழுதியதாக தெரிந்துகொண்டேன்..

      #எனக்கு இந்த பதிவு பாரபட்சமான ஒன்றாகவே தெரிகின்றது. ஒருவேளை என்னுடைய பார்வை தவறென்றால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.#

      சகோ ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை....இந்த பதிவு உங்களுக்கு பாராபட்சமாக தோன்றுகிறது என நீங்கள் கூறியது எனக்கு வருத்தம் அளிக்கவில்லை..மாறாக உங்களின் கருத்தை நீங்கள் ஆரோக்கியமாக எடுத்து வைத்தது சந்தோசமே....ஏனென்றால் இதற்கு முன் எனது பல பதிவுகளை நீங்கள் பாராட்டியுள்ளீர்கள்....நமக்குள் விவாதங்கள் இருப்பதும் ஆரோக்கியமே...

      நீக்கு
    4. @Aashiq Ahamed

      சின்மயி கருத்துக்கள் ஏற்கப்பட முடியாதவை. ஆனால் அவருடைய தவறும் ராஜனுடைய தவறும் ஒன்றாகாது. //

      நண்பரே! நாம் அனைவரும் ராஜன் செய்ததே மிக பெரிய தவறு என்றும், சின்மயி செய்தது சிறிய தவறு என்றும் எடுத்துகொள்ள முடியாது... ராஜனை விட சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்தே மிக பெரிய தவறு... ஏனெனில் ராஜன் கூறியதாக சொல்லப்படும் கருத்தால் மன உளைச்சலுக்கு ஆளானது சின்மயியும் அவரது குடும்பமுமாக இருக்கலாம்... ஆனால் சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்தில் மன வருத்தத்திற்கு உட்பட்டது மீனவ மற்றும் தலித் சமுதாயமே என்கிற ரீதியில் நீங்கள் சொல்லலாமே... நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், இங்கே பதிவுலகிலும் சமூக வலைப்பின்னல்களிலும் சின்மயிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாரும் ராஜனின் விசுவாசிகளோ அவரின் நலம் விரும்பிகளோ இல்லை.. சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்துக்களினால் மனம் வருந்துபவர்களே... இங்கே நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் எழலாம். அப்படி பொதுவாக பேசுபவர்கள் ஏன் சின்மையினை பற்றிய ராஜனின் விமர்சனத்திற்கு எதிராக குரல் கொடுக்க வரவில்லை என்று... காரணம் பிரச்சினையின் ஆரம்பமே சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்து, ராஜனின் மீதான விரைவான நடவடிக்கை எடுத்தவர்கள் சின்மயி மீதும் எடுக்க தவறியது என்பது... இந்த நடவடிக்கை ஒரு தனி நபர் மன உளைச்சலுக்கு ஆளாகும்போது பிரபலம் என்பதால் உடனடி நடவடிக்கை என்பதும்..ஒரு சமூகமே மன உளைச்சலுக்கு ஆளானாலும் அவர்கள் சாதரணமானவர்கள் என்றால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது என்ற ஒருதலைபட்சமாகவே கருதப்பட வேண்டி இருக்கிறது...

      நீக்கு
    5. சகோ. ஆஷிக் பதிலைப் படித்தபின்னரே ராஜனைப் பற்றி தெரிந்துகொண்டேன். நன்றி சகோ.ஆஷிக்!

      நீக்கு
    6. ##இது நாம் எழுதிய,எழுதுகிற,இனி எழுத போகின்ற எல்லா பதிவுகளுக்கும் பொருந்தும்...நல்ல கருத்து ...நானும் சின்மயி,ராஜன் இருவர் பற்றி பதிவுலகில் கடந்த மூன்று நாட்களாக வந்த பதிவுகளை படித்து விட்டுத்தான் இந்த பதிவை எழுதி உள்ளேன்..அதில்தான் சின்மயி மீனவர்களை பற்றியும்,இட ஒதீக்கீடு பற்றியும் எழுதியதாக தெரிந்துகொண்டேன்..##

      பிரதர் ஹாஜா, உங்கட கமெண்டில் முதல் வரி நல்லவரி. ஆனால் பாருங்க, அது இந்த ஆய்வுக்கட்டுரையில் சரியாக பின்பற்றப்பட வில்லை. அப்புறம், இதுபோன்ற ஒரு பிரச்சினையில் மூணு நாள் படிச்செல்லாம் ஒரு முடிவுக்கு வந்துட கூடாது பிரதர். கொஞ்சம் பின்னாடி போயி அலசி ஆராஞ்சி இருந்திருக்கணும்.

      பொதுவாழ்வில் சுஜாதா சொன்னதை விடவேல்லாம் சின்மயி பெரிசா ஒண்ணும் சொல்லிடலை. பதிலுலகில் டோண்டு ஐயங்கார் எழுதினதை விட அதிகமாகவெல்லாம் சின்மயி எழுதிடலை. அனால், அந்த டோண்டுவையே தன கல்யாணத்துக்கு அழைச்சி இருந்தார் இந்த ராஜன். அங்கெ இவரு கூட சேந்து கும்மி அடிச்சிட்டு இருந்தவருதான் அந்த ராஜன். ஆத்திக-பார்ப்பன எதிர்ப்பாவது மண்ணாவது. அதெல்லாம் ஹோமம் வளர்த்து மந்திரம் ஓதி சாமி கும்பிட்டு அக்னி சாட்சியா தாலி கட்டியபோதே ராஜனிடம் எரிந்து சாம்பலாகி போன ஒன்னு. டோண்டு கிட்டே மல்லுக்கு நிக்காத இவரு, சும்மா சின்மயி கிட்டே வருஷக்கணக்கா மல்லு கட்டியது சின்மயி ஒரு 'பிரபல பொம்பளை'ன்றது நாளத்தான். அதன் மூலம் தானும் பிரபலமாகத்தான். இப்போ ரொம்ப நல்லாவே பிரபலமாகிட்டார். சந்தோஷமா இருப்பார் போல.

      அப்புறம், அப்படி என்னதான் ராஜன் ஆண்டு கோ சொல்லிச்சுன்னு இங்கன போயி samples பாருங்க.

      http://www.use.com/0579a6a74773f1b6118e#photo=1

      அப்புறம், அந்த சின்மயி அப்படி என்னதான் மீனவர் பத்தி சொன்னாருன்னு இங்கன போயி பார்த்துகிடுங்க.

      http://www.maamallan.com/2012/10/blog-post_23.html

      நீக்கு
    7. #பிரதர் ஹாஜா, உங்கட கமெண்டில் முதல் வரி நல்லவரி. ஆனால் பாருங்க, அது இந்த ஆய்வுக்கட்டுரையில் சரியாக பின்பற்றப்பட வில்லை. அப்புறம், இதுபோன்ற ஒரு பிரச்சினையில் மூணு நாள் படிச்செல்லாம் ஒரு முடிவுக்கு வந்துட கூடாது பிரதர். கொஞ்சம் பின்னாடி போயி அலசி ஆராஞ்சி இருந்திருக்கணும். #


      சகோ....சின்மயி,ராஜன் இடையே என்ன பிரச்சினையோ அதைப்பற்றி தெரிந்து கொண்டு எழுதினால் அது போதாதா?நான் என்ன ராஜனை பற்றி ஆய்வு கட்டுரையா சமர்பிர்க்கப்போகிறேன்!? ....கடந்த நான்கு நாட்களாக வந்த பதிவுகளின் அடிபடையில் இந்த பதிவை எழுதி இருகிறேன்...அது சம்பந்தமாக என்ன தெரியனுமோ அதை தெரிந்துகொண்டுதான் எழுதி இருக்கிறேன்...மற்றபடி ராஜனை பற்றி நான் நல்லவர் என்று குறிப்பிட்டு இருந்தால்தான் அது தவறு...

      நீக்கு
  2. @ஆஷிக் அஹமத் அ

    எதிரியின் எதிரி நண்பன் - (நல்ல கொள்கை )

    பதிலளிநீக்கு
  3. @ செந்தில்குமரன்,

    //எதிரியின் எதிரி நண்பன் - (நல்ல கொள்கை )//

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக. அப்படி கிடையாது சகோ. எங்கள் பிரச்சனையை நாங்களே பார்த்துக்கொள்வோம். கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்த தருணத்தை பயன்படுத்தி ராஜன் மீதான கேசை வலிமையாக்க எங்களால் எளிதாக முடியும். அதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் என்று நினைக்கின்றீர்கள்.

    நான் சொல்லியுள்ளவற்றில் எது தவறு என்று சொல்கின்றீர்கள்? ராஜன் வக்கிர புத்தி கொண்டவர் என்று சொல்கின்றேன். அது தவறா? எத்தனை ஆதாரங்கள் வேண்டும். நான் சொல்லியுள்ளவற்றை தவறு என்று நிரூபிப்பீர்கள் என்றால் மன்னிப்பு கேட்க தயார்.

    நன்றி...

    பதிலளிநீக்கு
  4. "இதுவரை இது போன்ற விசயத்தில் ஒன்றும் செய்யாமல், இப்போது மட்டும் செய்கின்றார்களே என்ற கேள்விக்கு இப்போதாவது செய்தார்களே "

    இதுவரை பல ஏழை வறிய பெண்களுக்கு நியாயம் கிடைக்காது. ஆனால் ஒரு மேல் தட்டு பெண் பாதிக்கப்பட்டவுடன் பொங்கி எழுந்த அரசும், காவல் துறையும் உடனடியாக கைது செய்துள்ளது.
    அப்போ ஏழைக்கு ஒரு நியாயம், பணக்காரனுக்கு ஒரு நியாயம்.

    உங்களுக்கு பிடிக்காதவன் பிடிபட்டவுடன் பாய்ந்து வந்து நியாயம் பேசுகிறீர்கள். ஆனால் இதுவே உங்களுக்கு பிடித்த ஒருவனுக்கு நடந்தால் இந்த நியாயம் வருமா?
    உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவனுக்கு வந்தா தக்காளி சட்னி

    வந்திய தேவன்

    பதிலளிநீக்கு
  5. ராஜன் உத்தமர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் சின்மயி விடயத்தில் அவர் ஆபாசமாக உரையாடியதட்க்கு ஆதாரம் இல்லை. ராஜனின் பெயரை போட்டு வேறு ஒருவர் தான் உரையாடியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் குறிப்பிடுவது போல் பார்த்தால் பிரபல பதிவர் மர்மயோகியும் உள்ளுக்குத்தான் போக வேண்டும். அவருடைய பதிவுக்கும் ராஜனின் பதிவுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை ஆசிக்.

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு ராஜனை முன்பே தெரியும். எனக்கு சின்மயி விடயம் வெளிவரும் வரை தெரியாது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளியாகவே ஆக்கி ஒரு தலை பட்சமாக காவல் துறையும்,மீடியாக்களும் ஏன் நடந்து கொண்டது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பதிலளிநீக்கு
  8. என்ன இருந்தாலும் ஹாஜா அந்த ராஜனிகாந்த விருந்து பதிவு சூப்பர்.

    பதிலளிநீக்கு
  9. @ வன்னிய தேவன்,

    //இதுவரை பல ஏழை வறிய பெண்களுக்கு நியாயம் கிடைக்காது. ஆனால் ஒரு மேல் தட்டு பெண் பாதிக்கப்பட்டவுடன் பொங்கி எழுந்த அரசும், காவல் துறையும் உடனடியாக கைது செய்துள்ளது.
    அப்போ ஏழைக்கு ஒரு நியாயம், பணக்காரனுக்கு ஒரு நியாயம்.//

    உங்கள் மீதும் அமைதி நிலவுவதாக... இதற்கு தான் நான் பதிலில் தெளிவாக குறிப்பிட்டேன். "மற்றவர்களை இதுநாள்வரை தண்டிக்கவில்லை. இப்போதும் மட்டும் இப்படி நடக்கின்றது. அவர்களையும் சேர்த்து தண்டியுங்கள்" என்று கேட்பது நியாயம். அதைவிடுத்து "இதுவரை தவறை தண்டிக்கவில்லை, இப்போதும் விட்டுவிடுங்கள்" என்று கூறுவது எம்மாதிரியான அணுகுமுறை? இது ஆரோக்கியமான சமூகத்திற்கு வித்திடுமா? யோசியுங்க...

    //உங்களுக்கு பிடிக்காதவன் பிடிபட்டவுடன் பாய்ந்து வந்து நியாயம் பேசுகிறீர்கள்//

    தவறு. இந்த விசயத்தில் நான் கருத்து தெரிவிப்பதை இதுவரை தவிர்த்தே வந்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருக்க விரும்புகின்றேன் (அதே நேரம் இந்த பிரச்சனையில் நான் தூண்டப்படாமல் இருப்பதும் நல்லது) ஆனால் இந்த பதிவு உண்மையை முழுமையான உணராத பதிவு. அதனை தெளிவுப்படுத்தவே இங்கே ஆஜர்.

    உங்களிடமும் கேட்கின்றேன். ராஜன் வக்கிர புத்தி கொண்ட ஆள் என்கின்றேன். அதை நீங்கள் மறுப்பீர்களா?

    //ஒருவனுக்கு நடந்தால் இந்த நியாயம் வருமா?
    உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவனுக்கு வந்தா தக்காளி சட்னி //

    யாருக்கு வந்தாலும் ரத்தம், ரத்தம் தான்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஆசிக் இந்த விடயத்தை நாம் விவாதிப்பதால் நமக்கு ஒரு நன்மையையும் இல்லை. ஆனால் இதையே வெளியில் இருந்து பார்த்தோமானால் நல்ல திரில்லர் படம் உத்தரவாதம்.
    ஆசிக் இந்த விடயத்தை நாம் விவாதிப்பதால் நமக்கு ஒரு நன்மையையும் இல்லை. ஆனால் இதையே வெளியில் இருந்து பார்த்தோமானால் நல்ல திரில்லர் படம் உத்தரவாதம்.
    பொதுவாக ராஜன் ஒரு மோசமான கருத்துகளை பொதுவெளியில் போடுபவர் என்பதில் மாற்று கருத்து இல்லை.
    இதற்கு முன்பே மீனா கந்தசாமி இவ்வாறாக (மாட்டிறைச்சி விவகாரம்) பாதிக்க பட்டும் ஒரு நடவடிக்கை இல்லை. சின்மயிக்கு என்ன முன்னுரிமை? ஐயராத்து பெண் என்பதாலா (உண்மையும் அதுதான்) என்று பொதுவாக கதைக்கிறார்கள். நமக்கு எதற்க்கு வீண் வம்பு.

    வாத்திய தேவன் இதைதான் கொஞ்சம் கடுமையாக கூறியுள்ளார். நான் கூறிய கருத்துகள் அனைத்தும் பொதுமக்கள் பேசியவை. எனது சொந்த கருத்துகள் அல்ல.

    நான் ஏழை என்னால் கோட் கேசுக்கு போக முடியாது.

    பதிலளிநீக்கு
  11. @ செந்தில்குமரன்,

    //நீங்கள் குறிப்பிடுவது போல் பார்த்தால் பிரபல பதிவர் மர்மயோகியும் உள்ளுக்குத்தான் போக வேண்டும். அவருடைய பதிவுக்கும் ராஜனின் பதிவுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை ஆசிக்//

    தவறு யார் செய்தாலும் தண்டிப்பட வேண்டியவர்களே. நான் உங்களை போன்றவர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். இதுநாள்வரை தவறு தண்டிப்படவில்லை என்பதற்காக இப்போது நடவடிக்கை எடுக்கப்படும்போது அதனை கண்டிக்காதீர்கள். இதனுடன் சேர்ந்து அதுவும் தண்டிப்பட வேண்டும் என்று கூறுங்கள். அதுவே ஆரோக்கியமான அணுகுமுறை.

    //ஆசிக் இந்த விடயத்தை நாம் விவாதிப்பதால் நமக்கு ஒரு நன்மையையும் இல்லை//

    இல்லை சகோ. இருக்கு. நாம் பொது வெளியில் இப்படியாக பேசும் ஒவ்வொரு அசைவும் உளவுத்துறையால் கவனிக்கப்படுகின்றன என்பதே என் யூகம். இங்கு என் கருத்திற்கு மறுப்பு தெரிவித்து, நான் தூண்டப்பட்டு ராஜன் குறித்து சொல்லும் ஒவ்வொரு கருத்தும் உளவுத்துறை கவனிக்கும் என்பதே என் எண்ணம்.

    ஆகையால். வெளிப்படையாக பேசப்படும் எதுவும் வீணாக போவதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு வினை உண்டு. நன்றி...

    இனி இது குறித்து நான் இங்கே பேசுவதாக இல்லை (அவசியம் ஏற்பட்டால் ஒழிய).

    நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாம் பொது வெளியில் இப்படியாக பேசும் ஒவ்வொரு அசைவும் உளவுத்துறையால் கவனிக்கப்படுகின்றன என்பதே என் யூகம்.// - உண்மை. இனி கவனமாகவே இருக்க வேண்டும்.

      நீக்கு
    2. ##தவறு யார் செய்தாலும் தண்டிப்பட வேண்டியவர்களே. நான் உங்களை போன்றவர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். இதுநாள்வரை தவறு தண்டிப்படவில்லை என்பதற்காக இப்போது நடவடிக்கை எடுக்கப்படும்போது அதனை கண்டிக்காதீர்கள். இதனுடன் சேர்ந்து அதுவும் தண்டிப்பட வேண்டும் என்று கூறுங்கள். அதுவே ஆரோக்கியமான அணுகுமுறை.##
      ====வரவேற்கத்தக்க நல்ல பாயின்ட் பிரதர்.Aashiq. வெல்டன். கீப் இட் அப்.

      நீக்கு
  12. "இல்லை சகோ. இருக்கு. நாம் பொது வெளியில் இப்படியாக பேசும் ஒவ்வொரு அசைவும் உளவுத்துறையால் கவனிக்கப்படுகின்றன என்பதே என் யூகம். "

    என்னப்பா எவ்வளவு பெரிய குண்டை இப்படி சும்மா தலையில் போட்டு விட்டு போய்விட்டீர்கள். எப்படி நான் இரவில் நிம்மதியாக தூங்குவது. நாம வேற சொந்த பெயரில் வந்திருக்கிறோம் அதுவும் அலுவலக கணனியில். சரி சரி

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. வழக்கு ஆரம்பம் ஆகி விட்டதா...? அப்புறம் வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  15. ஆசிக் அகமதா அல்லது சிட்டிசனா என்று மறுபடியும் ஒரு குழப்பம்!எப்படியிருந்த போதிலும் இருவருக்கும் ஈத் நல்வாழ்த்துக்கள்.

    உங்கள் கருத்தில் பதிவின் கருத்தையும் மீறி 6 பேர் தவிர்த்து பொறுக்கி என்ற ஒற்றைச் சொல்லில் ராஜன் மீதான் வெறுப்புணர்வே வெளிப்படுகிறது.

    //நீங்கள் குறிப்பிடுவது போல் பார்த்தால் பிரபல பதிவர் மர்மயோகியும் உள்ளுக்குத்தான் போக வேண்டும்// என்ற செந்தில்குமாரனின் பின்னூட்டத்துக்கு அமைதியாகி விட்டீர்கள் போல தெரிகிறதே!

    பதிவர் சொல்லியபடி சின்மயி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படத்தான் வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.இரு தரப்பும் சமாதான நிலைக்கு செல்வதே அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படும்.

    பதிலளிநீக்கு
  16. சகோதரர் ராஜ நடராஜன்,

    //உங்கள் கருத்தில் பதிவின் கருத்தையும் மீறி 6 பேர் தவிர்த்து பொறுக்கி என்ற ஒற்றைச் சொல்லில் ராஜன் மீதான் வெறுப்புணர்வே வெளிப்படுகிறது.//

    உங்கள் மீதும் அமைதி நிலவுவதாக....இதுல என்ன சகோ புதுசா கண்டுபிடிக்க இருக்கு. பெண்களின் அங்க அவயங்களை குறிப்பிட்டு மிக மிக கீழ்த்தரமாக பேசுபவரை நாங்க பொறுக்கின்னு தான் சொல்லுவோம். உங்களுக்கு எப்படின்னு தெரியாது. உள்ளத சொன்னா அவர் மேலே எனக்கு வெறுப்புணர்வா?. வேணும்னா ராஜன் வார்த்தைகளில் இருந்து ஒரு நாலு மூணு சொற்றொடர்களை தூக்கி போடுறேன். பார்த்துட்டு சொல்றீங்களா? (எல்லா ஆதாரங்களையும் பேக் அப் எடுத்து வச்சிருக்கேன்). எல்லாரும் பார்க்கட்டும். ராஜனின் கடந்த கால அசிங்கங்களை தோண்டி எடுப்போம். எல்லாருக்கும் பரப்புவோம். எல்லாரும் வந்து காரி துப்பிட்டு போகட்டும். என்ன ரெடியா? எனக்கு என்ன வியப்புன்னா, ராஜன் இன்னும் மாறவில்லை என்பது தான். பதிவுலகை விட்டு வெளியேறிவிட்டார் என்றே நினைத்தேன். ஆனால் ட்வீட்டரில் மையங்கொண்டு இதே கேவலமான செயலை செய்துக்கொண்டிருப்பார் என்பது உண்மையாக ஆச்சர்யமாகவே இருக்கு.

    //என்ற செந்தில்குமாரனின் பின்னூட்டத்துக்கு அமைதியாகி விட்டீர்கள் போல தெரிகிறதே! //

    ஆண்டவா. என் கருத்த நீங்க பார்க்கலையா. குறிப்பிட்ட கருத்தை பார்க்க கூடாதுன்னு எண்ணமா..உங்களுக்காக இன்னொரு முறை **தவறு யார் செய்தாலும் தண்டிப்பட வேண்டியவர்களே**. இப்பவாவது தெரியும் என்று நினைக்கின்றேன்.

    நன்றி..

    பதிலளிநீக்கு
  17. சகோ.ஆசிக்!நான் ஒரு சராசரி வாசகனும் கருத்தாளன் மட்டுமே!யார் என்ன செய்கிறார்கள் என்ற ஆய்வுகளிலோ,ஸ்கீரின் ஷாட் எடுப்பதும்,வார்த்தை தொகுப்புகளுக்கான ஆதாரத்தையும் செய்வதில்லை.அந்த கணங்களில் ஏற்படும் கருத்து பரிமாறல்களோடு அடுத்த பதிவுக்கு போய் விடுவதே வழக்கம்.

    உங்கள் பேக்கப் உழைப்பிலேயே தெரிகிறது உங்களின் வன்மம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. " முன்னால போனா முட்டுது, பின்னால வந்தா உதைக்குது!!! " இதுதான் உங்களின் வன்மமோ!!!

      **************************************

      ஆலமரமும்,பஞ்சாயத்து தலைவர் தீர்ப்பும் :

      சகோ.ராஜ நடராஜன் ஊரே மதிக்கும் ஒரு பஞ்சாயத்து தலைவர்..அவரிடம் ஒரு வழக்கு வருகிறது..வழக்கம் போல் 18 பட்டியும் ஆலமரத்து அடியில் பஞ்சாயத்து கூடுகிறது...வழக்கு நடைபெறுகிறது...இருதரப்பும் தங்களின் வாதங்களை முன் வைக்கின்றனர் ..ஆனால் வழக்கு நடைபெறும்போது தலைவர் தூங்கிவிடுகிறார்....தலைவர் இப்படி இருக்கிறாரே என்று முகம் சுளிக்கின்றனர் மக்கள்...தலைவரை எழுப்பி விட்டனர்.. தலைவர் வழக்கு நடைபெறும்போது தான் தூன்கிவிட்டரே எப்படி தீர்ப்பு சொல்ல போகிறார் என்று மக்களுக்கு ஆவல் !!!கடைசியாக ஒருவர் வந்து "தாத்தா நான் பார்த்தேன்" என்கிறார்...ஆஹா..!!! தலைவருக்கு பொறி தட்டிவிட்டது..

      தலைவர் சொன்ன தீர்ப்பு:

      " பிரச்சனை அவங்களுக்கு இடையே நடக்குது..அது அவங்க சொந்த விஷயம் ...அடுத்தவங்க விசயத்துல தலையிடுற நீதாண்டா குற்றவாளி...உன்ன இந்த 18 பட்டிய விட்டே ஒதுக்கி வைக்கிரண்டா.இது தாண்ட தீர்ப்பு "

      அய்யா!!!..என்ன சொல்லுறீங்க நான் சாட்சி சொல்ல வந்தவன் ..சாட்சி சொல்ல வந்தது குத்தமாயா..?!!!நீங்களும் தூங்கி தீர்ப்பையும் தூங்க வச்சுட்டீங்களே..??!!!

      தலைவர் சொல்கிறார்.."நான் தூங்கவில்லை,சிந்தித்தேன்!!!"

      அடிபொடிகளுக்கு மத்தியில் "ஸ்கட்டு" கிழியாமல் செல்கிறார்..தலைவர்

      ("எசமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்..பாடல் எங்கோ ஒலிக்கிறது")

      நீக்கு
  18. @Aashiq Ahamed

    சின்மயி கருத்துக்கள் ஏற்கப்பட முடியாதவை. ஆனால் அவருடைய தவறும் ராஜனுடைய தவறும் ஒன்றாகாது. //

    நண்பரே! நாம் அனைவரும் ராஜன் செய்ததே மிக பெரிய தவறு என்றும், சின்மயி செய்தது சிறிய தவறு என்றும் எடுத்துகொள்ள முடியாது... ராஜனை விட சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்தே மிக பெரிய தவறு... ஏனெனில் ராஜன் கூறியதாக சொல்லப்படும் கருத்தால் மன உளைச்சலுக்கு ஆளானது சின்மயியும் அவரது குடும்பமுமாக இருக்கலாம்... ஆனால் சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்தில் மன வருத்தத்திற்கு உட்பட்டது மீனவ மற்றும் தலித் சமுதாயமே என்கிற ரீதியில் நீங்கள் சொல்லலாமே... நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், இங்கே பதிவுலகிலும் சமூக வலைப்பின்னல்களிலும் சின்மயிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாரும் ராஜனின் விசுவாசிகளோ அவரின் நலம் விரும்பிகளோ இல்லை.. சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்துக்களினால் மனம் வருந்துபவர்களே... இங்கே நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் எழலாம். அப்படி பொதுவாக பேசுபவர்கள் ஏன் சின்மையினை பற்றிய ராஜனின் விமர்சனத்திற்கு எதிராக குரல் கொடுக்க வரவில்லை என்று... காரணம் பிரச்சினையின் ஆரம்பமே சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்து, ராஜனின் மீதான விரைவான நடவடிக்கை எடுத்தவர்கள் சின்மயி மீதும் எடுக்க தவறியது என்பது... இந்த நடவடிக்கை ஒரு தனி நபர் மன உளைச்சலுக்கு ஆளாகும்போது பிரபலம் என்பதால் உடனடி நடவடிக்கை என்பதும்..ஒரு சமூகமே மன உளைச்சலுக்கு ஆளானாலும் அவர்கள் சாதரணமானவர்கள் என்றால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது என்ற ஒருதலைபட்சமாகவே கருதப்பட வேண்டி இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  19. #ஒரு தனி நபர் மன உளைச்சலுக்கு ஆளாகும்போது பிரபலம் என்பதால் உடனடி நடவடிக்கை என்பதும்..ஒரு சமூகமே மன உளைச்சலுக்கு ஆளானாலும் அவர்கள் சாதரணமானவர்கள் என்றால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது என்ற ஒருதலைபட்சமாகவே கருதப்பட வேண்டி இருக்கிறது...#


    இந்த பதிவின் சாரம்சமே இதுதான்...நன்றி.... புரிந்துகொண்டமைக்கும்,தெளிவாக கருத்துரை கூறியதற்கும்.....

    பதிலளிநீக்கு
  20. @ ஜெயசீலன் ஆறுமுகம்,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக...வெளியூர் சென்றிருந்ததால் பதிலலிக்க தாமதம். மன்னிக்கவும்.

    //ராஜனை விட சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்தே மிக பெரிய தவறு... ஏனெனில் ராஜன் கூறியதாக சொல்லப்படும் கருத்தால் மன உளைச்சலுக்கு ஆளானது சின்மயியும் அவரது குடும்பமுமாக இருக்கலாம்... ஆனால் சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்தில் மன வருத்தத்திற்கு உட்பட்டது மீனவ மற்றும் தலித் சமுதாயமே என்கிற ரீதியில் நீங்கள் சொல்லலாமே...//

    உங்களின் இப்படியான கருத்துக்கள் அதிர்ச்சியையும், அயர்ச்சியையும், வருத்தத்தையுமே வரவைக்கின்றன. அப்படியே நீங்கள் சொன்னதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் கூட இங்கே மிகப்பெரிய லாஜிக் மீறல் உள்ளது. அதாவது, ராஜனின் வக்கிர சிந்தனை ஒட்டுமொத்த பெண்ணினத்தையே கேவலப்படுத்துவதாகவே பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். உண்மையும் அது தான். இப்போது உங்களிடம் கேட்கின்றேன், ஒட்டுமொத்த பெண்ணினத்தை அசிங்கப்படுத்தியது பெரியதா? அல்லது நீங்கள் சொல்வது போல மீனவ சமூகத்தை அசிங்கப்படுத்தியது பெரிதா?

    நிச்சயம் இப்படியான என்னுடைய கேள்வி உங்களுக்கு எரிச்சலையும், லாஜிக் மீறலையுமே தரும். அப்படிதான் இருக்கின்றது உங்கள் வாதமும்.

    சின்மயி தன்னை நோக்கி கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறியுள்ளார். மேலும் அவருடைய "நான் மீன்களை கொல்வதில்லை" என்ற வாக்கியம் மீனவ சமுதாயத்தை நோக்கிய explicit statement-டும் அல்ல. அதனை எப்படியும் புரிந்துக்கொள்ள முடியும். நீங்க சட்டதுறை குறித்த புரிதலை கொண்டிருக்கலாம் என்பது என் எண்ணம். இப்படியான பொதுவான வாக்கியங்களுக்கு நான் அறிந்த வரை சட்டத்தால் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது பண்ணவும் முடியாது. (மேலும், சின்மயி செய்தது இந்திய சட்டப்படி தவறென்றால் ராஜனுடன் சேர்த்து அவரும் தண்டிக்கப்படுவதில் மாற்றுக்கருத்தில்லை)

    ராஜனை பொருத்தவரை நிலைமை அப்படியே தலைகீழ். அவருடைய தவறுக்கு வெளிப்படையான ஆதாரங்கள் உள்ளன. மேலும் சின்மயி தன் குற்றச்சாட்டில் அரசியல் தலைவர்களை ராஜன் போன்றோர் கீழ்த்தரமாக விமர்சித்ததையும் சேர்த்துள்ளார். இவற்றுக்கும் தெளிவான ஆதாரங்கள் உண்டு. இப்படியான சூழ்நிலையில் ராஜன் மீதான கைது தவிர்க்கப்பட முடியாதது.

    உங்களின் இதுக்குறித்த பார்வையும் சரி, ஒப்பிடுதலும் சரி எனக்கு தவறாகவே படுகின்றது.

    //காரணம் பிரச்சினையின் ஆரம்பமே சின்மயி கூறியதாக சொல்லப்படும் கருத்து//

    சகோ. ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள். ஒரு கருத்து பொதுவெளியில் வைக்கப்படும் போது அதற்கு எதிர்க்கருத்து வரத்தான் செய்யும். அது சரியோ தவறோ கண்ணியமான முறையில் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஒருவருக்கு உரிமை உண்டு. மாற்றுக்கருத்து கூடாது, அது என்னை தூண்டுகின்றது, அதனால் நான் எப்படியும் இறங்குவேன் என்றால் இவ்வுலகில் பல விவாதங்களும், தீர்வுகளும் கிடைக்காமலே போய்விடும்.

    நன்றி...

    பதிலளிநீக்கு
  21. @ ராஜ நடராஜன்,

    :-) :-)

    இப்ப வெறுப்புணர்ச்சியை விட்டுட்டு வன்மத்துக்கு ஓடியாச்சா? :-) நீங்க ஒரு உருப்படியான ஆளா இருந்தா என்ன செய்திருக்கணும், நீங்க சொன்ன குற்றச்சாட்ட நான் மறுத்ததுக்கு பதில் சொல்லிருக்கணும். அத விட்டுட்டு இப்படி அடுத்ததுக்கு தாவுனா எப்படி?

    இப்ப நான் வன்மத்துக்கு விளக்கம் கொடுத்தா வேற எதுக்காவது ஒடுவீங்க...அப்படித்தானே? நல்லா இருக்கு உங்க நியாயம்.

    சரி சரி மேட்டருக்கு வாங்க. வார்த்தை பயன்பாடுகளில் ராஜன் ஒரு பொறுக்கி என்று கூறினேன். இதனை நீங்க மறுக்கின்றீர்களா? ஆதாரத்த ஒன்னுவொன்னா எடுத்து போட நான் ரெடி...

    அட அப்புறம் பாருங்களேன். இங்கே ராஜன பத்தி நான் கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்லல. ஆக எல்லாருக்குமே ராஜனின் புத்தி தெரிந்திருக்கு. ரொம்ப சந்தோசம். :-) :-)

    பதிலளிநீக்கு
  22. //பிரபலமாக இருந்தால் அவர் சொல்வது எல்லாம் உண்மை ஆகிவிடுமா?// - அதானே? இது என்ன நியாயம்? இரு பக்கமும் கூர்மையாக இருந்தால் அல்லவா அது நல்ல வாள்?

    பதிலளிநீக்கு
  23. அந்த 'ஆளின் ஆள் அசிங்க ராஜனுடன்' அப்போதே சண்டை போட்டு திருத்த முயற்சி செஞ்சு, 'இது இனி திருந்துற கேசு இல்லை; பட்டாத்தான்ய புத்தி வரும்னு' அறிந்து அப்போதே விலகியாச்சு. ஆனாலும், புலிவாலை பிடிச்ச கதையா என்னைக்காவது ஒருநாள் மாட்டித்தானே ஆகணும்? மாடிக்கிருச்சு. ஆனா வசமாத்தான் மாட்டி இருக்கு.

    'இந்த அரெஸ்ட் ஒன்னும் சின்மயிக்காக எல்லாம் நடந்து இருக்காது' என்று தான் நான் நினைக்கிறேன். அந்த கம்பலையிண்ட வாங்கிய போலிசு, 'சும்மா அப்படி என்னதான் பயபுள்ள டுவிட்டருளே சொல்லி இருக்கு'ன்னு தேடி பார்த்து இருப்பாங்க. அங்கெ, சின்மயியை பத்தி அவங்க அம்மாவை பத்தி பேசியதெல்லாம் இப்போ ஒரு மேட்டரே இல்லை. பிரதமரையும் முதல்வரையும் சேர்த்து அசிங்கமா ஆபாசமா பேசினா சும்மா விடுவாங்களா? இதை வச்சி ஆளை அமுக்கி, இதை ஒரு பாடமா நம்ம பதிவுலகுக்கு காட்டி, 'ஒரு சினிமா பாடகியையே ஆபாசமா பேசினா இந்த நிலைன்னா... முதல்வரை பேசினா...?' அப்டின்னு ஒரு பயத்தை வலைஉலகில் விதைக்கத்தான் இந்த நடவடிக்கைன்னு நான் நினைக்கிறேன். இதை வச்சு ஒரு புரோமோஷன் வாங்கிரலாம் இல்லே. விடுவாங்களா போலிசு?

    அப்புறம், அப்படி என்னதான் ராஜன் ஆண்டு கோ சொல்லிச்சுன்னு இங்கன போயி பாருங்க.
    http://www.use.com/0579a6a74773f1b6118e#photo=1

    அப்புறம், அந்த சின்மயி அப்படி என்னதான் மீனவர் பத்தி சொல்லிச்சுன்னு இங்கன போயி பார்த்துகிடுங்க மக்கள்ஸ்.
    http://www.maamallan.com/2012/10/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  24. @Aashiq Ahamed

    //உங்களின் இப்படியான கருத்துக்கள் அதிர்ச்சியையும், அயர்ச்சியையும், வருத்தத்தையுமே வரவைக்கின்றன. //நிச்சயம் இப்படியான என்னுடைய கேள்வி உங்களுக்கு எரிச்சலையும், லாஜிக் மீறலையுமே தரும். அப்படிதான் இருக்கின்றது உங்கள் வாதமும். //


    அதிர்ச்சியடையவோ ,எரிச்சலடையவோ நான் உங்களைபோல ஒருதலைபட்சமாக விவாதத்திற்கு வரவில்லை...

    முதலில் நான் கூறிய உட்கருத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்... ராஜனுக்காக வக்காலத்து வாங்க வரவில்லை.. அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துவிட்டது... இனி சட்டம் கடமையை செய்யுமா இல்லை வேடிக்கை பார்க்குமா என்று விரைவில் தெரியும்.... தவறு செய்தவர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்...

    //ராஜனின் வக்கிர சிந்தனை ஒட்டுமொத்த பெண்ணினத்தையே கேவலப்படுத்துவதாகவே பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.//
    ராஜன் ஒட்டுமொத்த பெண்ணினத்தையே கேவலப்படுத்தி எந்த கருத்தும் சொல்லவில்லை.. தனிப்பட்ட மோதலாக சின்மயி மீதும், அவரது தாயாரின் மீதும் சில பிரபலங்களின் மீதுமே தவறான கருத்தை வெளியிட்டுள்ளார்... இது எப்படி ஒட்டுமொத பெண்ணினத்தையே அசிங்கப்படுத்தியதாக எடுத்துக்கொள்ள முடியும்? எனினும் சின்மயியும் ஒரு பெண்.. பலரும் பார்க்கும் சமூக வலைப்பின்னலில் தகாத வார்த்தைகளில் கருது கூறியது ராஜனின் தவறே... அதற்குத்தான் அவர் உள்ளே இருக்கிறார்...

    சின்மயி கூறியதாக சொல்லும் கருத்துக்கள் இரண்டு...
    1 மீனவர்கள் மீன்களை கொல்வது பாவமில்லையா?

    இதை எதற்காக அவர் கூற வேண்டும்? இதன் மூலம் அவர் சொல்ல வருவதென்ன? மீன்களை கொல்வது பாவம் என்ற உலக மகா சிந்தனையை சொல்ல வருகிறாரா? அப்படி என்றால் கொசு, எறும்பு, தேள் போன்றவைகளும் உயிர்களே... அவைகளை அவர் தற்காப்புக்காக உபயோகிக்கும் PETA அமைப்பு இதுகுறித்து சிந்திக்கலாமே...

    மாறாக மீனவர்கள் என்ற சொல்லாடலே ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தை குறிப்பதே ...

    2 so called "தாழ்த்தப்பட்டவர்கள்"

    இதுவும் சின்மயி கூறியதாக சொல்லப்படுவது... இட ஒதுக்கீடு சம்பந்தமாக உரையாடலில் அவர் உபயோகித வார்த்தை இது...

    தாழ்த்தப்பட்டவர்கள் என்னும் சொல்லாடல் ஒட்டுமொத்த தலித் இனத்தையே குறிப்பிடுவதாகும்... இந்த கருத்தை நீங்கள் வரவேற்பீர்களா? இல்லை இதுவும் உங்கள் பார்வைக்கு(!) தவறான சொல்லாடலாக தெரியவில்லையா?

    //இப்படியான பொதுவான வாக்கியங்களுக்கு நான் அறிந்த வரை சட்டத்தால் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.//
    சின்மயின் கருத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலும் என்பதாலேயே பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்... ஆனால் மேல் நடவடிக்கை இன்றி பாரபட்சம் காட்டபடுவதாக தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  25. // எனக்கு அந்த ராஜனை பற்றியோ,அவருடைய பதிவை பற்றியோ இதுவரை எனக்கு தெரியாது.//

    -------------------------------------ஹாஜா மைதீன்,

    இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த பதிவினை எழுதியிருக்க தேவையே இல்லையே ஹாஜா ?

    பதிலளிநீக்கு
  26. இதையும் படிச்சு பாருங்க
    http://vovalpaarvai.blogspot.in/2012/10/blog-post_24.html

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....