04 அக்டோபர் 2012

மோடியா இந்திய நாட்டின் பிரதமர் ?நெவர்!



குஜராத்தில் வரும் டிசம்பர் 13 மற்றும் 17 தேதிகளில் சட்டமன்ற  தேர்தல் நடைபெற இருக்கிறது....மதவெறி கொண்டு மனித உயிர்களை  வேட்டை ஆடிய மோடி தொடர்ந்து இருமுறை முதலவர் ஆனதற்கு வலுவான எதிர்க்கட்சி இல்லாததும் ஒரு முக்கிய காரணம்....அது இம்முறை  தகர்க்கப்படவேண்டும்..

ரத்தகரை படித்த கைகளுடன்  மோடி  மீண்டும் முதலமைச்சர் கனவில் மிதந்து வருகிறார்....அது மட்டுமா  அடுத்த நாடாளுமன்ற  தேர்தலிலும்  பாஜக வின்  பிரதமர் வேட்பாளர் என  செய்தியை கசிய வைத்து கொண்டு இருக்கிறார்...ஆனால் அதற்கு பாஜக வுலயே எதிர்ப்பு அதிகமாகி வருகிறது....

ஆனால் சில மத வெறி பிடித்த மனிதர்களின் பார்வைகளுக்கு  மட்டும் மோடி பிரதமர்  வேட்பாளராக  தெரிகிறார்...நாடாளுமன்ற  தேர்தலுக்கு  முன்பாக  இந்த  சட்ட மன்ற தேர்தலில்  அந்த  கேடியின் முகத்திரை கிழிந்தால்  மட்டுமே அந்த மதவெறியனின் பிரதமர் கனவு   வெறும் கனவாகவே போகும் .......


ஒரு வேளை  அப்படிப்பட்ட  துரதிர்ஷ்டமான சூழ்நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டால்?நினைக்கவே  பயங்கரமாக  இருக்கிறது....

நான் எழுதிய வரிகள்  கூட சிலருக்கு ஒருதலை பட்சமாக  தெரியலாம்....

 இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார்  ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளதை பாருங்கள்...இவரை அறியாதவர்கள் எழுத்து துறையில் இருக்க முடியாது...காந்தி முதல் "மண்"மோகன்  சிங்  வரை இவரது கேள்விகளுக்கு பதில் சொல்லாதவர்  யாரும் இல்லை...91 வயதிலும்  14 மொழிகளில் 80 பத்திரிக்கைகளில்  கட்டுரைகள்  எழுதி வருகிறார்...

கேள்வி: ராகுல் காந்தி -நரேந்திர  மோடி ....இந்திய  பிரதமர்  போட்டி இவர்களி டையே தான் இருக்குமா?

குல்தீப்  நய்யார்:  இருவருமே மோசம்...சோனியா காந்தியின்  மகன் என்பதிலாயே ராகுல்  பிரதமர்  பதவிக்கு  முன்னிறுத்தப்படுகிறார்...மற்றபடி  அவருக்கு  பிரதமர்  ஆவதற்கான  எந்த தகுதியும் இல்லை.....இந்து முஸ்லிம் கலவரத்தால் என் பிறந்த ஊரான சியால்கோட்டை  விட்டு வெளியேறியபோது "இனி இந்தியாவில் மதத்தின்  பெயரால் எந்த உயிரும் போக கூடாது"என வேண்டி கொண்டே இந்தியாவுக்குள் நுழைந்தேன்...ஆனால் நரேந்திர மோடி குஜராத்தில்  அரங்கேற்றிய  கொடூரத்தை  பார்த்து விட்டு என் கண்களில் ரத்த  கண்ணீர்  வடிந்தது ...தூக்கம் வராமல் மூன்று மாதங்கள்  தூக்க  மாத்திரை போட்டு தூங்கினேன்...அவரா இந்திய  நாட்டின் பிரதமர்?நெவர்!...

பொதுவான இவர் போன்ற பத்திரிக்கையாளர்களின்  கருத்தையுமா  மோடியை தலை கால் புரியாமல் ஆதரிப்பவர்கள் புறக்கணிக்க முடியும்?!






16 கருத்துகள்:

  1. இதை சொல்லலும்னு தோணுச்சு .....

    அப்பாவி முஸ்லீகளை பாத்தா டெரர்ரா தெரியுதே?

    சென்னையில் சொகுசு விமானமான
    `ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

    தீவிரவாதிகளா என்று போலீசார் விசாரணை


    ஆலந்தூர், அக்.4-

    சென்னையில் இருந்து டெல்லி செல்லும் சொகுசு விமானமான `ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் புகைப்படம் எடுத்த கேரளா வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    `ட்ரீம் லைனர்' விமானம்

    சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு டெல்லிக்கு ஏர்-இந்தியா `ட்ரீம் லைனர்' விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 206 பயணிகள் தயாராக இருந்தனர்.

    விமானம் புறப்பட இருந்த நேரத்தில் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள சொகுசு இருக்கையில் பயணம் செய்ய இருந்த

    கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அமீத்தாவா (வயது 35), மன்சூர் (24) ஆகியோர்,

    "நாங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை'' எனக்கூறி வெளியே செல்ல முயன்றனர். விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை என்று கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.

    செல்போனில் புகைப்படம்

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

    மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை, பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி பார்த்தனர்.

    அதில் `டரீம் லைனர்' விமானத்தின் அனைத்து பகுதிகளும், விமானி அறைகளும் புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார், உளவுத் துறையினர் மற்றும் கிïபிராஞ்ச் போலீசார் வந்து 2 கேரளா வாலிபர்களிடமும் விசாரித்தனர்.

    அவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருந்தார்களா? என பயந்து, விமானத்தில் இருந்த 204 பயணிகளையும் கீழே இறக்கி விமானத்தில் சோதனை நடத்தினார்கள்.

    அதில் வெடிகுண்டு ஏதுவும் இல்லை என தெரியவந்தது.

    தீவிர விசாரணை

    இதையடுத்து மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் 13/4 மணி நேரம் தாமதமாக பகல் 12.30 மணிக்கு `ட்ரீம் லைனர்' விமானம் புறப்பட்டு சென்றது.

    கேரளா வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில், மன்சூர், சுற்றுலா நிர்வாக துறையில் இறுதி ஆண்டு படித்து வருவதாகவும், அமீத்தாவா கொச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

    இவர்கள் ஏன் `ட்ரீம் லைனர்' விமானத்தை புகைப்படம் எடுத்தனர்?.

    இவர்கள் தீவிரவாதிகளா அல்லது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


    SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=762532&disdate=10/4/2012


    நூற்றுக்கணக்கான இணையதளங்களில் `ட்ரீம் லைனர்' விமானத்தை பற்றிய அனைத்து விபரங்களும்.


    விரிவாக `ட்ரீம் லைனர்' விமானத்தின் அனைத்து உட்பகுதிகளின் புகைப்படங்களும் காணொளிகளும் ஏர் இந்தியா `ட்ரீம் லைனர்' உட்பட‌ இருக்கின்றன.

    அதிலொன்று இதோ சொடுக்கி பார்க்கவும்.


    இதோ சொடுக்கி >>>> Air India 787-8 Dreamliner Cabin Walk-through <<<< பார்க்கவும்.


    சொடுக்கி >>>>> Photos and Videos: Air India's Boeing 787-8 Dreamliner cabin interiors revealed பார்க்கவும்.



    இந்த விடியோவில் உள்ளதை விடவா அமீத்தாவா (வயது 35),

    மன்சூர் (24) ஆகியோர் தங்கள் செல்போனில் படம் பிடித்திருப்பார்கள் ?


    ஆயிரக்கணக்கான மறுக்கமுடியாத சாட்சியங்கள் இமயமலை குவிந்து இருந்தும் கொலைகார அத்வானி, பால் தக்கரே, மோடி போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் இஸட் பாதுகாப்புடன் வள‌ர்க்கும் இந்திய அரசாங்கம்

    இந்தியாவில் முஸ்லீம் அப்பாவிகளை எந்த நொண்டிச்சாக்கிலும் கைது செய்யலாம் என்னும் வன் கொடுமையை இதிலிருந்து விளங்கி கொள்ளுங்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ...வருகைக்கும்,விளக்கமான கருத்துரைக்கும்...

      நீக்கு
    2. வாஞ்சூர் ஐயா....சாரி...உண்மைகள் ஐயா...

      தலைப்புக்குச் சம்மந்தமாக ஏதாச்சும் சொன்னா பரவாயில்லை. எங்க பார்த்தாலும் பதிவுக்கு சம்மந்தம் இல்லாத எதையாச்சும் கிறுக்கிட்டுப் போறீங்க. அதுக்கு பதிவு ஆசிரியர்களும் நன்றி தெரிவிக்குறாங்க வேற வழியில்லாமல். பார்த்து செய்யுங்க ஐயா.

      நீக்கு
  2. மோடி பிரதமரானால் நாடு தாங்காது...

    பதிலளிநீக்கு
  3. வரும் சட்டமன்ற தேர்தலில் குஜராத் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்....

    பதிலளிநீக்கு
  4. ”மதத்தின் பெயரால் எந்தவொரு உயிரும் போகக் கூடாது”-குல்தீப் நய்யார்.

    என்னுடைய வேண்டுதலும் இதுதான்.

    பதிலளிநீக்கு
  5. மோடி பிரதமராக வேண்டும் என்பதே என் விருப்பம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. 'முஸ்லிம்களின் ரத்தத்தினை ருசிச்சி குடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!' என்று நேரடியா சொல்ல வேண்டியது தானே..? :-(

      நீக்கு
    3. மோடி பற்றிய நீங்கள் கொண்டிருக்கும் பிம்பத்தை மாற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே !
      மக்களின் விருப்பத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம் !

      நீக்கு
    4. மக்களின் ஆதரவை பெறுவதால் மட்டும் குற்றவாளி நிரபராதி ஆக முடியாது.....இரண்டாவது உலக போரில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் முதலில் வெற்றி மேல் வெற்றி பெற்றாலும் கடைசியில் தோல்விதான் அடைந்தான் ........வரலாற்றில் அவன் பெயர் கொடுங்கோலன் என்றுதான் அழைக்கப்படுகிறது...அதுபோல்தான் மோடியும்...

      நீக்கு
    5. உங்களுடைய கண்களுக்கு கெட்டவராகத் தெரியும் மோடி, எனக்கு நல்லவராக, திறமையானவராக, நேர்மையானவராகத் தெரிகிறார். உங்கள் வரலாற்றில் நீங்கள் கொடுங்கோலனாக எழுதுங்கள். எங்கள் வரலாற்றில் தேசப்பற்று மிக்க ஒப்பற்ற தலைவராக எழுதுகிறோம். வரும் சந்ததியினர் முடிவு செய்யட்டும்.

      நீக்கு
  6. சலாம் சகோ.ஹாஜா,
    சகோ.குல்தீப் நய்யார் போன்ற மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் இப்படி சொல்வது வசாதாரணமான ஒன்றல்ல. இக்கருத்து இன்னும் தீவிரமாக இந்தியா முழுக்க பரவ வேண்டும். ஏற்கனவே, 'குஜராத்துக்கு வெளியே ஒரு தொகுதியில் நின்று வென்று காட்ட முடியுமா மோடியால்?' என்ற சவால் வேறு மோடியின் வயிற்றை கலக்க.... இப்போது இதுவேறு..! என்னத்த சொல்ல..!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....