17 ஆகஸ்ட் 2012

காணாமல் போனவர்கள் (கிராமராஜன்)


கதாநாயகி மட்டும்தான் உதட்டு சாயம் பூச வேண்டுமா என வெகுண்டு எழுந்து உதட்டு சாயம் பூசி நடித்தவர் நம்ம ஆளு......


தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஆளாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறையில் முன்னுக்கு வந்து அவரது நடிப்பால் ரசிகர்களின் தலையை பிய்க்க வைத்தவர்.....


பென்சிலால் மீசையும் வரைந்து நடிக்க முடியும் என நடிப்புக்கு புது இலக்கணம் வகுத்தவர்.....


கதாநாயகன் என்றால் பந்தயத்தில் மாட்டை அடக்க வேண்டும் என்ற விதிமுறையை உடைத்து பாட்டு பாடியே மாட்டை அடக்கியவர்......யாருன்னு தெரியுதா?


வேற யாரு நம்ம ட்ரவுசர் பாண்டி ராமராஜன் தான்.....

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இவரின் கால்ஷீட் கிடைப்பது என்பது அன்றைய தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு இப்ப மின்சாரம் கிடைப்பது மாதிரி...சார் அவ்வளவு பிஸி.........


இவரின் கரகாட்டக்காரன் படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.....ஒரு காலத்தில் ராமராஜன் நடித்து இளையராஜா இசைஅமைத்து எதாவது ஒரு ராசான்னு படத்துக்கு பேரு வச்சால் படம் நூறு நாள்தான்.....


சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியலிலும் கால் பதித்து நாடாளுமன்றம் வரை சென்று வந்தவர் நம்ம ஆளு ...அங்கே அவரு வேற ஒண்ணுமே செய்யல....அது வேற விஷயம்....அவரே இப்ப தன்னுடைய வாழ்வை திரும்பி பார்த்தாலும் தான் எம் பி ஆனதை இன்றும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடுதான் பார்ப்பார்...


ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடித்ததால் சாரின் படங்கள் வரிசையாக ஊத்தி கொண்டன,அவரது மனைவியும் விவாகரத்து பெற்றார்.....கட்சியிலும் செல்வாக்கு இல்லை....அதிமுக வில் வெறும் ஊறுகாயாக மட்டுமே இவர் பயன்படுத்தப்பட்டார் ....

இனி அவருக்கு அரசியலில் எதிர்காலம் இருண்ட காலம்தான்.....ஏனென்றால் இப்போது சீனில் உள்ளவர்களையே ஜெ அலேக்காக பந்தாடி கொண்டு இருக்கிறார்..

நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வைராக்கியமாக இருக்கிறார் நம்ம ஆளு....வேறு குணசித்திர வேடங்கள் குடுத்தால் இவருக்கு நடிக்கவே வராது என்பது வேறு விஷயம்....


காலத்தின் மாற்றத்தால் குணசித்திர வேடங்களில் நடிக்கும் பல முன்னாள் ஹீரோக்களை போல இவர் நடிக்காமல் அடம் பிடித்ததால் நிரந்தரமாக இப்போது காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேர்ந்துள்ளார் நம்ம கிராமராஜன்....

நீதிகதையின் முடிவில் ஒரு நீதி இருப்பதுபோல இந்த பதிவில் உள்ள ஒரு நீதி...காலத்துக்கு ஏற்ப மாறி கொண்டே இருக்கவேண்டும்...!

ஹிண்ட்ஸ் ...இது ஒரு தோண்டி எடுக்கப்பட்ட என்னுடைய பழைய பதிவு....

16 கருத்துகள்:

 1. நல்ல அலசல்
  ஒருவகையில் இவர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களை
  இமிடேட் செய்தே வந்தார்.
  சுய சரக்கு இல்லா எல்லாமும் சில காலம்தான் ஓடும்
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்து பின்னூட்டமிட்டதற்கும் ,ஓட்டளித்ததற்கும் நன்றி ...

   நீக்கு
 2. முதலில் தன்னை வைத்து படம் எடுக்க தயங்கிய பெரிய நிறுவனங்களை விட தனக்கு வாய்ப்பு தன்னத சின்ன நிறுவனத்திற்கு தான் பிரபலமாக இருக்கும் போதும் வாய்ப்பளித்தார் இவர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்....அந்த வகையில் பாராட்டுக்குரியவர் தான்

   நீக்கு
 3. ரஜினியை விட வேகமாக முன்னுக்கு வந்தார் ஆனால் அதே வேகத்தில் சரிவை சந்தித்தார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது?பிடித்த இடத்தை தக்க வைத்து கொள்ள அவருக்கு தெரியவில்லை...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 4. ராமராஜனைப் பற்றிய அறிமுகம் அருமை, நீதி: எம்ஜிஆர் ஒருத்தர்தான் இருக்க முடியும், மத்தவகளை காப்பியடிச்சு அதிக நாள் குப்பை கொட்ட முடியாது, உன்னோட தனித்தன்மைதான் உனக்கு வெற்றியைத் தரும்.

  பதிலளிநீக்கு
 5. கிராமங்களில் இன்னும் இவர் படம் திரை இட்டால், அவ்வளவு நன்றாக ஓடுகிறது.... ...ம்... அதிர்ஷ்டம் சிலருக்கு சுனாமி போல் வந்து சென்று விடுகிறது... (TM 6)

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லா9:09 PM, ஆகஸ்ட் 17, 2012

  தங்களின் எழுத்து நடை எளிமையாகவும்,நகைசுவையாகவும் இருக்கிறது.அப்படியே தங்களின் தளத்தில்
  ஈமெயில் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்தவும்.தெரிய படுத்தவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி....அந்த வசதியையும் செய்து விடுகிறேன்...

   நீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....