29 அக்டோபர் 2012

நன்றிகெட்ட நான்கு பேரும்,கோபப்பட்ட விஜயகாந்தும்!....உண்ட வீட்டிற்கு இரண்டகம்  பண்ணுகிற மாதிரி விஜயகாந்தால் M L A ஆக்கப்பட்டவர்கள் இப்போது பணத்திற்காகவோ அல்லது வேற எதற்காகவோ ஜெயலலிதாவுக்கு வாலாட்ட துவங்கி உள்ளனர்....உண்மையில் விஜயகாந்த் இல்லை என்றால் இவர்கள் எல்லாம் நிச்சயம் MLA  ஆகி இருக்க முடியாது..விஜயகாந்திடம்  கருத்து  வேறுபாடு இருந்தால் ஜெயலலிதாவிடம்  தஞ்சம் புகுவது நன்றி கெட்ட செயல் இல்லையா?!(நன்றியுணர்வு இல்லாததால் இவர்கள் நன்றியை பற்றி என்னவென்று கேட்டதற்காக தலைப்பில் "கேட்ட" என்று முதலில் வந்துவிட்டது..ஹி ஹி எப்படி சமாளிப்பு..!)அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றாலும்  விஜயகாந்தை வைத்துதான் இவர்களுக்கு ஒட்டு விழுந்தது என்பதையும் மறுக்க இயலாது....அப்படி ரோசமுள்ளவர்களாக இருந்தால் MLA  பதவியை ராஜினாமா செய்ய முடியுமா இவர்களால்?!

இப்போது 29 சட்ட மன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள தே மு திக  வுக்கு இந்த 4 பேரின் இழப்பு நிச்சயம் ஒரு பெரிய சரிவுதான்..மேலும் 8 தே மு தி க சட்ட மன்ற உறுப்பினர்களையும் அதிமுக  தரப்பு வளைக்கப்போவதாக செய்தி பரவி   வருகிறது....அப்படி ஒட்டுமொத்தமாக தூக்கி  கொண்டு வந்து அதிமுகவுக்கு  ஆதரவாக செயல்பட வைப்பார்கள்... ஏனென்றால் ஒரு கட்சி பெற்றுள்ள MLA  க்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு  MLA க்கள் தனியாக செயல்பட்டால்தான் அவர்களால் கட்சி தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும்..


அப்படி நடந்தால் சட்டசபையில் தே மு தி கவின்  பலம்  திமுக வின் பலத்தை விட குறைந்துவிடும்....விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் அந்தஸ்தை இழப்பார்....சட்டசபையில் தன்னை எதிர்த்து பேசிய  விஜயகாந்தை அந்த சட்டசபையிலே அவரது ஆட்களை வைத்து அவரை எதிர்த்து பேச வைக்க போகிறார் ஜெயலலிதா..அதுதான் நடக்க போகிறது....இந்த சதுரங்க விளையாட்டெல்லாம் விஜயகாந்திற்கு புதுசு....

இந்த கோபத்தில் இருக்கும் விஜயகாந்தை நிருபர்களும் விடாமல் துரத்தி  அவரது வாயாலே அவருக்கு ஆப்பு  வைத்துவிட்டனர்....செம கடுப்பில் இருக்கும் விஜயகாந்திடம் போயி கேள்வி மேல் கேள்வி கேட்டு நிருபர்களை நாயே,போடா என திட்ட வைத்து அதை டிவி க்களில் ஒளிபரப்பி ஏற்கனவே  சிவந்து இருந்த அவரது  கண்களை  மேலும் சிவக்க வைத்துவிட்டனர்....


பேட்டி கொடுக்க விருப்பம் இல்லாத விஜயகாந்திடம் நிருபர்கள் வேண்டும் என்றே  துருவி  துருவி கேள்வி கேட்டது  அநாகரிகமானது...அதுதான்  பத்திரிக்கை தர்மமா என தெரியவில்லை...ஆனால் அதற்கு இந்த  மாதிரி ஏக வசனத்தில் கண்டபடி விஜயகாந்த் திட்டியது அதை விட அநாகரிகமானது ..... ஒரு அரசியல் கட்சி தலைவராக அவருக்கு இன்னும் பக்குவம் வரவில்லை  என்பதையே  காட்டுகிறது....கேப்டனின் கோபத்தை பாருங்கள்!சிரியுங்கள்!!நம்ம கருணாநிதி தாதாவை சாரி தாத்தாவை  எடுத்து கொள்ளுங்கள்..நிருபர்கள் எவ்வளவு குதர்க்கமாக  கேள்வி கேட்டாலும் அவர் அதற்கு மேலே  குதர்க்கமாக  பதில் சொல்வார்...இல்லையெனில் "நோ கமெண்ட்ஸ்"என சொல்லிவிட்டு  சென்று கொண்டே இருப்பார்...அதனால்தான் அவர் இவ்வளவு வருடம்  அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்..

கற்றுகொள்ளுங்கள் கேப்டன்...இல்லையெனில் உங்கள் கப்பல் விரைவில் மூழ்கி விட வாய்ப்பு உள்ளது..!


8 கருத்துகள்:

 1. நானும் இன்றைக்கு இந்த பதிவுதான்

  பதிலளிநீக்கு
 2. ஏன் இவ்வளவு எழுத்துப்பிழை?, தலைப்பில் ஆரம்பித்து வரிசையாக நிறைய இருக்கிறது. சரிபார்க்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் அவசரமாக எழுதிய பதிவு...திருத்திவிட்டேன்....நன்றி

   நீக்கு
 3. தற்போதய நிலவரத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. //(நன்றியுணர்வு இல்லாததால் இவர்கள் நன்றியை பற்றி என்னவென்று கேட்டதற்காக தலைப்பில் "கேட்ட" என்று முதலில் வந்துவிட்டது..ஹி ஹி எப்படி சமாளிப்பு..!)//

  இந்த வருட "சமாளிபிகேஷன் சண்முகராஜ் விருது" உங்களுக்குதான் போல...!!!

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....