09 அக்டோபர் 2012

அழகிரியும்,விஜயகாந்தும்,மறைவில் வானிலை ரமணனும் (கூட்டுப்பொறியல் )இன்றுதான் அழகிரி நிம்மதியாக கண் விழித்து  இருப்பார்...சும்மாவா! அவரது மகன் துரை  தயாநிதியை  கைது செய்வதற்காக  கேட்கப்பட்டு இருந்த  பிடி வாரண்டை ரத்து  செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே....!ஆனாலும் மதுரையை ஆட்டி படைத்த அழகிரி மகனுக்கே மதுரை போலிசை விட்டே கபடி ஆடி விட்டார் ஜெயலலிதா.....

ஒரு பக்கம்  "சகோதர யுத்தத்தில்"ஸ்டாலின் கை ஓங்கி இருக்க .ஒரு பக்கம் மகனை தேடி போலீஸ் விசாரணை என்ற பெயரில் தன் குடும்பத்தினர்களை   அலைக்கழிக்க "நோஞ்சா"நெஞ்சனாக மாறி போயிருக்கும் அழகிரிக்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியே....


.............................. ........................................... ......................................................


வர வர  விஜயகாந்தும்  வானிலை  அறிக்கை நிபுணர்  ரமணன்  போலவே பேச ஆரம்பித்துவிட்டார்....மழை  வரும் என்று ரமணன் சொன்னால் ஒரு ஆறு மாசத்துக்கு தமிழகத்தில் மழையே  வராது ..அதுபோல மழை  வர  வாய்ப்பில்லை என்று சொன்னால்  அன்றுதான் சூறாவளி காற்றுடன்  பேய்  மழை சுழன்று அடிக்கும்........அதுபோலதான் விஜயகாந்தின் பேச்சும் ....எது நடக்காதோ  அதைத்தான்  பேசுவார்....

வரும் நாடாளுமன்ற  தேர்தலில் தனித்து போட்டியிட  போவதாக கூறி இருக்கிறார்....இதெல்லாம் நடக்குற விசயமா  கேப்டன்?!ஐந்தோ,பத்தோ  வாங்கி கொண்டு (சீட்டை சொன்னேன்)திமுக கூட்டணியில் ஐக்கியமாகி விடுகிறாரா இல்லையா என  பாருங்களேன்!

......................... ................................................................. ....................................................


.திமுக ,அதிமுக,காங்கிரஸ் ..இந்த மூன்று கட்சிகளுமே  நம்பர் 1 பிராடு#விஜயகாந்த்

அப்ப நம்பர் 2 நீங்களா கேப்டன்?!#டவுட்டு

.............................................. .................................... .......................................

கர்நாடகத்தை  போல இங்கும் அனைத்து  கட்சி  கூட்டத்தை  கூட்டாதது  ஏன்?#
கருணாநிதி கேள்வி?#

இதற்கு முன்பும்  காவிரி பிரச்சினை தொடர்பாக  கருணாநிதியும் அனைத்து  கட்சி கூட்டத்தை  கூட்டியதில்லை....#இதுதான் ஜெயலலிதாவின்  பதிலாக இருக்கும்..!

................................................. ................................................... .......................................

இலங்கையை  வெஸ்ட்  இண்டிஸ்  வீழ்த்தி கோப்பையை  வென்றதும் ஏதோ  இந்தியாவே கோப்பையை வென்றது போல ஒரு ஆனந்தம் #இனப்பற்று

............................................ ...................................... ..................................................


ஜெயலலிதாவின்  ஓராண்டு ஆட்சியில் எந்த குறையுமே  என் கண்களுக்கு தெரியவில்லை ...#தா.பாண்டியன்

ஒருவேளை  கோமாவில் இருந்து இப்போதுதான் கண் விழித்து  இருப்பாரோ!17 கருத்துகள்:

 1. அட கூட்டும் பொறியலும் ரொம்ப நல்லா இருக்கே தொடரட்டும் சமையல்.

  பதிலளிநீக்கு
 2. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த செய்திப்பார்வை,கமெண்ட்.

  பதிலளிநீக்கு
 3. super comments

  //!ஐந்தோ,பத்தோ வாங்கி கொண்டு (சீட்டை சொன்னேன்)// sema

  பதிலளிநீக்கு
 4. #இலங்கையை வெஸ்ட் இண்டிஸ் வீழ்த்தி கோப்பையை வென்றதும் ஏதோ இந்தியாவே கோப்பையை வென்றது போல ஒரு ஆனந்தம் #இனப்பற்று#

  உண்மை ...இலங்கை மண்ணை கவ்வியதை ரசித்தவனில் நானும் ஒருவன்.....

  பதிலளிநீக்கு
 5. கவுண்டர் வசனங்கள் சூப்பர்!

  பதிலளிநீக்கு
 6. நல்ல காரசாரமான கூட்டுப் பொரியல்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. டேஸ்ட் பொறியல்தான். எனக்கும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி மகிழ்ச்சியையே அளித்தது சகோ.

  பதிலளிநீக்கு
 8. Pandian sir ,

  Do u have power 24 hours in your house.Plz check yr party peoples how they suffering from with out power in their life

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....